பொறுப்புக்கூறல் விடயத்தில் தென் ஆபிரிக்கா உறுதியாகவுள்ளதாகவும் இலங்கை அரசாங்கத்துடனான பேச்சுவார்த்தைகளின் போது பொறுப்புக்கூறல் விடயத்தில் உறுதியான நிலைப்பாட்டைப் பேணிவருவதாகவும் இலங்கைகான தென் ஆபிரிக்கத்தூதுவர் ஜெவ் டொயிட்ஜ் தெரிவிக்கின்றார்.
சுடர் ஒளிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலின் போது அரசியல் கைதிகள் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜெனிவா தீர்மானத்திற்குப்பின்னர் உள்ளகப் பொறிமுறை முன்னெடுக்க எண்ணியுள்ளதாக கூறியுள்ள இலங்கை அரசாங்கம் இதற்காக தென் ஆபிரிக்காவில் கடைப்பிடிக்கப்பட்ட உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை போன்றதொரு ஆணைக்குழுவை அமைக்கவுள்ளதாக கூறியுள்ளது. இந்த முன்நகர்வில் தென் ஆபிரிக்காவின் வகிபாகம் என்ன? ஏற்கனவே இந்த அரசாங்கம் உங்களைத் தொடர்புகொண்டுள்ளதா? உண்மையில் என்ன நடைபெறுகின்றது?
முதலில் நாம் ஒரு படி பின்னோக்கிப்பார்க்கவேண்டும். 2013ம் ஆண்டில் பொது நலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாடு கொழும்பில் நடைபெற்றபோது எமது ஜனாதிபதி ஸுமாவிடம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை அமைக்க உதவும் படி ஜனாதிபதி ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்திருந்தார்.எமது பணிகள் உண்மையிலேயே 2011ல் ஏற்கனவே ஆரம்பாகியிருந்தன. நாம் ஜனாதிபதி ராஜபக்ஸவின் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருந்தபோது நாம் தென் ஆபிரிக்காவின் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதற்கு விரும்பினோம்.ஏனெனில் இலங்கையைப் போன்று தென் ஆபிரிக்காவும் பல வருடகால மோதல்களிலிருந்து வெளியே வந்திருந்தது. இலங்கையின் முப்பது ஆண்டுகால மோதல்களுடன் பார்க்கையில் எமது தென் ஆபிரிக்க போராட்டம் மிகவும் நீண்ட காலப்பரப்பைக் கொண்டது.எமது போராட்டத்தை நாம் 1912ல் ஆரம்பித்திருந்தோம். எமக்கு விடுதலையோ 1994ம் ஆண்டிலேயே கிடைத்தது.அதற்கு பல ஆண்டுகள் பல தசாப்தங்கள் எடுத்தன. தென் ஆபிரிக்காவிடமுள்ள தனித்துவமான அனுபவத்தை இலங்கையுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும் என நாம் விரும்பினோம்.இலங்கையுடன் பகிர்ந்துகொள்ளக்கூடியதான ஒரு தனித்துவமான அனுபவம் தென் ஆபிரிக்காவிற்கு உள்ளதென நாம் உணர்ந்தோம். ஆனால் இலங்கை அரசாங்கம் நாம் உதவவேண்டும் என கோருமிடத்திலேயே நாம் எமது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வோம் என எப்போதுமே கூறிவந்தோம். அந்த வகையில் 2013ல் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கொழும்பிலே சந்தித்தபோது உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு தென் ஆபிரிக்க உதவி தேவைபபடுவதாக ஜனாதிபதி ராஜபக்ஸவிடமிருந்து தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஸுமாவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. 2014 மார்ச்சில் ஜெனிவாவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை நீங்கள் அறிவீர்கள்.அது இலங்கைக்கு தென் ஆபிரிக்கா எவ்வளவு சிறப்பாக உதவ முடியும் என்பது தொடர்பில் மேம்பட்ட புரிந்துணர்விற்கு வழிகோலியது. இவ்வருட ஜனவரி-8ல் அரசாங்க மாற்றமொன்று இடம்பெற்றதும் ஓகஸ்ற்-17ல் மீண்டும் அரசாங்க மாற்றமொன்று இடம்பெற்றதை நீங்கள் அறிவீர்கள். தற்போது ஜெனிவாவில் தீர்மானத்திற்கு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரணை வழங்கியுள்ளது.நாம் மனித உரிமைகள் பேரவையில் அறிக்கையொன்றை விடுத்திருந்தோம்.இதிலே இலங்கையில் இடம்பெற்ற பணிகளை ஏற்று அங்கீகரித்திருந்தோம்.இதன் போது இலங்கையில் தீர்வொன்றைக் காண்பதற்கு புலம்பெயர்ந்தவர்களும் முக்கிய பங்களிப்பை வழங்கவேண்டியவர்கள் என்பதை நாம் சுட்டிக்காட்டியிருந்தோம். உள் ளக பொறுப்புக்கூறல் முறைமையொன்றை ஸ்தாபிப்பதற்கு உதவுமாறு தென் ஆபிரிக்கத் தரப்பிரிவினரிடம் பிரதமர் தலைமையிலான புதிய அரசாங்கத்தினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கு உதவுமாறு விடுக்கப்பட்ட அழைப்பையிட்டு நாம் ஊக்கமடைந்துள்ளோம்.இலங்கை அதன் சொந்த பொறுப்புக்கூறல் முறைமையை தயாரிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இதுவாகும். அது தென் ஆபிரிக்காவைப் போன்று இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் தென் ஆபிரிக்காவின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளமுடியும்.இலங்கைக் கு உதவுமாறு விடுக்கப்பட்ட அழைப்பையிட்டு நாம் ஊக்கமடைந்துள்ளோம்.இலங்கை அதன் சொந்த பொறுப்புக்கூறல் முறைமையை தயாரிப்பதற்கான ஒரு சந்தர்ப்பம் இதுவாகும். அது தென் ஆபிரிக்காவைப் போன்று இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. ஆனால் தென் ஆபிரிக்காவின் அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ளமுடியும். தென் ஆபிரிக்கா செய்ததனைததனையும் இங்கு நடைமுறைப்படுத்த வேண்டியதில்லை. தென் ஆபிரிக்காவில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு மூலமாக எடுத்துணர்ந்தப்பட்ட விடயமும் இலங்கையில் (அமைக்கப்படவுள்ள) உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் எடுத்துணர்த்தப்படவுள்ள விடயமும் மாறுபட்டதாகும். நர்ம் எம்மை வழிநடத்தும் பொறுப்பை அரசாங்கத்திடம் கொடுப்போம். அவர்கள் எம்மை வழிநடத்துவர். அவர்களுக்கு என்ன தேவையாகவுள்ளதெனப் பார்ப்போம் எமது அனுபவங்கள் எப்படி இலங்கைக்கு உதவமுடியும் என்பதையும் நாம் பார்ப்போம்.
ஏன் தென் ஆபிரிக்கா அதன் அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றது?
ஏனெனில் நாம் ஒரு கடினமான கடந்த காலத்திற்கூடாக வந்திருக்கின்றோம். அந்தக்கடந் த காலத்தில் நிறைய மோதல்கள் இடம்பெற்றுள்ளது.அதில் நிறைய பிரிவினைகள் காணப்பட்டன.அதில் நிறைய பிரிவினைகள் காணப்பட்டன. அந்தக்கடந்த காலத்தில் சில சமயங்கள் மதிக்கப்படவில்லை சில கலாச்சாரங்ளை அரசாங்கம் மதிக்கவில்லை. அந்தக்காலகட்டத்தில் அரசாங்கம் அதன் சொந்த சமயத்திற்கும். சொந்த கலாசாரத்திற்கும் தனது சொந்த மக்களுக்குமே மதிப்பளித்தது.உங்களையும் என்னையும் போன்ற நிறங்களைக் கொண்டோர் மதிக்கப்படவில்லை.நாம் தென் ஆபிரிக்கரவில் பிறந்திருந்த போதும் அப்போதைய அரசாங்கத்தினால் மதிக்கப்படவில்லை. நாம் மிகக்கொடூரமான முறைமைக்குள்ளாகவிருந்து வந்துள்ளோம். அந்த முறைமையில் பல மோதல்கள் இருந்தன. அன்றாட வாழ்வில் ஒவ்வொரு பகுதிகளையும் ஆளுகைசெய்வதாக அமைந்த பல கடினமான சட்டங்களையும் கொண்டதாக அந்த முறைமை காணப்பட்டது.வெள்ளையராக இருக்கும் ஒரு நபர் செய்யக்கூடியவற்றை வேறுநிறத்தவர் செய்ய முடியாத நிலை காணப்பட்டது. ஏனெனில் சட்டரீதியாக தடைபோடப்பட்டிருந்தது.சிறுவனாக இருந்த போது என்னால் வெள்ளையினத்தைச் சேர்ந்தவருடன் விளையாடமுடியாது.ஏனெனில் வெள்ளையரும் ஏனைய நிறத்தவரும் சேர்ந்திருக்கக்கூடாது என சட்டத்திலேயே கூறப்பட்டிருந்தது.அந்த வகையில் வழமைக்குமாறான ஒரு வாழ்ககையை நாம் வாழ்த்திருந்தோம். நாம் ஒரு நாடாகவோ ஒரு சமூகமாகவோ இருக்க வில்லை. நாம் பிளவுபட்டவர்களாக இருந்தோம்.எமது பாடசாலைகள் பிளவுபட்டிருந்தன.தேவாலங்கள் பிளவுபட்டிருந்தன .எமது வியாபாரத்தலங்கள் ,எமது விளையாட்டு ,எமது கலாசாரம் என பலதும் பிளவுபட்டிருந்தன.அந்தவகையில் அதுவொரு கொடூரமான முறைமையாக காணப்பட்டது.இதன்காரணமாக புரிந்துணர்வற்ற நிலைகாணப்பட்டது.நான் ஒரு கிறிஸ்தவான இருந்தால் என்னால் முஸ்லிமை புரிந்துகொள்ள முடியாத நிலை காணப்பட்டது.அதேபோன்று முஸ்லிமால் யூதர்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. நான் ஒரு கிறிஸ்தவான இருந்தால் என்னால் முஸ்லிமை புரிந்துகொள்ள முடியாத நிலை காணப்பட்டது.அதேபோன்று முஸ்லிமால் யூதர்களைப் புரிந்துகொள்ள முடியவில்லை. யூதர்களால் இந்துக்களைப் புரிந்துகொள்ள முடியாது. இது தென் ஆபிரிக்காவில் மிகப்பெரும் பிரச்சனையாக உருவெத்திருந்தது.அந்த வகையில் எம்மிடம் பகிர்ந்துகொள்வதற்கான நிறையஅனுபவங்கள இருக்கின்றன.உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு விடயத்தில் மட்டுமன்றி அரசியல் பேச்சுவார்த்தைகள் எப்படி அரசியல் தீர்வைக் காண்பது, எமது அரசியலமைப்பு நெருக்கடியின் போது தீர்வுகண்ட அனுபவம் ஒரு அரசியல்யாப்பை எவ்வாறு சமரசத்தினூடாக முன்கொண்டுசெல்தல், அரசியல் யாப்பை எழுது எப்படி என்ற அனுபவம் என நிறைய அனுபவங்களை பகிர்ந்துகொள்ள முடியும். இதனைத் தவிர எமது அரசியல்யாப்பு மிகப்பெரிய மக்கள் பங்கேற்றல் நிகழ்ச்சித்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்டது.எமது அரசியல்யாப்பு மிகப்பெரிய மக்கள் பங்கேற்றல் நிகழ்ச்சித்திட்டத்தினூடாக முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தவிர 2.5மில்லியன் ( 25 லட்சம்) மக்கள் தமது அரசியல்யாப்பு பேரவைக்கு தமது சமர்பிப்புக்கைளைச் கையளித்திருந்தனர். அரசியல்யாப் பு எண்ணக்கருக்களை மக்கள் எளிய மொழியில் எடுத்தியம்பியிருந்தனர்.உதாரணமா க சொல்வதானால் மக்கள் ஒரு கடதாசித்துண்டை எடுத்து சட்டமானது எனது கால்நடைகள் திருடப்படாது சட்டத்தின் மூலமாக பாதுகாக்கப்படவேணடும். தமது கால்நடைகளை மேய்ச்சல் நிலத்தில் விடும் போது அதன் எந்தத் தீங்கிற்கும் உள்ளாக்கப்படாமல் சட்டத்தின் மூலமாக பாதுகாக்கப்படவேண்டும் போன்ற சிறிய விடயங்களைக் கூட ( அது அவரவருக்கு பெரியவிடயம்) அரசியல் சாசனத்தில் இவற்றையெல்லாம் உத்தரவாதப்படுத்த வேண்டும் போன்ற எண்ணக்கருக்களை மிக எளிய முறையில் முன்வைத்திருந்தனர்.இது எமது அரசியல்யாப்பு தயாரிப்பு முறையை வலுப்படுத்துவதாக அமைந்தது. கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையிலான பாலமாகவே நாம் தென் ஆபிரிககாவில் எமது அரசியல்யாப்பை கருதுகின்றோம்.நாம் மிக மோசமான கடந்த காலத்தைக் கடந்து வந்திருக்கின்றோம்.எம்மை எதிர்காலத்திற்கு அழைத்துச்செல்வதற்கு எமக்கொரு பாலம் தேவைப்படுகின்றது. அதுவே எமது அரசியல்யாப்பாகும்.கடந்த காலத்தில் நடைபெற்ற பல விடயங்களை சரிசெய்வதாக எமது அரசியல் யாப்பு அமைந்திருக்கின்றது.மக்களைப் பிளவு படுத்திய சட்டங்கள் அனைத்தையும் களையப்பட்டன.வெள்ளையரும் ஏனைய நிறத்தவரும் ஒரே திருச்சபைக்கு செல்ல முடியாது என்ற சட்டத்தை நீக்கியது.வெள்ளையரும் கறுப்பரும் ஒரே கிரிக்கட் அணியில் விளையாடமுடியாது என்ற சட்டத்தை அரசியல் யாப்பு நீக்கியது.இன்று தென் ஆபிரிக்க கிரிக்கட் அணியில் வித்தியாசமான பல இனங்களை நிறங்களைச் சேர்ந்தவர்கள் இணைந்துவிளையாடுகின்றனர். ரக்பி அணியிலும் இதேநிலைதான். யாரேல்லாம் விளையாட ஆசைப்படுகின்றார்களோ அவர்கள் வரவேற்கப்படுகின்றனர். முன்னர் கிரிக்கட் அணியில் வெள்ளையர் மாத்திரமே இருந்தனர். ரக்பி அணியில் வெள்ளையர் மாத்திரமே இருந்தனர். ஏனெனில் அப்போது அதுவே சட்டமாக இருந்தது.எமது அரசியல் யாப்பு அந்தக் குறைபாடுகளை அநீதிகளை களைந்து .எமது அரசியல்யாப்பு ஜனநாயக சமத்துவ சமூகத்தை பெறுவதற்கு வழிகோலியது. எந்த சமயமும் ஒன்றைவிட மற்றொன்று மேலானது அல்ல என்பதை நிலைப்படுத்தகின்ற மதச்சார்பற்ற அரசியல் யாப்பு எமது யாப்பாகும்.நாம் எதிர்நோக்கிய சமயப்பிரச்சனைகள் நீங்கள் இலங்கையில் எதிர்நோக்குவதிலும் வித்தியாசமானதாகும்.எமது அரசியல் யாப்பு பலதரப்பட்டவர்களதும் சமரச பேச்சுவார்த்தைகளுக்கு உட்பட்டது. அதில் பங்கேற்றவர்கள் மதத்தை அரசியல்யாப்பிற்கு வெளியே வைப்பதற்கு இணங்கினர்.ஆனால் அது பேச்சுவார்த்தைகளால் இணக்கங்காணப்பட்டதொன்றாகும்.
ஒரு முஸ்லிம் நாட்டில் அதனைச் செய்யமுடியாது போகலாம். இலங்கை போன்றதொரு நாட்டிலும் அதனைச் செய்ய முடியாது போகலாம் அது சூழ்நிலையைப் பொறுத்ததொன்றாகும். எமது அனுபவத்திலிருந்து இந்த விடயங்களில் இலங்கைக்கு உதவ நாம் விரும்புகின்றோம். எமது அனுபவத்திலுள்ள அனைத்து விடயங்களும் உதவும் எனக் கருதவில்லை. ஆனால் அரசியல்யாப்பைத் தயாரிப்பதில் எம்மால் உதவமுடியும் என்பதை நாம் அறிவோம். நிரந்தர அரசியல்தீர்வைக்காண்பதற்கான அரசியல் பேச்சுவார்த்தைகளில் உதவமுடியும் என்பதை நாம் அறிவோம்.உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறையை அமைப்பதில் உதவமுடியும் என்பதை நாம் அறிவோம். இதில் ஒரு முக்கியமான விடயத்தை நான் குறிப்பிட்டாக வேண்டும். இலங்கையிலுள்ள எந்தவொரு அரசாங்கத்துடனும் இணைந்து இந்த செயன்முறையை முன்னோக்கிக்கொண்டுசெல்வதற்கு தென் ஆபிரிக்கா தயாராகவுள்ளது.நாம் ஜனாதிபதி ராஜபக்ஷ அரசாங்கத்துடனும் பணியாற்றியுள்ளோம். தென் ஆபிரிக்காவிடம் அவர் உதவி கேட்டதையிட்டு நாம் மிக்க மகிழ்ச்சியடைந்தோம்.ஜனாதிபதி சிறிசேன பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துடனும் நாம் இணைந்து பணியாற்றுவோம். புதிய அரசாங்கத்துடன் இந்த விடயத்தில் முன்னோக்கிச் செல்வதற்காக நாம் இணைந்து பணியாற்றுவோம்.நாடென்ற வகையில் இலங்கை முன்னோக்கிச்செல்லவேண்டும் எனவே நாம் விரும்புகின்றோம்.மக்கள் விசேடமாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் அனைவரும் எமது பார்வையில் மிகவும் முக்கியமானவர்களாக திகழ்கின்றனர் என்பதைக் கூறிவைக்க விரும்புகின்றேன்.அனைவரும் வித்தியாசமானவர்களாக திகழ்வதுடன் முக்கியமானவர்களாகவும் உள்ளனர். எமக்கு அனைவருமே முக்கியமானவர்கள். யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றனர். பாதிக்கப்படாதவர்கள் இருக்கின்றனர் நாம் அனைவருக்கும் உதவிபுரிய விரும்புகின்றோம். நாடு மீண்டும் பின்னோக்கிச் செல்லாமல் முன்னோக்கிச் செல்வதற்காகவே இதனைச் செய்கின்றோம். எமக்கு எது சரியாக அமைந்தது என்ற அனுபவம் உள்ளபடியாலேயே தென் ஆபிரிக்கா இதனைச் செய்ய முனைகின்றது. இலங்கை அரசாங்கம் என்ன செய்ய வேண்டும் என நாம் கூறுவதில்லை. நீங்கள் ஊடகங்களில் தென் ஆபிரிக்கா அதைச் செய்யவேண்டும் இதனைச் செய்தாக வேண்டும் என்று இலங்கையிடம் கூறியதாக ஒருபோதும் பார்த்திருக்கமாட்டீர்கள்.மக் கள் மத்தியில் இணக்க கருத்துருவாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்று நாம் நம்புகின்றோம்.வேறு வகையில் கூறுவதென்றால் வித்தியாசமாக செயற்படமுடியும் என மக்களை ஊக்குவிக்க எம்மால் முடியும். அரசாங்கத்துடன் எப்படி தொடர்பைப் பேணுகின்றோம் என்பதில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்துகொள்கின்றோம். நாங்கள் என்ன செய்ய வேண்டும் என்று வேறுதரப்பினர் கூறுவதை நாம் விரும்பமாட்டோம். நாம் தென் ஆபிரிக்காவில் பிரச்சனைகளை கடந்த போன காலப்பகுதியில் என்ன செய்ய வேண்டும் என மற்றவர்கள் கூறுவதை விரும்பியிருக்கவில்லை. எமக்கு என்ன வேண்டும் என்பதை நாமே தீர்மானித்தோம். அதனால் தான் மக்கள் பங்களிப்பு முக்கியம் என்று கூறினேன்.மக்கள் என்ன சொல்கிறார்கள். உங்களது சமூகம் பொறுப்புக்கூறல் பற்றி என்ன சொல்கின்றது.இன்னொரு தரப்பினர் பொறுப்புக்கூறல் பற்றி என்ன சொல்கின்றனர்.. இந்த விடயத்தில் புரிந்துகொள்ள முடியாத தரப்பினருக்கு தென் ஆபிரிக்காவினால் என்ன செய்யமுடியும் என்றால் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றி விளக்க முடியும். உங்கள் பத்திரிகையில் இந்த நேர்காணல் பிரசுரமான பின் மக்களை இதுபற்றி எழுதுமாறு கோரமுடியும். கேள்விகளைக் கேட்குமாறு கூறமுடியும். அந்தவகையில் மேலும் சில நேர்காணல்களை பின்னர் வழங்குவதனூடாக தென் ஆபிரிக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு பற்றி தெளிவுபடுத்த முடியும்.
உலகில் பல உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுக்கள் (Truth and Reconciliation Commission ) TRC உள்ளன. ஆனால் இலங்கை அரசாங்கமோ தென் ஆபிரிக்க பாணியில் விருப்புக் காண்பித்துள்ளது. இதற்கு தென் ஆபிரிக்க ஆணைக்குழுவானது பொறுப்புக்கூறலை விடவும் நல்லிணக்கத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தமையும் ஒரு காரணமாக அமைந்துள்ளதென மக்கள் கூறுகின்றனர். உங்களுடைய உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எப்படிக் கட்டமைக்கப்பட்டதென எமக்கு சுருக்கமாக விபரியுங்கள்?
ஒரு முக்கியமான விடயத்தை நான் வலியுறுத்த விரும்புகின்றேன். தென் ஆபிரிக்கா பொறுப்புக்கூறல் விடயத்தில் உறுதியான நிலைப்பா ட்டில் இருக்கின்றது. உங்களுடைய அரசாங்கத்துடன் நாம் பேசுகின்றபோது நாம் பொறுப்புக்கூறல் விடயத்தில் மிகவும் உறுதிப்பாடான நிலைப்பாட்டையே பேணிவருகின்றோம். பொறுப்புக்கூறல் என்பது பல வழிமுறைகளில் நடைபெறமுடியும். அது நீதிமன்றத்தில் நடைபெறலாம். அது உண்மை ஆணைக்குழு (TRC )முன்பாகவும் நடைபெறலாம்.மோதல்களுடன் தொடர்புடைய விடயங்கள் மக்கள் மீதான அடக்குமுறைகள் மனித உரிமை மீறல்கள் குறித்த பொறுப்புக்கூறலுக்கு சில சமயங்களில் TRC மிகவும் பொருத்தமானதாக அமையும். ஏனெனில் நீதிமன்றங்களில் சமர்பிக்கக்கூடியதான சாட்சியங்கள் இல்லாத சந்தர்ப்பங்களைக் கொண்டதான இத்தகைய நிலைகளில் TRC பொறிமுறையே பொருத்தமானது. இது ஒரு வித்தியாசமான பொறிமுறையாகும். இது நீதிமன்றத்தை விடவும் வித்தியாசமானது. நீதிமன்றத்தில் போய் நீங்கள் உங்கள் கதையைக் கூறமுடியாது. அங்கே உங்கள் சாட்சியைத்தான் பதிவுசெய்யமுடியும். ஆனால் TRCயில் உங்கள் கதையைச் கூறமுடியும்.சில வேளைகளில் நீதிமன்ற நடைமுறையை விட அதிக சாத்தியப்பாடுகளைக் கொண்டதாக அமையும். ஏனெனில் இதன் நடைமுறைகள் சாதாரணமக்களாலும் மேம்பட்ட வகையில் அணுகப்படக்கூடியதாக அமையும். மக்கள் அக்கறைப்பட்ட விடயங்களில் ஆழமாகச் செல்வதற்கும் இந்த நடைமுறை அனுமதிக்கின்றது. ஆனால் TRCயில் உங்களுக்கு விரும்பியவகையில் உங்கள் கதையைக் கூறக்கூடியதாக இருக்கும். TRCயில் மக்கள் மிகவும் வசதியாக உணர்வார்கள் நீதிமன்றத்திற்கு சென்றால் அது மிகவும் வரையறுக்கப்பட்ட ,ஒழுங்கமைக்கப்பட்ட செயன்முறையாக இருப்பதைப் பார்ப்பீர்கள். ஆனால் ஒரு TRCயில் உங்களுக்கு அதிகமான இடைவெளி இருக்கும். உங்களால் TRCயில் திரும்பவந்து விசாரணைகளை மேற்கொள்ளமுடியும். நடைமுறையை மீண்டுமாக தரிசக்க முடியும். ஒரு ஆரம்பமும் முடிவுமுள்ள ஒரு நடைமுறையாக TRC இருக்கமாட்டாது. TRCயில் முன்வைக்கப்பட்ட விடயங்களுன் தொடர்புபட்டதாக 2015ம் ஆண்டிலும் தென் ஆபிரிக்காவில் நாம் இன்னமும் சடலங்கைத் தோண்டியெடுத்து அவற்றை பரிசோதித்துக்கொண்டிருக்கின்றோ ம். எமது TRCயின் பரிந்துரைகள் இன்னமும் நடைமுறைப்படுத்தலுக்கு உட்பட்டுவருகின்றன.நீதிமன்றமென் றால் ஒரு வழக்கு தொடர்பாக ஆராய்ந்து தீர்ப்பொன்றை வழங்கி அந்த வழக்கை மூடிவிடும்.நீங்கள் அந்த நீதிமன்றத் தீர்ப்புடன் வாழவேண்டியிருக்கும். மோதல்களிலிருந்து வெளிவரும் நாடுகளுக்கு உதவுவதற்கு TRC கள் பல்வேறு வழிகளிலும் உதவுகின்றன.இந்த நடைமுறையில் உண்மையைக் கூறுவதன் மூலமாக நாம் பொறுப்புக்கூறலை நிலைநாட்டுகின்றோம். அந்த வகையில் இது TRC முன்பாக வந்து தமது தரப்பு சம்பவத்தை சொல்வதற்கான சந்தர்ப்பத்தை விரும்பிய எவருக்கும் வழங்குகின்றது.உங்களுடைய TRC தென் ஆபிரிக்க TRCயி லும் முற்றிலும் வித்தியாசமானதாகக்கூட அமையலாம். அது நல்லவிடயம்.ஏனெனில் இலங்கை அதன் TRC யை அதுவாகவே வடிவமைப்பது அவசியமாகும். அது இலங்கையின் கலாசாரத்திற்கும் மத நடைமுறைகளுக்கும் வரலாற்றிற்கும் பொருத்தமானதாக அமையவேண்டும். உங்கள் TRC ஆனது அனைத்து மக்களுக்கும் வித்தியாசமான குழுக்களுக்கு மகிழ்ச்சியளிப்பதாகவும் திருப்தியைததருவதாகவும் அமையவேண்டும்..
உலகெங்கிலும் 40ற்கு மேற்பட்ட TRCகள் இருக்கின்றன.இன்னும் பல அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கின் றன. கனடாவில் அண்மையில் ஒருTRC அமைக்கப்பட்டது. இலங்கை உட்பட மேலும் பல நிறுவப்படவுள்ளன.
தென் ஆபிரிக்காவில் கிடைக்கப் பெற்ற அனுபவத்தைக் கொண்டு அதனைப் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம். அப்போது தென் ஆபிரிக்கா இவற்றைச் செய்ததை நாம் அறிந்திருக்கின்றோம். அதிலிருந்து கற்றுக்கொண்டுள்ளோம் . அதனை விடவும் மேலாக செய்யமுடியும் என இலங்கை கூறக்கூடியநிலை ஏற்படவேண்டும். இந்தவகையில் கருணை சபையானது ஏற்கனவே ஒர் உதாரணமாக அமைந்துள்ளது. தென் ஆபிரிக்காவின் TRCயில் மதத்தலைவர்கள் ஒன்றுசேர்ந்து செயற்பட்டது கிடையாது. ஏற்கனவே இது எனக்கு சிறந்ததொரு சமிக்ஞையாக காணப்படுகின்றது. புரிந்துணர்வைக் கட்டியெழுப்புவதில் இன்னமும் நிறைய பணிகள் முன்னெடுக்கப்படவேண்டியுள்ளது. இலங்கையில் TRC எப்படி கட்டமைக்கப்பட்டிருக்கும் என இன்னமும் எமக்குத் தெரியாது. அரசாங்கத்தரப்பினருக்கு கிடையில் இன்னமும் அது கலந்துரையாடப்பட்டுவருகின்றது. அரசாங்கம் தயாராக இருக்கும் போது நாம் உதவுவோம்.அது எப்படி அமையும் என எமக்குத் தெரியாது. ஒருவேளை அது TRC என்றழைக்கப்படாமல் வேறேதும் பெயரில் அழைக்கப்படலாம்.ஆனால் அது TRC போன்றதொரு பொறிமுறையாகும். TRC யை அமைப்பதற்கு இலங்கை தீர்மானித்துள்ளதையிட்டு நாமும் வேறுபல நாடுகளும் மகிழ்ச்சியடைந்துள்ளோம். ஏன் தென் ஆபிரிக்கா என்ற கேள்வி எழுந்துள்ளதென்றால் தென் ஆபிரிக்காவின் TRCயானது பலப்பல வழிகளில் வித்தியாசமானதாகும். தென் ஆபிரிக்காவும் இலங்கையைப் போன்ற வித்தியாசமான பல TRC களை ஆராய்ந்திருந்தது.நாம் விசேடமாக சிலியின் TRC யை ஆராய்ந்திருந்தோம். இவ்வாறாக பல நாடுகளதும் கற்றுக்கொண்டபின்னர் எமது கலாசாரத்திற்கும் மக்களுக்கும் பொருத்தமானதை நாம் தீர்மானத்தோம்.இவ்வாறாக பல நாடுகளதும் கற்றுக்கொண்டபின்னர் எமது கலாசாரத்திற்கும் மக்களுக்கும் பொருத்தமானதை நாம் தீர்மானத்தோம். இலங்கைக்கு மிகவும் நீண்ட வரலாறு உள்ளது. உங்களது சமயங்களும் பல ஆயிரம் ஆ ண்டுகால வரலாற்றைக் கொண்டன. இந்த விடயங்களை நன்கு சீர்தூக்கிப் பார்ப்பது முக்கியமாகும். TRC நடைமுறையூ டாக இந்த நாட்டைக் குணப்படுத்துகின்ற செயற்பாடு இடம்பெறும்.அதன் மூலமாக நல்லிணக்கத்தை நோக்கிச் செல்வதற்கு மக்கள் ஊந்தப்படுவார்கள்.நல்லிணக்கத்தி ன் பின்னர் தேசத்தைக் கட்டியெழுப்பும் நடவடிக்கை இடம்பெறவேண்டும். அனைத்தின் முடிவிலும் நீங்கள் ஒரு தேசததைச் சார்ந்தவராக இருக்க வேண்டும் என்றே விரும்புவீர்கள். என்னை யாரும் இவர் கறுப்பினத்தைச் சேர்ந்தவரென்றோ கலர் என்றோ அழைப்பதையன்றி தென் ஆபிரிக்கர் என்று அழைக்கவும் அறியப்படவுமே விரும்புவேன். தென் ஆபிரிக்கா என்ற தேசத்தின் அங்கத்தவர் என்றே நான் அறியப்பட விரும்புகின்றேன். உண்மையைச் சொல்வதன் மூலமாக பொறுப்புக்கூறல் முன்னகர்த்தப்படுவது முக்கியமாக இருக்கும் அதேவேளை நல்லிணக்கமும் முக்கியமாகும். அதேபோன்று நினைவுகளின் காயங்களில் இருந்து குணமடைவதும் முக்கியமாகும்.மக்கள் குணடையவேண்டும். மக்கள் கடந்த காலத்து கோர நிகழ்வுகளால் மிகவும் சின்னாபின்னடைந்துள்ளனர். வடக்கு கிழக்கிற்கு செல்லும் போது அவர்களது கடந்த கால வரலாற்றை சொல்லுமாறு கேட்கின்ற போது அவர்கள் அழ ஆரம்பிக்கின்றனர். நாம் அந்த மக்களை கடந்த கால காயங்களிலிருந்து ஆற்றுபபடுத்தவேண்டும். நீதிமன் றச் செயற்பாடுகளின் போது உங்கள் உளக் காயங்களை ஆற்றுப்படுத்துவத்தற்கு மதத்தலைவர்களை நாடுங்கள் என்றெல்லாம் கூறமாட்டார்கள் . ஆனால் TRC யில் இது நடக்கும்.பொறுப்புக்கூறல் விடயத்தில் நீதிமன்ற செயற்பாடு அவசியமானதொன்றாக இருப்பினும் TRC ஆனது மேலதீகமான நன்மைகளுக்கு வழிகோலும்.தென் ஆபிரிக்க TRC யில் செய்த விடயங்கள் ஏனைய TRC களில் செய்தவிடயங்களைப் பார்கிலும் வித்தியாசமானது என மக்கள் நினைத்துவிடக்கூடாது.தென் ஆபிரிக்க TRCயில் சந்தேகம் கொள்ளத்தேவையில்லை .உண்மை என்னவென்றால் உண்மையைச் சொல்லுதல், பொறுப்புக்கூறல் நல்லிணக்கத்தை நிலைநாட்டல், தேசத்தைக் கட்டியெழுப்பல் மற்றும் கடந்தகால கசப்பான நினைவுகளில் இருந்து குணமடைதல என ஒவ்வொரு கட்டங்களாக தென்ஆபிரிக்க TRC வழிநடத்தியது. கடந்த காலத்தில் இடம்பெற்றவை காரணமாக அந்த நினைவுகளில் இருந்து குணமடைந்து கொள்வதில் தென் ஆபிரிக்கர்கள் இன்னமும் போராடவேண்டியிருக்கின்றது.
தென் ஆபிரிக்காவில் நிறவெறிக்கெதிரான போராட்டத்தின் போது நெல்ஸன் மண்டேலா உட்பட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் அரசியல் கைதிகளாக இருந்த அனுபவம் உங்களுக்கு இருக்கின்றது. கடந்த சில நாட்களாக இலங்கையிலுள்ள சிறைகளிலே உள்ள தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் விடுவிக்கப்படவேண்டும் என்ற விடயத்தில் தென் ஆபிரிக்க அரசாங்கம் கரிசனைகொண்டுள்ளதா?
“அரசியல் கைதிகள் என அழைக்கப்படுகின்றவர்கள் அன்றேல் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் குறித்து நாம் அரசாங்கத்திடம் கேட்டுள்ளோம். தென் ஆபிரிக்கா இந்த விடயத்தில் கரிசனை கொண்டுள்ளமையால் ஒரு முன்னோக்கிய செயன்முறை இவ்விடயத்தில் இடம்பெறுவதாக அரசாங்கம் எமக்கு உறுதியளித்துள்ளது. தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களின் வழக்குகள் தொடர்பாக அவர்கள் அவர்கள் கவனம் செலுத்திவருகின்றனர். தற்போதைய நிலையில் அவர்களை விடுவிப்பதாக அரசாங்கம் எம்மிடம் கூறவில்லை. ஆனால் சில நேரங்களில் ஊடகங்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விடுவிக்கப்படுவர் என சில நேரங்களில் ஊடகங்களில் அறிக்கையிடப்படுவதைப் பார்த்திருக்கின்றோம். தென் ஆபிரிக்கா இவ்விடயம் தொடர்பில் அரசாத்துடன் தொடர்ச்சியாக கலந்துரையாடிவருகின்றது. இவ்விடயம் தொடர்பாக முன்நோக்கிய செயன்முறை இடம்பெறுவதாக அரசாங்கம் எமக்கு உறுதியளித்துளளமையாலும் அவர்களது வழக்குகள் தொடர்பாக ஆராய்ந்துவருவதாலும் சிலர் விடுவிக்கப்படுவதற்கான ஏதுநிலை உருவாகும என நான் நினைக்கின்றேன்.யாருடைய வழக்குகள் தொடர்பில் அரசாங்கம் ஆராய்கின்றது என எனக்கு தெரியாது. எத்தனை பேர் விடுவிக்கப்படவுள்ளனர் என்றும் தெரியாது. ஆனால் இவ்விடயம் தொடர்பில் நாம் அரசாங்கத்திடம் கேள்வியெழுப்பியுள்ளோம். அதற்கு தாம் இவ்விடயத்தை கவனத்தில் எடுத்துசெயற்படுவதாக உறுதியளித்துள்ளனர். இது ஒரு சிறந்த நல்லெண்ணச் சமிக்ஞையாக அமையும். சிலர் விடுவிக்கப்படுமிடத்து அரசியல் ரீதியாக அது சிறந்த விடயமாக அமையும். சிலர் விடுவிக்கப்படுவார்களாயின் தென் ஆபிரிக்கா நிச்சயமாக மகிழ்ச்சியடையும் ஊக்கம்கொள்ளும்.. அது தமிழ் மக்களுக்கும் பாதிக்கப்பட்ட ஏனைய சமூகங்களுக்கும் சிறந்த செய்திய ை எடுத்துச் செல்வதாக அமையும். ஏனெனில் அரசாங்கமானது கடந்த காலத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் முன்னோக்கிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு திடசங்கற்பம் பூண்டுள்ளது என்பதை காண்பிப்பதற்கு அரசியல் கைதிகளின் விடுதலையானது மிகச் சிறந்த நல்லெண்ணச் சமிக்ஞையாகும். இது நாம் அதனைச் செய்யுமாறு அரசாங்கத்தை ஊக்குவிக்கின்றோம்
தென் ஆபிரிக்காவில் நிறவெறி ஆட்சியில் இழைக்கப்பட்டவற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் இழைக்கப்பட்ட குற்றச்செயல்களின் பரிமாணம் மாறுபட்டது. இலங்கையில் இழைக்கப்பெற்ற குற்றங்கள் மிகவும் பாரதூரமானவை என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரே குறிப்பிட்டிருந்தார்.தென் ஆபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக நிறவெறி ஆட்சியில் இழைக்கப்பெற்ற குற்றங்களுக்காக யாரேனும் தண்டிக்கப்பட்டார்களா? மீண்டும் மோதல்கள் இடம்பெறாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு பாரதூரமான குற்றங்களை இழைத்தவர்களுக்கு தண்டனை வழங்கப்படவேண்டும் எனக் கருதுகின்றீர்களா?
தென் ஆபிரிக்காவில் ஒரே காலகட்டத்தில் பல விடயங்கள் இடம்பெற்றிருந்தன.நாம் புதிதாக ஒரு அரசியல்யாப்பை உருவாக்கியிருந்தோம். அரசியல்யாப்பானது கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்குமிடையிலான பாலமாக திகழ்கின்றது என நான் உங்களின் முன்னைய கேள்விக்கான பதிலின் போதும் தெரிவித்திருந்தேன். மீண்டும் மோதல்கள் ,அநீதிகள் கடந்தகாலத்தில் போன்று நிகழ்ந்துவிடக்கூடாது என்பதை உறுதிப்படுத்துவதற்கான ஒரு கருவியாக அரசியல்யாப்பு அமைந்துள்ளது.ஏனெனில் அரசியல்யாப்பு இனவாதத்தைத் தடைசெய்துள்ளது. அவதூறுப் பேச்சுக்களைத் தடைசெய்துள்ளது. எங்களுடைய அரசியல் யாப்பை நீங்கள் பார்க்கும் போது அதிலுள்ள சம உரிமைச் சரத்துக்களைக் உன்னிப்பாக நோக்குங்கள். நாம் மீண்டுமாக பழைய நிலைக்கு திரும்பாது இருப்பதை உறுதிசெய்வதற்கான கருவியாக அரசியல்யாப்பு இருக்கின்றதென்பதை பறைசாற்றுவதாக அதிலுள்ள சம உரிமைச்சரத்துக்கள் அமைந்துள்ளன.நாம் மீண்டுமாக துயர்படிந்த கடந்தகாலத்திற்கு திரும்பமாட்டோம் என்பதை உறுதிப்படுத்தும் மிகமுக்கிய நடவடிக்கைகளில் ஒன்றாக அரசியல்யாப்பு உருவாக்கம் அமைந்திருக்கின்றது.
நீங்கள் ஒரு நீதிமன்றத்திற்கு முன்செல்வதோ அன்றேல் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு முன்பாக செல்வதோ கடந்த கால துயரச் சம்பவங்கள் மீண்டும் இடம்பெறமாட்டாது என்பதை உறுதிப்படுத்தவதற்கு போதுமானதாக அமைந்துவிடாது. நீதியை நிலைநிறுத்தும் நிறுவனங்கள் சீரமைக்கப்படவேண்டுவதும் முக்கியமானதாகும். நீதிக்கட்டமைப்பு பொலிஸ் மனித உரிமை ஆணைக்குழு ஆகியன வலுப்படுத்தப்படவேண்டும். மனித உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்துவதற்காக நீதியை கட்டிக்காப்பதற்காக அரசாங்க நிறுவகக் கட்டமைப்பில் புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படவேண்டும்.
தென் ஆபிரிக்காவில் பெரும்பான்மையினரான கறுப்பினத்தவர்களே பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தனர். அவர்கள் ஆட்சியதிகாரத்திற்கு வந்தமையால் பொறுப்புக்கூறல் நல்லிணக்கம் என்பன சாத்தியமாயிற்று. ஆனால் இலங்கையில் சிறுபான்மையினரே மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தவகையில் தென் ஆபிரிக்க படிப்பினைகள் எவ்வாறு உதவமுடியும்?
நீங்கள் மோதலில் பாதிக்கப்பட்டவராக இருந்தால் நீங்கள் சிறுபான்மையினராக இருந்தாலோ பெரும்பான்மையினராக இருந்தாலோ நீங்கள் மோதலில் பாதிக்கப்பட்டவரே. மோதல்களின் போது,யாரேனும் உங்களுக்கு எதிராக தீங்கிழைதிருந்தால் ,யாரேனும் உங்கள் உறவினரை கொலைசெய்திருந்தால் ,யாரேனும் உங்கள் உறவினரைக் கடத்திச் சென்றிருந்தால் ,யாரேனும் உங்கள் மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டிருந்தால், யாரேனும் உங்கள் சகோதரியையோ தாயாரையோ பாலியல் வல்லுறவிற்கு உட்படுத்தியிருந்தால் அவை எங்குமே மாற்றடையப்போவதில்லை.எந்த மோதலின் போதும் அவை ஒரேவிதமானவையாகவே உள்ளன.
தென் ஆபிரிக்காவில் மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்க அதிகாரத்தைப் பெற்றுக்கொண்டமை எம்மைப்பொறுத்தவரையில் அதிர்ஷ்டமிக்கதாக அமைந்தது.தென் ஆபிரிக்காவில் அது எமக்கு உதவியாக அமைந்தது.இந்த விடயங்களை கையாள்வதற்கான மேம்பட்ட வாய்ப்புக்களை அது வழங்கியது.
பெரும்பான்மையினரான தென் ஆபிரிக்கர்களைப் பொறுத்தவரையில் வியந்துபார்க்க கூடியவிடயமாக அமைந்ததென்னவென்றால் ஆட்சியதிகாரத்திற்கு வந்தவுடன் அவர்கள் அராஜகப்பான்மையுடன் நடந்துகொள்ளவில்லை.அவர்கள் அரசாங்கமமைத்தவுடன் அவர்கள் மன்னிப்பவர்களாக மாறினர். இதனை அனைவரும் எப்போதும் உதாரணமாக எடுத்துக்கொள்ளவேண்டும். ஒரு நாட்டில் நீங்கள் பெரும்பான்மையினராக இருந்தால் ஏன் நீங்கள் நல்லிணக்கத்தினை நோக்கி வழிநடத்தக்கூடாது. தென் ஆபிக்காவில் கறுப்பினத்தவர்கள் வெள்ளையரல்லாதவர்கள் தான் பெரும்பான்மையினர். அவர்களே நல்லிணக்கத்தை நோக்கிய பயணத்தில் தலைமைதாங்கிவழிநடத்தியிருந்தனர் . பொறுப்புக்கூறல் செயற்பாடுகளில் தலைமைதாங்கியிருந்தனர். கறுப்பினத்தவர்களிடத்தில் இருந்தே பொறுப்புக்கூறல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது. தென்ஆபிரிக்காவில் உண்மை மறறும் நல்லிணக்க ஆணைக்குழு அமைக்கப்படுவதற்கு அங்குள்ள கறுப்பினத்தவர்களே காரணமாக அமைந்தனர்.
கடந்த காலத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதில் பெரும்பான்மையினர் முன்னின்று செயற்படவேண்டும் என்பதை இங்குள்ளவர்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.கடந்த காலத்தில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பாக நடவடிக்கைகளை எடுப்பதில் பெரும்பான்மையினர் முன்னின்று செயற்படவேண்டும் என்பதை இங்குள்ளவர்கள் விளங்கிக்கொள்ளவேண்டும். அது மிக முக்கியமான விடயம். அந்த வகையில் பல சிக்கலான பாடங்களை தென் ஆபிரிக்காவில் இருந்து கற்றுக்கொள்ளமுடியும். பெரும்பான்மையினர் எதிர் சிறுபான்மையினர் போன்ற விடயங்களை இலங்கைககு உசிதமான வகையில் பயன்படுத்திக்கொள்ளமுடியும்.நீ ங்கள் என்ன வேண்டும் என்பதை கூறுகின்ற தகவலாக இந்தப்பாடங்கள் அமையமாட்டாது.மாறாக நீங்கள் அதைப் பார்த்து தென் ஆபிரிக்காவில் பெரும்பான்மையினரான கறுப்பினத்தவர்கள் பல்வேறு துயர்களை எதிர்கொண்டிருந்தபோதும் அந்த துயரங்களை விளைவித்த சிறுபான்மையினரை அவர்கள் மன்னித்தவிடயத்தை மனதில் நிறுத்திக்கொள்ளலாம்.இங்குள்ள பெரும்பான்மையினர் எப்படி சிறுபான்மையினருடன் சமாதானத்தை ஏற்படுத்திக்கொள்ள முடியும் என அந்த அனுபவத்தைக் கொண்டு ஆராயமுடியும். அந்த வகையில் பல வித்தியாசமான படிப்பினைகளை தென் ஆபிரிக்காவிலிருந்து கற்றுக்கொள்ள முடியும். தென் ஆபிரிக்காவில் பாதிக்கப்பட்ட பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தார்கள். இலங்கையில் பாதிக்கப்பட்ட சிறுபான்மையினத்தவர்கள் அரசாங்கததையமைப்பார்கள் என நான் நினைககவில்லை. எம்மைப் பொறுத்தவரையில் பாதிக்கப்பட்ட தரப்பினர் ஆட்சியதிகாரத்திற்கு வந்தமை முன்னோக்கிய பயணத்திற்கு பேருதவியாக அமைந்தது.தென் ஆபிரிக்காவில் கறுப்பினத்தவர்கள் முன்னோக்கிச் செல்லவிரும்பினர். நாடு முன்னோக்கிச் செல்வதை அவர்கள் விரும்பினர்.இதற்காக அவர்கள் மன்னிப்புணர்வை வெளிப்படுத்தினர்.இது போன்ற படிப்பினைகளையே நாம் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றோம்.கடந்த காலத்தில் மிகக் கொடூரமான சம்பவங்கள் இடம்பெற்றன என்பதை அங்கீகரித்துக்கொண்டு அவற்றைப் பின்னோக்கி வைத்துவிட்டு அனைவரும் முன்னோக்கிச் செல்லமுடியும்.
தென் ஆபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் தலைவராக டெஸ்மண்ட் டுட்டு இருந்தார். ஏனைய அங்கத்தவர்கள் யார்? அவர்களின் வெளிநாட்டவர்களும் இடம்பெற்றிருந்தனரா?ஆணைக்குழு எப்படி கட்டமைக்கப்பட்டிருந்தது?
ஆணைக்குழுவில் தென் ஆபிரிக்கர்கள் மாத்திரமே இடம்பெற்றிருந்தனர். நான் ஒரு நீதிபதியாக இருந்தால் என்னுடைய நாட்டின் அரசியல்யாப்பிற்கு பிரமாணிக்காக உள்ளதாக நான் சத்தியம் செய்யவேண்டும். இன்னொருவருடைய நாட்டில் நான் நீதிபதியாக இருக்க முடியாது. அந்தநாட்டின் நீதிமன்றமொன்றில் போய் நான் அமரமுடியாது.ஆனால் என்னுடைய நிபுணத்துவ ஆற்றலை அந்த நாட்டில் வடிவமைக்கப்படும் பொறிமுறைக்கேற்ப பயன்படுத்திக்கொள்ளமுடியும். மண்டேலா அனைத்து அரசியற்கட்சிகளுடனும் கலந்தாலோசித்திருந்தார். அவர்கள் அந்த ஆணைக்குழுவிற்கு இணக்கத்தை வெளிப்படுத்தியிருந்தனர்.அது கலந்தாலோசித்தலினூடாக இணக்கங்காணப்பட்ட அணுகுமுறையாக இருந்தது. ஆனால் எமக்கு தொழில்நுட்ப ரீதியாக சர்வதேச நிபுணத்துவ ஆற்றலுள்ளவர்கள் உதவியிருந்தனர். இங்கு சர்வதேச வழக்குத் தொடுநர்கள் சர்வதேச நீதிபதிகளைக் அழைப்பது தொடர்பாக வாதப்பிரதிவாதங்கள் முன்வைக்கப்பட்டு வருவதை நான் அறிவேன். அரசாங்கம் இது விடயத்தில் எப்படி நடந்துகொள்ளப்போகின்றது என்பதை அவதானிக்கின்றோம். எம்முடைய தென் ஆபிரிக்க அனுவவத்தைப் பொறுத்தவரையில் நீதிபதி முதற்கொண்டு அனைவரும் தென் ஆபிரிக்கர்களாகவே இருந்தனர்.
உங்களுடைய தென் ஆபிரிக்க உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிற்கு காலவரையை நிர்ணயிக்கப்பட்டிருந்ததா?
ஆம் நிச்சயமாக அதற்கென ஒரு காலவரையறை இருந்தது. ஆணைக்குழு,1995ம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டு 1998ல் அறிக்கை வெளியிடப்பட்டது.தெட்டத்தெளிவான காலவரையிருந்தது.
முன்னைய கேள்விக்கு பதிலளிக்கும் போது கடந்த காலத்தில் இடம்பெற்றதை வைத்தே நீங்கள் தீர்ப்பிடப்படுவீர்கள் என்று கூறியிருந்தீர்கள். அந்தவகையில்
கடந்த காலங்களில் இடம்பெற்ற அட்டூழியங்கள் தொடர்பாக நியமிக்கப்பட்ட பல விசரணைக்குழுக்கள் வெறுமனே ஏமாறஎறுச் செயல்களாகவே அமைந்திருந்தன. தற்போதும் கூட அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவதாக பொறுப்பேற்றிருப்பது காலத்தை இழுத்தடித்து சர்வதேசத்தை ஏமாற்றுவதற்காகவே என்ற கருத்துக்கள் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன. நீங்கள் ஓர் அனுபவம் வாய்ந்த இராஜதந்திரி என்ற வகையில் இந்த நாட்டின் பிரச்சனைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் காண்பது குறித்து இந்த அரசாங்கத்தின் அர்ப்பணிப்புத் தொடர்பாக உங்கள் மதிப்பீடு எப்படியாகவுள்ளது?
அரசாங்கத்தின் போக்கை மதிப்பீடு செய்வதற்கு இன்னமும் காலம் போதாது. இது ஆரம்பநாட்களாகவே உள்ளன. அரசாங்கமும் அதன் நோக்கங்கள் குறித்து என்னமும் தெளிவாக வெளிப்படுத்தவில்லை.ஆனபோதும் நிரந்தர அரசியல் தீர்வைக் காண்பதற்கான அரசியல் பேச்சுவார்த்தை இடம்பெறவேண்டியது அவசியமாகும் என்பது தொடர்பாக நாம் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு நினைவூட்டிவருகின்றோம்.நாம் தென் ஆபிரிக்காவில் 1990 முதல் 1994ம் ஆண்டுவரை சமரசப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டோம். மூன்று தடவைகள் பேச்சுக்கள முறிவடைந்தன. ஆனாலும் நாம் மீண்டும் ஆரம்பித்து சரிவரும் வரையில் வெற்றியளிக்கும் வரையில் முயற்சித்தோம். உங்களைப் பொறுத்தவரையில் இது சற்றே கடினமானதாகும். எமது பேச்சுக்கள் முறிவடைந்தபின்னர் நாம் மீண்டும் பேச்சுக்களை புதிதாக ஆரம்பித்திருந்தோம்.உங்களைப் பொறுத்தவரையில் இது சற்றே கடினமானதாகும். எமது பேச்சுக்கள் முறிவடைந்தபின்னர் நாம் மீண்டும் பேச்சுக்களை புதிதாக ஆரம்பித்திருந்தோம். நீங்களோ பேச்சுகளை நிறுத்தவில்லை. தொடர்ந்துகொண்டே இருக்கின்றீர்கள். ஜெனிவாவும் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. எமது காலகட்டத்தில் மனித உரிமை பேரவை இருக்கவில்லை. எமது விடயத்தில் தீர்மானம் இருக்கவில்லை.அந்த தீர்மானம் உங்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றது. பொறுப்புக்கூறல் தொடர்பில் நடவடிக்கை எடுத்தாகவேண்டிய நிலை உங்களுக்கு ஏற்பட்டுள்ளது.நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் நேற்று வியாழக்கிழமையன்று நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை. நாம் சமரசப் பேச்சுவார்த்தைகளோடு ஆரம்பித்தோம்.இடைக்கால அரசியல்யாப்புடன் ஆரம்பித்தோம்.தொடர்ந்து தேர்தலுக்குச் சென்றோம். அதன் பின்னர் அரசியல்யாப்பு உருவாக்கத்தில ஈடுபட்டோம்.1995ல் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபித்தோம்.அந்தவகையில் எமது நடைமுறை எப்படி செயற்பட்டது என்பதை நீங்கள் கண்டுகொள்ளமுடியும். உங்கள் நடைமுறை வித்தியாசமானது. நீங்கள் தற்போது பொறுப்புக்கூறல் தொடர்பாக எதையாது செய்தாக வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளீர்கள்.
அழுத்தம் உங்கள் மீது உள்ளது. அதனைச் சரியான முறையில் செய்தாக வேண்டியது சரியானதாகும். இந்த அனைத்து விடயங்களிலும் அடிநாதமாக நிரந்தரமான அரசியல் தீர்வைக்காண்பதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்துவது அவசியமானது என்பதை நாம் தொடர்ச்சியாக அரசாங்கத்திற்கு நினைவூட்டிவருகின்றோம்.
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு ஒப்பானது என்ற உலகப் பொது அபிப்பிராயம் உள்ள நிலையில் நாடுகள் சில தமது புவிசார் நலன்களுக்காக பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு நீதி கிடைப்பதை தடுக்க முற்படுவதான எண்ணப்பாடு தமிழ்மக்களிடத்திலே காணப்படுகின்றது. இவர்களுக்கு நீங்கள் கூறுவிரும்பும் செய்தியென்ன?
சர்வதேச சமூகத்திலுள்ள அனைவருமே பொறுப்புக்கூறல் விடயத்தில் உறுதிப்பாடாக இருக்கின்றனர் என்பதை மிக முக்கியமாக கூறிவைக்க விரும்புகின்றேன். தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் எப்படி உணர்கின்றார்கள் என்று அறிந்துகொள்ளாமல் எந்தவொரு நாடும் இருக்கமாட்டாது என நான் நினைக்கின்றேன். சர்வதேச சமூகத்திலுள்ள அனைவரும் இதனை அறிந்துவைத்துள்ளனர். அனைவருமே பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்படுவதைக் காண விரும்புகின்றனர்.இதிலே பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதற்கு எந்தவகையான பொறிமுறையினை நாம் ஏற்றுக்கொள்ளப்போகின்றேர்ம் என்பதிலேயே சிக்கலுள்ளது.அதுவே கடினமான காரியமாக அமைந்துள்ளது.அதுவே கடினமான காரியமாக அமைந்துள்ளது.எந்த பொறிமுறைக்கு இணக்கம் காணப்பட்டாலும் அதிலே தென் ஆபிரிக்கா தனது பங்களிப்பை வழங்கியது என்பதை அனைத்து சமூகத்தவர்களும் புரிந்துகொள்ளவேண்டும்.எத்தகைய பொறிமுறை நடைமுறைப்படுத்தாலும் அது பாதிக்கப்பட்டவர்களின் கரிசனைகளில் அக்கறைசெலுத்துவதாக அவற்றிற்கு தீர்வுகாண்பதாக அமையவேண்டும் என்பதை தென்ஆபிரிக்கா உறுதிப்படுத்த விரும்புகின்றது.
இலங்கையில் பொறுப்புக்கூறல் நிலைநாட்டப்படவேண்டும். அப்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு நீதி கிடைத்ததாக உணர்ந்துகொள்ளமுடியும் என தென்ஆபிரிக்கா 2011 கூறியதையே 2015லும் கூறுகின்றது.

If your two wheeler did not last everlastingly, but with correct maintenance you can expect yours to serve you a long time.so handle be a gentle!If you trouble for your appliance well and it still breaks, call you mechanical repair service. Your appliance could still be covered under warranty to a product recall.
ReplyDeleteFor further detail visit our locate please click here>>
mechanical services in kanyakumari
https://www.facebook.com/apm.ourtechnicians/?fref=ts&ref=br_tf
https://www.youtube.com/watch?v=2lFLF4SUTnM
https://www.instagram.com/ourtechnicians/