Sunday, June 23, 2013

சம்பியன் கிண்ணத்தை வெல்லப்போவது யார்?அட்டகாச இந்தியாவா ? ஆர்ப்பாட்டமில்லா இங்கிலாந்தா?

கிரிக்கட் உலகின் முன்னணி எட்டு அணிகள் பங்கேற்கும் சம்பியன் கிண்ணத் தொடர்- 2013 ன் இறுதிப் போட்டி இன்றைய தினம் ஜிஎம்ரி நேரப்படி காலை 9.30ற்கு இங்கிலாந்தின் எட்ஜ்பஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.இறுதிப்போட்டியில் நடப்பு உலகச் சம்பியன் இந்தியா போட்டிகளை நடத்தும் கிரிக்கட்டின் தாயகமான இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.


இந்திய அணியைப்பொறுத்தமட்டில் அனைவரது எதிர்பார்ப்புகளுக்கும் மேலாக திறமைகளைப்பறைசாற்றி இந்த தொடரில் கம்பீரமாக எழுந்துநிற்கின்றது.கடந்த தடவை இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது டெஸ்ற் மற்றும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் படுதோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஊடகங்கள் (குறிப்பாக வட இந்திய ஊடகங்கள்) மற்றும் முன்னாள் வீரர்கள் கிரிக்கட் (அறப்)படித்த பண்டிதர்களிடம் இருந்து கடும் விதிமர்சனங்களை எதிhர்நோக்கி வந்த அணித்தலைவர் மகேந்திர சதிங் டோனி என்றும் போல எதையுமே பொருட்டில் கொள்ளாமல் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியும் நிதானமும் நிறை ந்து தலைமைத்துவத்தை வழங்கியமையே இந்திய அணியின் வீறு நடைக்கு முக்கிய காரணம்.



 அதிலும் ஐ பி எல் போட்டிகளி களின் போது இடம்பெற்ற சூதாட்டம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்கள் வெளிவந்த செய்திகள் என எண்ணற்ற நடந்தும் இந்த அளவில் இடைவிடாத வெற்றிகளை குவித்தமை வெற்றிகளை பெற்றதிலும் பார்க்க அதை பெற்ற அசத்தலான துணிகரமான பாங்கானது டோனியின் மீதான மதிப்பையும் வியப்பையும் அதிகமாக்கிவிட்டுள்ளது.


இந்திய அணியின் வெற்றிநடைக்கு ஷீகார் தவானின் அசத்தலான துடுப்பாட்டம் முக்கிய காரணம். தவானின் தாண்டவம் தொடர்ந்தால் இங்கிலாந்தின் வெற்றிக் கனவு வெகுதூரமாகிவிடும். நீண்டநாட்களாக விமர்சனங்களுக்கு முகங்கொடுத்து தனது திறமைகளை சர்வதேச அரங்கில் வெளிக்காட்ட லாயக்கில்லாதவராக கருதப்பட்ட ரோஹித் சர்மாவின் துடுப்பிலிருந்தும் ஓட்டங்கள் குவிவது இந்திய அணியின் முன்வரிசையை பெரிதும் பலப்படுத்திவிட்டுள்ளது. இதனைத்தவிர வீராட் ஹோலியின் தொடர்ச்சியான முன்னேற்றம் இந்திய அணிக்கு மிகுந்த அனுகூலத்தை கொடுத்துள்ளது. டினேஷ் கார்த்திக் மீண்டும் அணிக்கு உள்வாங்கப்பட்டமை டோனியின் தீர்மானமெடுக்கும் வகிபாகத்திற்கு காட்டக்கூடிய மிகச்சிறந்த சான்றாகும். அதேபோன்று சுரேஷ் ரெய்னா  அற்புதமாக தனது மத்திய வரிசைப்பணியை மேற்கொள்கின்றார் .


 பல்வேறு நக்கல்களுக்கும் நளினங்களுக்கும் அவமானத்திற்கும் உட்படுத்தப்பட்ட ரவீந்திர ஜடேஜாவை நம்பி முழுமையாக தட்டிக்கொடுத்தன் மூலம் டோனி தான் சிறந்த தலைவர் என்பதை அனைவருக்குமே உணர்ந்திக்கொண்டிருப்பதுடன் சில வெறித்தனமான வெறுப்பையே கக்கும் விமர்சகர்களைக் கன்னதில் அறைந்திருக்கின்றார்.

 பந்துவீச்சு என்றுமே இந்தியாவின் பலவீனமாக பார்க்கப்பட்ட ஒரு விடயம் . ஆனால் இம்முறை இந்திய பந்துவீச்சு எதிரணிகளின் உயிர்மூச்சையே நிறுத்தும் படியாக  கொஞ்சம் ஒவராக சொல்லிவிட்டேன் என நினைக்கின்றேன். எதிர்கை மோனைக்காக அதை சேர்ந்துக்கொண்டேன் .

ஆனால் உண்மையாகவே இந்திய பந்துவீச்சு உச்சநிலையில் உள்ளதை ஒத்துக்கொள்ள வேண்டும். என்றுமே அலட்டிக்கொள்ளாமல் தனது பணியை செவ்வனே செய்யும் ரவிச்சந்திரன் அஷ்வின் பக்கத்து வீட்டு பையனைப்போல இருந்து கொண்டே தனது மிதவேகஷ ஸ்விங் பந்துவீச்சால் எதிரணிகளுக்கு சிம்மசொப்பனமாக திகழும் புவனேஷ் குமார் இவர்களுடன் உமேஷ் யாதவ் மற்றும் இஷாந்த சர்மா என பந்துவீச்சாளர்களின் பவர்வுல் பர்போமன்ஸ்களால் இந்திய அணி இன்றைய போட்டியில் ஒருபடி மேலே கையோங்கியுள்ளது.


இலங்கை அணியுடனான போட்டியின் நிறைவில் அணித்தலைவர் டோனி கூறியது போல உலகின் முன்னணி களத்தடுப்பு அணியாக இந்தியா திகழ்கின்றது என்ற கூற்று வாதப்பிரதிவாதங்களை ஏற்படுத்தினாலும் தவான் ரோஹிட் வீராட் தினேஷ் சுரேஷ் ஜடேஜா ஆகிய இளம் களத்தடுப்பாளர்களைக் கொண்ட அணியை உயர்வாகவே வைக்கத்தோன்றுகின்றது.


 2007 ICC World Twenty20, the CB Series of 2007–08, the 2010 Asia Cup and the 2011 ICC Cricket World Cup வரிசையில் சம்பியன் கிண்ணமும் சேர்ந்துகொண்டால்  அது டோனியின் தலைமைத்துவத்தின் மதிப்பை மேலும் உயர்த்திவிடும் என்பது திண்ணம்.


இங்கிலாந்து அணியைப் பொறுத்தவரை தாயகத்தில் காலநிலை அனுகூலத்தை சரியாகப்பயன்படுத்தி டெஸ்ட் துடுப்பாட்ட பாணியை பின்பற்றியே இறுதிப்போட்டிவரை வந்துவிட்டது. ஜேம்ஸ் அண்டர்சனின் உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சு அணித்தலைவர் அலிஸ்டெயார் குக்கின் நிதானமிக்க ஓட்டக்குவிப்பு இயன் பெல்லின் இயல்பான ஆட்டத்திறன் இயன் மோர்கனின் புதினத்துடன் கூடிய நவீன துடுப்பாட்ட ஆற்றல் வெளிப்பாடு ஸ்டுவர்ட் போர்ட்டின் பந்து வீச்சு என்பன இங்கிலாந்து அணியின் பலமாக இருந்தாலும் தற்போதைய நிலையில் இந்திய அணி இருக்கும் ஃபோர்மைப்பார்க்கும் போது நாணயச்சுழற்சியும் காலநிலையும் கைகொடுத்து இங்கிலாந்தின் பந்துவீச்சு பிரகாசித்தாலே தவிர இந்திய அணியின் வீர வெற்றிப்பவனியை தடுத்துநிறுத்துவது இயலாது .

தமது அணிதான் வெல்லவேண்டும் என இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளின் ரசிகர்கள் கனவுகண்டு கொண்டிருக்க கடைசியில் காலநிலை காலைவாரிவிட்டால் 2002ல் போன்று இறுதிப்போட்டியில் விளையாடத்தகுதிபெற்ற இரு அணிகளுமே இணைச் சம்பியன்களாகும் வாய்ப்பும் இங்கிலாந்தின் காலநிலையின் படி நடந்தாலும் நடந்துவிடலாம். இந்தப் பதிவை கடந்த ஒராண்டு காலத்திற்கு பின்னர் நான் முதற்தடவையாக பதிவுசெய்கின்றேன். எழுத்தில் குறைகள் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் .நிறைகள் இருப்பின் மீண்டும் நான் எழுதநினைத்ததை எண்ணி ஒருமுறை மனத்திற்குள் மௌனச்சிரிப்பை வெளிப்படுத்துங்கள். நன்றி மீண்டும் இன்றுமொரு பதிவில் சந்திக்கும் வரை.....

1 comment:

  1. வருகைக்கு பிந்திவிட்டது சகோ இருந்தாலும் தகவல்களுக்கு நன்றி

    www.mathisutha.com

    ReplyDelete