உலக வரலாற்றை எடுத்துரைக்கும் போது கிமு இகிபி வரலாற்றாளர்கள் எடுத்துரைப்பதைப் பார்க்கின்றோம். இனிமேல் கிரிக்கட் விளையாட்டை எடுத்துரைக்கும் போது சச்சினுக்கு முன் சச்சினுக்கு பின் குறிப்பிடும் நிலைவருமோ என்ற அளவிற்கு அண்மையில் கிரிக்கெட் விளையாட்டிலிருந்து ஓய்வுபெற்ற சச்சின் டெண்டுல்கர் ஏற்படுத்தியுள்ள தாக்கம் அன்றேல் செல்வாக்கு எண்ணவைக்கின்றது.
விளையாட்டு மைதானத்தில் படைத்த வியத்துக சாதனைகளுக்க அப்பால் அவர் நடந்துகொண்ட விதமே ஏனைய வீரர்களில் இருந்து அவரை வேறாக தனித்தட்டில் வைத்து அழகுபார்க்க வைக்கின்ற து. இதற்கு ஒய்வுபெற்ற பின்னர்; ஆற்றிய உணர்ச்சிமயமான உரையே ஓர் சான்றாகும். பிரித்தானியாவில் பிறந்து தற்போது அமெரிக்காவின் முன்னணி தொலைக்காட்சி பிரமுகர்களிலர ஒருவராக விளங்கும் பியர்ஸ் மோர்கன் ' ஒரு விளையாட்டு வீரரால் நிகழ்த்தப்பட்ட மிகச்சிறந்த பிரியாவிடை உரை' என சச்சினின் உரையைப் பாராட்டியிருந்தார். இதே கருத்தினை இந்நாள் மற்றும் முன்னாள் வீரர்கள் பலரும் ஆமோதித்திருந்தனர். சச்சினின் திறமை வெளிப்பாட்டுடன் அவரது பணிவே அவரை ரசிகர்களின் இதயச்சிம்மாசனத்தில் ஏற்றிவைத்திருக்கின்றது.
பிரியாவிடைஉரையில் தனது கிரிக்கட் வாழ்வில் பெற்றோர் குடும்பத்தினர் நண்பர்கள் வீரர்கள் உடற்பயிற்சியாளர்கள் ஊடகத்துறையினர் மற்றம் ரசிகர்கள் என அனைத்து தரப்பினரின் வகிபாகங்களை ஒவ்வொன்றாக நினைவுகூர்;ந்த விதம் மட்டுமன்றி தாம் செய்யத்தவறிய கடமைகளை குறிப்பாக பிள்ளைகளின் வாழ்வில் தவறவிட்ட தருணங்களையும் கூறித்தவறவில்லை. அதே போன்று 2004ம் வுநnnளை நுடடிழற முழங்கை உபாதை ஏற்பட்ட தருணத்தில் தனது கிரிக்கெட் வாழ்க்கை அத்துடனேயே அஸ்தமித்து விடுமா எனப் பயந்த தருணங்களை எவ்வித ஒளிவுமறைவின்றி சச்சின் குறிப்பிட்டிருந்தார். அந்த தருணத்தில் தனது மகனின் கிரிக்கட் பையைக் கூட தூக்கும் பலம் தனக்கிருக்கவில்லை என சச்சின் ;கூறியபோது அவரது ரசிகர்கள் கண்கள் கண்ணீர்க்குளமானதை தொலைக்காட்சித் திரைகள் காண்பித்தன.
சர்வதேசப் போட்டிகளிலிருந்து சச்சினின் முழுமையான ஓய்விற்கு பின்னர் இந்திய அணி பங்கேற்கும் முதலாவது சர்வதேசப் போட்டி மேற்கிந்திய அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியுடன் இன்று வியாழக்கிழமை ஆரம்பிக்கின்றது. டோன் பிரட்மனுக்கு பின்னர் உலகில் தோன்றிய மிகச்சிறந்த கிரிக்கெட் வீரராக உலகின் பெரும்பாலான கிரிக்கெட் ரசிகர்களால் போற்றப்படும் சச்சின் பிரியாவிடைபெற்ற பின் இந்திய அணி கால்பதிக்கும் இந்தப் போட்டியை சச்சினின் சகாப்தத்திற்கு பின்னரான போட்டியென ரசிகர் அழைப்பதில் தவறேதும் இல்லை.
சாதனைகளாலும் அதற்கான விருதுகளாலும் நிறைந்த சச்சின் டெண்டுல்க ருக்கு இந்திய அரசாங்கம் நாட்டுப்பிரஜையொருவருக்கு வழங்கப்படும் மிக உயர்;ந்த விருதான பாரத ரத்னா விருதை வழங்கிகௌரவப்படுத்தியுள்ளமையை இங்கே குறிப்பிட்டாக வேண்டும். கடந்த 24 ஆண்டுகளாக கிரிக்கட் களத்திலும் புரிந்த ஒப்பற்ற சாதனைகள் அதற்கு வெளியில் சிறந்த முன்மாதிரியாக நடந்து நாட்டிற்கு பெருமை சேர்த்தமை உட்பட பலகாரணங்களை சச்சினுக்கான விருதிற்கான தகைமைகளாக அரசாங்கம் சுட்டிக்காட்டியிருந்தது.
விளையாட்டுக்கலாசாரமே இந்தியாவில் பிரபல்யமின்றி இருந்த போது சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் ஹொக்கி விளையாட்டில் பதக்கங்களை வென்றுதந்த தயான் சந்த் ஐந்துமுறை சதுரங்க உலக சம்பியன் பட்டம் வென்ற தமிழக வீரர் விஸ்வநாதன் ஆனந்த் ஆகியோருக்கு வழங்காமல் தேர்தல் நெருங்கிவரும் வேளையில் காஸ்கிரஸ் கட்சி பாரத ரத்னாவை வழங்கிவிட்டதாக விமர்சனங்கள் வந்துள்ள போதிலும் இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக உச்ச ஆற்றலை வெளிப்படுத்தி நூறுகோடிகளைக் கடந்த இந்திய ரசிகர்களாலும் உலக ரசிகர்களாலும் கொண்டாடப்படும் சச்சின் அதற்கு தகுதியானவர்; என்பதே பலரதும் கருத்தாகும்.
அடுத்ததாக சச்சின் என்ன செய்யப்போகிறார்? இதுவே அனைத்து ரசிகர்கள் முன்பாகவும் உள்ள கேள்வியாகும். சச்சின் இல்லாத கிரிக்கெட்டை என்னால் நினைத்துப்பார்க்க முடிகின்றது ஆனால் கிரிக்கெட் இல்லாத சச்சினை என்னால் நினைத்துப்பார்க்க முடியவில்லை என அவரது மனைவி அஞ்சலி கூறியிருந்தார். கிரிக்கெட் மீது அளவுகடந்த பிரியம் வைத்துள்ள சச்சின் ஒரு பயிற்றுவிப்பாளராகவோ வர்ணனையாளராகவோ வரக்கூடும் என்ற கருத்துக்கள் இருந்தாலும் 24 ஆண்டுகளாக விளையாடிய எனக்கு எதிர்காலம் தொடர்பாக தீர்மானிக்க 24 நாட்களேனும் தேவை என சச்சினே கூறியுள்ள நிலையில் அவரது அறிவிப்பு வரும்வரை பொறுத்திருப்போம்.