Friday, August 16, 2019
ஒரு இரத்தக்கறைகூட என்மீது படவில்லை- அருட்தந்தை ஜோய் அற்புதசாட்சி
Labels:
Easter attacks,
Interviews,
Special News Reports
இலங்கையின் புதிய யுத்தம்
கடந்த ஏப்ரல் 21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதல்களை அடுத்து அல்ஜசீரா இங்கிலிஷ் ஆங்கில செய்திச் சேவையின் 101 EAST என்ற விபரணத் தொகுப்பில் இது பற்றி ஓர் புலனாய்வு இடம்பெற்றது. இந்த விபரணத்தொகுப்பில் இலங்கையின் உள்ளுர் தயாரிப்பாளாராக /NEWS FIXER ஆக பங்காற்றுவதற்கு கிடைத்திருந்தது.
Labels:
Easter attacks,
international,
news fixer
Wednesday, August 14, 2019
கல்வி நிறுவனங்களை நடத்தும் போர்வையில் பயங்கரவாதிகள் !- இலங்கையை எச்சரிக்கிறார் துருக்கி தூதுவர்
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் இடம்பெற்று மூன்று மாதங்கள் அண்மையில் நிறைவுபெற்ற நிலையில் பயங்கரவாதத்தின் பாரதூரத்தன்மை தொடர்பாக இலங்கைக்கான துருக்கி தூதுவர் துன்ஜா ஒஸ்சுஹதார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
துருக்கி அரசாங்கத்தை 2016ம் ஆண்டில் கலைத்து ஆட்சியைப் பிடிப்பதற்கு இராணுவப் புரட்சியை மேற்கொண்ட .ஃபெட்டோ( FETO) பயங்கரவாத அமைப்பின் முதுகெலும்பு துருக்கியில் நொருக்கப்பட்டுள்ளபோதும் அந்த அமைப்பு இலங்கை உட்பட 160 நாடுகளில் பல கல்வி
நிறுவனங்கள், வர்த்தகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களை நடத்திநடத்தும் போர்வையில்
அதன் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக துருக்கி தூதுவர் சுட்டிக்காட்டினார்.
நிறுவனங்கள், வர்த்தகங்கள் மற்றும் ஏனைய நிறுவனங்களை நடத்திநடத்தும் போர்வையில்
அதன் செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக துருக்கி தூதுவர் சுட்டிக்காட்டினார்.
நியுஸ்லைனுக்கு வழங்கிய விசேட நேர்காணலின் போதே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.
இலங்கையில் மூன்று வருடங்களுக்கு மேலாக சேவையாற்றிவருகின்ற துருக்கி தூதுவர் அழகான இந்த நாடு எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் நெருக்கடிகள் அவசியமற்றவை அனாவசியமானவை என்றும் கூறினார்.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவருகின்ற வன்முறைகள் தொடர்பாக மிகவும் கரிசனையை வெளிப்படுத்திய துருக்கி தூதுவர் 57 நாடுகள் அங்கம் வகிக்கும் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பில் துருக்கி முக்கிய வகிபாகத்தை ஆற்றிவருவதாக குறிப்பிட்டார்.
பகையைத் தூண்டும் சிங்களவரின் உரைகளுக்கு தண்டனை ஏதுமில்லை
பகையைத் தூண்டும் சிங்களவரின்
உரைகளுக்கு தண்டனை ஏதுமில்லை
- இலங்கை வந்த ஐ.நா. விசேட அறிக்கையாளர் இடித்துரைப்பு
"இலங்கையில் பெரும்பான்மைச் சமூகத்தினரால் பகைமையைத் தூண்டும் உரைகளுக்குத் தண்டனைகள் வழங்கப்படுவதில்லை. 2007ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தின் கீழ் பகைமை உணர்ச்சியைத் தூண்டும் உரைகளைத் தடுப்பதற்கான சட்ட ஏற்பாடுகள் இருப்பினும், பாரபட்சமற்ற முறையில் அவை வலியுறுத்தும் வகையில் அமையவில்லை."
- இவ்வாறு இலங்கைக்குப் பயணம் மேற்கொண்ட ஐ.நாவின் விசேட அறிக்கையாளர், கிளெமென்ட் நைலட்சோஸி வூல் தெரிவித்தார்.
தனது இலங்கைப் பயணத்தின் முடிவில் நேற்றுக் கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
"ஜனநாயகத்தின் பின்னடைவு தொடர்பில் அனைத்துத் தரப்பினராலும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. அது என்னைக் கவலையடையச் செய்துள்ளது. சுதந்திரத்துக்கான மக்களின் வேணவாக்களையும், சட்டத்தின் ஆட்சியையும், ஜனநாயகத்தையும் நாட்டின் அரசியல் தலைவர்கள் நிராகரிக்கக் கூடாது. போராடிப் பெற்ற ஜனநாயக உரிமைகள் தொடர்பான முன்னேற்றத்தைக் குறைத்து மதிப்பிடுதல் போன்ற விடயங்களை எதிர்வரும் தேர்தல்களின்போது அரசியல் தலைவர்கள் மேற்கொள்ளக்கூடாது.
காணாமல் ஆக்கப்படுதல், காணி உரிமைகள், வாழ்வாதாரம், வளங்களையும் அபிவிருத்தி திட்டங்களையும் அணுகுதல் என்பவை தொடர்பாக பாரபட்சமான முறையில் சட்டங்கள் பிரயோகிக்கப்படுவது மீதும் எனது கவனம் ஈர்க்கப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டங்களுக்கான காரணங்களையும், ஆர்ப்பாட்டங்களின் போது பங்குபற்றுந கள் முன்வைக்கும் பிரச்சினைகளையிட்டும் அரசு கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏப்ரல் மாதத்தில் பேரழிவையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்திய பயங்கரவாதத் தாக்குதல், அதேசமயம் சென்ற ஆண்டு அரசமைப்பு ரீதியான நெருக்கடிகள் என்பன ஏற்பட்ட ஒரு சூழமைவில் அதற்கு மேலதிகமாக தற்போதைய அவசரகாலச் சட்டங்களின் பிரயோகம் என்பன மன அழுத்தங்களை அதிகரிக்கச் செய்துள்ளது.
சிவில் சமூகத்தின் சில உறுப்பினர்கள் தமது நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் அமைதியாக ஒன்று கூடுவதிலும் பல கஷ்டங்களை எதிர்நோக்குகின்றனர். இத்தகையப் பிரச்சினைகளை நாடு எதிர்நோக்கியுள்ள ஒரு காலகட்டத்திலேயே எனது பயணம் அமைந்துள்ளது.
2009ஆம் ஆண்டு ஓய்ந்த நீண்டகால அழிவுகரமான போரின் பின்னர் பாதுகாப்புத் துறையில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமை, சிவில் சமூகம் இயங்குவதில் கஷ்டங்களை ஏற்படுத்தியுள்ளது. ஆர்ப்பாட்டங்கள் தொடர்பாகவும் ஏனைய சிவில் சமூக நடவடிக்கைகள் பற்றியும் தொடர்ச்சியான புலனாய்வுக் கட்டமைப்புக்களைக் கண்காணிப்பில் ஈடுபடுத்துவதன் காரணமாக மனித உரிமைகள் பாதுகாவலர்கள் மீது தொந்தரவையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியுள்ள நிலைமை அறிக்கையிடப்பட்டுள்ளது.
மக்கள் ஒன்றுகூடும் சுதந்திரத்திற்கான உரிமையையும் சங்கங்கள் அமைப்பதற்கான உரிமையையும் முன்னெடுக்கும் போது, நாட்டின் சில பிரதேசங்களில், நடந்த கடந்தகால நடைமுறைகள் நினைவூட்டப்படுகின்ற அதேவேளை, அச்சத்தையும் பீதியையும் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளன.
குறிப்பாக ஏப்ரல் தாக்குதல்களின் பின்னர் நாட்டில் பரவலாகக் காணப்படும் பகைமை உணர்ச்சியைத் தூண்டக் கூடிய உரைகளின் வளர்ச்சி குறித்தும் கவனம் செலுத்தியுள்ளேன்" - என்றார்.

கோத்தா எளிதில் ஜனாதிபதியாகிட முடியுமா?
அருண் ஆரோக்கியநாதர்
பலரும் எதிர்பார்த்ததைப் போன்றே பொதுஜன பெரமுண கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கோத்தாபய ராஜபக்ஷவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ நேற்றைய தினம் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியீட்டுவது பொதுஜன பெரமுணவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஸவிற்கு மல்லிகைப் பூ தெளித்த மலர்ச்சாலையாக இருக்குமா ? அன்றேல் முட்கள் நிறைந்த கடினப்பாதையாக இருக்குமா ? என்ற கேள்வி சிறுபான்மை மக்கள் மத்தியில் எழுவதில் ஆச்சரியமில்லை.
2015ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை ஒரு அளவுகோலாக வைத்து எதிர்வரும் தேர்தலை நோக்கினால் ராஜபக்ஸ தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் பல விடயங்கள் ஒன்றுகூடிவரவேண்டியது அவசியமாகும்.
2015ம் ஆண்டு தேர்தலின் போது இலங்கையின் பெரும்பான்மையினராக விளங்கும் பௌத்த சிங்கள (70% ) மக்களில் பெரும்பான்மையினரின் ஆதரவைப் பெற்ற போதும் மஹிந்த ராஜபக்ஸவினரால் தேர்தலை வெல்ல முடியவில்லை. அந்த தேர்தலில் சிறிசேன 6,217,162 (51.28%) வாக்குகளைப் பெற்ற அதேவேளை மஹிந்த ராஜபக்ஸவால் 5,768,090 (47.58%)வாக்குகளையே பெறமுடிந்தது.
ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலை அடுத்து சிங்கள பௌத்த தேசியவாதம் நாட்டில் அலையாக உருவெடுத்த நிலையில் சிறுபான்மையினரின் வாக்குகள் இன்றியே தேர்தலில் வெற்றிபெறமுடியும் என்ற நம்பிக்கை ராஜபக்ஸ தரப்பினரிடையே ஏற்பட்டுள்ளது.
நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு சிங்களவர்கள் மத்தியில் அதிகமாக இன்னமும் இருக்கின்ற நிலையில் சிங்கள மக்களில் 80 சதவீதமானவர்கள் கோத்தபாயவிற்கு ஆதரவு வழங்குமிடத்து அவர் வெற்றிபெறுவதைத் தடுத்துவிடமுடியாது. ஆனால் சிங்கள மக்களிலும் ஜனநாயகத்தை மதிக்கின்ற உண்மையையும் பொய்மையையும் பிரித்தறியும் அறிவுடைய கணிசமானவர்கள் உள்ளனர். இந்த நிலையில் அவர்கள் கண்ணை மூடிக்கொண்டு வெள்ளைவான் கோத்தபாயவிற்கு வாக்களித்திட முன்வருவது சாத்தியமில்லை.
எதிர்வரும் காலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புணர்வை பெரும்பான்மை சிங்கள மக்கள் மத்தியில் அதிகரித்து அவர்களின் தேசிய உணர்வை என்பதிலும் துவேச உணர்வை தூண்டிவிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படலாம். இதன் மூலம் சிங்கள மக்களில் பெருமளவானோரின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கம் இருக்கலாம் . அது நடந்தால் கோத்தபாய சிறுபான்மையினரின் வாக்குகள் இன்றியே வெற்றிபெற்றுவிடலாம். உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று மூன்றுமாதங்கள் மாத்திரமே நிறைவடைந்துள்ள நிலையிலும் அதற்கான சாத்தியங்கள் குறைவாகவே உள்ளன.
சிறுபான்மையினரிடையே குறிப்பாக தமிழ் மக்களிடையே கோத்தபாய என்ற பெயரைக் கேட்டாலே அச்சம் அவர்களை ஆட்கொள்வது இயல்பானது. இதற்கு அவரது காலத்தில் அரங்கேறிய வெள்ளைவான் கடத்தல் படுகொலைகள் இறுதிப்போர் கொடூரங்களை நினைத்தாலே போதுமானது. அவ்வாறானவரை தமிழ் மக்கள் ஒருபோதும் ஆதரிக்கப்போவதில்லை.
ராஜபக்ஸவினரோடு இணைந்துநிற்கின்ற சில தமிழ் கட்சிகளுக்காக சில ஆயிரம் வாக்குகள் வேண்டுமானால் கிடைக்கக்கூடும். ஆனால் அது இறுதிவெற்றிக்குத் தேவையான ஆதரவாக பரிணமிக்க வாய்ப்பில்லை. மற்றைய முக்கிய வாக்குவங்கியான முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் ஈஸ்டர் தாக்குதல்களையடுத்து அரங்கேறிய அடாவடி நடவடிக்கைகளும் வெறுப்புப்பிரசாரங்களும் அவர்கள் மத்தியில் இன்னமும் வேதனைநிறைந்ததாகவும் விரக்தியைத்தருவதாகவும் அமைந்திருக்கின்றன. இந்த நிலையில் அவர்களது வாக்குகளும் கோத்தபாயவிற்கு கிடைப்பதற்கு வாய்ப்பில்லை.
முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளைப் பெறும் நோக்குடன் கோத்தபாய முஸ்லிம் கட்சிகள் சிலவுடன் உடன்படிக்கைக்கு செல்வதற்கு வாய்ப்புக்கள் இருப்பதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன.
அதேபோன்று வடமாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் உட்பட சிலரை வைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வாக்குகளை உடைக்கும் திட்டத்தை ராஜபக்ஸதரப்பினர் வகுத்துள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. அவர்களின் எண்ணம் ஈடேறினாலும் அது சில ஆயிரம் வாக்குகளையே சிதறடிக்கக்கூடும் .
இப்படிப் பார்க்கையில் கோத்தபாய ராஜபக்ஸவின் ஜனாதிபதி கனவு நிறைவேறுவதற்கு இன்னமும் பல தடைகளைத் தாண்டியாகவேண்டியுள்ளது.
ஒரு வீரனுக்கு அழகு இறுதிவரை போராடிப்பார்ப்பது. கோழைதான் உண்மையாக தோற்றுப்போகுமுன்பே தோல்விப்பயத்தில் தோல்வியை ஒப்புக்கொள்பவன். கோத்தபாய ராஜபக்ஸவின் பெயரை ஜனாதிபதி வேட்பாளராக பொதுஜன பெரமுண அறிவித்த பின்னரே ஏதோ அவர் ஜனாதிபதியாக தெரிவாகிவிட்டதாக அனேகமான ஊடகங்களும் அடிவருடி அரசியல்வாதிகளும் காவடியெடுத்து ஆலவட்டம் வீசுகின்றதைக் காணமுடிகின்றது.
2015ம் ஆண்டில் நாட்டின் அரச இயந்திரம் பாதுகாப்பு படைகள் ஊடகங்கள் என அனைத்து முக்கிய விடயங்களும் கைவசம் இருந்தபோதும் ராஜபக்ஸ தரப்பினர் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை கொண்ட மக்களின் ஆதரவோடு தோற்கடிக்கப்பட்டனர். அதேபோன்று கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் 26ம் திகதி முதல் 52 நாட்களுக்கு அரங்கேறிய அரசியல் சதி நடவடிக்கையும் ஜனநாயகத்தின் மீது அசையா நம்பிக்கை கொண்டவர்களின் ஆதரவோடு முறியடிக்கப்பட்ட வரலாறுகள் நம் கண்முன்னே நிழலாடுகின்றன. உண்மையாவே ஜனநாயகப்பற்றுணர்வோடு செயற்படும் இடத்து எதிர்வரும் தேர்தலிலும் ஜனநாயகத்திற்கு ஆதரவான சக்திகள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் இன்னமும் முற்றுமாய் அற்றுப் போய்விடவில்லை என்பது திண்ணம்.
Subscribe to:
Posts (Atom)