பலமானவர்களோடு ஐக்கியமாகிக் கொள்வது வாழ்விற்கு வளம் சேர்க்கும் என்ற கொள்கை அரசியலுக்கே உரியத்தானதென பலரும் எண்ணுவதுண்டு .
ஆனால் விளையாட்டிலும் இது பொருந்தும் என்பதை அண்மையில் நடைபெற்று முடிந்த இந்தியன் பிரிமீயர் லீக் கிரிக்கட் போட்டிகளைப்பார்த்த போது நான் உணர்ந்துகொண்டேன்
வட இந்தியர்களின் ஆதிக்கம் நிறைந்த இந்திய தொலைக்காட்சிகளாக இருக்கட்டும் வர்ணனையாளர்களாக இருக்கட்டும் விமர்சகர்களாக இருக்கட்டும் பலம்மிக்க அணிக்கே வெற்றிவாய்ப்பென ஆர்ப்பரித்தனர்
கிரிக்கட் போட்டி என்பது இறுதிப்பந்துவரையில் ஆருடம் கூறமுடியாது என நன்கறிந்த விளையாட்டு விமர்சகர்களோடு ரசிகர்கள் கூட இந்தக் கொள்கையில் ஊறிக்கிடந்தனர்
மும்மை இந்தியன்ஸ் அணியே சம்பியனாகும் என மீண்டும் மீண்டுமாக கூறியர்கள் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வாய்ப்புக்களை தட்டிக்கழித்திருந்தனர்
எதிர்பார்த்ததைப்போன்று மும்மை இந்தியன்ஸ் அணியும் எதிர்பாராமல் சென்னை அணியும் இறுதிப்போட்டிக்கு தெரிவானபோது கூட விரல் விட்டெண்ணக்கூடியவர்களே சென்னைக்கு வெற்றிவாய்ப்புண்டென கூறத்தலைப்பட்டனர்
விரும்பிய அணியை ரசிப்பதும் நேசிப்பதும் தனிப்பட்ட உள்ளுணர்வைப் பொறுத்தது ஆனால் தமது அணிதான் வெற்றிபெறும் என்பது யாதார்த்தத்தை புரிந்துகொள்ளாத விளையாட்டின் போக்கை விளங்கிக்கொள்ளாதவர்களின் நிலைப்பாடு
இராமன் ஆரியன் என்றும் இராவணன் திராவிடன் என்றும் இராமாயணப் பொய்க்கதை புரிந்து ஆரியர்களின் மேலாதிக்கத்தை நிலைநிறுத்திய வடகத்தேய இந்தியர்கள் கிரிக்கட் விளையாட்டிலும் தமது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த முயன்று கொண்டிருக்கும் நிலையில் இதை அறியாத மாந்தர்களாய் நம்மவரும் எவ்வித ஆய்வும் இல்லாது ஊடகங்களின் கருத்திற்கே எடுபட்டுப்போவது வருந்தத்தக்கது
திராவிடர்கள் என்றால் குறிப்பாக தமிழர்கள் என்றாலே கறுப்பர்கள் கீழ்த்தரமானவர்கள் என ஒதுக்கும் ஆரியக்கூத்தாடிகள் கிரிக்கட் மூலமாக தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்த மேற்கொள்ளும் முயற்சிகளை அனுமதித்துவிடக்கூடாது
ஆரியத் திராவிடப் பாகுபாடு இன்னமும் தலைவிரித்தாடும் இந்தியத்தேசத்தில் திராவிட பூமியைச் சேர்ந்த சென்னை சுப்பர் கிங்ஸ் அணி சம்பியன் ஆகியமை வெறுமனே கிரிக்கட் வெற்றி மாத்திரமல்ல அது ஆரிய ஆதிக்க வெறிக்கெதிரான வெற்றியாக கொள்ளப்படவேண்டும்
No comments:
Post a Comment