Pages

Wednesday, September 2, 2020

அரசியலில் இருந்து விலகத்தயார்- விக்கிக்கு அங்கஜன் சவால் (காணொளி இணைப்பு )

 


பொதுத் தேர்தல் பிரசார காலகட்டத்தின் போது ஒருவருக்கேனும் சாராயம் வாங்கிக்கொடுத்ததையோ அன்றேல் ஐயாயிரம் ரூபா பணத்தைக் கொடுத்ததையோ சி.வி. விக்னேஸ்வரன் நிரூபிப்பாரேயானால் அரசியலை விட்டுவிட்டு போவதற்கு தாம் தயாராக உள்ளதாக யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அபிவிருத்திக்குழுவின் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தவிசாளருமான அங்கஜன் ராமநாதன் தெரிவித்தார்.

அண்மையில் யாழ். மாவட்டத்தில் இருந்து இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சிங்கள ஊடகமொன்றுக்கு நேர்காணலொன்றை வழங்கியிருந்தார்.

இதன் போது அங்கஜன் ராமநாதன் அதிகூடிய விருப்புவாக்குகளைப் பெற்றுள்ளமை குறித்து அந்த ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சி.வி. விக்னேஸ்வரன்  சாராயம் மற்றும் பணத்தைக் கொடுத்ததன் மூலமே அது சாத்தியமானதாக கருத்தவெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக குளோப் தமிழுக்கு வழங்கிய  நேர்காணலில் அங்கஜன் ராமநாதன் கருத்து வெளியிடுகையில் சி.வி. விக்னேஸ்வரன் தன் மீதான குற்றச்சாட்டுக்களை நிரூபிப்பாரேயானால் அரசியலை விட்டுவிட்டு போவதற்கு தாம் தயாராக உள்ளதாக ஆணித்தரமாக தெரிவித்தார்.




No comments:

Post a Comment