இலங்கையிலுள்ள அரசியல்வாதிகள் தேர்தல் காலம் என்று வரும்போது மக்களின்
உணர்வுகளைத் தூண்டி வாக்குகளாக மாற்றுவதற்கு பல்வேறு துரும்புச்சீட்டுகளை
கடந்த காலங்களில் பயன்படுத்திவந்துள்ளனர்.
இதில் தமிழர்களுக்கு எதிரான இனவாத கோங்கள் நீண்ட காலமாக முதன்மை பெற்றன. கடந்த சில தசாப்தங்களாக அவை விடுதலைப்புலிகளுக்கு எதிரான பயங்கரவாதக் கோங்களாகப் பரிணாமம் கொண்டன. விடுதலைப்புலிகளுக்கு எதிரான ஆயுதமோதல் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஐந்து வருடங்களானபோதிலும் மக்கள் மத்தியில் வாக்குப்பிச்சை கேட்பதற்காக இன்னமும் அதிலேயே தொங்கிக்கொண்டிருக்கின்ற கட்சிகளையும் நம் கண்முன்னே காணமுடிகின்றது.
அரசியல்வாதிகள் என்ன நினைத்தாலும் சாதாரண மக்களின் மத்தியில் இந்த நாட்டுக்குத் தற்போது தேவையானது என்ன என்பது தொடர்பான தெளிவு ஏற்பட்டுவருவதை சமூகத்தின் பலதரப்பட்ட மக்களுடனான அன்றாடக் கலந்துரையாடல்களிலிருந்தே புரிந்துகொள்ள முடிகின்றது. அதிலே குறிப்பாக, பொருளாதார நெருக்கடியால் நாளாந்த வாழ்க்கையை நகர்த்த தள்ளாடும் மக்கள் இந்த நாட்டில் தலைவிரித்தாடும் ஊழல் குறித்து கருத்துகளைப் பரவலாக முன்வைக்கத்தொடங்கியுள்ளதை உணர்ந்துகொள்ள முடிகின்றது.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் உலகளவில் ஊழலுக்கு எதிரான போராட்டத்தில் முன்னிலைவகிக்கின்ற ட்ரான்ஸ்பெரன்ஸி இன்டர்நனல் அமைப்பு வெளியிட்டுள்ள பட்டியலில் இலங்கைக்குக் கிடைத்துள்ள இடமும் அதுதொடர்பில் தெரிவிக்கப்படும் கருத்துகளும் அமைந்துள் ளன. 2014ஆம் ஆண்டுக்கான உலக ஊழல் கருதுநிலைச் சுட்டியில் உள்வாங்கப்பட்ட 175 நாடுகளில் இலங்கை 85ஆவது இடத்தில் தரப்படுத்தப்பட்டுள்ளது.
இலங்கை கடந்தாண்டைவிடவும் ஒரு புள்ளியை அதிகமாகப் பெற்று 38 புள்ளிகளை மொத்தமாக ஈட்டியமையை ஒருவிதமான முன்னேற்றமாக புள்ளிகள் அடிப்படையில் பார்த்தால் நோக்கமுடியும். ஊழலால் இந்நாடு அடைந்துள்ள பாதிப்பிலிருந்து விடுபடுதற்கு இது போதுமானதாகக் காணப்படவில்லை என்பதை புள்ளிவிவர வியாக்கியானங்கள் துலாம்பரமாக்குகின்றன. கடந்தாண்டில் 177 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இலங்கை 37 புள்ளிகளுடன் 91ஆவது இடத்தைப் பெற்றிருந்தது. 2013ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது இலங்கை 2014இல் ஒரு புள்ளியை அதிகமாகப் பெற்றிருந்தாலும் 2012ஆம் ஆண்டில் அடைந்த 40 புள்ளிகள் இலக்கை எய்துவதற்குத் தவறிவிட்டது.
\
பர்கினா பாஸோ, இந்தியா, ஜமேய்க்கா, பெரு, பிலிப் பைன்ஸ், தாய்லாந்து, ரினிடாட் அன்ட் டுபாக்கோ மற்றும் ஸாம்பியா ஆகிய நாடுகளைப் போன்றே இலங்கையும் 2014இல் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் 38 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த நாடுகள் அவற்றின் அரச துறைகளில் பாரதூரமான ஊழல் பிரச்சினையை எதிர்கொண்டுள்ளன என்பதையே இந்த எண்ணிக்கையானது எடுத்துக்காட்டுகின்றது.
2014ஆம் ஆண்டு ஊழல் கருதுநிலைச் சுட்டி புள்ளிகளைப் பொறுத்தவரையில் 175 நாடுகளில் மூன்றில் இரண்டுக்கு அதிகமானவை 50இற்கு குறைவான புள்ளிகளையே பெற்றுள்ளன. புள்ளிகளைப் பொறுத்தவரையில் 0 என்பது மிகவும் ஊழல் மிக்க நாடெனவும் 100 என்பது மிகவும் தூய்மையான நாடெனவும் அளவீட்டு ரீதியில் கருத்திற்கொள்ளப்படும். 2014ஆம் ஆண்டில் டென்மார்க் 92 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்த அதேவேளை, வடகொரியா மற்றும் சோமாலியா ஆகியன தலா 8 புள்ளிகளுடன் கடைசி ஸ்தானங்களைத் தமதாக்கிக்கொண்டன.
இலங்கை 50 புள்ளிகளுக்குக் குறைவாகப் பெற்றிருப்பதனால் அரச துறையில் இடம்பெறும் ஊழல்களைக் குறைக்கமுடியாத நாடுகள் வரிசையில் இலங்கையும் இடம்பெற்றுள்ளமை தெளிவாகின்றது என ட்ரான்ஸ் பரன்ஸி இன்டர்நனல் இலங்கை கிளையின் நிறைவேற்று அதிகாரி எஸ். ரணுக்கே தெரிவித்துள்ளார். ஊழல் கருதுநிலைச் சுட்டி கருதுநிலையை அடியயாற்றியதாக இருந்தாலும் கூட ஊழலுக்கு எதிரான மிகவும் அங்கீகரிக்கப்பட்ட சுட்டெண்ணாகவும் அதிகமாக மேற் கோள் காண்பிக்கப்படும் சுட்டெண்ணாகவும் இருந்துவருகின்றமை குறிப்பிடத்கத்கது.
ஊழல் கருதுநிலைச் சுட்டியானது அரசதுறை ஊழல் குறித்த நிபுணர்களின் அபிப்பிராயங்களை அடிப்படையாகக் கொண்டதாகும். தலைவர்களை பொதுமக்கள் பொறுப்புக்கூறலுக்கு உட்படுத்தக்கூடிய திறந்த அரசு இருப்பின் நாடுகளது மொத்தப்புள்ளிகளுக்கு அது வலுச்சேர்க்கும். ஊழல் தொடர்கதையாக இருக்குமிடத்திலும் ஊழலுக்கான தண்டனைகள் போதுமானதாக இல்லாமலிருப்பினும் அரச நிறுவனங்கள் பிரஜைகளது தேவைகள் தொடர்பாக பதிலளிக்காத நிலையிலும் குறைவான புள்ளிகளே வழங்கப்படும்.
இலங்கையில் தகவல் அறியும் உரிமைச்சட்டம் இல்லாமையானது ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் பெரும் முட்டுக்கட்டையாக இருந்துவருவதுடன் ஊழல் செய்யும் அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஊழலை அம்பலப்படுத்தும் ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வ லர்களைப் பாதுகாப்பதற்கான தெளிவான வரையறைகள் இல்லாமை பெருங்குறைபாடாகக் காணப்படுகின்றது.

No comments:
Post a Comment