Pages

Saturday, August 15, 2020

ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் பாதுகாப்புத்தரப்பினருக்கு 97 முன்னெச்சரிக்கைகள் கிடைத்திருந்தன- பாதுகாப்புச் செயலாளர்


2019ம் ஆண்டு ஏப்ரல் 21ம் திகதி  இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் பாதுகாப்புத்தரப்பினருக்கு 97 முன்னெச்சரிக்கைகள் கிடைத்திருந்ததாக  பாதுகாப்புச் செயலாளர் (ஒய்வுபெற்ற) மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

பாதுகாப்புத்தரப்பினருக்கு ஈஸ்டர் தாக்குதலுக்கு முன்னர் 97 முன்னெச்சரிக்கைகள் கிடைத்தும்  அதற்கு பொறுப்பானவர்கள் முன்னெச்சரிக்கைளின் பாரதூரத்தன்மையை  உணரத் தவறியமையால் தாக்குதலைத் தடுக்க முடியாமற்போனது எனவும் பாதுகாப்புச் செயலாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 ஈஸ்டர் தாக்குதலில்  290ற்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதுடன் 500 பேர் வரை காயமுற்றிருந்தனர். 


No comments:

Post a Comment