Pages

Thursday, August 20, 2020

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதவிநிலைகளில் மாற்றமில்லை!

 


பாராளுமன்றத் தேர்தலை அடுத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பதவிநிலைகளில் மாற்றங்கள் ஏற்படலாம் என சில ஊடகங்களில் கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகியிருந்தன. 

இந்த நிலையில் இன்றையதினம் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு பிற்பகல் 2 மணிமுதல் 3 மணிவரை ஒரு மணிநேரம் பாராளுமன்றக் கட்டியத்தொகுதியில் நடைபெற்றது. 

இதன் போது கூட்டமைப்பின் தலைவர்  மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளில் மாற்றம் செய்ய வேண்டுமா என தலைவர் இரா. சம்பந்தன் வினவியபோது அங்கிருந்த எவரும் கருத்துக்கள் எதனையும் வெளியிடவில்லை என நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

 தற்போதைய நிலையில் கூட்டமைப்பின் தலைவராக உள்ள இரா. சம்பந்தனும் ஊடகப் பேச்சாளராக உள்ள எம்.ஏ. சுமந்திரனும் தத்தம் பதவிகளில் தொடர்வார்கள் என அறியமுடிகின்றது.  

கூட்டமைப்பின் பதவிநிலைகளில் மாற்றத்தைக் கொண்டுவரவேண்டும் என்பது அதன் அங்கத்துவக்கட்சிகளின் எதிர்பார்ப்பாக இருப்பதாக ஊடகங்கள் சில செய்திகளை வெளியிட்டிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது. 

No comments:

Post a Comment