Sunday, August 23, 2009

சாம்பலிருந்து மீண்டும் உயிர்பெறும் பீனிக்ஸ் பறவை போன்று ……..

சாம்பலிருந்து மீண்டும் உயிர்பெறும் பீனிக்ஸ் பறவை போன்று என்ற உவமானத்தை நாம் பல தடவைகள் கேள்விப்பட்டதுண்டு ஆனால் சாம்பல்(ஆஷஷ் )டெஸ்ற்தொடரில் இங்கிலாந்து அணி இம்முறை ஈட்டிய வெற்றி இதற்கு பொருத்தமானதென்றே நான் காண்கின்றேன்.

2005ல் ஆஷஷ் தொடரை தாயகத்தில் கைப்பற்றிய இங்கிலாந்து இம்முறை தொடரில் அவுஸ்திரேலியாவை வெற்றிகொள்ளும் என அதிகமானோர் எதிர்ப்பார்த்திருக்கவில்லை இதற்கு பலகாரணங்கள் ஒன்று காயத்தால் தொடரின் முதல்போட்டியுடனேயே கெவின் பீற்றர்ஸன் விலகியமை இரண்டாவது அன்ட்ரு பிளின்டோவின் உடற்திடநிலை பற்றிய சந்தேகம் அடுத்ததாக நான்காவது போட்டியில் இங்கிலாந்து அணி எளிதாக சுருண்டவிதம் இவையே இம்முறை ஆஷஷ் இங்கிலாந்துக்கு இல்லை என முடிவெடுக்க தோன்றியது


சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளிவைத்து பிளின்டோவ் ஐந்தாவது போட்டியில் விளையாடுகின்றார் என்ற செய்தி வந்ததுமே ஆஷஷ் இம்முறை இங்கிலாந்துக்குத்தான் என்ற எண்ணம் என்மனதிலும் ஏனையரசிகர்களைப்போன்றே மேலோங்கியது ஏனெனில் பிளின்டோவ் சாதாரணவீரர் அல்ல விரல்விட்டே எண்ணக்கூடிய ஆற்றல் படைத்த அற்புதவீரர் ஏன் தலைமுறைகளுக்கு அவர் போன்று ஒரிருவீரர்களே தோன்றக்கூடும் என சொல்லுவதற்கு பொருத்தமானவர் .;
பிறயன் லாராவின் ஓய்விற்கு பின்னர் என்னவோ எனக்கு கிரிக்கட் பற்றி எழுத்தப்பிடிக்கவில்லை என்பது தனிப்பட்டவிடயம் என்னைப்பொறுத்தவரையில் வெறுமனே விக்கட்சாய்ப்பாளர்களோ ரன்குவிப்பு மெஷின்களோவல்ல கிரிக்கட்டிற்கு அவசியமானவர்கள். மாறாக அசத்தல் லாவகம் நளினம் நடனம் அட்டகாசம் ஆக்ரோஷம் போன்ற இன்னோரன்ன குணாம்சங்களையும் தம் கிரிக்கட் ஆற்றலுடன் இணைந்து வெளிப்படுத்தும் அபரிமிதமான ஆற்றலைக்கொண்டவர்களே! கிரிக்கட்டின் வரலாறை என்னைக்கேட்டால் லாராவிற்கு முன் லாராவிற்கு பின் என்றுதான் எழுதுவேன் லாராவோடு எல்லாமே முடிந்துவிட்டது என இருந்த எனக்கு கிரிக்கட்டின் மீதான ஆர்வத்தையும் பிரியத்தையும் தக்கவைத்திடக்காரணமான வீரர்களில் பிளின்டோவ்வும் ஒருவராக விளங்கினார் ஐந்தாவது ஆஷஷ் போட்டி பிளின்டோவ் விளையாடும் கடைசி சர்வதேச டெஸ்ற் கிரிக்கட் போட்டி என்றதுமே ஒருபக்கம் கவலையும் மறுபக்கம் ஆர்வமும் பற்றிக்கொண்டது இந்த ஆர்வம் இங்கிலாந்து வீரர்களிடமும் தொற்றிக்கொண்டதோ என்பதைப்போலல்லவா அவர்களது ஆட்டம் அமைந்தது
இந்தத்தொடரின் இரண்டாவது மூன்றாவது போட்டிகளில் காண்பித்த அபரிமிதமான சகலதுறை ஆற்றல்வெளிப்பாட்டை பிளின்டோவ் இம்முறையும் காண்பிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களை பிளின்டோவ் ஏமாற்றவில்லை அதற்கு ரிக்கி பொன்டிங்கின் ஆட்டமிழப்பிற்கு காரணமான அவரது அபாரமான களத்தடுப்பு சான்றுபகர்ந்தது அதுவே அவுஸ்திரேலிய அணியின் இரண்டாவது இனிங்ஸை ஆட்டங்காணச்செய்த திருப்புமுனை நிகழ்வு அதன்பின்னரோ அவுஸ்திரேலிய அணியினர் நிச்சயமான தோல்வியை தாமதிக்கவே விளையாடினார்கள் என்று சொல்வதே பொருத்தம்

அவுஸ்திரேலிய அணியில் தனது ஸ்தானம் அண்மைய வீழ்ச்சியினால் கேள்விக்குறியான நிலையில் மைக்கல் ஹஸி மனது மறக்காத சதத்தை இரண்டாவது இனிங்ஸில் பெற்றதும் இங்கிலாந்து அணியின் வெற்றியை தாமதப்படுத்தியது ஆனால் இங்கிலாந்து தோற்கடிப்போவதில்லை என்பது அனைவருக்கும் சனிக்கிழமையன்றே தெரிந்திருந்தது காரணம் அறிமுக வீரர் ஜொனத்தன் ட்ரொட்டின் அனுபவசாலிகளையொத்த மேதாவிலாசத்துடுப்பாட்டத்தால் பெறப்பட்டசதமும் அதனால் இங்கிலாந்து நிர்ணயித்த மலைபோன்ற 546ஓட்ட இலக்கும் அமைந்திருந்தது என்றால் யாருமே இருவேறுகருத்துக்களை கூற முற்படமாட்டார்கள் .

ஆகமொத்தத்தில் இங்கிலாந்து அணி மீண்டும் தாயகமண்ணில் ஆஷஷ் தொடரை கைப்பற்றியிருக்கின்றது என்ற செய்தி அனைவருக்குமே மகிழ்ச்சி இந்த வெற்றி கிரிக்கட்டின் ஒட்டுமொத்த அடித்தளத்தையே நீண்டநாட்களின் பின்னர் மாற்றியமைக்கப்போகின்றது என்பது உண்மை. ஏறத்தாழ ஒன்றரைத்தசாப்தங்களாக முதல்நிலையில் கோலோச்சியிருந்த அவுஸ்திரேலிய அணி நான்காம் இடத்திற்கு தள்ளப்படபோகின்றது என்பதே இங்கு கவனிக்கப்படவேண்டியது அதுமட்டுமன்றி அவுஸ்திரேலிய அணியில் எத்தனை தலைகள் உருளப்போகின்றனவோ ? என்பதற்கப்பால் தென்னாபிரிக்க அணி முதற்தடவையாக டெஸ்ற் தரவரிசையில் முதலிடத்திற்கு முன்னேற அவுஸ்திரேலிய அணியின் தோல்வி காரணமாகிவிட்டது போராடுவதற்கு பேர்போன அவுஸ்திரேலிய அணியினர் ஒருவேளை அடுத்த தொடரிலேயே இழந்த தோல்விகளுக்கு பழிதீர்த்துவிடக்கூடும் ஆனால் உலக கிரிக்கட் ஆற்றலும் பலமும் தரமும் தற்போது அவுஸ்திரேலியாவிடம் மட்டுமே நிறைந்து கிடக்கவில்லை இங்கிலாந்து உட்பட ஏனைய நாடுகளும் அவுஸ்திரேலியாவிற்கு சவால்விடுக்கும் அளவிற்கு வளர்ச்சிகண்டு விட்டுள்ளன என்ற உண்மை நிருபணமாகியிருக்கின்றது இறுதியாக அன்று பிளின்டோவ் டெஸ்ற் கிரிக்கட்டில் இருந்து நேற்றோடு விடைபெற்றமை இங்கிலாந்திற்கு மட்டுமல்ல முழு கிரிக்கட் உலகிற்குமே பெரும் இழப்பு இருந்து அவரது சுயவிருப்பு அதுவாக இருந்தால் யார் தான் என்ன செய்யமுடியும் அவர் இதுகால வரையில் தமது மகத்தான ஆற்றல்வெளிப்பாடுகளால் அளித்த எல்லையற்ற மகிழ்ச்சியை நினைவுகூர்ந்து நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவிப்பதே சாலப்பொருத்தம் என்பது எனது கருத்து

வாழ்க் இங்கிலாந்து வாழ்க பிளின்டோவ் வாழ்க கிரிக்கட்

1 comment:

  1. அன்பின் அண்ணா நீங்கள் கிரிக்கட் மீது கொண்டுள்ள விருப்பத்தையும், பக்தியையும் கண்டு நாம் உளம் மகிழ்ந்தோம்.
    எனினும் நீங்கள் கிரிக்கட் விளையாடும் அணிகளிலேயே மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு உங்கள் பலத்த ஆதரவினை வழங்குவது நாம் யாவரும் அறிந்தே. அதிலும் நீங்கள் லாராவின் பரம இரசிகன் என்பதையும் நான் நன்கறிவேன்.
    உண்மையில் நீங்கள் தெரிவித்த கூற்றை நான் மனதார ஏற்றுக் கொள்கின்றேன். உலகின் தலைசிறந்த வீரர்களில் லாராவும் ஒருவர் என்பதை யாரும் மறுக்க முடியாது. எனினும் லாராதான் தலைசிறந்த வீரர் என்ற கருத்தினை ஏற்க ஏனோ என் மனம் இடம்கொடுக்கவில்லை.
    கிரிக்கட்டின் பிதா என்றழைக்கப்படும் பிரட்மன்தான் கிரிக்கட்டின் தந்தை மற்றும் கடவுள் என வர்ணிக்கும் இந்த வேளையில் நீங்கள் தெரிவித்த கருத்து கிரிக்ட்டை நேசிக்கும் உள்ளங்களை எந்தளவில் உளரீதியான தாக்கத்திற்குள் தள்ளியிருக்கும் என யூகிக்கமுடியாதுள்ளது.
    பிரட்மனுக்கு பிறகு சிறந்த வீரர்கள் தோன்றியுள்ளார்கள் அவரின் ஓய்விற்கு பறிகும் பல எழுத்தாளர்கள் கிரிக்கட் செய்தி, மற்றும் விமர்சனங்களை எழுதியுள்ளார்கள்.
    எவருக்கும் ஓய்வு என்பது நிச்சியம். ஆதலால். உமது எழுத்தாக்கம் இந்த கிரிக்கட் உலகிற்கு தேவைபடுவதால் நிச்சியம் உமது சேவையை தெடரவும். வாழ்க உமது சேவை வளர்க உமது எழுத்து.

    ReplyDelete