Pages

Wednesday, January 13, 2021

முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்ப்பு குறித்து சுமந்திரன் கூறுவது என்ன?

 




யாழ் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி தகர்க்கப்பட்டமை காட்டுமிராண்டித்தனமான செயலாகும் என தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த யுத்த நினைவுத் தூபி உடைக்கப்பட்ட நிகழ்வு காட்டுமிராண்டித்தனமானதும் நியாயமாக செலவழிக்கும் எவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதுமானதுமல்ல இது அனுமதி இன்றி கட்டப்பட்டது என்றும்  அதன் காரணமாக அது அகற்றப்படவேண்டும் என்றும் கூறுவது இந்த மிலேச்சத்தனத்தை இன்றும் மோசமாக்கும் செயலாகும் .யுத்த நினைவுத் தூபிகளுக்கு உள்ளுராட்சி சபைகளின் கட்டிட அனுமதி தேவை இல்லை.அப்படியில்லையென்றால் வடகிழக்கு முழுவதும் இராணுவத்தால் அமைக்கப்பட்டிருக்கும் யுத்த நினைவுத்தூபிகளும் உடைக்கப்படவேண்டும் இப்படியான தூபிகள் கிளிநொச்சி ஆனையிறவு புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களிலும் முல்லைத்தீவில் பல இடங்களிலும்  உள்ளன.  இந்த யுத்தத்தில் பல ஆயிரம் இராணுவத்தினர் மரித்தது உண்மை  அவர்களும் நினைவுகூரப்படவேண்டும் ஆனால் எண்ணிலடங்காத பொதுமக்களும் கொல்லப்பட்டார்களே மற்றது எதிர்தரப்பு போராளிகள்  அவர்களையும் நினைவுகூர வேண்டாமா? யுத்தத்திலே இறந்தவர்களை ஒரு சமூகமாக கூடி நினைப்பதற்கும் துக்கப்படுவதற்கும் உதவும் வகையில்  நினைவுத்தூபிகள் பிரத்தியேப்படுத்தப்பட்ட பொது இடமாக அமையலாம் . அந்த இடம் அவர்களுக்கு விசேடமான ஒன்றாக இருக்கும்.  அங்கே அவர்கள் கூடி ஒருவரை ஒருவர் விசாரித்து  ஆறுதல் சொல்லலாம்.  .


No comments:

Post a Comment