Pages

Monday, September 7, 2020

விரைவில் மீண்டும் இலங்கை பணியாளர்களை விமானங்கள் மூலம் அழைத்துவர ஏற்பாடு!

 


கொரோனாவால் நிர்க்கதியாகியுள்ள புலம்பெயர் இலங்கைப்பணியாளர்களை விமானங்கள் மூலம் நாட்டிற்கு மீளவும் அழைத்துவரும் நடவடிக்கைகளை விரைவில் மீளவும் ஆரம்பிக்கவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. 

வெளிநாடுகளில் இருந்து அழைத்துவந்தவர்களில் பலருக்கு கொரோனா தொற்று இருப்பது தெரியவந்ததையடுத்து விமானங்கள் மூலம் அவர்களை அழைத்துவரும் நடவடிக்கை தற்காலிகமாக  இடைநிறுத்தப்பட்டிருந்தது 

கடந்த சனிக்கிழமை முதல் இடைநிறுத்தப்பட்டுள்ள இந்த நடவடிக்கை அடுத்த சில தினங்களுக்குள் ஆரம்பமாகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

வெளிநாடுகளில் இன்னமும் 50000 வரையிலான இலங்கை பணியாளர்கள் நாடுதிரும்புவதற்காக காத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை நாட்டின் விமான நிலையங்களை சுற்றுலாப்பயணிகளுக்காக திறக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சு விடுத்திருந்த வேண்டுகோளை சுகாதார அமைச்சு நிராகரித்துள்ளது. 



No comments:

Post a Comment