அரசியல்யாப்பை உருவாக்கம் பணிகளை பூர்த்திசெய்து புதிய அரசியல்யாப்பை இந்த அரசாங்கம் முன்வைக்கத்தவறும் பட்டத்தில் எதிர்காலத்தில் புதிய அரசியல்யாப்பை உருவாக்குவது என்பது மிகவும் கடினமானதாக அமையும் என அரசியல்யாப்பு வழிநடத்தும் குழுவின் தலைவரும் அரசியல்யாப்பு நிபுணருமான கலாநிதி. ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவிக்கின்றார். வெளிநாட்டு செய்தியாளர் சங்கத்தின் அங்கத்தவர்களுடன் இன்று காலை நடத்திய சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசியல்யாப்பை இந்த நாடாளுமன்றம் உருவாக்கத்தவறும் பட்சத்தில் அதுமிகவும் கடினமானதாக அமையும். 23. 28 நிறைவேற்று அதிகாரத்தை நீக்க வேண்டும் என்பது தொடர்பில் பெரும்பாலான மக்கள் தெளிவான நிலைப்பாட்டை எடுத்தனர் . அவர்களின் எதிர்பார்ப்பு மதிக்கப்படாவிடின் மக்கள் இந்த அரச கட்டமைப்பின் மீது நம்பிக்கை இழப்பார்கள். அதிகாரப்பகிர்வு விடயத்தைப் பார்த்தீர்களாயின் தற்பேதைய நிலையில் தமிழர் தரப்பானது மிதவாத மற்றும் நியாயமான நிலைப்பாடுடையதாகவும் காணப்படுகின்றது. இந்த விடயத்தில் ஒரு உடன்பாட்டிற்கு வரத்தவறும் இடத்து இது அவர்களின் மிதவாத ஸ்தானத்தை பலவீனப்படுத்துவதாக அமையும். வடக்கிலும் தெற்கிலும் கடும்போக்காளர்களின் நிலைப்பாட்டை வலுப்படுத்துவதாக அமையும். தமிழ் மக்கள் ஆயுத்த்தை மீண்டும் கையிலெடுப்பார்கள் என நான் நினைக்கவில்லை. அவர்கள் பெரும் பாடத்தைக் கற்றுக்கொண்டுள்ளனர். ஆனால் அரசியல்யாப்பு விடயத்தில் உடன்பாட்டை எட்டத்தவறும் பட்சத்தில் அது கடும்போக்காளர்களுக்கே துணையாக அமையும். வடக்கில் தமிழர்“ விடுதலைக்கூட்டணி ஒதுக்கப்பட்டது போன்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒதுக்கப்படும்
No comments:
Post a Comment