காணாமற்போனோர் அலுவலகத்திற்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குங்கள்! –வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர வேண்டுகோள்
நேர்காணல்: அருண் ஆரோக்கியநாதர்.
கடந்த கால நிகழ்வுகள் தொடர்பில் கணக்குத்தீர்க்க வேண்டியது மிகவும் முக்கியமானது என்பதை அரசாங்கம் நன்குணர்ந்துகொண்டு செயற்பட்டு வருவதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவிக்கின்றார். நல்லிணக்கத்திற்கான முன்னெடுப்புக்கள் மெதுவாக நகர்கின்ற போதும் அது சரியான முறைமையின் கீழ் முன்செல்வதாக அவர் சுட்டிக்காட்டினார். உதயனுக்கு வழங்கிய விசேட செவ்வியின் போதே அவர் இந்தக்கருத்துக்களை தெரிவித்தார்.
கேள்வி
உங்களுடைய அரசாங்கம் ஆட்சிக்கு வரமுன்பாக மேற்கொண்ட பிரசாங்களின் போதும் ஆட்சிக்கு வந்த ஆரம்பகாலப்பகுதியிலும் இந்த நாடு இன்னமும் ஒரு தடைவை யுத்தமொன்றுக்கு முகங்கொடுக்கக்கூடாது என்று கூறியிருந்தீர்கள். இந்த நாட்டில் சமாதானத்தை நல்லிணக்கத்தை கட்டியெழுப்பத்திட சங்கற்பம் பூண்டுள்ளமை உட்பட பல வாக்குறுதிகள் வழங்கப்பட்டன. ஆனால் தற்போது மக்களில் ஒரு சாரார் மத்தியில் இந்த அரசாங்கம் சர்வதேச சமூகத்தை திருப்திப்படுத்துவதற்காக இந்த வாக்குறுதிகளை வழங்கியதான ஒரு வித ஐயப்பாடு வலுப்பெறத்தொடங்கியுள்ளது. அரசாங்கம் நல்லிணக்க முயற்சிகளில் உண்மையான இதயச் சுத்தியுடன் ஈடுபடுகின்றதா?
நிச்சயமாக இநீண்டநாட்களாக நிலவும் இனப்பிரச்சனைக்கு உண்மையான தீர்வைக்காணவேண்டும் என்ற உண்மையான நோக்கத்துடனேயே செயற்;படுகின்றது. உண்மையைச் சொல்வதாயின் கடந்தாண்டு ஜெனிவாவில் இலங்கை மீதான தீர்;மானத்திற்கு இணை அனுசரவை வழங்குவதற்கு இலங்கை அரசாங்கம் முடிவெடுத்தமையானது சர்வதேச அழுத்தத்தின் காரணமாக அல்ல. எம்முடைய சில எதிரிகளும் ராஜபக்ஷ தரப்பினரும் நாம் சர்வதேச அழுத்தத்திற்கு அடிபணிந்;;து விட்டதாகக் கூற விரும்பலாம்.இலங்கை அதன் மக்களுக்கு கடமைப் பட்டுள்ளது என நாம் உணர்கின்றமையின் காரணமாகவே நாம் நிலை மாறு கால நீதிப் பொறிமுறைக்கு எம்மை அர்ப்பணிக்கத் தீர்;மானித்தமைக்கான காரணமாகும். இந்த நாடு ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் நாட்டிற்கு கிடைக்கவேண்டிய பொருளாதார சுபீட்சத்தை வென்றடையவேண்டுமாயின் இலங்கை கடந்த கால பேரழிவுகள் தொடர்பில் கணக்குத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தாக வேண்டும்;. 1948ம் ஆண்டில் இலங்கை சுதந்திரம் பெற்றபோது பிரித்தானியாவிலுள்ள பத்திரிகையொன்றின் ஆசிரியர் தலையங்கத்தில் சிலோனில் ( அப்போது இலங்கையின் பெயர்) காணப்படும் சாத்தியப்பாடுகள் காரணமாக கிழக்கின் சுவிட்ஸர்லாந்தாக என்பதில் சந்தேகமில்லை எனக் கூறியிருந்தது. ஏனெனில் எம்மிடத்தே இயற்கை வளங்கள் இமனித வளங்கள்; ஆகியவற்றுடன் அக்காலப்பகுதியில் ஆசியாவில் மிகவும் அபிவிருத்தி கண்ட நாடாக விளங்கினோம்.இந்த நிலையானது சிங்கப்பூரின் ஸ்தாபகப்பிரதமர் லீ குவான் யூ சிங்கப்பூர் 1965ல் சுதந்திரம் பெற்று புதிய நாடாக பரிணமித்த காலப்பகுதியில் ஆற்றிய உரையொன்றில் முதல் ஐந்து வருட காலப்பகுதியில் இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தியை மிஞ்சுவதே தமது இலக்காகும் எனச் சுட்டிக்காட்டியிருந்தார். இது சிங்கப்பூரை விடவும் இலங்கை மிகவும் முன்னேற்றம் கண்டிருந்ததாக அவர்கள் எண்ணியிருந்ததனை புலப்படுத்துகின்றது. ஆனால் பத்துப் பதினைத்து வருடங்கள் கழித்து 80ம் ஆண்டுகளில் எந்தவொரு நாடும் பின்பற்றக்கூடாத நாடென்றால் அது இலங்கையாக இருக்கவேண்டும் எனக்கூறியிருந்தார். ஏனெனில் எம்மத்தியில் அனைத்துச் சாதகமான வாய்ப்புக்களும் காணப்பட்டபோதும் நாம் அனைத்து வாய்ப்புக்களையும் நழுவவிட்டு ஆசியாவின் மோசமான உதாரணங்களில் ஒன்றாக மாறிப்போனோம். ஏனெனில் பல்லின இபல்மதஇ பன்மொழிகொண்ட நாடாக இருந்தபோதும் எமது நாட்டின் பல்வகைத்தன்மையுடன் ஒத்து நடப்பதற்கு எம்மால் இயலாமல் போனது. சுதந்திரம் பெற்றது முதலாக நாம் தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு பதிலாக நாம் ஒருவருக்கு ஒருவர் எதிராக சண்டை பிடிக்கத் தொடங்கினோம். இனரீதியாகஇ மதரீதியாகஇ மொழிரீதியாக நாம் எம்மைப் பிரித்துக்கொள்ளத் தொடங்கினோம். 68 ஆண்டுகள் கடந்துவிட்டது.; இன்னமும் இரண்டு ஆண்டுகளில் நாம் சுதந்திரமடைந்த எமது 70 ஆண்டுப் பூர்த்தியை காணவுள்ள நிலையில் நாம் எங்கு நின்று கொண்டிருக்கின்றோம். எதனைச் சாதித்துள்ளோம் என்ற கேள்விகள் எழுகின்றன. கடந்த 68ஆண்டு காலப்பகுதியில் தெற்கில் இரண்டு இளைஞர் எழுச்சிகள் இடம்பெற்றுள்ளன. அதனைவிட 30 ஆண்டுகளாக நீடித்த யுத்தமொன்று இடம்பெற்றது. இவை எம்மகத்தே இருந்த சிறப்பான மனித வளங்களின் ஒருபகுதியை அழிப்பதற்கு வித்திட்டன. அத்தோடு அபிவிருத்தி முன்னெடுப்பை முற்றாக பாதிப்படையச் செய்தன. உண்மையில் ஒவ்வொரு தடவையும் சிங்கப்பூரிற்கு நான் செல்லும் போது சிங்கப்பூர் என்ற மகத்தான தேசத்தைப் பார்க்கும் போது எம்முடைய முட்டாள் மக்கள் தம்மிடையே ஆண்டாண்டு காலமாக சண்டையிட்டுக் கொண்டிராவிட்டால் இப்படியல்லவா கொழும்பு இருந்திருக்கும் இப்படியல்லவா இலங்கை இருந்திருக்கும் என எண்ணிக்கொள்வேன். இந்தப் பிந்திய தருணத்திலேனும் நாம் எப்போதுமே பேசிக்கொண்டிருக்கின்ற முன்னேற்றத்தை அடைய வேண்டுமானால் கடந்த கால நிகழ்வுகள் தொடர்பில் கணக்குத் தீர்ப்பது மிகவும் முக்கியமானதெனவும் எமது எதிர்காலமானது இன ஒற்றுமை என்ற உறுதியான தளத்தில் கட்டியெழுப்பபடவேண்டும் எனவும் அரசாங்கம் உண்மையாகவே நம்புகின்றது. நாம் எமது பல்வகைத்தன்மையை கொண்டாடக் கூடிய நாடாகத் திகழவேண்டும். எம்முடைய பல்வகைத்தன்மையை கொண்டாடும் அதேவேளை ஒரு புதிய இலங்கைக்கான நோக்கில் நாம் ஒன்றிணைந்திருக்க முடியும். இதனை நோக்கித்தான் நாம் பணியாற்றிக்கொண்டிருக்கின்றோம். இதனால் தான் நல்லிணக்க செயன்முறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவேண்டும் என நாம் உணர்கின்றோம். ஜனாதிபதியும் கூட பல தடவைகள் இதனை வலியுறுத்தியிருக்கின்றார். புதிய இலங்கையை கட்டியெழுப்புவதற்கு நல்லிணக்கம்; என்பது மிகவும் முக்கியமான அடித்தளம் என்பதை ஜனாதிபதியும் கூட பலதடவைகள் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.ஜனாதிபதி நல்லிணக்கத்திற்கான அமைச்சை உருவாக்கி தன்னகத்தே வைத்துக்கொண்டமைக்கும் இதுவும் ஒரு காரணமாகும். இதனை மனதில் நிறுத்திக்கொண்டு நாம் முன்னோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கின்றோம்.
கேள்வி
நீங்கள் நல்லிணக்கத்தின் மீதான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு பற்றி கூறுகின்றீர்கள். ஆனால் நடைமுறையில் அதனைக் காணமுடியவில்லையே?
நீங்களும் நானும் எதிர்பார்க்கின்ற வேகத்தில் இந்தப் முன்னெடுப்புக்கள் பயணிக்காமல் இருக்கலாம். ஆனால் கடந்த ஒன்றரை வருடகாலப்பகுதியில் நாம் பாரிய முன்னேற்றங்களை கண்டுள்ளோம். நியாயமாக நோக்குமிடத்து எதிர்வரும் ஜனவரியில் புதிய ஜனாதிபதி இரண்டு ஆண்டுகளைப் பூர்த்திசெய்கின்ற போதும் புதிய அரசாங்கமானது ஒரு வருடத்தையும்; மூன்று மாதங்களையுமே முடித்துள்ளது. ஆம் இது இன்னமும் 15மாத கால வயதைக் கொண்ட அரசாங்கம் மாத்திரமே என்பதை நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இந்தக் காலப்பகுதியில் எத்தகைய குறைபாடுகள் இருந்தபோதிலும் நல்லிணக்கம் என்ற விடயத்தில் நாம் நிறைய சாதித்திருக்கின்றோம். சிறிய அடையாளகரமான விடயங்களில் இருந்து பெரும் பொறிமுறைகள் வரையில் நாம் சாதித்திருக்கின்றோம். வடக்கு கிழக்கில் சிவில் ஆளுநர்களை நியமித்தமையானது நல்லதொரு ஆரம்பமான அமைந்தது. அதுமட்டும் போதும் எனக் கூறவில்லை. அது நல்ல ஆரம்பம் என்று கூறுகின்றேன். தமிழ் மொழியிலும் தேசிய கீதத்தை அதாவது இரண்டு மொழிகளில் தேசிய கீதத்தை இசைப்பதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கை நல்லதொரு நகர்வு. எமது தூதரங்களில் நிகழ்வுகள் இடம்பெறும் போது இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்படவேண்டும் என்பதைக் கடைப்பிடிக்குமாறு பணித்துள்ளோம். ஐக்கிய தேசியக்கட்சியின் தேசிய மாநாட்டிலும் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. டி.எஸ். சேனானாயக்கவிற்கு பின்னர் இரு மொழிகளிலும் தேசிய கீதத்தை இசைத்துள்ளோம். இவை சிறிய படிகளாக இருந்தாலும் இவை மிகவும் முக்கியமான படிகளாகும். மறுமுனையில் இறுதியாக காணாமற்போனோருக்கான நிரந்தர அலுவலகம் (தொடர்பான சட்டமூலம்) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. இந்த வாரத்தில் இது ஜனாதிபதியினால் வர்த்தமானியில் பிரசுரிக்கப்படும் என நான் நம்புகின்றேன். இது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டதும் அரசியல்யாப்பு சபையானது அந்த அலுவலகத்திற்காக நியமிக்கப்படவுள்ளவர்களின் பெயர்களைப் பிரேரிக்கும். இதனைத் தொடர்ந்து ஜனவரி மாதம் முதலாம்திகதி முதல் இந்த அலுவலகம் அதன் பணிகளை ஆரம்பிக்கும் என நான் நம்புகின்றேன்.) நாட்டின் பலபகுதிகளிலும் சென்று வடக்கிலுள்ள மக்களை மட்டுமன்றி தெற்கிலுள்ள மக்களையும்; சந்தித்துக் கலந்துரையாடி நிலைமாறு கால நீதி தொடர்பாக மாத்திரமன்றி அதற்கான வித்தியாசமான பொறிமுறைகள் தொடர்பாகவும் அவர்களின் அபிப்பிராயங்களைப் பதிவுசெய்த கலந்தாலோசனைச் செயலணியானது அதன் கலந்தாலோசனை அறிக்கையை தயார்செய்திருக்கின்றது. இந்த அறிக்கையின் முதற்பிரதியானது எதிர்வரும் செவ்வாயன்று 29ம்திகதியன்று ( நவம்பர் 29) ஜனாதிபதியிடம் கொழும்பில் வைத்து கையளிக்கப்படவுள்ளது. இந்த கலந்தாலோசனை அறிக்கைகளை அடிப்படையாக வைத்து உடனடியாக அடுத்த கட்ட நடவடிக்கையை எடுத்து உண்மைகளைக் கண்டறியும் பொறிமுறையை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை இறுதிசெய்தல் மற்றும் சட்ட மூல வரைவை இறுதிசெய்யும் பணிகளை முன்னெடுப்போம். இது தென் ஆபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். ஆனால் அது ஒரு இலங்கையைச் சார்ந்த தனித்துவமான மாதிரியாக விளங்கும். சமாந்திரமான வகையில் நஷ்ட ஈட்டுக்கொடுப்பனவுகளைப் பெற்றுக்கொடுக்கும் பிரிவொன்றையும் (சுநியசயவழைளெ ருnவை)ஆரம்பிக்க எண்ணியுள்ளோம். அதற்கு அடுத்த கட்டமாக நாட்டில் இடம்பெற்றதாக கூறப்படும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் எழுந்துள்ள பல்வேறு வகையான குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக விசேட நீதிமன்றங்களை நிறுவவது பற்றி அவதானம் செலுத்தவுள்ளோம். நாங்கள் சரியான தடத்திலே பயணிக்கின்றோம். நாங்கள் மெதுவாக பயணிக்கின்றபோதும் சரியான முறையில் அந்தப்பயணத்தை முன்னெடுக்கின்றோம். ஏனெனில் நாம் மிகவும் உணர்வுபூர்வமான விடயத்தைக் கையாண்டுகொண்டிருக்கின்றோம். ஏனெனில் நாம் தவறுவிடுவதை காண்பதற்காக அனைத்துப்பக்கங்களிலும் நரிகளும் கழுகுகளும் காத்துக்கொண்டிருக்கின்றன. அப்படியானால் அவர்கள் இந்த அனைத்து விடயங்களையும் தலைகீழாக மாற்றிப்போடக் காத்துக்கிடக்கின்றனர். நாம் கடினமான பணியை முன்னெடுக்கின்றோம். ஆனால் இது தொடர்பில் நாம் அர்ப்பணிப்புக்கொண்டிருக்கின்றோம்.
கேள்வி
நிலை மாறு கால நீதி தொடர்பில் அரசாங்கத்திற்குள் இருந்து முரண்பட்ட கருத்துக்கள் அவ்வப்போது வெளியாகிக்கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் எவ்வாறு உங்கள் செயற்பாட்டில் நம்பிக்கை வைக்கமுடியும்?
அனைத்து ஜனநாயகங்களிலும் முரண்பாடான எண்ணக்கருக்கள்இ முரண்பாடான அபிப்பிராயங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. சர்வாதிகார ஆட்சிமுறை உள்ள நாடுகளில் மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் இருந்ததைப் போன்ற ஏதாச்சாதிகார ஆட்சிகளில் மாத்திரமே ஒன்றிற்கு மேற்பட்ட கருத்துக்கள் வெளியாகாது இருக்க முடியும். உண்மையில் மாறுபட்ட கருத்துக்கள் நாம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு உதவியாக அமைந்திருக்கின்றன. மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்படுகின்றமையால் செய்ய முற்படுகின்ற திட்டங்கள் இடைநிறுத்தப்படும் என்று அர்த்தப்படாது. நாம் காணாமற்போனோர் அலுவலகம் தொடர்பில் செய்ததைப் போன்று அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் செவிமடுப்போம். இறுதியாக நாட்டிற்கு எது சரியென்று எண்ணுகின்றோமே அப்படியான பொறிமுறையை நாம் முன்வைப்போம். தற்போதும் பல்வேறு தரப்பட்டவர்களின்; பல்வேறு அபிப்பிராயங்களுக்கு நாம் செவிமடுத்துவருகின்றோம். இதற்கு எதிர்ப்புத்தெரிவிக்கின்ற தரப்பினரின் கருத்துக்களுக்கும் செவிசாய்க்கின்றோம். சமூகத்தின் ஒருபகுதியினர் செய்ய வேண்டாம் என்று கூறுகின்றார்கள் என்பதற்காக நாம் இந்த செயற்திட்டத்தை நிறுத்துவதாக அர்த்தப்படாது. நாம் அவர்களுக்கும் செவிசாய்த்து இலங்கையின் நோக்கங்களுக்கு பயன்படக்கூடியதான பொறிமுறைகளை உருவாக்குவோம். ஏனெனில் நாம் முன்நோக்கிச் செல்லவேண்டுமானால் கடந்த காலம் தொடர்பாக கணக்குத்தீர்க்கவேண்டியது அவசியம் என்பதை அனைவருமே ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கேள்வி
அமைச்சரே ! உயர் மட்டத்தில் ஜனாதிபதி உட்பட அனைவரும் நல்லிணக்க நடைமுறையில் நம்பிக்கை கொண்டுள்ளதாக சற்று நேரத்தின் முன்னர் குறிப்பிட்டீர்கள். நீங்கள் மாத்தறை மாவட்டத்தைச் சேர்ந்தவர் .உங்களது தொகுதியிலுள்ளவர்களுக்கு நல்லிணக்கம் என்றால் என்னவென்று தெரியாதவரையில் அதாவது நல்லிணக்கம் என்பது இது அடிமட்டத்தைச் சென்றடையும் வரையில் அது நடைமுறைச்சாத்தியமற்ற எண்ணக்கருவாகவே அமையும். அந்தவகையில் கீழ்மட்டத்திலுள்ள சாதாரண மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தின் அவசியத்தை உணர்த்துவதற்காக எத்தகைய நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துள்ளது?
நீங்கள் கூறுகின்ற விடயம் முற்றுமுழுதாக உண்மையானது. மறுமுனையில் வௌ;வேறு மட்டங்களுக்கு செல்லுமுன்பாக எண்ணக்கருக்கள் ஒரிடத்திலிருந்து உருவாகவேண்டும். நாங்கள் கிராமப்புறங்களிலுள்ள மக்களின் கருத்துக்களையும் ஆலோசனைக்குட்படுத்தவேண்டும். நாங்கள் முன்னணி சிவில் சமூகப் பிரதிநிதிகள் 11பேரை உள்ளடக்கியதாக கலந்தாலோசனைச்செயலணியை நியமித்தமைக்கு இதுவும் ஒரு காரணமாகும். அடிமட்டத்திலுள்ளவர்களுடைய கருத்துக்களையும் பெறுவதற்காக இவர்கள் நாடெங்கிலும் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகங்களோடும் பணியாற்றியிருக்கின்றனர். நான் ஏற்கனவே கூறியது போன்று அந்தச் செயலணியின் அறிக்கையை தயாராகியுள்ளது. நாம் அந்தக்; கருத்துக்களை உள்வாங்கி அதனை பொறுப்புக்கூறத்தக்கதாக மாற்றியமைப்போம். இறுதிக் கட்டமைப்பின் வடிவம் என்னவென்று தெளிவான நிலைப்பாட்டிற்கு வந்தபின்னர் நாம் மீண்டுமாக இந்த விடயத்தை மக்கள் முன்கொண்டு செல்வதற்கான சந்தைப்படுத்தலை மேற்கொள்ளவேண்டும். இதன் காரணமாகத்தான் அடுத்தாண்டு ஜனவரி 8ம்திகதி முதல் நாம் நாடளாவிய ரீதியான தொடர்பாடல் பிரசாரத்தை ஆரம்பிக்க இருக்கின்றோம். நாடென்ற வகையில் நாம் முன்னோக்கிச் செல்லவேண்டுமாக இருந்தால் நல்லிணக்கம் ஏன் அவசியமாகின்றது என்ற அடிப்படை விடயம் எடுத்துவிளக்கப்படும். அத்தோடு மிகவும் இனிமையான மிக மிக அழகிய தமிழ் சிங்களப் பாடலை வெளியிடவுள்ளோம். நல்லிணக்கத்தின் பல்வேறு அம்சங்களை பேசுகின்ற விளம்பரப் பிரசாரத்தையும் முன்னெடுக்கவுள்ளோம். இவை நாம் என்ன செய்யமுற்படுகின்றோம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்துகின்ற முதற்படிகளாகும். நாம் செய்து முடிக்கும் வரையில் நாம் என்ன செய்கின்றோம் என்பதை மக்களில் பலரும் அறியாது இருக்கின்றனர். எதைச் செய்யவேண்டும் என்பது தொடர்பில் நாமும் எமது மனதில் தெளிவான எண்ணக்கருக்களை கொண்டிருப்பதன் காரணமாக நாம் இந்த தொடர்பாடல் நிகழ்ச்சிகளை அடுத்தாண்டு தொடக்கம் முதற்கொண்டு ஆரம்பிக்கவுள்ளோம்.
கேள்வி
அமைச்சரரே அண்மையில் நான் காணாமற் போனோர் தொடர்பான செய்திகளை சேகரிப்பதற்காக மன்னாருக்கு விஜயம் செய்திருந்தேன். அதன்போது காணாமற்போனோரின் உறவுகள் உத்தேச காணாமற்போனோருக்கான அலுவலகம் எவ்வாறானது அங்கு பணியாற்றப்போகின்றவர்கள் யார் என்பது தொடர்பாக அறியாதுள்ளதாக தெரிவித்திருந்தனர். இதனை எங்ஙனம் நோக்குகின்றீர்கள்?
அவர்களுக்கு மட்டுமல்ல எமக்குகூட அது தொடர்பில் எவ்விதமான தகவல்களும் தெரியாது.
கேள்வி
இந்த விடயத்தில் தம்மோடு கலந்துரையாடவில்லை என அவர்கள் கூறுகின்றனர். இதனை எங்ஙனம பார்க்கின்றீர்கள்?
ஓவ்வொரு தடவையும் நாம் இந்த ஆணைக்குழுக்களுக்கு அங்கத்தவர்களை நியமிக்கும் போது எம்மால் மக்களுடன் கலந்துரையாடுவது சாத்தியமற்றது. இதன் காரணமாகத் தான் மிகவும் மதிக்கப்படும் சுயாதீனமான மனிதர்களைக் கொண்ட அரசியல்யாப்பு சபையை நியமித்துள்ளோம். காணாமற்போனோர் அலுவலகத்திற்கான அங்கத்தவர்களை நியமிக்கும் பணியானது அவர்களுக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.
கேள்வி
காணாமற் போனோர் விவகாரம் என்பது மிகவும் முக்கியமான ஒரு பிரச்சனையாகும். நீண்டநாட்களாக இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கென பல்வேறு ஆணைக்குழுக்கள் நியமிக்கப்பட்டன. இது எந்தவகையில் இந்த காணாமற்போனோர் அலுவலகம் வித்தியாசமானது?
இது ஓர் ஆணைக்குழு அல்ல. இந்த (காணாமற்போனோருக்கான ) அலுவலகமானது பாராளுமன்றத்திற்கு மாத்திரமே பதில்சொல்லக்கடமைப் பட்டுள்ளது. நான் சொன்னது போன்று அரசியல்யாப்பு சபையால் நியமிக்கப்படும் அங்கத்தவர்களைக்கொண்டே இந்த அலுவலகம் இயங்கும். காணாமற்போனோர் அலுவலகத்தின் வரைவானது உலகின் பல்வேறு பாகங்களையும் சேர்ந்த பல்வேறு தரப்பினரால் உலகிலுள்ள எந்தப்பகுதியிலும் காணப்படுகின்ற காணாற்போனோருக்கான அலுவலகங்களுடன் ஒப்பிட்டு மிகச் சிறந்த முன்மாதிரிகளில் ஒன்றாக பாராட்டப்பட்டுள்ளது. அந்தவகையில் சந்தர்ப்பமொன்றை வழங்கிப்பார்ப்போம். முதற்கட்டமாக நாம் சட்டமூலத்தை நிறைவேற்றியுள்ளோம். சரியானவர்களை (அங்கத்தவர்களாகக) கொண்டு அதனை ஸ்தாபிப்பது அடுத்தகட்டமாகும். அடுத்த ஜனவரி முதற்கொண்டு அது இயங்கத்தொடங்கியதும் குறைபாடுகள் யாதென நாம் ஆராய்ந்து பார்க்க முடியும். அவர்களின் கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் நாம் முன்வைத்துள்ளதனை விமர்சிப்பது காலத்துக்கு முந்தியதாகும். ஏனெனில் இது கடந்தகாலத்தில் முன்வைக்கப்பட்ட எதனையும் போன்றதல்ல. அந்தவகையில் காணாமற்போனோர் அலுவலகம் இயங்குவதற்கும் தீர்வுகளைத் தருவதற்கும் ஒரு சந்தர்ப்பத்தை வழங்குங்கள்.