Pages

Saturday, January 23, 2021

இலங்கையின் சுகாதார அமைச்சருக்கு கொரோனா தொற்று



 இலங்கையின் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பதாக பிபிசி சிங்கள சேவை வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவித்துள்ளது. 

அவருக்கு நடத்தப்பட்ட ரபிட் அன்ரிஜன் (Rapid Antigen Test)சோதனையின் போதே கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 

அவரது பிசிஆர் பரிசோதனை முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் பிபிசி சிங்கள இணையத்தளத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதார அமைச்சு இன்னமும் கருத்து வெளியிடவில்லை.

தம்மிக்க பண்டார என்பவர் தயாரித்த அதிசய கொரோனா பாணியை பருகியவர்களில் சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியும் ஒருவராவார் . 



No comments:

Post a Comment