Thursday, December 22, 2016

காணாமற்போனோர் அலுவலகத்திற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குங்கள்!




காணாமற்போனோர் அலுவலகத்திற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குங்கள்! –வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வேண்டுகோள் 



நேர்காணல்: அருண் ஆரோக்கியநாதர்.

கடந்த கால நிகழ்வுகள் தொடர்பில் கணக்குத்தீர்க்க வேண்டியது மிகவும் முக்கியமானது என்பதை அரசாங்கம் நன்குணர்ந்துகொண்டு செயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவிக்கின்றார். நல்லிணக்கத்திற்கான முன்னெடுப்புக்கள் மெதுவாக நகர்கின்ற போதும் அது  சரியான முறைமையின் கீழ் முன்செல்வதாக அவர் சுட்டிக்காட்டினார்.  உதயனுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இந்தக்கருத்துக்களை தெரிவித்தார்.

கேள்வி 

உங்களுடைய அரசாங்கம் ஆட்சிக்கு வரமுன்பாக மேற்கொண்ட பிரசாங்களின் போதும் ஆட்சிக்கு வந்த ஆரம்பகாலப்பகுதியிலும் இந்த நாடு இன்னமும் ஒரு தடைவை யுத்தமொன்றுக்கு முகங்கொடுக்கக்கூடாது என்று கூறியிருந்தீர்கள். இந்த நாட்டில் சமாதானத்தை நல்லிணக்கத்தை கட்டியெழுப்பத்திட சங்கற்பம் பூண்டுள்ளமை உட்பட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது மக்களில் ஒரு சாரார் மத்தியில் இந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக இந்த வாக்குறுதிகளை வழங்கியதான ஒரு வித ஐயப்பாடு  வலுப்பெறத்தொடங்கியுள்ளது. அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகளில் உண்மையான இதயச் சுத்தியுடன் ஈடுபடுகின்றதா?


நிச்சயமாக இநீண்டநாட்களாக நிலவும் இனப்பிரச்சனைக்கு உண்மையான தீர்வைக்காணவேண்டும் என்ற உண்மையான நோக்கத்துடனேயே செயற்;படுகின்றது. உண்மையைச் சொல்வதாயின் கடந்தாண்டு ஜெனிவாவில் இலங்கை மீதான தீர்;மானத்திற்கு இணை அனுசரவை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முடிவெடுத்தமையானது சர்வதேச அழுத்தத்தின் காரணமாக அல்ல.  எம்முடைய சில எதிரிகளும்  ராஜபக்ஷ தரப்பினரும் நாம் சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணிந்;;து விட்டதாகக் கூற விரும்பலாம்.இலங்கை அதன் மக்களுக்கு கடமைப் பட்டுள்ளது என நாம் உணர்கின்றமையின் காரணமாகவே நாம் நிலை மாறு கால நீதிப் பொறிமுறைக்கு எம்மை அர்ப்பணிக்கத் தீர்;மானித்தமைக்கான காரணமாகும். இந்த நாடு ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் நாட்டிற்கு கிடைக்கவேண்டிய பொருளாதார சுபீட்சத்தை வென்றடையவேண்டுமாயின்  இலங்கை கடந்த கால பேரழிவுகள் தொடர்பில் கணக்குத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தாக வேண்டும்;. 1948ம்  ஆண்டில் இலங்கை சுதந்திரம் பெற்றபோது பிரித்தானியாவிலுள்ள பத்திரிகையொன்றின் ஆசிரியர் தலையங்கத்தில் சிலோனில் ( அப்போது இலங்கையின் பெயர்) காணப்படும் சாத்தியப்பாடுகள் காரணமாக கிழக்கின் சுவிட்ஸர்லாந்தாக என்பதில் சந்தேகமில்லை எனக் கூறியிருந்தது. ஏனெனில் எம்மிடத்தே இயற்கை வளங்கள் இமனித வளங்கள்; ஆகியவற்றுடன் அக்காலப்பகுதியில் ஆசியாவில் மிகவும் அபிவிருத்தி கண்ட நாடாக விளங்கினோம்.இந்த நிலையானது சிங்கப்பூரின் ஸ்தாபகப்பிரதமர் லீ குவான் யூ சிங்கப்பூர் 1965ல் சுதந்திரம் பெற்று புதிய நாடாக பரிணமித்த காலப்பகுதியில் ஆற்றிய உரையொன்றில் முதல் ஐந்து வருட காலப்பகுதியில் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியை மிஞ்சுவதே தமது இலக்காகும் எனச் சுட்டிக்காட்டியிருந்தார். இது  சிங்கப்பூரை விடவும் இலங்கை மிகவும் முன்னேற்றம் கண்டிருந்ததாக அவர்கள் எண்ணியிருந்ததனை புலப்படுத்துகின்றது. ஆனால் பத்துப் பதினைத்து வருடங்கள் கழித்து 80ம் ஆண்டுகளில் எந்தவொரு நாடும் பின்பற்றக்கூடாத  நாடென்றால் அது இலங்கையாக இருக்கவேண்டும் எனக்கூறியிருந்தார். ஏனெனில் எம்மத்தியில் அனைத்துச் சாதகமான வாய்ப்புக்களும் காணப்பட்டபோதும் நாம் அனைத்து வாய்ப்புக்களையும் நழுவவிட்டு ஆசியாவின் மோசமான உதாரணங்களில் ஒன்றாக மாறிப்போனோம். ஏனெனில் பல்லின இபல்மதஇ பன்மொழிகொண்ட நாடாக இருந்தபோதும் எமது நாட்டின் பல்வகைத்தன்மையுடன் ஒத்து நடப்பதற்கு எம்மால் இயலாமல் போனது.  சுதந்திரம் பெற்றது முதலாக நாம் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு பதிலாக நாம் ஒருவருக்கு ஒருவர் எதிராக சண்டை பிடிக்கத் தொடங்கினோம்.  இனரீதியாகஇ மதரீதியாகஇ மொழிரீதியாக நாம் எம்மைப் பிரித்துக்கொள்ளத் தொடங்கினோம்.   68 ஆண்டுகள் கடந்துவிட்டது.; இன்னமும் இரண்டு ஆண்டுகளில் நாம் சுதந்திரமடைந்த எமது  70 ஆண்டுப் பூர்த்தியை காணவுள்ள நிலையில் நாம் எங்கு நின்று கொண்டிருக்கின்றோம். எதனைச் சாதித்துள்ளோம் என்ற கேள்விகள் எழுகின்றன. கடந்த 68ஆண்டு காலப்பகுதியில் தெற்கில் இரண்டு இளைஞர் எழுச்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனைவிட 30 ஆண்டுகளாக நீடித்த யுத்தமொன்று இடம்பெற்றது. இவை எம்மகத்தே இருந்த சிறப்பான மனித வளங்களின் ஒருபகுதியை அழிப்பதற்கு வித்திட்டன. அத்தோடு அபிவிருத்தி முன்னெடுப்பை முற்றாக பாதிப்படையச் செய்தன. உண்மையில் ஒவ்வொரு  தடவையும் சிங்கப்பூரிற்கு நான் செல்லும் போது சிங்கப்பூர் என்ற மகத்தான தேசத்தைப் பார்க்கும் போது எம்முடைய முட்டாள் மக்கள் தம்மிடையே ஆண்டாண்டு காலமாக சண்டையிட்டுக் கொண்டிராவிட்டால் இப்படியல்லவா கொழும்பு இருந்திருக்கும் இப்படியல்லவா இலங்கை இருந்திருக்கும் என எண்ணிக்கொள்வேன். இந்தப் பிந்திய தருணத்திலேனும் நாம் எப்போதுமே பேசிக்கொண்டிருக்கின்ற முன்னேற்றத்தை அடைய வேண்டுமானால் கடந்த கால நிகழ்வுகள் தொடர்பில்  கணக்குத் தீர்ப்பது மிகவும் முக்கியமானதெனவும் எமது எதிர்காலமானது இன ஒற்றுமை என்ற உறுதியான தளத்தில் கட்டியெழுப்பபடவேண்டும் எனவும் அரசாங்கம் உண்மையாகவே நம்புகின்றது. நாம் எமது பல்வகைத்தன்மையை கொண்டாடக்  கூடிய நாடாகத் திகழவேண்டும். எம்முடைய பல்வகைத்தன்மையை கொண்டாடும் அதேவேளை ஒரு புதிய இலங்கைக்கான நோக்கில் நாம் ஒன்றிணைந்திருக்க முடியும். இதனை நோக்கித்தான் நாம்  பணியாற்றிக்கொண்டிருக்கின்றோம். இதனால் தான் நல்லிணக்க செயன்முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என நாம் உணர்கின்றோம். ஜனாதிபதியும் கூட பல தடவைகள் இதனை வலியுறுத்தியிருக்கின்றார். புதிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கு நல்லிணக்கம்; என்பது மிகவும் முக்கியமான அடித்தளம் என்பதை ஜனாதிபதியும் கூட பலதடவைகள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.ஜனாதிபதி நல்லிணக்கத்திற்கான அமைச்சை உருவாக்கி தன்னகத்தே வைத்துக்கொண்டமைக்கும் இதுவும் ஒரு காரணமாகும். இதனை மனதில் நிறுத்திக்கொண்டு நாம்  முன்னோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.



கேள்வி 

நீங்கள் நல்லிணக்கத்தின் மீதான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பற்றி கூறுகின்றீர்கள். ஆனால் நடைமுறையில் அதனைக் காணமுடியவில்லையே?

நீங்களும் நானும் எதிர்பார்க்கின்ற வேகத்தில் இந்தப் முன்னெடுப்புக்கள் பயணிக்காமல் இருக்கலாம். ஆனால் கடந்த ஒன்றரை வருடகாலப்பகுதியில் நாம் பாரிய முன்னேற்றங்களை கண்டுள்ளோம். நியாயமாக நோக்குமிடத்து எதிர்வரும் ஜனவரியில் புதிய ஜனாதிபதி இரண்டு ஆண்டுகளைப் பூர்த்திசெய்கின்ற போதும் புதிய அரசாங்கமானது ஒரு வருடத்தையும்; மூன்று மாதங்களையுமே முடித்துள்ளது. ஆம் இது இன்னமும் 15மாத கால வயதைக் கொண்ட அரசாங்கம் மாத்திரமே என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்தக் காலப்பகுதியில் எத்தகைய குறைபாடுகள் இருந்தபோதிலும் நல்லிணக்கம் என்ற விடயத்தில் நாம் நிறைய சாதித்திருக்கின்றோம். சிறிய அடையாளகரமான விடயங்களில் இருந்து பெரும் பொறிமுறைகள் வரையில் நாம் சாதித்திருக்கின்றோம். வடக்கு கிழக்கில் சிவில் ஆளுநர்களை நியமித்தமையானது நல்லதொரு ஆரம்பமான அமைந்தது. அதுமட்டும் போதும் எனக் கூறவில்லை. அது நல்ல ஆரம்பம் என்று  கூறுகின்றேன். தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தை அதாவது இரண்டு மொழிகளில் தேசிய கீதத்தை இசைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை நல்லதொரு நகர்வு. எமது தூதரங்களில் நிகழ்வுகள் இடம்பெறும் போது இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என்பதைக் கடைப்பிடிக்குமாறு பணித்துள்ளோம். ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய மாநாட்டிலும் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. டி.எஸ். சேனானாயக்கவிற்கு பின்னர் இரு மொழிகளிலும் தேசிய கீதத்தை இசைத்துள்ளோம். இவை சிறிய படிகளாக இருந்தாலும் இவை மிகவும் முக்கியமான படிகளாகும். மறுமுனையில் இறுதியாக காணாமற்போனோருக்கான நிரந்தர அலுவலகம் (தொடர்பான சட்டமூலம்) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்த வாரத்தில் இது ஜனாதிபதியினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என நான் நம்புகின்றேன். இது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் அரசியல்யாப்பு சபையானது அந்த அலுவலகத்திற்காக நியமிக்கப்படவுள்ளவர்களின் பெயர்களைப் பிரேரிக்கும். இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் முதலாம்திகதி முதல் இந்த அலுவலகம் அதன் பணிகளை ஆரம்பிக்கும் என நான் நம்புகின்றேன்.) நாட்டின் பலபகுதிகளிலும் சென்று வடக்கிலுள்ள மக்களை மட்டுமன்றி தெற்கிலுள்ள மக்களையும்; சந்தித்துக் கலந்துரையாடி நிலைமாறு கால நீதி தொடர்பாக மாத்திரமன்றி அதற்கான வித்தியாசமான பொறிமுறைகள் தொடர்பாகவும் அவர்களின் அபிப்பிராயங்களைப் பதிவுசெய்த கலந்தாலோசனைச் செயலணியானது அதன் கலந்தாலோசனை அறிக்கையை தயார்செய்திருக்கின்றது. இந்த அறிக்கையின் முதற்பிரதியானது எதிர்வரும் செவ்வாயன்று 29ம்திகதியன்று ( நவம்பர் 29) ஜனாதிபதியிடம் கொழும்பில் வைத்து கையளிக்கப்படவுள்ளது. இந்த கலந்தாலோசனை அறிக்கைகளை அடிப்படையாக வைத்து உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து உண்மைகளைக் கண்டறியும் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை இறுதிசெய்தல் மற்றும் சட்ட மூல வரைவை இறுதிசெய்யும் பணிகளை முன்னெடுப்போம். இது தென் ஆபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். ஆனால் அது ஒரு இலங்கையைச் சார்ந்த தனித்துவமான மாதிரியாக விளங்கும். சமாந்திரமான வகையில் நஷ்ட ஈட்டுக்கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொடுக்கும் பிரிவொன்றையும் (சுநியசயவழைளெ ருnவை)ஆரம்பிக்க எண்ணியுள்ளோம். அதற்கு அடுத்த கட்டமாக நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு வகையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நீதிமன்றங்களை நிறுவவது பற்றி அவதானம் செலுத்தவுள்ளோம். நாங்கள் சரியான தடத்திலே பயணிக்கின்றோம். நாங்கள் மெதுவாக பயணிக்கின்றபோதும் சரியான முறையில் அந்தப்பயணத்தை முன்னெடுக்கின்றோம். ஏனெனில் நாம் மிகவும் உணர்வுபூர்வமான விடயத்தைக் கையாண்டுகொண்டிருக்கின்றோம்.  ஏனெனில் நாம் தவறுவிடுவதை காண்பதற்காக அனைத்துப்பக்கங்களிலும் நரிகளும் கழுகுகளும் காத்துக்கொண்டிருக்கின்றன. அப்படியானால் அவர்கள் இந்த அனைத்து விடயங்களையும் தலைகீழாக மாற்றிப்போடக் காத்துக்கிடக்கின்றனர். நாம் கடினமான பணியை முன்னெடுக்கின்றோம். ஆனால் இது தொடர்பில் நாம் அர்ப்பணிப்புக்கொண்டிருக்கின்றோம்.



கேள்வி 

நிலை மாறு கால நீதி தொடர்பில் அரசாங்கத்திற்குள் இருந்து முரண்பட்ட கருத்துக்கள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வாறு உங்கள் செயற்பாட்டில் நம்பிக்கை வைக்கமுடியும்? 

அனைத்து ஜனநாயகங்களிலும் முரண்பாடான எண்ணக்கருக்கள்இ முரண்பாடான அபிப்பிராயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. சர்வாதிகார ஆட்சிமுறை உள்ள நாடுகளில் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் இருந்ததைப் போன்ற ஏதாச்சாதிகார ஆட்சிகளில் மாத்திரமே ஒன்றிற்கு மேற்பட்ட கருத்துக்கள் வெளியாகாது இருக்க முடியும். உண்மையில் மாறுபட்ட கருத்துக்கள் நாம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக அமைந்திருக்கின்றன. மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்படுகின்றமையால் செய்ய முற்படுகின்ற திட்டங்கள் இடைநிறுத்தப்படும் என்று அர்த்தப்படாது. நாம் காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பில் செய்ததைப் போன்று அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் செவிமடுப்போம். இறுதியாக நாட்டிற்கு எது சரியென்று எண்ணுகின்றோமே அப்படியான பொறிமுறையை நாம் முன்வைப்போம். தற்போதும் பல்வேறு தரப்பட்டவர்களின்; பல்வேறு அபிப்பிராயங்களுக்கு நாம் செவிமடுத்துவருகின்றோம். இதற்கு எதிர்ப்புத்தெரிவிக்கின்ற தரப்பினரின் கருத்துக்களுக்கும் செவிசாய்க்கின்றோம். சமூகத்தின் ஒருபகுதியினர் செய்ய வேண்டாம் என்று கூறுகின்றார்கள் என்பதற்காக நாம் இந்த செயற்திட்டத்தை நிறுத்துவதாக அர்த்தப்படாது. நாம் அவர்களுக்கும் செவிசாய்த்து இலங்கையின் நோக்கங்களுக்கு பயன்படக்கூடியதான பொறிமுறைகளை உருவாக்குவோம். ஏனெனில் நாம் முன்நோக்கிச் செல்லவேண்டுமானால் கடந்த காலம் தொடர்பாக கணக்குத்தீர்க்கவேண்டியது அவசியம் என்பதை அனைவருமே ஏற்றுக்கொண்டுள்ளனர்.

 கேள்வி 

அமைச்சரே ! உயர் மட்டத்தில் ஜனாதிபதி உட்பட அனைவரும் நல்லிணக்க நடைமுறையில் நம்பிக்கை கொண்டுள்ளதாக சற்று நேரத்தின் முன்னர் குறிப்பிட்டீர்கள். நீங்கள் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் .உங்களது தொகுதியிலுள்ளவர்களுக்கு நல்லிணக்கம் என்றால் என்னவென்று தெரியாதவரையில் அதாவது நல்லிணக்கம் என்பது இது அடிமட்டத்தைச் சென்றடையும் வரையில் அது நடைமுறைச்சாத்தியமற்ற எண்ணக்கருவாகவே அமையும்.  அந்தவகையில் கீழ்மட்டத்திலுள்ள சாதாரண மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தின்  அவசியத்தை உணர்த்துவதற்காக எத்தகைய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது? 

நீங்கள் கூறுகின்ற விடயம் முற்றுமுழுதாக உண்மையானது. மறுமுனையில் வௌ;வேறு மட்டங்களுக்கு செல்லுமுன்பாக எண்ணக்கருக்கள் ஒரிடத்திலிருந்து உருவாகவேண்டும். நாங்கள் கிராமப்புறங்களிலுள்ள மக்களின் கருத்துக்களையும் ஆலோசனைக்குட்படுத்தவேண்டும். நாங்கள் முன்னணி சிவில் சமூகப் பிரதிநிதிகள் 11பேரை உள்ளடக்கியதாக  கலந்தாலோசனைச்செயலணியை நியமித்தமைக்கு இதுவும் ஒரு காரணமாகும். அடிமட்டத்திலுள்ளவர்களுடைய கருத்துக்களையும் பெறுவதற்காக இவர்கள் நாடெங்கிலும் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்களோடும் பணியாற்றியிருக்கின்றனர்.  நான் ஏற்கனவே கூறியது போன்று அந்தச் செயலணியின் அறிக்கையை தயாராகியுள்ளது. நாம் அந்தக்; கருத்துக்களை உள்வாங்கி அதனை பொறுப்புக்கூறத்தக்கதாக மாற்றியமைப்போம். இறுதிக் கட்டமைப்பின் வடிவம் என்னவென்று தெளிவான நிலைப்பாட்டிற்கு வந்தபின்னர் நாம் மீண்டுமாக இந்த விடயத்தை மக்கள் முன்கொண்டு செல்வதற்கான சந்தைப்படுத்தலை மேற்கொள்ளவேண்டும். இதன் காரணமாகத்தான் அடுத்தாண்டு ஜனவரி 8ம்திகதி முதல் நாம் நாடளாவிய ரீதியான தொடர்பாடல் பிரசாரத்தை ஆரம்பிக்க இருக்கின்றோம். நாடென்ற வகையில் நாம் முன்னோக்கிச் செல்லவேண்டுமாக இருந்தால் நல்லிணக்கம் ஏன் அவசியமாகின்றது என்ற அடிப்படை விடயம் எடுத்துவிளக்கப்படும். அத்தோடு மிகவும் இனிமையான மிக மிக அழகிய தமிழ் சிங்களப் பாடலை வெளியிடவுள்ளோம். நல்லிணக்கத்தின் பல்வேறு அம்சங்களை பேசுகின்ற விளம்பரப் பிரசாரத்தையும் முன்னெடுக்கவுள்ளோம். இவை நாம் என்ன செய்யமுற்படுகின்றோம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துகின்ற முதற்படிகளாகும். நாம் செய்து முடிக்கும் வரையில் நாம் என்ன செய்கின்றோம் என்பதை மக்களில் பலரும் அறியாது இருக்கின்றனர். எதைச் செய்யவேண்டும் என்பது தொடர்பில் நாமும் எமது மனதில் தெளிவான எண்ணக்கருக்களை கொண்டிருப்பதன் காரணமாக நாம் இந்த தொடர்பாடல் நிகழ்ச்சிகளை அடுத்தாண்டு தொடக்கம் முதற்கொண்டு ஆரம்பிக்கவுள்ளோம்.

கேள்வி 

அமைச்சரரே அண்மையில் நான் காணாமற் போனோர் தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக மன்னாருக்கு விஜயம் செய்திருந்தேன். அதன்போது காணாமற்போனோரின் உறவுகள் உத்தேச காணாமற்போனோருக்கான அலுவலகம் எவ்வாறானது அங்கு பணியாற்றப்போகின்றவர்கள் யார் என்பது தொடர்பாக அறியாதுள்ளதாக தெரிவித்திருந்தனர். இதனை எங்ஙனம் நோக்குகின்றீர்கள்?
அவர்களுக்கு மட்டுமல்ல எமக்குகூட அது தொடர்பில் எவ்விதமான தகவல்களும் தெரியாது.

கேள்வி 

இந்த விடயத்தில் தம்மோடு கலந்துரையாடவில்லை என அவர்கள் கூறுகின்றனர். இதனை எங்ஙனம பார்க்கின்றீர்கள்?
ஓவ்வொரு தடவையும் நாம் இந்த ஆணைக்குழுக்களுக்கு அங்கத்தவர்களை நியமிக்கும் போது எம்மால் மக்களுடன் கலந்துரையாடுவது சாத்தியமற்றது.  இதன் காரணமாகத் தான் மிகவும் மதிக்கப்படும் சுயாதீனமான மனிதர்களைக் கொண்ட அரசியல்யாப்பு சபையை நியமித்துள்ளோம். காணாமற்போனோர்  அலுவலகத்திற்கான அங்கத்தவர்களை நியமிக்கும் பணியானது அவர்களுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.

கேள்வி 


காணாமற் போனோர் விவகாரம் என்பது மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனையாகும். நீண்டநாட்களாக இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கென பல்வேறு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. இது எந்தவகையில் இந்த காணாமற்போனோர் அலுவலகம் வித்தியாசமானது?

இது ஓர் ஆணைக்குழு அல்ல. இந்த (காணாமற்போனோருக்கான ) அலுவலகமானது பாராளுமன்றத்திற்கு மாத்திரமே பதில்சொல்லக்கடமைப் பட்டுள்ளது. நான் சொன்னது போன்று அரசியல்யாப்பு சபையால் நியமிக்கப்படும் அங்கத்தவர்களைக்கொண்டே இந்த அலுவலகம் இயங்கும். காணாமற்போனோர் அலுவலகத்தின் வரைவானது உலகின் பல்வேறு பாகங்களையும் சேர்ந்த பல்வேறு தரப்பினரால் உலகிலுள்ள எந்தப்பகுதியிலும் காணப்படுகின்ற காணாற்போனோருக்கான அலுவலகங்களுடன் ஒப்பிட்டு மிகச் சிறந்த முன்மாதிரிகளில் ஒன்றாக பாராட்டப்பட்டுள்ளது. அந்தவகையில் சந்தர்ப்பமொன்றை வழங்கிப்பார்ப்போம். முதற்கட்டமாக நாம் சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளோம். சரியானவர்களை (அங்கத்தவர்களாகக) கொண்டு அதனை ஸ்தாபிப்பது அடுத்தகட்டமாகும். அடுத்த ஜனவரி முதற்கொண்டு அது இயங்கத்தொடங்கியதும் குறைபாடுகள் யாதென நாம் ஆராய்ந்து பார்க்க முடியும். அவர்களின் கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் நாம் முன்வைத்துள்ளதனை விமர்சிப்பது காலத்துக்கு முந்தியதாகும். ஏனெனில் இது கடந்தகாலத்தில் முன்வைக்கப்பட்ட எதனையும் போன்றதல்ல. அந்தவகையில் காணாமற்போனோர் அலுவலகம் இயங்குவதற்கும் தீர்வுகளைத் தருவதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குங்கள்.


Tuesday, June 14, 2016

சிங்களவர்களுக்கே நல்லிணக்கதை புரியவைக்கவேண்டியுள்ளது- ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

*வடக்குமக்களின் பிரச்சனைகளை தெற்கிலுள்ளவர்கள் விளங்கிக்கொள்ளமலிருப்பதே நல்லிணக்கதை முன்னெடுக்க பெரும் சவாலாகவுள்ளது

*தெற்கிலுள்ளவர்கள் மத்தியில் உண்மையை எடுத்துவிளக்க விரிவான வேலைத்திட்டம்
*நல்லிணக்கத்தைப் பலப்படுத்துதல் ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தலின் மூலமே நாட்டை முன்னேற்றகரமான பாதைக்கு இட்டுச் செல்ல முடியும் என ஜி- 7 தலைவர்கள் கூறினர்.
*கிழக்கு முதலமைச்சர் முஸ்லிம் என்பதனாலேயே இந்தவிடயத்தை பூதாகரப்படுத்தியுள்ளனர்.


சுடர் ஒளிக்கு ஜப்பானின் நகோயா நகரிலுள்ள ஹில்டன் ஹோட்டலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய விசேட செவ்வி

நேர்காணல் அருண் ஆரோக்கியநாதர்


நல்லிணக்கம் என்பதும் வெளிநாட்டவர்களும் அரச சார்பற்;ற நிறுவனங்களும் அதிகாரிகளும் வடக்கை நோக்கியே படையெடுக்கின்றனர். உண்மையில் நல்லிணக்கத்தைப் பற்றி எடுத்து விளக்க வேண்டியது தெற்கிலுள்ளவர்களுக்கே. ஏனென்றால் அவர்களே அதன் முக்கியத்துவத்தை விளங்கிக்கொள்ளாதிருக்கின்றனர்.அதுவே நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்கு உள்ள முக்கிய சவாலாக இருக்கின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

ஜப்பானின் நகோயா ஹில்டன் ஹோட்டலில் நேற்றைய தினம் சுடர் ஒளிக்கு வழங்கிய பிரத்தியே நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.


நல்லிணக்கத்தை முன்னெடுப்பதற்குள்ள முக்கிய சவாலாக எதனைக் காண்கின்றீர்கள்?

வடக்கிலுள்ளவர்களின் பிரச்சனையை தெரிந்துகொள்வதற்கு அன்றேல் அதன் ஆழத்தை விளங்கிக்கொள்வதற்கு தெற்கிலுள்ளவர்கள் முன்வராமையே நல்லிணக்தை முன்னெடுப்பதற்கு பெரும் தடையாகவுள்ளது. வடக்கில் யாழ்ப்பாணத்திலுள்ள முகாம்களுக்கு சென்று பார்வையிட்டால் அவர்களின் நிலைமை புரியும் ஆனால் இங்குள்ளவர்கள் கத்துகின்றார்களே ஒழிய சென்று பார்க்க முன்வருவதில்லை.

சம்பூரில் இருந்து இடம்பெயர்ந்து வாழ்ந்தவர்களின் காணிகளை 20வருடங்கள் கழித்து மீளக்கையளித்தபோது தன்னுடைய காணியை மீளப்பெற்ற ஒருவர் அந்தக்காணியி;ல் வீழ்ந்து படுத்ததைப்பார்த்தேன். அது போன்று திரும்பக் கையளிக்கப்பட்ட மற்றுமொரு காணியில் இருந்த தென்னை மரத்தில் ஒருவர் ஏறி இருந்ததைப் பார்த்தேன்.  கனடாவிலிருந்து வந்த ஒருவர் தன்னுடன் ஒரு டப்பியொன்றை எடுத்து வந்து தன்னுடைய காணியில் மண்ணைத் தோண்டி அதனுள் டப்பியில் எடுத்துவந்ததை புதைத்தார். தமது காணியை அவர்கள் எந்தளவிற்கு நேசிக்கின்றனர் என்பது இதிலிருந்து புலனாகின்றதல்லவா?  இதை தெற்கிலுள்ளவர்கள் உணர மறுக்கின்றனர். வடக்கிற்கு சென்று அங்குள்ள முகாம்களின் வாழும் மக்களின் உண்மை நிலையை அறிந்துகொள்ளுங்கள் என்று கூறினாலும் போகின்றனர் இல்லை. இங்கிருந்து  கொண்டு தமக்கு வேண்டியதைக் கூறிக்கொண்டு தவறான தகவல்களைக் கொடுத்து மக்களை திசைதிருப்பிக்கொண்டிருக்கின்றனர்.

யுத்தம் நடந்த நாடுகளை எடுத்துக்கொண்டால் யுத்தத்தின் போது காணிகளை பிடித்துவைப்பதுண்டு. ஆனால் யுத்தம் நிறைவடைந்த பின்னர் அதனை விட்டுவிடவேண்டும். அப்படித்தான் பல நாடுகளில் நடந்துள்ளது.
நல்லிணக்கம் என்றவுடன் வடக்கு கிழக்கை நோக்கியே வெளிநாட்டவர்கள் அரசசார்பற்ற நிறுவனங்கள் அரச அதிகாரிகள் என அனைவரும் படையெடுக்கின்றனர். உண்மையில் நல்லிணக்கத்தின் அவசியத்தைப் பற்றி விளங்கித் தெளிவுபடுத்த வேண்டிய தேவை தெற்கிலேயே இருக்கின்றது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். வடக்கில் அங்குள்ள மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவேண்டும்.

அரச அதிகாரம் என்பது வடக்கில் கடந்த 70 வருடகாலப்பகுதியில் எந்தளவிற்கு இருந்துள்ளதென்பதை எண்ணிப்பார்க்கவேண்டும். இந்தக்காலப்பகுதியில் வடக்கில் எத்தனை அமைச்சர்கள் இருந்தார்கள்? ஒரு அமைச்சருக்கு என்ன செய்யமுடியும் ஒரு பிரதியமைச்சருக்கு என்ன செய்ய முடியும் என்று எனக்குத்தெரியும். ஆனால் அது வடக்கு மக்களுக்கு கிடைக்கவில்லை. தெற்கில் கிராமங்களுக்கு போகும் போது அங்கு சந்திக்கும் மக்களின் தோற்றத்தைப் பார்த்தவுடன் அவர்கள் எப்படியிருக்கின்றார்கள் என்பதை விளங்கிக்கொண்டுவிடலாம். ஒருவர் வங்கியில் எவ்வளவு பணத்தை வைத்திருக்கின்றார் என்பதிலோ அன்றேல் அவரிடம் எத்தனை காணிகள் இருக்கின்றன என்பதிலோ அன்றி அவரைப் பார்க்கும் போதே வாழ்க்கைத்தரத்தின் நிலைமையை விளங்கிக்கொண்டுவிடலாம்.

மொழிப்பிரச்சனை என்பது இன்னமும் தீர்க்கப்படாத பெரும் பிரச்சனையாகவே இருக்கின்றது. அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.


வடக்கிலுள்ளவர்களின் காணிகளைத் திரும்பக்கொடுக்காமல் தொடர்ந்தும் வைத்திருந்தால் எதிர்காலத்தில் மீண்டும் நாம் யுத்தமொன்றிற்கு முகங்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம். இதனாலேயே காணிகளைத் திருப்பிக்கையளிக்க வேண்டிய விடயத்தை மீண்டுமாக வலியுத்திவருகின்றேன்.

நான் வடக்கிற்கு சென்ற போது இராணுவ முகாம்களுக்கு சென்றிருந்தேன். அப்போது அந்த வளவுகளில் கிணறுகள் இருப்பதைக் கண்ணுற்றேன். கிணறுகள் என்பது அங்கு வீடுகள் இருந்துள்ளதைக் காட்டுகின்றது. அந்தக்கிணறுகள் கட்டப்பட்டுள்ள விதத்தை வைத்து அங்கு வாழ்ந்தவர்களின் நிலையை விளங்கிக்கொள்ளமுடியும். சிறப்பாக வாழ்ந்துள்ளனர் எனப்புரிந்துகொள்ளமுடியும்.

வடக்கு விஜயத்தின் போது அங்குள்ள பாடசாலையொன்றை நான் மக்களிடம் மீளக்கையளித்திருந்தேன். உண்மையில் கூறுவதென்றால் அந்தப்பாடசாலையை நாம் எப்போது திருப்பிக் கையளித்திருக்க வேண்டும். யுத்தம் நிறைவடைந்த பின்னர் அதை உடனடியாக திருப்பிக் கையளித்திருக்க வேண்டுமல்லவா?

வடக்கில் இராணுவ முகாம்கள் இருப்பதை மக்கள் விரும்பவில்லை. சர்வதேசமும் அது விடயத்தில் கரிசனையை வெளிப்படுத்தியுள்ளனர். நீங்கள் இதனை எப்படிப்பார்க்கின்றீர்கள்? வடக்கில் இராணுவ முகாம்கள் இருக்க இருக்க சர்வதேச நெருக்கடி அதிகரிக்குமல்லவா?

வடக்கில் இராணுவ முகாம்கள் தொடர்ந்தும் இருக்க இருக்க சர்வதேசத்தின் அழுத்தம் அதிகரிக்கும் என்பது உண்மையானது.. யுத்த காலத்தின் போது கொழும்பில் பல இடங்களில் சோதனைச் சாவடிகள் இருந்தன. இராணுவத்தின் பிரச்சன்னம் இருந்தது. ஆனால் யுத்தம் நிறைவடைந்ததும் அவை அகற்றிக்கொள்ளப்பட்டன. யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இராணுவத்தினர் இங்கு நிலைகொண்டிருந்தால் மக்களின் மனநிலை எப்படியிருக்கும். அதனை ஏற்றுக்கொள்வார்களா நிச்சயமாக ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். யப்பானைப் பாருங்கள் வழமையான நாட்களில் இங்கு பொது இடங்களில் ஒரு பொலிஸைக் கூட பார்க்க முடியாது.

ஜெனிவா தீர்மானத்தினால் எழுந்துள்ள நெருக்கடி நிலையையை எதிர்கொள்வதற்கு அரசாங்கம் சரியான முறையில் நடவடிக்கை எடுக்கின்றது என எண்ணுகின்றீர்களா?

வடக்கு கிழக்கில் இடம்பெயர்ந்த நிலையில் முகாம்களில் வாழும் மக்களை அவர்களின் சொந்த இடங்களில் மீளக்குடியேற்றினாலேயே  75 வீதமான ஜெனிவா பிரச்சனைக்கு தீர்வுகண்டுவிடலாம் என்பதில் எனக்கு நம்பிக்கையுள்ளது.


 ஜி-7 மாநாட்டுடன் இணைந்ததாக நடைபெற்ற நிகழ்விலே முதன்முறையாக பங்கேற்ற இலங்கைத்தலைவர் என்ற பெருமையைப் பெற்றிருக்கின்றீர்கள். இதன் போது ஜி-7தலைவர்கள் என்ன கூறினார்கள்?


ஜி-7 மாநாட்டில் பங்குகொண்ட தலைவர்கள் இலங்கைக்கு சிறப்பான வரவேற்பை வழங்கினார்கள். நல்லிணக்கத்தை பலப்படுத்தி ஊழல் மோசடிகளுக்கு எதிராக கடுமைiயான நடவடிக்கை எடுப்பதன்
மூலமாகவே நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்ல முடியும் என்பதை வலியுறுத்திக் கூறினார்கள். அவர்களது நிலைப்பாடு சரியானதென்றே நான் காண்கின்றேன்.

கிழக்கு மாகாண முதலைமைச்சர் விடயத்தை எப்படிப்பார்க்கின்றீர்கள்?

உண்மையைச்  சொல்வதென்றால் இலங்கையின் நிர்வாகத்தினர் மத்தியில் இத்தகைய மோதல்கள் ஏற்படுவதொன்றும் புதிய விடயமல்ல. இவ்வாறான பல சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த விடயத்தில் முதலமைச்சர் நடந்துகொண்ட விதம் முற்றிலும் தவறானது. ஆனால் அவர் முஸ்லிம் என்பதனாலேயே இந்தளவிற்கு விவகாரம் பூதாகரப்படுத்தப்பட்டுள்ளது. இதே இடத்தில் ஒரு சிங்களவர் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?

எதிர்க்கட்சித்தலைவர் சம்பந்தன் இராணுவ முகாமிற்குள் அத்துமீறி நுழைந்தார் போன்ற  பொய்யான செய்திகளைத் திட்டமிட்ட செய்திகளை கடும்போக்குத் தரப்பினர் பரப்புவது நல்லிணக்க செயற்பாடுகளுக்கு பாதகமல்லவா?

முதலிலே எதிர்க்கட்சித்தலைவர் ஏன் அங்கு போனார் என்பதை விளங்கிக்கொள்ளவேண்டும். அங்கு சந்திப்பொன்றுக்கு போனவர் மக்கள் தங்கள் காணிகளை வந்து பார்க்குமாறு கூறியதனாலேயே முகாமிற்கு சென்றிருக்கின்றார். சென்றதும் அவர்கள் திறந்துவிட்டுள்ளனர்.

Monday, April 25, 2016

போரின் வடுக்களைக் குணப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் தேவை - -இலங்கைக்கான ரஷ்யத்தூதுவர் அலெக்ஸாண்டர் கர்சாவா



*நல்லிணக்க  முயற்சிகளுக்கு தலைமைதாங்கும்  முன்னாள் ஜனாதிபதி சந்திக்காவை செச்னியாவிற்கு வருமாறு அழைப்பு விடுத்தேன்


* பனாமா பேப்பரில் ஜனாதிபதி புட்டினின் பெயர் இல்லை


* ரஷ்யாவின் பங்களிப்பின்றி எந்த சர்வதேச பிரச்சனைக்கும் தீர்வுகாணமுடியாதென்பதே யதார்த்தம்



அருண் ஆரோக்கிய நாதர்


படம்: ராயிஸ் ஹஸன் 

இலங்கையில் மூன்று தசாப்தகாலமாக இடம்பெற்ற போரின் வடுக்களை குணப்படுத்துவதற்கு  வேண்டிய அனைத்துவிதமான நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் மேற்கொள்வது மிகவும் இன்றியமையாததாகும். போரின் பாதிப்பினால் ஏற்பட்ட காயங்கள் நெருப்பு அணைந்தும் வெந்தணல் தொடர்ந்தும் இருப்பது போன்றது. எனவே அதனை தணிப்பதற்கான அனைத்துநடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவேண்டும் என இலங்கைக்கான ரஷ்யத் தூதுவர் அலெக்ஸாண்டர் கர்சாவா தெரிவித்தார். 

சுடர் ஒளிக்கு வழங்கிய பிரத்தியேகப் பேட்டியின் போதே அவர் இந்தக்கருத்துக்களைத் தெரிவித்தார். 

இலங்கையில் அனைத்து சமூகங்களிடையேயும் நல்லிணக்தை ஏற்படுத்த முனையும் அலுவலகத்திற்கு தலைமைதாங்குகின்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்கவை சந்தித்த வேளையில் ரஷ்யாவில் ஒரு காலத்தில் போரினால் சின்னாபின்னப்பட்டிருந்த செச்னிய மாகாணத்திற்கு வருகைதருமாறு அழைப்பு விடுத்ததாகவும் தற்போது அங்கு ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை நேரில் காணுமாறு கூறியதாகவும் ரஷ்யத்தூதுவர் கூறினார்.

பனாமா பேப்பர்களின் ரஷ்ய ஜனாதிபதி விளாடீமீர் புட்டினின் பெயர் இடம்பெறவில்லை மாறாக அவரது நெருக்கிய நண்பரொருவரின பெயரே இடம்பெற்றுள்ளது. நண்பரின் பெயர் இடம்பெற்றுள்ளதால் ஜனாதிபதியும் அதனுடன் சம்பந்தப்பட்டிருக்கலாம் என நினைக்கின்றனர் உண்மையில் ஜனாதிபதிக்கும் அதற்கும் எவ்விதத் தொடர்புமில்லை. ஜனாதிபதி புட்டினின் 16 ஆண்டுகால ஆட்சிக்காலமானது சர்வதேச மட்டத்தில் ரஷ்யாவின் வகிபாகத்தை கனப்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் பங்களிப்பு இல்லாமல் இன்று எந்த சர்வதேச பிரச்சனைகளுக்கும் தீர்வுகாணமுடியாதென்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனைப் பொறுத்துக்கொள்ள முடியாதாவர்கள் பொறாமை காழ்ப்புணர்வு காரணமாகவே புட்டினின் ஆட்சி முறைகுறித்து விமர்சனங்களை முன்வைத்துவருகின்றனர் எனவும் இலங்கைக்கான ரஷ்யத்தூதுவர் மேலும் தெரிவித்தார். 



இலங்கைக்கான ரஷ்யத்தூதுவர் சுடர் ஒளிக்கு வழங்கிய முழுமையான நேர்காணல் :

நீங்கள் இலங்கைக்கான ரஷ்யத்தூதுவராக பதவியேற்று மூன்றரைவருடங்களாகிவிட்டன. இலங்கை தொடர்பில் உங்களது ஒட்டுமொத்தமான மதிப்பீடு என்ன?


நான் மூன்றரை வருடங்களுக்கு முன்னர் வந்தபோதும் தற்போதும் இருக்கின்ற நிலைமையை பார்க்கும் போது நிறைய சாதகமான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது. இந்தக் காலப்பகுதியில் கொழும்பு அதிகமாற்றங்களைக் கண்டிருக்கின்றது. நான் இந்த நாட்டிற்கு வந்த உடனேயே இந்த நாடு நசுக்கிவைக்கப்பட்டிருக்கும்  கம்பிச்சுருள்களைப் போன்றுள்ளது என எண்ணினேன். ஆம் எப்படி நசுங்கிய நிலையிலுள்ள கம்பிச்சுருளை  அழுத்தத்தில் இருந்து விடுவிக்கும் போது எப்படி பெருத்துச்செல்லுமோ அதேபோன்றே இந்த நாட்டையும் அதனை நெருக்கிக்கொண்டிருக்கும் விடயங்களில் இருந்து விடுவிக்கும் போது அதன் முழுமையான வீச்சை நோக்கி விரிந்துசெல்லும். அதுவே நடந்துகொண்டிருக்கின்றது. கொழும்பைச் சுற்றி எத்தனை நிர்மாண வேலைகளை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன என்பதை உங்களால் பார்க்கமுடியும். இங்குள்ள வாகனங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் நீங்கள் காணமுடியும். 2012ம் ஆண்டு செப்டம்பர் மாத பிற்பகுதியில் நான் வந்தபோது நான் போக்குவரத்து நெரிசலுக்கு பெரிதாக முகங்கொடுக்கவில்லை. ஆனால் தற்போது அதிகமான போக்குவரத்து நெரிசல் காணப்படுகின்றது. இது மக்களுக்கு அசௌகரியமானதாக ஒரு பக்கத்தில் காணப்பட்டாலும் மறுபக்கத்தில் அவர்களது வாழ்க்கைத்தரத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியைக் காண்பிப்பதாக உள்ளது. நான் வருகைதந்த வேளையில் சராசரி தனிநபர் வருமானம் 2600 அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது.  தற்போது அது நான்காயிரம் அமெரிக்க டொலர்களாகும். அப்படிப்பார்க்கையில் 50 சதவீத அதிகரிப்பு காணப்படுகின்றது. இதுவெல்லாம் பெரும் மாற்றங்களாகும். 


ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தின் போது அவர்கள் மேற்கொண்ட அனைத்து செயற்பாடுகளுக்கும் ரஷ்யா முழுமையான ஆதரவை வழங்கியதாக இலங்கையர்கள் மத்தியில் மத்தியில் ஒரு கருத்துநிலை காணப்படுகின்றது?இந்தக் கேள்வி தொடர்பில் குறுக்கீடு செய்ய விளைகின்றேன்
. இலங்கையுடனான எமது இராஜதந்திர உறவுகள் 60 ஆண்டுகால வரலாற்றைக் கொண்டது. அடுத்தாண்டு 60வது வருடப் பூர்த்தி விழாவைக் கொண்டாடவுள்ளோம். இந்த காலப்பகுதி பூராகவும் ரஷ்யா இலங்கைக்கு சர்வதேச ரீதியாக உதவியளித்துவந்துள்ளது. ராஜபக்ஷவின் காலத்தில் மட்டுமன்றி இலங்கையின் உண்மையான நண்பனாக நாம் வரலாறு முழுவதுமே ஆதரவளித்துவந்துள்ளோம். 

ராஜபக்ஷவினரின் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக எவ்வித கேள்விகளும் இல்லாமல் ரஷ்யா இலங்கைக்கு ஆதரவளித்ததாக எமது தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கருத்துநிலைப்பாடு நிலவியது?
ஒட்டுமொத்த இலங்கைக்கு அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் குறிப்பாக ஐநாவில் ஆதரவுவழங்கினோம்.நாம்  ராஜபக்ஷவிற்கோ வேறெந்த தனிப்பட்டவர்களுக்கோ ஆதரவளிக்கவில்லை. நாம் இலங்கை நாட்டிற்கே ஆதரவளித்தோம்.  நாம் இலங்கை மக்களுக்கே ஆதரவளித்தோம்.நாங்கள் சிங்களவர்கள் என்றோ தமிழர்கள் என்றோம் முஸ்லிம்கள் என்றோ பறங்கியர் என்றோ நோக்கவில்லை மாறாக இலங்கை நாட்டவர்கள் என்றே நோக்கினோம் இலங்கைக்கே ஆதரவளித்தோம். 


கடந்த மூன்றரை ஆண்டு காலப்பகுதியில் இலங்கை பல மாற்றங்களைக் கண்டிருக்கின்றது என்று கூறினீர்கள்.இந்த சாதகமான நிலையைத் தொடர்ந்தும் தக்கவைப்பதற்கு செய்யவேண்டிய விடயங்கள் என நீங்கள் எவற்றைப் பரிந்துரைக்கின்றீர்கள்?
இந்த நிலைமையை தொடர்ந்தும் பேணவேண்டும்.இதற்கு இலங்கையில் உள்ளக சமாதானமும் நின்று நிலைக்கக்கூடியதான அபிவிருத்தியும் அவசியமாகும். உள்ளக முதலீடுகளாக இருந்தாலும் சரி வெளிநாட்டு நேரடி முதலீடுகளாக இருந்தாலும் சரி நின்று நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கு  அவசியமாகும் 

கடந்த காலத்தில் ரஷ்யாவைப் பொறுத்தவரையில் செச்னியா பிரச்சனைக்கு முகங்கொடுத்தது. தற்போது அந்தப்பிரச்சனைக்கு தீர்வுகாணப்பட்டதாக அறிகின்றேன். இதிலிருந்து எத்தகைய பாடங்களை நீங்கள் படித்தீர்கள்? 

நல்லிணக்க  முயற்சிகளுக்கு உங்கள் நாட்டில் தலைமைதாங்குகின்ற முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவை நான் பலமுறை சந்தித்திருக்கின்றேன். நீங்கள் மிகவும் முக்கியமான பணியை பொறுப்பேற்று நடத்திக்கொண்டிருக்கின்றீர்கள் ஏன் செச்னியாவிற்கு வருகைதந்து அங்குள்ள நிலைமையை நேரில் பார்வையிடக்கூடாது என அழைப்பு விடுத்துள்ளேன்.  செச்னியாவானது போரின் பின்னர் ஏறத்தாழ சின்னாபின்னமாகிக்கிடந்தது.   முற்றுமுழுதாக தரைமட்டமாகிக் காணப்பட்டது. இங்கு மாதிரி 26வருடங்கள் அங்கு போர் இடம்பெறவில்லை. மாறாக குறைந்த காலப்பகுதியே போர் இடம்பெற்றது. இரண்டு இரண்டு வருடங்களாக மொத்தமாக நான்கு வருடங்களே போர் இடம்பெற்றது.அந்த போரில் முழுமையாக சின்னபின்னமடைந்து கற்குவியல்களாக காணப்பட்ட செச்னியா இன்று அழகிய பிரதேசமாக காணப்படுகின்றது.தற்போது நல்லிணக்கம் உச்சளவில் நிலவுகின்றது. இலங்கைவிடயத்தில் நாம் தலையிடவில்லை. இதனை நாம் முழுமையாக உள்நாட்டுப்பிரச்சனையாகவே நோக்குகின்றோம். நாம் ஆலோனைவழங்க முடியும். உண்மையான ஆதரவை வழங்கமுடியும். உண்மையில் நாம் கண்ணிவெடியகற்றலுக்கு ஆதரவு வழங்கினோம். நாம் எமது உபகரணங்களை வழங்கினோம். தொழில் நுட்பவியலாளர்களை வழங்கினோம்  நிபுணர்களை வழங்கினோம்.  எமது உதவிகளையிட்டு இலங்கைத்தரப்பினர் மகிழ்ச்சியுற்றதாக அறிந்துள்ளோம். 





 உலக வல்லரசுகளான அமெரிக்கா சீனா மற்றும் இந்தியா ஆகியன இலங்கையில் தமக்குரிய ஆதிக்கத்தை செலுத்த முற்படுவதைக் காணமுடிகின்றது


இந்த விடயத்தில் எனது கருத்தைச் சொல்ல வேண்டும். உண்மையில் அமெரிக்கா சீனா இந்தியாவின் கவனக்குவிப்பிற்குள்ளாக இலங்கை வந்துள்ளதென்று கூறுவதே சரியென நினைக்கின்றேன்.

ரஷ்யாவும் உலகின் பெரும் வல்லரசுகளிலொன்றாக திகழ்ந்துகொண்டிருக்கின்றது. இலங்கையைப் பொறுத்தவரையில் ரஷ்யாவின் அக்கறைகள் என்ன?


எமது அக்கறைகள் மிக மிக எளிமையானவை நாம் எந்தவித வரப்பிரசாதங்களையோ  அனுகூலங்களையோ இங்கு எதிர்பார்க்கவில்லை. இந்த நாட்டை நாம் எமது நல்ல பங்காளியாகவும் உண்மையான நண்பனாகவும் நாம் கருதுகின்றோம்.

20வருடங்களுக்கு முன்பாக ரஷ்யாவின் பெயர் சர்வதேச மட்டத்தில் மிகவும் சக்திவாய்ந்தாகக் காணப்பட்டது. தற்போதைய நிலையில் உலகில் ரஷ்யாவின் வகிபாகம் என்ன? சர்வதேச சமூகத்திடம் இருந்த உரிய கௌரவத்தை ரஷ்யா பெறுகின்றதெனக் கருதுகின்றீர்களா? 

இன்னமும் சர்வதேச சமூகத்திடமிருந்து நாம் உயரிய மதிப்பையும் அங்கிகாரத்தையும் பெற்றுக்கொண்டிருக்கின்றோம் என நான் நினைக்கின்றேன். வரலாற்றை எடுத்து நோக்கினால் ஐரோப்பாவின் காவற் கேடயமாக ரஷ்யா விளங்கிவந்துள்ளது. ஜென்ஜிஸ் கானின் படைகள் ரஷ்யாவினாலேயே நிறுத்தப்பட்டன. ரஷ்யா பெரும் பாத்திரத்தை பல்வேறு முக்கியமான விடயங்களில் வகித்துள்ளது. ஹிட்லரின் நாஸிப்படைகளுக்கு எதிரான போராட்டத்தில் ரஷ்யாவின் பங்கு அளப்பரியது.  ரஷ்யா மாத்திரம் வேறெந்த நாட்டையும் விட அதிகமாக 206 மில்லியன் பேரைப் பலிகொடுத்திருந்தது. ரஷ்யா என்கிற போது தனியே ரஷ்யா அல்ல மாறாக சோவியத் ஒன்றியம் அதில் பல நாடுகள் இருந்தன. அவற்றிலிருந்து ஒட்டுமொத்தமாக  206 மில்லியனுக்கு அதிகமானவர்களை ரஷ்யா பலிகொடுத்திருந்தது. தற்போதைய நிலையில் சர்வதேச அரங்கை   நீங்கள் பரந்து பட்ட நிலையில் நோக்கினால் சர்வதேசத்திலுள்ள எந்தவொரு பெரும் பிரச்சனைக்கு ரஷ்யாவின்றி தீர்க்க முடியாத நிலை காணப்படுகின்றது. 

எகிப்தின் பிரபல சுற்றுலாத்தலமான ஸாம்  அல் ஸேய்க்கிலிருந்து புறப்பட்ட ரஷ்ய சுற்றுலாப்பயணிகள் தாங்கிய விமானம் வெடித்துச் சிதறியதில் சில மாதங்களுக்கு முன்பாக ரஷ்யர்கள் பலர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தத்தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பின் நடவடிக்கைகள் எத்தகைய பாரதூரத்தன்மை கொண்டவை ? உலகளாவிய ரீதியில் எதிர்நோக்கும் சவால்கள் என்ன? 

சர்வதேச இது மிகவும் அபாயகரமான சவாலாகும்.இந்த அமைப்பு மிகவும் கொடிய அமைப்பாகும்.இதனைத் தோற்கடிக்க அனைத்து நாடுகளும் ஒரணியில் இருந்த உழைக்கவேண்டும் .

மிகப்பயங்கரமான அமைப்பென்று கூறுகின்றீர்கள் அப்படியாயின் சிரியாவில் இருந்து ஏன் படைகளை வாபஸ் பெற்றீர்கள்?

நாம் நிர்ணயித்த இலக்கை அடைந்ததனாலேயே படைகளை வாபஸ் பெற்றோம். ஆனால் தேவையேற்படின் சில மணி நேரத்திற்குள் அங்கு செல்லுகின்ற வசதிகள் எம்மிடம் உள்ளன. 


அண்மையில் வெளியிடப்பட்ட பனாமா பேப்பரில் உங்களுடைய ஜனாதிபதி புட்டினின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றதே? உண்மையில் அவருடைய பெயர் அதில் இல்லை. மாறாக அவரது நெருங்கிய நண்பரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. நெருங்கிய நண்பரின் பெயர் இடம்பெற்றிருப்பதால் ஜனாதிபதியும் அவரது நண்பருக்கு ஊடாக இதில் சம்பந்தப்பட்டிருக்கலாமோ என ஊகத்தின் அடிப்படையில் கருத்து வெளியிட்டுள்ளனர். உண்மையில் அவர் இதில் எந்தவகையிலும் சம்பந்தப்படவில்லை. 


மேற்கு நாட்டவர்கள் உங்களது ஜனாதிபதிக்கு எதிராக தொடர்ச்சியாக கடுமையா விமர்சனங்களை முன்வைத்து வருவதுடன் அவரை ஜனாதிபதி பதவியிலிருந்து அகற்றும்  நோக்கில் செயற்படுவதை செய்திகள் மூலமாக அறியமுடிகின்றது. ஏன்  இப்படியாக அவர் இலக்கு வைக்கப்படுகின்றார் என நினைக்கின்றீர்கள்? 

இந்த விமர்சனங்களும் கருத்துக்களும் பொறாமையின் காரணமாக தெரிவிக்கபடுகின்றன என நினைக்கின்றேன்.



ஜனாதிபதி புட்டினின் காலத்தில் சாதித்த விடயங்களில்  முக்கியமானதா எதைக் கருதுகின்றீர்கள்?  சர்வதேச தளத்தில் இந்த 16 வருடகாலப்பகுதியில் ரஷ்யாவின் வகிபாகத்தின் கனதியை அவர் அதிகரித்திருக்கின்றார். ரஷ்யா இல்லாமல் எவ்வித சர்வதேச பிரச்சனையையும் தீர்க்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டுள்ளமை அவர் விட்டுச் செல்கின்ற பெரும் வகிபாகமாக கருதுகின்றேன். 

ரஷ்யா,இலங்கையில் அதன் புதிய தூதரகக்கட்டிடத்தை நிர்மாணித்து வருகின்றது. இதன் திறப்பு விழாவிற்கு ஜனாதிபதி புட்டின் வரக்கூடும் என சில செய்திகளைப் படித்த ஞாபகம் உள்ளது. இதற்கான சாத்தியங்கள் உள்ளதா?


நான் ஏற்கனவே புதிய தூதரக்கட்டிடத்தில் தான் கடமையாற்றுகின்றேன். ஆனால் உத்தியோகபூர்வமாக நாம் அதனை இன்னமும் திறந்துவைக்கவில்லை.  நான் நினைக்கவில்லை ஜனாதிபதி இதற்கு வருகை தருவார் என்று இது  ஜனாதிபதி வருமளவிற்கான நிகழ்ச்சியல்ல. 

இன்னமும் இரண்டு வருடங்களில் ரஷ்யா உலகக்கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளை நடத்தவுள்ளது. இது எவ்வளவிற்கு முக்கியத்துவமானது?

 உலகக் கிண்ணம் என்பது ரஷ்யாவைப் பொறுத்தவiரையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கால்ப்பந்தாட்டம் ரஷ்யாவில் மிகவும் பிரசித்திவாய்ந்த விளையாட்டாக திகழ்கின்றது. ரஷ்யா 1960களில் அரையிறுதி வரை உலகக்கிண்ணப்போட்டிகளில் முன்னேறியிருந்தது. அந்தக்காலப்பகுதியில் ஐரோப்பிய சம்பியன் பட்டத்தையும் ஒலிம்பிக் சம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியிருந்தது. இந்த முறை சொந்த நாட்டில் உலகக்கிண்ணம் நடப்பதால் நாம் நம்பிக்கை கொண்டிருக்கின்றோம்.

Wednesday, February 17, 2016

இறுதிப்போரில் நிகழ்ந்ததை அறியாதோரே இலங்கையின் யுத்திகள் குறித்து பேசுகின்றனர்

*இலங்கையின் பிரச்சனைகளுக்கு உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதான இலங்கையின் தீர்வுகள் காணப்படவேண்டும்.
*ஜனநாயக மயமாக்கலும் சட்டத்தின் ஆட்சியுமே இருக்கின்ற ஒரே வழி
-துருக்கித்தூதுவர் டுன்ஜா ஒஷ்ஸுகதார் செவ்வி
1

நேர்காணல் அருண் ஆரோக்கியநாதர்
இலங்கைப் போரின் போது பின்பற்றிய உத்திகளை கையாளவேண்டும் என்று கூறுபவர்கள் இறுதிப் போரின் போது இங்கு நடந்தவை குறித்து போதுமான அறிவைக் கொண்டிராதவர்கள் என இலங்கைக்கான துருக்கி நாட்டுத்தூதுவர் டுன்ஜா ஒஷ்ஸுகதார் சுட்டிக்காட்டுகின்றார். இலங்கை பிரச்சனைக்கு தீர்வுகண்டவழியில் நாமும் தீர்வுகாணவேண்டும் என அவர்கள் எண்ணுகின்றனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
போரின் போது இலங்கை பின்பற்றிய உத்திகளை துருக்கியிலும் பின்பற்ற வேண்டும் என துருக்கிய அரசியல்வாதியொருவர் தெரிவித்ததாக அண்மையில் ஊடகங்களில் வெளியாகியிருந்த செய்தி குறித்து வினவியபோதே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.
இந்த நாட்டிற்கு நீங்கள் வருகைதந்து சில மாதங்களாகிவிட்டன. இந்த நாட்டின் ஜனநாயகப் பயணம் தொடர்பாக நீங்கள் எத்தாகைய மதிப்பீட்டைக் கொண்டுள்ளீர்கள்?
நான் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி நான் இலங்கைக்கு வருகைதந்தேன்.உண்மையில் இந்த நாட்டில் மாற்றமொன்று ஆரம்பமாகிய வேளையிலேயே நான் இங்கு வந்திறங்கியிருந்தேன். ஒரு புதிய சுவாசம்; ஒரு புதிய பரிமாணம்; ஒரு புதிய முன்னோக்கிய பார்வை இந்த நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.மக்களின் எழுச்சிமிக்க உள்ளக்கிடக்கை குறித்து நான் நான் மிகவும் ஈர்க்கப்பட்டுள்ளேன். அது என்னைப் பொறுத்தவரையில் தனிப்பட்ட ரீதியிலும் ஊக்கமளிக்கின்றது. இங்குள்ள எனது சகபாடிகளுடன் பேசும்போது நீங்கள் சரியான நேரத்தில் இந்த நாட்டிற்கு வருகை தந்துள்ளீர்கள் ஏனென்றால் இங்குள்ள அனைத்து விடயங்களுமே புதிய ஆரம்பத்துக்குள்ளாக பயணிக்கத் தொடங்கியுள்ளன என்றுணர்த்தினர்.அதிகளவான கருத்துவெளியிடும் சுதந்திரத்துடன் புத்தூக்கம் நிறைந்ததாக ஊக்கத்துடன் இந்த நாட்டை ஆளுகைசெய்வது ஊக்கமளிப்பதாகவுள்ளது.மிகவும் ஆக்கபூர்வமானதும் அர்த்தபுஷ்டியானதுமான கலந்துரையாடல்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றன. அத்தோடு கூட்டணி அரசாங்கம் அதிகாரத்திற்கு வந்தது முதலாக அனைத்துவிடயங்களும் கருத்தொருமைப்பாட்டுடன் கூடியதாக தீர்மானிக்கப்படுகின்றது. அது தனித்துவமானதென்பதுடன் மிகவும் சிறப்பானதாகும்.
ஆறாண்டுகளுக்கு முன்னர் இந்த நாட்டில் யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டதன் பின்னர் வரலாற்றின் பல விடயங்களில் குறிப்பாக நல்லிணக்கத்தை நோக்கிய தேடலில் தீர்க்கமான கட்டத்தில் இலங்கை பயணித்துக்கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தில் துருக்கி எவ்வாறு பங்களிக்க முடியும் என நினைக்கின்றீர்கள்?
இலங்கையின் நட்பு நாடாக மிக நெருக்கமான உறவுகளைக் கொண்டதாக துருக்கி திகழ்கின்றது. இந்த நாட்டில் முன்னெடுக்கப்படும் ஜனநாயமயமாக்கல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுவரும் முயற்சிகளை துருக்கி அவதானித்துக்கொண்டிருப்பதுடன் அதற்கு ஆதரவளித்துவருகின்றது. கடந்த கால கசப்புணர்வுகள் தொடர்பில் சிறப்பான ஜனநாயகப்பான்மையுடன் தீர்வுகாண்பதற்கு எடுத்துவருகின்ற முயற்சிகளையும் சிரமமான விடயங்களை தமது வல்லமைக்குட்பட்ட வகையிலும் தமது சொந்த முன்முயற்சியினாலும் கையாண்டுவருகின்றமை தொடர்பிலும் நாம் இலங்கை நண்பர்களின் சாதகமான அணுகுமுறைகளை நாம் அவதானித்துக்கொண்டிருக்கின்றோம்.ஜனாதிபதி; பிரதமர்; அமைச்சரவையின் தீர்க்கரமான உறுதிப்பாடு ஊக்கமளிப்பதாகவுள்ளது.3
துருக்கியும் உள்நாட்டுப் பிரச்சனைக்கு முகங்கொடுத்துள்ளது. இது போன்ற கடினமான காலப்பகுதியில் எத்தகைய அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும்?
நாட்டில் நீண்டகாலமாக இடம்பெறும் பயங்கரவாத நடவடிக்கைகளினால் ஏற்படும் பாதக விளைவுகளையும் துயரங்களையும் புரிந்துகொள்ளக்கூடிய சில நாடுகளில் ஒன்றாக துருக்கி விளங்குகின்றது. ஏதோ வழியில் இந்தப் பிரச்சனைக்கு தீர்வுகாண்பதில் இலங்கை வெற்றிகண்டிருக்கின்றது.ஆனால் துருக்கி இன்னமும் போராடிக்கொண்டிருக்கின்றது.துருக்கியிலும் முப்பது ஆண்டுகளுக்கும் அதிகமான நீட்சிகொண்ட பிரிவினைவாத பயங்கரவாதம் உள்ளது. நாம் பயங்கரவாதத்திற்கு எதிராக சண்டையிடுகின்றோம். துருக்கி; ஐரோப்பிய கவுன்ஸிலின் அங்கத்துவ நாடாகவும் ஐக்கிய நாடுகள் சாதனத்தில் கையொப்பமிட்டுள்ள தரப்பாகவும் உள்ளது.பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுகையில் நாம் எதனைச் செய்தாலும் சட்டத்தின் ஆட்சி என்ற வரையறைக்குள்ளேயே நாம் அதனை செய்கின்றோம். நாங்கள் எத்தகைய நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும் அவை யாவும் சட்டத்தின் ஆட்சி என்ற கட்டமைப்பிற்குள்ளாக அமைந்திருக்கின்றது.சட்டங்களையும் நியதிகளையும் பின்பற்றாத பயங்கரவாதிகளுக்கு எதிராக போரிடும் போதுகூட ஜனநாயக நாடொன்று அந்த நாட்டினுடைய சட்டங்களையும் நியதிகளையும் தவிர்த்துச் செயற்படமுடியாது.பயங்கரவாதிகளுக்கு எல்லைகளென எதுவும் கிடையாது. பொதுமக்கள் குழந்தைகள் கொல்லப்படுவது குறித்து அவர்கள் கவனத்திற்கொள்வதில்லை.பாடசாலைகள் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டாலும் வைத்தியசாலைகள் அழிக்கப்பட்டாலும் அவர்களுக்கு கணக்கில்லை. அவர்கள் அது போன்ற விடயங்கள் தொடர்பாக கவலைகொள்வதில்லை.பயங்கரவாதத்திற்கு எதிராக போரிடும் போது சட்டத்தின் ஆட்சியை முன்னிறுத்தி செயற்படுகின்ற ஜனநாயக நாடு தனது நடவடிக்கைகளின் போது பொதுமக்கள் அப்பாவிகள் பாதிக்கப்படாத வகையில் மிகக் கவனமாக நடந்துகொள்ளவேண்டும்.
கடைசிக் கேள்விக்கு நீங்கள் வழங்கிய பதில் உங்களது துருக்கிய அமைச்சரொருவர் அண்மையில் கூறிய கருத்தை நினைவுபடுத்துகின்றது. இலங்கையில் போரின் போது பின்பற்றிய உத்திகளை துருக்கியிலும் பின்பற்ற வேண்டும் என அவர் கூறியதாக ஊடக அறிக்கைகள் மூலம் அறிந்துகொண்டேன். இலங்கையில் இறுதிப் போரின் போது இடம்பெற்றவற்றை துருக்கி ஏற்றுக்கொள்கின்றது என இந்த அறிக்கையை வைத்து பொருள்கொள்ளமுடியுமா?
இல்லை. இது முற்றுமுழுதாக தவறானது. முதலில் அந்தக்கருத்தைக் கூறியவர் துருக்கிய அமைச்சரும் இல்லை அரசாங்க அங்கத்தவரும் இல்லை. இவ்வாறான உதாரண அறிக்கைகளை கருத்துக்களை வெளிப்படுத்துபவர்கள் இலங்கை போரின் இறுதிக்கட்டங்களில் நிகழ்ந்தவை பற்றி போதுமான அறிவைக் கொண்டிருக்கவில்லை. இலங்கை பிரச்சனைக்கு தீர்வுகண்டது அதே வழியில் நாமும் செயற்படவேண்டும் என அவர்கள் எண்ணுகின்றனர். அந்தக்கருத்துக்கள் தனிப்பட்டவை. அது அரசாங்கத்தின் உத்தியோகபூர்வமான கருத்துக்கள் அல்ல. ஒவ்வொரு நாட்டிற்கும் அந்த நாட்டிற்குரித்தான சூழ்நிலைகள் களநிலைகள் உள்ளன. ஒருதரப்பினர் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் விதமானது ஏனையோருக்கு உதாரணமாக முடியாது. எம்முடைய சூழ்நிலைகள் களநிலைகள முற்றுமுழுதாக வித்தியாசமானவை. அதனால் தான் வேறொரு நாட்டில் பின்பற்றப்பட்ட வழிமுறைகளை இறக்குமதி செய்து எடுத்துக்கொண்டு எங்களுடைய சொந்தப்பிரச்சனைகளுக்கு தீர்வுகாண்பது சாத்தியமல்ல என்று கூறுகின்றேன்.

போரின் போது இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் தேவையென போரில் பாதிக்கப்பட்ட தரப்பினர் கோருகின்றனர். மேற்கு நாடுகளும் பொறுப்புக்கூறலில் அவசியம் குறித்து தொடர்ச்சியாக கோரிவந்துள்ளன. இலங்கையின் முன்னோக்கிய பயணத்திற்கு பொறுப்புக்கூறல் அவசியம் என நினைக்கின்றீர்களா? அன்றேல் ஒரு நாட்டை இலக்குவைப்பதற்கான ஆயுதமாக இது பயன்படுத்தப்படுவதாக நினைக்கின்றீர்களா?
இது இரு முனைகளைக் கொண்ட கத்திபோன்றதாகும். அதாவது இரு வாதங்களும் செல்லுபடியானவை என அர்த்தம்கொடுக்கின்றேன். மோதலின் போது தவறான நடவடிக்கைள் இடம்பெற்றுள்ளன. உள்ளகப் பிரச்சனையை தீர்க்கமுனைகையில் அவை இடம்பெற்றுள்ளன. அது சரியானதல்ல. அந்த கசப்பான உணர்வுகளைத் தாண்டி மேலெழுவதற்காக நாம் பணியாற்றுவோம். இந்த நாட்டை நல்லிணக்கப்படுத்துவோம் என்று ஒரு நாட்டிடம் நீங்கள் கூறமுடியும். அப்போது நல்லிணக்கம் இடம்பெறுமிடத்து எவ்விதமான கசப்புணர்வுகளும் இன்றி இலங்கை முன்னோக்கிப் பயணிக்க முடியும். இது சாதகமான அணுகுமுறையாகும். இந்த சாதக அணுகுமுறை இலங்கை அரசினாலும் பாராட்டப்படுவதாகவுள்ளது. மற்றைய அணுகுமுறை அதாவது சில கோரிக்கைகளை முன்வைத்து நாட்டிடம் வலுக்கட்டாயமாக கோரிக்கைகளை விடுப்பது என்னைப் பொறுத்தவரையில் எதிர்விளைவைக் கொண்டுவரக்கூடியதாகும். இலங்கையொரு இறைமையுள்ள நாடாகும். நாட்டை நிர்வகிப்பதற்கான சுயாதீனமான நீதித்துறையையும் ஏனைய தனக்குரித்தான சுயாதீனமான நிறுவனங்களையும் அது கொண்டிருக்கின்றது. ஒட்டுமொத்த ரீதியில் தனது எதிர்காலம் தொடர்பாக இலங்கை தீர்;மானிக்க முடியும். ஆனால் நட்பு நாடுகளின் நல்லெண்ணத்துடன் கூடிய சிநேகபூர்வமான ஆலோசனைகள் நாட்டை அபிவிருத்திப் பாதையை நோக்கி இட்டுச்செல்ல வழிகோலமுடியும்.
மேலைத் தேய நாடுகளில் ஏன் உங்களது நாட்டில் கூட உங்களது சொந்தப் பிள்ளையை அடித்தால் கூட பொலிஸிற்கு அழைப்பெடுத்தால் அவர்கள் வந்து மிகுதியைப் பார்த்துக்கொள்வர். அப்படியிருக்கும் போது தன்னுடைய மக்களைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ள ஓர் அரசாங்கம் பயங்கரவாத்தை எதிர்த்துப் போரிடுகின்றதான போர்வையில் சொந்த மக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் இடத்தில் அன்றேல் அந்த மக்களைக் கொன்றொழிக்குமிடத்தில் எவ்வகையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனக் கருதுகின்றீர்கள்?
ஜனநாயக மயமாக்கலும் சட்டத்தின் ஆட்சியுமே இருக்கின்ற ஒரே வழியாகும். அனைத்து அரசியல் கட்சிகளும் அரச சார்பற்ற நிறுவனங்களும் சிவில் சமூகத்தினரும் ஒன்றுதிரண்டு பொதுவான இணக்கப்பாட்டை அடைந்துகொள்ள முற்படவேண்டும். ஜனநாயகம் மற்றும் அநீதி தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வுகாண முற்படும் போது அனைத்துவிதமான உள்ளக தெரிவுகளும் தீர்ந்துவிட்டநிலையில் அதாவது அவற்றை இயன்றளவு முயற்சித்துப்பார்த்தும் சரிவராத நிலையில் தான் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து உதவிகளைக் கோருவது ஒரு தெரிவாக இருக்க முடியும். ஜனநாயகம் மற்றும் நீதி தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு கொடுப்பது மிகவும் முக்கியமானதாகும். சட்டத்தின் ஆட்சி என்பது கட்டாயமானது. அது இல்லாத விடத்தில் நிரந்தரமான தீர்வைக் கண்டுவிட முடியாது. மேம்பட்ட ஜனநாயகத்தைகக் கொண்ட மிகவும் அபிவிருத்தியடைந்த நாடுகளில் கூட தவறுகள் இடம்பெறக்கூடும். ஆனால் அதற்கு பொறுப்பானவர்கள் சட்டத்தின் முன்னர் நிறுத்தப்படவேண்டும். இறுதியாக ஒரு விடயத்தை சுட்டிக்காட்டவேண்டும் அதாவது இலங்கையின் பிரச்சனைகளுக்கு உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டதான இலங்கையின் தீர்வுகள் காணப்படவேண்டும். இந்த முயற்சியில் நட்புரீதியான நாடுகளின் நேர்மையானதும் நல்ல நோக்கம் கொண்டதுமான ஆலோசனைகளில் இலங்கை நம்பிக்கை கொண்டிருக்க முடியும்.
துருக்கி மதச்சார்பற்ற அரசியல்யாப்பைக்கொண்டுள்ளது. தமது அரசியல்யாப்புக்களில் மதங்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் நாடுகள் பல இருக்கும் போது முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக்கொண்ட உங்கள் நாடு உலகிற்கே சிறந்த முன்னுதாரணமாக விளங்குகின்றது. இலங்கையர்கள் தற்போது அரசியல்யாப்பு தயாரிப்பு வாதப்பிரபதிவாதங்களில் ஈடுபட்டுள்ள நிலையில் அரசியல் யாப்பு என்பது மதச்சார்பற்றதாக அமைவது எந்தளவிற்கு முக்கியமானது எனக்கருதுகின்றீர்கள்?


அது மிகவும் முக்கியமானது.90 வருடங்களுக்கு முன்னர் குடியரசாக பிரகடனப்படுத்தப்பட்டு நவீன துருக்கி கட்டியெழுப்பப்பட்டபோது  நாகரிகமிக்க, மேற்குலக நாடாக மாறுவதற்கு அரசையும் மதத்தையும் வேறாக்கவேண்டும் என துருக்கியின் ஸ்தாபகத் தலைவர்கள் எண்ணினர். மக்களின் வாழ்க்கையில் மதங்கள்  மிகவும் முக்கியமானவை என்பதில் எவ்வித சந்தேகத்திற்குமிடமில்லை. அதனை நாம் மதிக்கவேண்டும். அதனை  நன்கு கட்டிக்காக்கவேண்டும். ஆனால் நாம் மதங்களை அரசியலில் கலந்துவிட்டோமானால் நீங்கள் அந்த மதத்திற்கு மிகப்பெரிய தீங்கைச் செய்கின்றீர்கள்.ஏனெனில் சிலதரப்பினர் தமது தனிப்பட்ட அரசியல்தேவைப்பாடுகளுக்காக மதத்தை அரசியலைப் பயன்படுத்துவர். தமது தனிப்பட்ட தேவைகளுக்காக மதத்தை ஒரு கருவியாகப்பயன்படுத்துபவர் கொண்டிருக்கும் நிலைப்பாட்டை உண்மையான விசுவாசிகள் உண்மையான மதப்பற்றாளர்கள் கொண்டிருப்பதில்லை. இது தீர்க்கமானதொரு விடயம். உங்களது அரசியல் நலன்களுக்காக மதத்தை பயன்படுத்தக்கூடாது.அப்படிச் செய்யும் போது மதத்திற்கு தீங்கிழைக்கின்றீர்கள்.மறு முனையில் , பன்மைத்துவம் கொண்ட ஜனநாயக  சமூகம் , விரும்பிய மதத்தை பின்பற்றுவதற்கான சுதந்திரம், கருத்து வெளியிடும் சுதந்திரம்,  சுயமாக சிந்திப்பதற்கான சுதந்திரம் ஆகியவற்றை  நீங்கள் விரும்புமிடத்து ஒன்றையையும் சார்ந்திராத அமைப்பு முறை அவசியமாகும்.சார்பின்மை என்பது ஒருவர் தாம் விரும்பியதை விசுவசிப்பதற்கோ அன்றோல் விசுவசிக்காமல் இருப்பதற்கோ கொண்டிருக்கும் உரித்துடைமையைக் குறிக்கும்.எந்தவிதமான நம்பிக்கையையோ வழிமுறைகளையோ யார் மீதும் திணிக்காத நிலை சார்பின்மையில் உள்ள முக்கியவிடயமாகும்.மதச்சார்பின்மை இந்த உத்தரவாதத்தை எமக்கு வழங்குகின்றது.

Inline images 1

மதச்சார்பின்மையை கொள்கையாகக் கொண்டிருப்பதனால்  உங்கள் நாடு அடைந்துள்ள நன்மைகள் எவை?



துருக்கியை  கடந்த 90வருடங்களில் அதன் அமைப்பைக்கொண்ட அண்டைநாடுகளுடன் ஒப்பிட்டு நோக்குமிடத்து துருக்கி இன்றையநிலையில் உலகின் 17வது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாகவும் நேட்டோ அமைப்பில் இரண்டாவது மிகப்பெரிய இராணுவபலத்தைக் கொண்ட நாடாகவும் 10000 அமெரிக்க டொலர்களுக்கு மேற்பட்ட தனிநபர் வருமானத்தைக் கொண்டதாகவும் கைத்தொழில்மயப்படுத்தப்பட்ட ஜனநாயக நாடாகவும் திகழ்கின்றது.இதனை எப்படி அடைந்துகொள்ள முடிந்தது ? சார்பற்றதன்மை கொண்ட ஜனநாயக  ஆட்சி முறையால்தான் இது சாத்தியமானது.எமது நாட்டின் வரலாற்றில் ஏற்ற இறக்கங்கள் இருந்தன. இராணுவ ஆட்சியும் இடம்பெற்றதுண்டு. ஆனால் இறுதியாக நாம் ஜனநாயகத்தின் மீதே நம்பிக்கை வைத்தோம்.சுதந்திரமான தேர்தல்கள் கருத்துவெளியிடும் சுதந்திரம்  எந்தவகையான மத நம்பிக்கைகளையும் யார் மீதும் திணிக்காமை காரணமாக நாம் அதிகமதிகமாக சுதந்திரமாக சிந்திக்கும் மக்களாக மாறினோம். இது நாட்டில் சுபீட்சத்தையும் பொருளாதார அபிவிருத்தியையும் கொண்டுவந்தன.எம்மைச் சுற்றி அமைந்துள்ள சிரியா ஈராக் போன்ற நாடுகள் பாரிய பிரச்சனைகளில் சிக்குண்டு சின்னாபின்னமாகிவருகின்றன. அங்கெல்லாம் மதத்தின் ஒரு பிரிவைப் பின்பற்றுகின்றவர்கள் மற்றைய தரப்பினரை அடக்கியொடுக்கிவருகின்றனர். இதனால் பாரிய கசப்புணர்வுகள் பிரச்சனைகள் அங்கு குடிகொண்டிருக்கின்றன.அங்கெல்லாம் மதச்சார்பற்ற எதனையும் முன்னுரிமைப்படுத்தாத  ஆட்சிமுறை இருந்திருப்பின் அவை கூட சுபீட்சமிக்க முன்னேறிய நாடாக இருந்திருக்கும். ஜனநாயகம் இன்மை ஜனநாயக கற்கைகள் இன்மை கருத்துவெளியிடும் சுதந்திரம் இன்மை அனைத்து பிரஜைகளுக்கும் சம வாய்ப்புக்கள் இன்மையானது  நாட்டிற்கு அழிவையே இறுதியில் கொண்டுவரும்.
Inline images 2


உலகின் பதற்கரமான சிக்கல்கள் மிக்க பிரதேசங்களிலொன்றான மத்தியகிழக்கிற்கு அருகே கேந்திரஸ்தானத்தில் உங்களுடைய நாடு அமைந்திருக்கின்றது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான மேற்குலகின் இராணுவ திட்டங்களில் துருக்கியின் வகிபாகம் பிரதானமானதாக உள்ளது. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினால் உலகிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலின் பரிமாணத்தை எப்படிப்பார்க்கின்றீர்கள்?

. ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. நாம் அதனால் ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ளோம். கடந்தாண்டு ஜுனில் இடம்பெற்ற தேர்தலையடுத்து எமது தென்கிழக்கு பிராந்திய மாகாணத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில் நூற்றிற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டனர். அதன்பின்னர் தலைநகர் அங்கராவில் இடம்பெற்ற சமாதான பேரணியொன்றில் இரண்டு தற்கொலைக்குண்டுத்தாரிகள் நடத்திய தாக்குதலில் நூற்றிற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டிருந்தனர்.இந்த இரு சம்பவங்களுக்கும் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பே பொறுப்பாகும். இந்த அமைப்பினர்  இஸ்லாமிய தேசத்தை முன்னிறுத்துபவர்கள் என்றெல்லாம் கூறப்படுகின்றது. எவரும் இதில் குழம்பிக்கொள்ளத்தேவையில்லை. இவர்களுக்கும் இஸ்லாமிய மதத்திற்கும் இடையே எவ்வித தொடர்பும் கிடையாது என்பது நிச்சயம்.இவர்கள் கொடூரமான சிந்தனைகளைக் கொண்ட அசாதாரணமான வெறிபிடித்த கூட்டம். இஸ்லாம் மதத்திற்கும் இவர்களுக்கும் ஒற்றுமையேதும் கிடையாது. இஸ்லாம் சமாதானத்தின் மதம், இஸ்லாம் புரிந்துணர்வின் மதம், இஸ்லாம் சமத்துவத்தின் மதம். இவர்களின் பின்னணியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் எவரது கருதியாக இவர்கள் இருப்பினும் இவர்கள் தம்மை முஸ்லிம்களாக தம்மைக்காட்டிக்கொள்ள எத்தனித்தாலும் இவர்களை மிலேச்சத்தனம் கொண்ட கொலைகாரர்களாகவும் பயங்கரவாதிகளாகவுமே நோக்கமுடியும்.ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான சண்டையில் துருக்கி ஒரு முன்னோடியாக மேற்குலகினரின் நெருங்கிய பெரும் பங்களானாக திகழ்கின்றது.  ஐஎஸ்ஐஎஸ் நிலைகளின் மீதான தாக்குதல்களின் போது துருக்கியிலுள்ள இராணுவத்தளங்கள் கூட்டு நாட்டுப்படையினரால் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு எதிரான தாக்குதலில் ஈடுபட்டுள்ள அனைத்து நாடுகளிலும் நாமே அதிகமான பங்களிப்பை, வளங்களை வழங்கிவருகின்றோம்.இது மிகப்பெரிய பிரச்சனை.  இதனை கூட்டு வழிமுறை மூலமே தீர்க்க முடியும்.


Displaying ANNX 03 020.jpg
Displaying ANNX 03 020.jpg

Monday, February 1, 2016

வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளைக் களைவதாக தீர்வு அதற்கு தமிழர்கள் உதவ வேண்டும் என்கிறார் சந்திரிக்கா


ஒற்றையாட்சியோ வேறெதும் ஆட்சியோ பெயர் முக்கியமல்ல   மாறாக தமிழ் முஸ்லிம் சிங்களம் ஆகிய அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதான போதுமானதும் நடைமுறையில் செயற்படுத்தக்கூடியதுமான தீர்வைக்கொடுப்பதே முக்கியமானதாகும். மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளைக் களைவதாக . தமது தீர்வு அமைந்திருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவிக்கின்றார்.

கடும்போக்காளர்கள் இன்னமும் இந்த நாட்டில் மிகச் சிறிய சிறுபான்மைத் தரப்பினராகவே இருக்கின்றனர்.என்ன செய்யவேண்டும் என்பதை பெரும்பான்மையினர் தீர்மானிக்க முனைவார்களாக இருப்பின் கடும்போக்காளரரான சிறுபான்மையினர் குறித்து அலட்டிக்கொள்ளத்தேவையில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
சுடர் ஒளிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார். அவரது முழுமையான நேர்காணல் பின்வருமாறு:
உங்களிடம் முற்று முழுதான அதிகாரம் இருந்த காலப்பகுதிக்கும் தற்போதைய காலப்பகுதிக்கும் ; எத்தகைய வேறுபாட்டைக் காண்கின்றீர்கள்?
ஐக்கிய தேசிக்கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து பணியாற்றுவதே தற்போதைய நிலையில் பெரும் வித்தியாசமாகக் காணப்படுகின்றது. சிங்கள மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் இரு பிரதான கட்சிகளும் இணைந்து பணியாற்றுவது இலங்கையின் வரலாற்றிலேயே முதற்தடவையாகும். நான் இதனைச் செய்ய முற்பட்டபோது ஐக்கிய தேசியக் கட்சி தொடர்ச்சியாக எதிர்ப்பைக் காட்டியது.  மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வெற்றிகொள்வதறகு எனககு ஏழு வாக்குகளே இறுதியில் தேவையாக இருந்தது.

நீங்கள் நல்லிணக்கத்துடன் தொடர்புடைய அமைப்பிற்கு தலைமை தாங்குகின்றீர்கள். எதற்காக இதனைத் தேர்ந்தெடுத்தீர்கள் ?உங்கள் அமைப்பின் மூலம் அடைவதற்கு எதிர்பார்க்கும் இலக்கு என்ன? 

நின்று நிலைக்கக்கூடிய சமாதானத்தை உருவாக்குவதற்கு உதவும் வகையில் இலங்கையிலுள்ள வித்தியாசான மக்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது  எப்போதுமே என்னுடைய பேரார்வமாக இருந்தது.இந்த நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் நிலைநாட்டுவதற்காக அதிகமான நேரப்பகுதியை செலவழித்திருந்தது மட்டுமன்றி ஏறத்தாழ நான் கொல்லப்படும் நிலையை எதிர்கொண்டிருந்தேன்.நான் அரசியல் யாப்பை முன்னகர்த் நடவடிக்கை மேற்கொண்டிருந்த வேளையிலேயே விடுதலைப்புலிகள் குண்டுத்தாக்குதல் நடத்தியிருந்தனர்.

தற்போது நீங்கள்  தேசிய ஒருமைப்பாட்டிற்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகத்தின் மூலம் ஏதேனும் பணிகளை ஆரம்பித்துச் செயற்படுத்துகின்றீர்களா?

நாம் பத்து பெரும் திட்டங்கள் அ டங்கிய வரைவைத் தயாரித்துள்ளோம் முதலாவது திட்டத்தை தைப்பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்திருந்தோம்.பிரதமர் பங்கேற்றது தேசிய வைபம் அதுவல்ல. மாறாக சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரியிலே முதலாவது திட்டத்தை  ஆரம்பித்திருந்தோம். தைப்பொங்கலைக் கொண்டாடுவதற்காக சிங்களம் முஸ்லிம் மற்றும் தமிழ் சிறார்களை அங்கே ஒன்றாக அழைத்துவந்திருந்தோம். அதன் பிறகு களுத்தறையில் ஒரு நிகழ்ச்சியை நடத்தியிருந்தோம். இந்த மாத முடிவுவரையில் இதுபோன்று 37 நிகழ்ச்சிகளை நடத்தவுள்ளோம்.ஒவ்வொரு நாளும் நான் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சென்றுவருகின்றேன்.ஏனையவர்களில் உள்ள வேற்றுமைகளை புரிந்துகொண்டு செயற்படுவதற்கும் பாராட்டுவதற்கும் வழிசமைக்கும் வகையில் வித்தியாசமான இனங்கள் மதங்களைச் சேர்ந்தவர்களை ஒன்றாக அழைத்து இந்த செயற்பாட்டை முன்னெடுக்கின்றோம்.ஏனையவர்களின் வைபவங்களைப் பார்த்து சிரித்துக் கேலிசெய்வதை விடுத்து அதைப் பார்த்து பாராட்டுவதற்கும் தமக்குரியதாக ஏற்றுக்கொள்வதற்கும் இதன் மூலம் சிறார்கள் பழக்கப்படவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது.



நேர்காணல் அருண் ஆரோக்கியநாதர்


நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் சுதுநெலும் போன்ற திட்டங்களை நீங்கள் முன்னெடுத்தாலும் கடும் போக்காளர்கள் குறைந்த பட்ச நேரத்திலேயே அனைத்தையும் சீரழித்துவிடக்கூடியதரப்பினராய் இருப்பதை கடந்த கால வரலாறு எடுத்துணர்த்துகின்றது. இதுபோன்ற தரப்பினரை எதிர்கொள்வதற்கான திட்டங்களேதும் உங்களிடம் இருக்கின்றதா?
கடும்போக்காளர்கள் இன்னமும் இந்த நாட்டில் மிகச் சிறிய சிறுபான்மைத் தரப்பினராகவே இருக்கின்றனர்.என்ன செய்யவேண்டும் என்பதை பெரும்பான்மையினர் தீர்மானிக்க முனைவார்களாக இருப்பின் கடும்போக்காளரரான சிறுபான்மையினர் குறித்து அலட்டிக்கொள்ளத்தேவையில்லை.அவர்கள் முக்கியமற்றவர்கள்.தமிழ்த்தரப்பில் விடுதலைப்புலிகளே கடும்போக்காளர்களாக திகழ்ந்தனர். ஆனால் கடும்போக்கற்றவர்களைப் படுகொலைசெய்ததன் மூலமாக அவர்கள் பெரும்பான்மையானவர்களாக மாற்றம் கண்டனர்.ஜனநாயக அரசியல் வாதிகளை அவர்கள் படுகொலைசெய்தனர். வன்முறைகளுக்கு எதிராகக் குரல்கொடுத்து பொதுமக்களை அவர்கள் படுகொலைசெய்தனர். அந்தவகையில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். ஜனநாயக அரசியல் வாதிகளை அவர்கள் படுகொலைசெய்தனர். வன்முறைகளுக்கு எதிராகக் குரல்கொடுத்து பொதுமக்களை அவர்கள் படுகொலைசெய்தனர். அந்தவகையில் அவர்கள் ஆதிக்கம் செலுத்தினர். அதிர்ஷடவசமாக சிங்களத்தரப்பில் அவ்வாறான நிலை காணப்படவில்லை. தற்போது தமிழர் முஸ்லிம் தரப்பிலும் கடும்போக்காளர்கள் மிக மிகக் குறைவானவர்களாவே உள்ளனர்.

என்னுடைய காலப்பகுதியல் அரசயலமைப்பை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக்கொள்ளமுடியாமைக்கு கடும்போக்காளர்கள் காரணமாக இருக்கவில்லை. அப்போது ஜாதிக ஹெல உறுமய கிடையாது. பொதுபலசேனா கிடையாது.ஜேவிபிக்கு நாடாளுமன்றத்தில் ஒரு உறுப்பினர் மாத்திரமே இருந்தார்.இதனால் அவர்கள் எதிர்ப்பைக் காண்பிக்கும் அளவிற்கு பலம்பெற்றிருக்கவில்லை.

நான் பதவிக்கு வந்த ஆரம்பகாலத்தில் சிங்கள மக்கள் மத்தியில் பிரான்ஸ் நிறுவனமொன்றை அழைத்துவந்து கருத்துக்கணிப்பொன்றை நடத்தியிருந்தேன். அதில் 23வீதமான மக்களே அதிகாரப்பகிர்விற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். ஆனால் எமது சுதுநெலும் திட்டத்தை முன்னெடுத்து மீண்டும் இருவருடகாலத்தில் அதே நிறுவனத்தைக் கொண்டுவந்து கருத்துக்கணிப்பு நடத்தியபோது அதிகாரப்பகிர்விற்க 68 வீதமான சிங்கள மக்கள் ஆதரவை வெளிப்படுத்தியிருந்தனர். சிங்கள மக்கள் மத்தியில் பணியாற்றியவள் என்றவகையில் சிங்கள மக்கள் இனவாதிகள் அல்லர் என்பதை நான் நன்கறிவேன். வாக்குகளைப் பெறுவதற்காக சிங்கள மக்களிடம் உண்மையைக் கூறுவதற்கு சிங்களத் தலைவர்கள் தவறியமையே அவர்கள் ஆதரவை வெளிப்படுத்தாமைக்கான காரணமாக இருந்தது. தமிழ் முஸ்லிம் மக்களுக்கும் உரிமைகள் வழங்கப்படவேண்டும் ன சிங்களமக்கள் மத்தியில் தேர்தல் பிரசாரத்தின்போது தெரிவித்த ஒரே தலைவர் நான் தான். 15 மாத காலப்பகுதியல் நான் மாகாணசபைத் தேர்தல் பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களையும் எதிர்நோக்கி ஒவ்வொரு தடவையிலும் வரலாறுகாணாத வகையில் அமோக ஆதரவுடன் வெற்றிபெற்றிருந்தேன்.மக்களுக்கு உண்மையை எடுத்து விளக்கினால் அவர்கள் புரிந்துகொள்வர்.
நாம் சிறுபான்மையினரான கடும்போக்காளர்கள் குறித்து அலட்டிக்கொள்ளத்தேவையில்லை. அப்போது ஐக்கிய தேசியக்கட்சி எம்மோடு ஒத்துழைக்கவில்லை. தமிழர் விடுதலைக்கூட்டணி எம்மோடு பணியாற்றிக்கொண்டிருந்தது. கூட்டணியின் தலைவர்களிலொருவரான நீலன் திருச்செல்வம் அரசயல்யாப்பை தயாரித்த குழுவில் ஒரு அங்கத்தவராக இடம்பெற்றிருந்தார்.அதனால் தான் பிரபாகரன் அவரைக் கொன்றொழித்திருந்தார்.

இறுதியில் எங்களுக்கு மூன்றிலிரண்டு பெரும்பான்மைக்கு ஏழு வாக்குகளே அவசியமாக இருந்தன. ஐக்கிய தேசியக் கட்சி ஆதரவு வழங்க மறுத்திருந்தது. தமிழர் விடுதலைக் கூட்டணியிடம் எட்டு வாக்குகள் இருந்தன. ஆனால் அவர்களும் ஆதரவளிக்கவில்லை.

என்னுடைய அரசயல்யாப்பு வரைபானது இந்த நாட்டில் நீங்கள் (தமிழ் மக்கள் ) பெற்றுக்கொள்ளக்கூடிய ஏதேனும் தீர்விலும் பார்க்க மிகவும் அதிகமான ( அதிகாரப்பகிர்வினை) கொண்டமைந்திருந்தது. யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது அத்தகையதொரு தீர்வை முன்வைப்பதற்கான துணிவு என்னிடமிருந்தது.தற்போது பிரபாகரன் இல்லாத நிலையிலும் யுத்தம் நிறைவுபெற்றுவிட்ட நிலையிலும் தமிழ் மக்கள் அதுபோன்று அதிகமானதை பெற்றுக்கொள்ளப்போவதில்லை ஆனால் அவர்கள் தம் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கு உரித்தானவர்கள்.


விடுதலைப்புலிகள் பலம்மிக்கவர்களாக இருந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் முன்வைத்திருந்த அரசியல்தீர்வு ஒற்றையாட்சியைத் தாண்டியதாக பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற வகையில் அதிகளவான அதிகாரப்பகிர்வைக்கொண்டதாக அமைந்திருந்தது. தற்போது பிரதமர் உட்பட அரசியல்வாதிகள் பலரும் விடுக்கின்ற அறிக்கைகள் ஒற்றையாட்சிக்குள்ளேயே தீர்வுகாணப்படும் என்பதாக கோடிட்டுக்காட்டுகின்றன. அண்மையில் இடம்பெற்ற நினைவுரை நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் இந்தியத் தூதுவர் கோபாலக் கிருஷ்ண காந்தி   இந்தநாட்டின் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்குதீர்வு காணப்படவேண்டுமானால் தற்போதைய சாபக்கேடான ஒற்றையாட்சி அரசியல்யாப்பிலிருந்து மேம்பட்டதாக சமஷ்டி அம்சங்களைத்தாங்கியதாக புதிய அரசியல்யாப்பு உருவாக்கப்படவேண்டும் என்று கருத்துவெளியிட்டிருந்தார். இதுபற்றி உங்களுடைய நிலைப்பாடு என்ன?
வார்த்தைகள் முக்கியமற்றவை வார்த்தைகள் முக்கியமற்றவை. நான் அப்போது  முன்மொழிந்தது சமஷ்டி ஆட்சி முறைக்கு  மிகவும் அண்மித்த ஒரு தீர்வாக அமைந்திருந்தது. நாம் அதனை (Union of regions )பிராந்தியக்களின் ஒன்றியம்  என அழைத்திருந்தோம்.ஒற்றையாட்சியோ சமஷ்டியோ வேறெதும் ஆட்சியோ பெயர் முக்கியமல்ல. தமிழ் முஸ்லிம் சிங்களம் ஆகிய அனைத்து மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியதான போதுமானதும் நடைமுறையில் செயற்படுத்தக்கூடியதுமான தீர்வைக்கொடுப்பதே முக்கியமானதாகும். ராஜபக்ஸவும் அவரது மடையர்களும் வார்த்தைகளைப் பிடித்துக்கொண்டு தொங்கிக்கொண்டிருக்கின்றனர். வார்த்தைகள் முக்கியமற்றவை.

நீங்கள் முன்னர் உங்களது காலத்தில் முன்மொழிந்த அதிமேம்பட்ட தீர்வை இப்போது வழங்கப்போவதில்லை என்கிறீர்கள். அப்படியானால் அதிகபட்சத் தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் தமிழர்கள் ஆயுதமேந்திப் போராடவேண்டுமா?

அதிகாரத்தைப் பகிர்ந்துகொள்வதற்காக தனியான அலகுகள்  இருக்குமிடத்தில் அந்தளவு தூரத்திற்கு 
( பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற பெயரில் முன்மொழியப் பட்ட தீர்வு யோசனை போன்று) பயணிக்க வேண்டியதில்லை எனக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினரும் ஏனையவர்களும் கூறியிருக்கின்றனர்.

தமிழர்கள் தொடர்ச்சியான முறையில் தமது தீர்விற்கான அபிலாஷையாக இணைந்த  வடக்கு  கிழக்கில் உயர்ந்த பட்ச  அதிகாரப் பகிர்வை வலியுறுத்திவந்துள்ளனர். புதிய அரசயலமைப்பு மூலமாக வழங்க உத்தேசிக்கப்படும் தீர்வில் தமிழர்களின் அபிலாஷைகளைப் பிரதிபலிக்கக்கூடிய ஏற்பாடுகள் இடம்பெறுமா? இதிலிருந்து எதனை எதிர்பார்க்கமுடியும்? 

தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு நன்மையளிக்கக்கூடிய வகையில் நாம் வழங்குவது அமைந்திருக்கும். வரலாற்றில் இடம்பெற்ற தவறுகளைக் களைவதாக எமது தீர்வு அமைந்திருக்கும் .

உங்களது தந்தை பண்டாரநாயக்கவும் தமிழர் தலைவர் செல்வநாயகமும் இணைந்து பண்டா-செல்வா ஒப்பந்தத்தையும் தொடர்ந்து டட்லி-செல்வா ஒப்பந்தம் என பல ஒப்பந்தங்கள் கடந்து வந்த காலப்பகுதியில் கைச்சாத்திடப்பட்டிருந்தன. ஆனால் அவை ஏதும் முறையே நடைமுறைப்படுத்தப்படாமல் வரலாற்றின் குப்பைக்கூடைக்குள் தூக்கிவீசப்பட்டது. முன்வைக்கப்படவுள்ளதாக கூறப்படும் உத்தேசத் தீர்வானது நின்று நிலைக்கக்கூடியதாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதை உங்களது அரசாங்கம் எவ்வாறு உறுதிப்படுத்தப்போகின்றது? 

அந்தக்காலப்பகுதியல் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி செய்யநினைக்கின்றவிடயங்களுக்கு ஐக்கிய தேசியக்கட்சி எதிர்பைக் காண்பித்தது.ஐக்கிய தேசியக்கட்சி செய்ய முனைபவற்றிற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர்ப்பைக் காண்பித்தது.தற்போது அரசாங்கத்தின் பாகங்களாக  இரு கட்சிகளும் ஒன்றாகவுள்ளன.தற்போது தமிழ் முஸ்லிம் கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்துசெயற்படுகின்றன. ஜாதிக ஹெல உறுமயவும் அரசாங்கத்துடன் இணைந்துள்ளது.அந்தவகையில்  இதனை ( தீர்விற்கான அரசியல்யாப்பை )நிறைவேற்றிக்கொள்வதற்கு முன்னெரெப்போதும் காணப்படாத சந்தர்ப்பம்  தற்போது காணப்படுகின்றதென நான் நம்புகின்றேன்.இதற்கு தமிழ் மக்கள் எமக்கு உதவ வேண்டும்.




உங்களுடைய அலுவலகத்தினால் முன்னெடுக்கப்படும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பணிகளைப் பூர்த்திசெய்வதற்கான கால வரையறையேதும் உள்ளதா?  

நல்லிணக்கமென்பது பல  ஆண்டாண்டு காலமாக முன்னெடுக்கப்படவேண்டியது எம்மிடம் மூன்றாண்டுத்திட்டங்கள் உள்ளன. ஐந்தாண்டுத்திட்டங்கள் உள்ளன. அவை முன்னெடுத்துச் செல்லப்படவேண்டியவை. மக்களின் மனங்களையும் இதயங்களையும் மாற்றியமைப்பதே எமது பணியாகும். அதற்கு பலவருடகாலமெடுக்கும். தற்போது திட்டங்களை ஆரம்பித்திருக்கின்றோம். இன்னமும் சில வருடங்களில் நிலைமைகள் மாற்றமடைந்திருக்கும் என எண்ணுகின்றோம். அரசியல்யாப்பு மாற்றம் என்பது முற்றியும் தனித்துவமான விடயமாகும். நானும் அதிலே பங்கெடுத்திருக்கின்றேன்.அதுவொரு அரசியல் நடைமுறை அதனை அரசாங்கம் விரைந்துசெயற்படுத்தவேண்டும். நாம் தற்போது அனைத்து தரப்பினருடனும் கலந்தாராய்ந்து வருகின்றோம்.எது தற்போது சாத்தியமானது என்பதை நாம் ஆராய்ந்துகொண்டிருக்கின்றோம்.

இந்த அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் குறிப்பாக முன்னாள் போராளிகள் விதவைகள் தொடர்பில் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. வெறுமனே கண்துடைப்பிற்காக சில நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் இன்னமும் பல விடயங்கள் செய்யப்படவில்லை என குற்றச்சாட்டுக்கள் தெரிவக்கப்படுவது பற்றி என்ன கூறவிரும்புகின்றீர்கள்?
இந்த அரசாங்கம் உண்மையில் கடந்த ஓகஸ்ற் 17 ந்திகதிகக்கு பின்னரே திட்டங்களை முன்னெடுக்கும் ஆற்றலைப்பெற்றதென்பதை நீங்கள் முதலில் நினைவில் கொள்ளவேண்டும். அதற்கு முதல் மஹிந்தவின் தரப்பினரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் இணைந்துகொண்டு நாங்கள் முன்வைக்கும் திட்டங்களை முன்னெடுக்கமுடியாத வகையில் தடுத்துக்கொண்டிருந்தனர். தேர்தலின் பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு அமைச்சர்கள்  நியமிக்கப்பட்டதன் பின்னர் செப்டம்பர் முதலாம் திகதி முதலே அரசாங்கம் திட்டங்களை முன்னெடுப்பது சாத்தியமானது. அதிலிருந்து பார்க்கும் போது எத்தனை மாதங்கள் நான்கரை மாதங்களே. அந்தவகையில் பல வேலைத்திட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. அனைத்தையும் பூர்த்திசெய்துவிடமுடியாது. நாங்கள் திட்டங்களை வடிவமைத்துள்ளோம். அதற்கான நிதியையும் அடையாளங்கண்டுகொண்டுள்ளோம். தற்போது திட்டங்களை ஆரம்பிக்கவுள்ளோம். வடக்கிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் கிழக்கிலுள்ள மூன்று மாவட்டங்களிலும் எமது அலுவலகத்தினால் பல அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்கள் ஒருங்கிணைத்து முன்செல்லப்படவுள்ளன. இதற்காக பல பில்லியனரூபாய்கள் எமக்குகிடைக்கவுள்ளன.

ஆட்சிமாற்றத்தின் தூண்களில் ஒருவராக நீங்கள் இருக்கின்றீர்கள். இந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் திருப்தியடைகின்றீர்களா?
பொதுவாக ஆம் (திருப்திகொண்டுள்ளேன்). நாம் மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவதாக வாக்களித்திருந்தோம். நல்லாட்சி என்பது பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியது. ஜனநாயகத்தை மீள நிலைநாட்டுதல் அதில் ஒரு அம்சமாகும். அது நடந்தேறியுள்ளது. மக்களின் சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதும் சாத்தியமாகியுள்ளது.மேலும் சுதந்திரத்தை வழங்கவும் ஜனநாயக முன்னேற்றங்களை காண்பதற்காகவும் சுயாதீனக்குழுக்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.இதுவும் நல்லாட்சியை வலுப்படுத்தும். நல்லாட்சியின் மற்றுமொரு அம்சமாக ஊழல் மோசடிக்கு எதிரான நடவடிக்கை அமைந்துள்ளது. குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனைவழங்குதல் மற்றும் எதிர்காலத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெறாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் ஆகியன இதில் அடங்குகின்றன. இந்த அரசாங்கம் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றது. அதனைப் பூர்த்திசெய்யும் தறுவாயில் உள்ளது. எதிர்காலத்தில் இடம்பெறக்கூடிய ஊழல் மோசடிகளைத்தடுப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டுவிட்டன. பிரதமர் இதனை அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளார். விரைவில் இது நடைமுறைக்கிடப்படும் .

தென் பகுதியிலுள்ள அரசியல் தலைவர்கள் மறுதலித்துக்கொண்டிருந்தபோது சனல் 4 காணொளிகள் தொடர்பில் கவலையை வெளிப்படுத்திய விரல்விட்டெண்ணக்கூடிய தென் பகுதியைச் சேர்ந்த தலைவராக நீங்கள் விளங்குகின்றீர்கள். நீதியரசர் பாலகிட்ணர் நினைவுப்பேருரையை ஆற்றும்போது நீங்கள் சனல் 4 தொடர்பாக கவலைவெளியிட்டதுடன் இலங்கையரென்ற வகையில் வெட்கித்தலைகுனிகின்றேன் எனக்கூறியிருந்தீர்கள்.  இறுதிப் போர் தொடர்பான உண்மைகளைக் கண்டறிவதற்கும் பொறுப்புக்கூறலுக்கும் இந்த அரசாங்கம் எத்தகைய முக்கியத்துவத்தைக் கொடுக்கின்றது?
இந்த விடயத்திற்கு அரசாங்கம் அதிக முக்கியத்துவம் கொடுத்துச்செயற்படுகின்றது.
ஜனாதிபதி பிரதமர் வெளிவிவகார அமைச்சர் என முக்கியமான தலைவர்கள் உள்ள உயர் மட்டக்குழுவொன்று உள்ளது. இதில் நானும் இடம்பெற்றிருக்கின்றேன்.இறுதிப்போரில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் விடயத்தைக் கையாளும் வகையில் உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பில் இக்குழு நான்கு முனைத்திட்டத்தை வடிவமைத்துள்ளது.இந்தவகையான கட்டமைப்புக்களை இன்று ஏற்படுத்தி விட்டு நாளையே அதனை நடைமுறைப்படுத்திவிடமுடியாது. இவை மிகவும் சிக்கல் வாய்ந்த விடயங்களாகும். இந்த விடயத்தில் கட்டமைப்புக்கள் ஏற்கனவே வடிவமைக்கப்பட்டுவிட்டன. இதுபற்றி நாம் அதிகமாகப் பேசுவதில்லை. இல்லாவிடில் கடும்போக்காளர்கள் காட்டுக்கூச்சலித்தொடங்கிவிடுவார்கள்.

1995ம்ஆண்டு உங்களுடைய ஆட்சிக் காலத்தின் போது நவாலித் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட விமானத்தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவிலியன்கள் கொல்லப்பட்டனர். கடந்த காலத்தில் இடம்பெற்ற இதுபோன்ற சம்பவங்களுக்கு எப்படியாக பொறுப்புக்கூறப்போகின்றீர்கள்?
யுத்தத்தின் போது நவாலி மட்டுமன்றி மேலும் பல சம்பவங்கள் இடம்பெற்றன. யுத்தத்தின் போது நிறைய விடயங்கள் இடம்பெறவதுண்டு.பதவியிலுள்ள அரசாங்கம் அதற்கான பொறுப்புக்களை ஏற்கவேண்டும். இந்தச் சம்பவம் (நவாலி தேவாலயத்தின் மீதான விமானத்தாக்குதல்) தொடர்பாக அறியத்தந்தவேளையில் நான் பாதுகாப்பு கவுன்சில் கூட்டமொன்றில் பங்குபற்றிக்கொண்டிருந்தேன்.உண்மையில் நான் இராணுத்தரப்பினரையும் விமானப்படையினரையும் நோக்கி உரத்துக்கத்தினேன்.அது ஒரு தவறு.சிறிய முகாம் போன்று விடுதலைப்புலிகள் ஒன்றுகூடுமிடத்தின் மீது குண்டுத்தாக்குதல் நடத்துவதாக அவர்கள் எண்ணியிருந்தனர்.அதற்கருகில் அப்படியொன்று இருந்தது. ஆனால் அவர்கள் தமது இலக்கைத் தவறவிட்டு தேவாலயத்தின் மீது குண்டுத்தாக்குதலை நடத்தியிருந்தனர்.அது எனக்கு நன்றாக நினைவில் உள்ளது. என்ன இடம்பெற்றிருந்தாலும் விமானப்படை இராணுவம் அரசாங்கம் அதற்கு பொறுப்புக்கூறவேண்டும்.

இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்த போது தமிழ் மக்கள் பல எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருந்தனர். அவற்றில் குறிப்பாக தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை: காணமல் ஆக்கப்பட்டவர்களின் நிலை பற்றிய உண்மைகளை வெளிக்கொண்டுவருதல்; காணிகளை விடுவித்தல் போன்றவை முக்கிய இடம்பிடித்திருந்தன. அரசாங்கமானது அடையாளத்திற்காக சிலரை விடுவித்துள்ளது. சில தொகுதிக் காணிகளை விடுவித்துள்ளது.ஆனால் காணிகளில் பெரும்பலானவை இன்னமும் விடுவிக்கப்படவில்லை. இதுபற்றிய உங்கள் பதில் என்ன?

இது விடயத்தில்  திங்களன்று ( 18) இராணுவத்தினருடன் நான் தொடர்புகொண்டு வினவியிருந்தேன். இராணுவத்தினர் வசம் யாழ்குடாநாட்டில் 11700 ஏக்கர் காணித்துண்டுகள் இருந்தன.இதில் 7000 ஏக்கர்களை இதுவரையில் அவர்கள் மீளவும்  உரியவர்களிடம் திரும்பக் கையளித்துள்ளனர்.ஜனாதிபதியால்  அண்மையில் 700 ஏக்கர்கள் விடுவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டமையே விடுவிக்கப்பட்ட கடைசித்தொகுதிக்காணிகளாகும்.தற்போதைய நிலையில் இராணுவத்தினர் வசம் 4600 முதல் 4700 ஏக்கர் காணிகளே உள்ளன. இது பாதுகாப்புக் காரணங்களுக்கு அவசியமானதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதிலும் 700 ஏக்கர் வரையான காணிகளை விடுவிக்கமுடியும் என தகவல் தரப்பட்டுள்ளது.அப்படிப்பார்கையில் 11700 ஏக்கர்களில் இருந்து 4000 ஏக்கர்களாக இராணுவத்தினர் வசமுள்ள காணிகளின் பரப்பளவு குறைந்துள்ளது.

கருணா பிள்ளையான் போன்றவர்கள் வெளியில் இருக்கையில் இன்னமும் விடுவிக்கப்படாமலுள்ள அரசியல் கைதிகள் பற்றி?
கருணா ,பிள்ளையானை விடுவித்தது எமது தவறல்ல மஹிந்தவே அதனைச் செய்திருந்தார்.குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்படாமல் சிறையிலடைத்துவைக்கப்பட்டிருந்தவர்களில் சிலர் ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளனர். இன்னமும் சிலர் விடுவிக்கப்படவுள்ளனர். இதனைத் தவிர நூற்றுக்கும் குறைவான இன்னுமொரு தொகுதிக்கைதிகள் உள்ளனர். இவர்களுக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்கள் உள்ளனர். சாட்சியங்களுடன் நிருபிக்கப்படக்கூடியதாக இந்தக்குற்றச்சாட்டுக்கள் உள்ளன.அந்தக் கைதிகளை விடுவிக்க முடியும் என நான் நினைக்கவில்லை.எந்த வழக்குகளும் இல்லாமல் இருப்பவர்களை விடுவிக்கமுடியும். போர்க்குற்றங்களுக்காக இராணுவத்தினர் தண்டிக்கப்படவேண்டும் என தமிழ் மக்களான நீங்கள் கேட்கின்றீர்கள் . அப்படியானால் ஏன் பிரபாகரனின் படையினர் ஏன் போர்க்குற்றங்களுக்காக தண்டிக்கப்படக்கூடாது எனக் கேட்கின்றேன்.மக்களைக் கொன்றமைக்காகவே அவர்கள் சிறைகளில்  உள்ளனர். இராணுவத்தினரை மாத்திரம் ஏன் தண்டிக்க வேண்டும். ஏன் பிரபாகரனின் படையினர் தண்டிக்கப்படக்கூடாது.