Thursday, October 21, 2010

PATHETIC CONDITION OF RATNAM PARK

சாக்கடையாகிப்போன '' சம்பியன்'' மைதானம்

''எப்படியிருந்த மைதானம் இப்படியாகிவிட்டதே'' ரட்ணம் மைதானத்தை இன்று பார்ப்பவர்கள் இந்த வார்த்தைகளை முணுமுணுத்துக்கொண்டு போவதை அவதானிக்க முடிகின்றது 


பூரணத்துவமிக்க மனித சமூகத்தை உருவாக்குவதில் விளையாட்டு உடற்பயிற்சி பொழுது போக்கு என்பனவும் இன்றியமையாதன . இதற்காகத் தான் ஒவ்வொரு பிரதேசத்திலும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளின் மத்தியில் மைதானங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன
இந்தவகையில் கொழும்பு கொச்சிக்கடை ஜிந்துப்பிட்டி கொட்டாஞ்சேனை சென்றல் வீதி புதுக்கடை எனப் பல்வேறு பிரதேசங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் குறிப்பாக இளைஞர்களால் பயன்படுத்தப்பட்டுவந்த ஜம்பட்டா வீதி ரட்ணம் மைதானத்தின் இன்றைய நிலையோ மிகவும் மோசமானதாக கவலைக்கிடமாக காட்சியளிக்கின்றது


இலங்கை கால்பந்தாட்ட அரங்கில் புகழ்பெற்ற கழகங்களான ரட்ணம் மற்றும் ரினோன் கழகங்களின் தாயக பயிற்சி மைதானமாகவும் திகழ்ந்த இந்த ரட்ணம் மைதானம் இனமதபேதமின்றி அனைத்து தரப்பு மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வந்ததென்பதுடன் இலங்கை தேசிய கால்பந்தாட்ட அணியைப் பிரதிநிதித்துவப்படுத்திய பல வீரர்களின் ஆரம்பத்திற்கு களமமைத்துக்கொடுத்திருந்தது

ஆனால் கடந்த சில வருடங்களாக கேட்பாரில்லாத நிலையில் மிகவும் பரிதாபகரமாக இந்த மைதானம் காணப்படுகின்றது
மைதானத்தில் காடுபற்றி புற்கள் அடர்த்தியாக வளர்ந்துள்ளதுமட்டு மன்றி கழிவுநீரும் தேங்கிக்காணப்படுகின்றது.

மைதானத்திற்கு அருகிலுள்ள ஒருசில தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் சட்டவிரோதமான நிலையில் வீடுகளை அமைப்பதற்காக கழிவுநீர் வாய்க்கால்களை அடைத்து அதனை மைதானத்திற்குள் திருப்பி விட்டுள்ளமையும் இந்த நிலைமைக்கு முக்கிய காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது

இதனைத்தவிர மழை பெய்யும் போது நீர்வழிந்தோட வழியின்றி மழைநீரும் தேங்கிநிற்பதுண்டெனக்குறிப்பிடும் மைதானத்திற்கு அருகில் வாழும் மக்கள் இதனால் டெங்கு நோய் பரவும் அபாயமும் அதிகமாக காணப்படுவதாக கவலைதெரிவிக்கின்றனர்.

மைதானத்தின் பரிதாபகரமான நிலைக்கு மத்தியிலும் வேறு தெரிவுகள் இல்லாத நிலையில் அங்கு பயிற்சிக்காக வந்திருந்த பிரதேசவாசியான கே.செல்வராஜ் என்பவரிடம் மைதானத்தின் நிலைகுறித்து வினவியபோது 


'நான் இந்த பிரதேசத்தை சேர்ந்தவன் இந்த மைதானத்தில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் விளையாடிய நாட்கள் இன்று வெறும் கனவாகிப்போய்விட்டது தற்போது ஒருசிலர் தான் இங்கு வருகின்றனர்.மைதானம் இருக்கின்ற நிலையை பார்த்தால் யாரிற்காவது வர மனம்வருமா? இங்கு தேங்கிக்கிடக்கின்ற நீரால் மைதானத்தின் அருகில் வசிக்கின்ற எம்போன்றவர்கள் கடும் நுளம்புத்தொல்லையை எதிர்நோக்க நேரிடுகின்றது சிறுவர் குழந்தைகள் செறிந்து வாழுகின்ற இப்பகுதியில் இப்படி மைதானம் இருப்பது எவ்வளவு ஆபத்தானது. கொழும்பு மாநகரசபைதான் இந்த மைதானத்தை பராமரிக்க வேண்டியவர்கள் ஆனால் அவர்கள் இதனை பொருட்படுத்தாமல் அலட்சியம்செய்துவருகின்றனர்'

வெறுமனே விளையாட்டு மைதானமாக மட்டுமன்றி அனைத்தினங்களையும் சேர்ந்த மக்களின் உறவுப்பாலமாகவும் விளங்கிய ரட்ணம் மைதானத்தின் நிலைமை பற்றி கொச்சிக்கடைப்பிரதேசத்தை சேர்ந்த எஸ்.ஜஸ்ரின் என்பவர் கருத்துவெளியிடுகையில்

 ' எமது ரட்ணம் மைதானம் இவ்வாறு காணப்படுவதால் நாங்க விளையாடுவதற்காக மோதரைக்கும் எலிஹவுஸ் பூங்காவிற்கும் தான் செல்லவேண்டியிருக்கின்றது .இதனால் போக்குவரத்து செலவுவேற ஏற்படுகின்றது.ரட்ணம் கழகம் ரினோன் கழகங்களைச் சேர்ந்தவர்கள் கூட இதுவிடயத்தில் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை அப்படி நடவடிக்கை எடுத்திருந்தால் வருடக்கணக்காக மைதானம் இப்படிக் அசிங்கமாக கிடக்காது'
ரட்ணம் மைதானத்தின் வாசலுக்கு அருகிலுள்ள பௌத்த விகாரையைச் சேர்ந்த பிக்குவொருவர் கருத்துவெளியிடுகையில் ' ஐயோ நுளம்புத்தொல்லை தாங்க முடியவில்லை .கடந்த சில வாரங்களுக்கு முன்பாக இசை நிகழ்;ச்சியொன்றை நடத்துவதற்காக மைதானத்தின் ஒருபகுதியை சுத்திகரித்தனர் ஆனாலும் அனேமான இடங்களில் மீண்டும் கழிவுநீர் தேங்கி புற்களும் பெரிதாக வளர்ந்துவிட்டன .இதுவிடயத்தில் ஏன் முழுமையாக நடவடிக்கை எடுக்கின்றார்கள் இல்லை என்பது புரியாத புதிராக உள்ளது'
ரட்ணம் மைதானத்தின் எல்லையோரமாகத்தான் கீறின் லேனில் உள்ள முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் பல் அடுக்கு மாடிக்கட்டிடமும் அமைந்துள்ளது.

.இலங்கையில் டெங்கு நோய் காரணமாக இவ்வருடத்திற்குள்ளாக 25ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டும் 200ற்கு மேற்பட்டவர்கள் மரணமுற்றிருக்கின்ற நிலையில் இந்தப்பாடசாலையில் கல்விகற்கின்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றியுள்ள பிரதேசத்தில்;வாழ்கின்ற பல்லாயிரக்கணக்கான மக்களின் நலன்கள் தொடர்பிலும் அக்கறை செலுத்தவேண்டியது கடமையல்லவா?

நடக்ககூடாதது நடந்த பின்னர் அதற்காக அழுது புலம்புவதைவிடுத்து வருமுன் நடவடிக்கை எடுப்பது அனைவருக்கும் நன்மையானது
எனவே ரட்ணம் மைதானத்தை புனரமைப்பதன் மூலம் அனைவரது மனங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்த பிரதேசத்தைச் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் வாதிகள் வர்த்தகர்கள் நலன்விரும்பிகள் என அனைத்துதரப்பினரும் முன்வரவேண்டும் என்பதே கேசரி ஸ்போர்ட்ஸின் வேண்டுகோளாகும் 
--

உலகத்திற்கு சிலி நாடு தந்த படிப்பினைகள்

வறுமை பட்டினி இயற்கை அனர்த்தங்கள் யுத்தம் சுரண்டல் ஆக்கிரமிப்பு என உலகில் மனிதப் பெறுமதிகளை குறைக்கின்ற செய்திகள் அண்மைக்காலமாக அதிகரித்துவருகின்ற நிலையில் மனிதகுலம் மாபெரும் வளர்ச்சியைக்காண்பதற்கு அடித்தளமாக இருந்த மனிதாபிமானம் நம்பிக்கை பொறுப்புக்கூறும் தன்மை கடும் உழைப்பு விடாமுயற்சி புதிய தேடல் போன்ற மகத்தான குணாம்சங்களை எடுத்துக்காட்டிய நிகழ்வு கடந்தவாரத்தில் நிகழ்ந்திருந்தது

 சிலியின் தங்கம் மற்றும் தாமிர சுரங்கத்தில் 2000 அடிக்கு கீழான ஆழத்தில ;சிக்கியிருந்த 33 சுரங்கத்தொழிலாளர்கள் 69நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்ட நிகழ்வு உலகமக்களின் பெரும் அவதானத்தை ஈர்த்திருந்தது

இந்தச்சுரங்கத்தொழிலாளர்களுக்கு என்ன நடந்தது எப்படி நடந்தது மீட்புபணிகள் எவ்வாறு முன்னெடுக்கப்பட்டன போன்ற விடயங்களெல்லாம் கடந்த ஒருவாரகாலத்திற்கும் மேலாக ஊடகங்களில் அதிக அதிகமாக ஆராயப்பட்டு செய்திகள் வெளியாகியிருந்தன

மனித உயிரின் பெறுமதியை எவ்வாறு மதித்து செயற்படவேண்டும் என்பதற்கு இந்த மீ;ட்புச்சம்பவம் எடுத்த்துக்காட்டாக அமைந்ததுடன் இவ்வாறான அனர்த்தங்களின் போது விபத்தில் சிக்கிக்கொண்டவர்கள் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் அதற்கு தலைமைத்துவம் கொடுப்பவர்கள் எங்கனம் செயற்படவேண்டும் என்பதற்கும் இது உதாரணமாகியது

பொருளாதாரத்தில் தமது நாடு வளர்ச்சியடையவேண்டும் என்பதற்காக மனித உயிர்களைப்பற்றிப்பற்றிய பொறுப்பின்றி செயற்படுகின்ற நாட்டுத்தலைவர்களுக்கு இந்த சம்பவம் சிறந்த பாடமாக அமைந்திருக்கின்றது

சிலி நாட்டின் தற்போதைய ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா பெருங்கோடிஸ்வரராக இருந்தபோதிலும் அவர் தனது நாட்டுமக்களின் உயிரைக்காப்பாற்றுவதில் வெளிப்படுத்திய தலைமைத்துவம் போற்றத்தக்கது

வெறுமனே 33பேர்தானே என்று அந்த கோடீஸ்வரர் உல்லாசத்தில் மூழ்கியிருக்கவில்லை மாறாக சம்பவ இடத்திற்கே நேரில் சென்று மீட்புப்பணிகளை பார்வையிட்டும் தேவையான நேரத்தில் உத்தரவுகளை வழங்கியும் தனது பொறுப்பை செவ்வனே செய்திருந்தார்
அவரைத்தவிர சுரங்கத்தில் சிக்கிக்கொண்டவர்கள் நெருக்கடி நிலையின் போது நடந்துகொண்ட பாங்கு அதிலும் சுரங்கத்தில் இருந்தவர்களுக்கு தலைமைதாங்கிய லூயிஸ் உருஸா செயற்பட்ட பாங்கும் தற்போது பெரும் அவதானத்தை ஈர்த்துள்ளன .

உலகமே அவர்கள் இறந்திருக்கக்கூடும் என எண்ணியிருந்த நம்பிக்கையற்ற தருணத்தில் அதளபாதாளத்தில் இருந்து கொண்டு உயர் ஒழுக்க விழுமியத்தை பேணிய சுரங்கத்தொழிலாளர்கள் சுயநலமாக செயற்படாமல் தம்வசம் இருந்த உணவுப்பொருட்கள் போன்றவற்றை மிகச் சிக்கனமாக புத்திசாதுரியத்துடன் பாவித்து உதவிகிட்டும் வரையில் தமது உயிரைத்தக்கவைத்துக்கொண்டமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது

சுரங்கத்தில் இருந்தவர்களுக்கு தலைமைதாங்கிய லூயிஸ் உருஸாவின் வழிகாட்டலில் அவர்கள் உணவையும் பானத்தையும் சிறுசிறு பருக்கையாக அதாவது அருமருந்தாக பயன்படுத்தியிருக்கின்றனர்

இருப்பவற்றை ஒரே நேரத்தில் தின்றுகுடித்துவிட்டு நாளைக்கு என்ன செய்வோம் என்று திண்டாடும் மக்களுக்கும் இது பாடமாகும்
அதிலும் பார்க்க சிறந்த பாடம் விபத்து அனர்த்தம் நேரும் தருணங்களில் வெளி உதவிகள் வந்து சேரும் வரையில் எமது சுயபுத்தியைப் பாவித்து உதவிகளை பெறத்தக்கவாறு எமது உயிரை பாதுகாத்துவைத்திருப்பது எங்கனம் என்பதாகவே இருந்தது

 மீட்கப்பட்டபின்னர் இந்த சுர்ங்கத்தொழிலாளர்களுக்கு உலக நாடுகளில் இருந்து சுற்றுலா அழைப்புக்களும் பரிசுப்பொருட்களும் புகழாரங்களும் குவிந்துகொண்டிருக்க அவர்கள் அனைத்திலும் மேலாக ஒன்றைப்பற்றி சிந்தித்துவருகின்றார்கள் என்பதே தற்போது பிந்திய செய்தியாக கிடைத்திருக்கின்றது

ஆம் சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து சுரங்கப்பாதுகாப்பு குறித்த நிறுவனமொன்றை அமைத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு திட்டமிட்டுள்ளார் என்ற செய்தியே அதுவாக இருக்கின்றது

ஆகமொத்தத்தில் சிலி சுரங்த்தொழிலாளர்கள் அதளபாதாளத்தில் இருந்து மீட்கப்பட்டது நம்பிக்கையற்ற நிலையில் இருள் சூழ்ந்த பொழுதுகளில் நம்பிக்கை கீற்றாகவும் புதிய வெளிச்சமாகவும் அமைந்திருக்கின்றதென்றால் மிகையல்ல. குறிப்பாக இவ்வாண்டு முற்பகுதியில் இடம் பெற்ற கடும் பூகம்பத்தால் சின்னாபின்னமாகியிருந்த சிலி மக்களின் மன உணர்வுகளுக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் இந்த சம்பவம் வழங்கியிருக்கின்றது

சுpலி நாட்டு சம்பவம் மனிதாபிமானம் நம்பிக்கை பொறுப்புக்கூறும்தன்மை விடாமுயற்சி கடும் உழைப்பு புதிய தேடல் ஆகிய மனித குணாம்சங்களின் எடுத்துக்காட்டாக விளங்கிநின்றது


Thursday, October 14, 2010

INTERVIEW WITH NORTHERN PROVINCE GOVERNOR

வடக்கில் ஏற்பட்டு வருகின்ற முன்னேற்றங்களை இன்னமும் சில மாதகாலத்தில் நன்குணரமுடியும்
                          வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறி


நேர்காணல்: அருண் ஆரோக்கியநாதர்


வடக்கு தெற்கு மக்கள் ஒன்றுபடவேண்டும் அனைவரும் இணைந்து அபிவிருத்திக்காக உழைக்க தொடங்கவேண்டும் என வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி ஏ சந்திரசிறி தெரிவிக்கின்றார்.


அரசியல் பாதுகாப்பு தொடர்பான விடயங்களைத்தவிர ஏனைய விடயங்கள் குறித்து கேள்விகளை தொடுங்கள் என்ற ஆளுநரின் முன்நிபந்தனையைத் தொடர்ந்து நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்

கேள்வி: உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து வெளியேறிய மக்களின் மீள் குடியேற்றம மற்றும் அவர்களது காணிகள் விடயத்தில் எத்தகைய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன?

பதில்:பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் செப்டம்பர் 14ம்திகதிமுதல் ஆரம்பமாகியதாக எனக்கு தெரியத்தரப்பட்டது வடமராட்சி கிழக்கு பகுதியில் பாதுகாப்பு படையினர் மக்களை குடியேற அனுமதித்துள்ளதால் அங்கு 800 குடும்பங்கள் சென்று மீளக்குடியேறியுள்ளன.


 இதுமட்டுமன்றி பாதுகாப்பு படையினர் அந்தப்பகுதியை சிறப்பான முறையில் துப்பரவுசெய்துள்ளதுடன் மேலும் பல வேலைகளையும் ஆற்றியுள்ளனர் கூட்டுறவு நிலையவசதிகள் பாடசாலை வசதிகள் தபாலக வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதுடன் அந்தப்பகுதியிலுள்ள அனைத்து கிணறுகளையும் சுத்திகரித்துக்கொடுத்துள்ளனர்.


 அரசாங்கத்தரப்பில் அவர்கள் மீளச் சென்று குடியேறுவதற்கு அவசியமான அடிப்படை வசதிகளை நாமும் செய்துகொடுத்துள்ளோம் கடைசியாக இடம்பெற்ற யாழ்மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தின் போது தெல்லிப்பழை பகுதியிலும் சில இடங்களில் மீளக்குடியேற அனுமதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.


 தனங்கிளப்பு பகுதியில் உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து 2000 ஏக்கர் காணி பயிர்ச்செய்கைக்காக ஆறுமாதங்களுக்கு முன்னர் படையினரால் மக்களிடம் திருப்பியொப்படைக்கப்பட்டது அந்த 2000ம் ஏக்கரிலும் பயிர்ச்செய்கைபண்ணப்பட்டுள்ளது இன்னும் ஆயிரம் ஏக்கர்கள் பயிர்ச்செய்கைக்காக கையளிக்கப்படவுள்ளது இது பற்றி கலந்துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன இந்தவகையில் முன்னேற்றங்கள் விரைவாக ஏற்பட்டுவருகின்றன மாற்றங்கள் துரிதமாக இடம்பெறுவதையும் அனேக முற்னேற்றங்கள் இடம்பெறுவதையும் இன்னமும் சில மாதகாலத்தில் உணர்வீர்கள்


கேள்வி : கண்ணிவெடி அகற்றும் பணிகளின் தற்போதைய நிலை எவ்வாறு காணப்படுகின்றது ?

பதில்:தற்போது மடு முகமாலை புதுமத்தளான் புதுக்குடியிருப்பு பச்சிலைப்பள்ளி நாகர்கோவில் தெற்கு ஆகியபகுதிகளில் கண்ணிவெடியகற்றும் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன .யாழில் சிறுசிறுபகுதிகளில் கண்ணிவெடியகற்றல் நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டியுள்ளது;


பாதுகாப்பு படையினருடன் மேலும் ஆறு நிறுவனங்களும் இந்தப்பணியில்ஈடுபட்டுள்ளன. புதுமாத்தளான் புதுக்குடியிருப்பு பகுதியில் கண்ணிவெடிகள் அகற்றிமுடிப்பதற்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதைக்கூற முடியாது புதுமாத்தளான் புதுக்குடியிருப்பு முகமாலை பகுதிகளில் விடுதலைப்புலிகளின் முன்னரங்குகள் காணப்பட்டமையால் அங்கு பெருவாரியான கண்ணிவெடிகள் புதைத்துவைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை அகற்றுவற்கு நீண்டகாலங்கள் தேவைப்படும் ஆனாலும் காலவரையறை கூறமுடியாது



கேள்வி: கிளிநொச்சி கச்சேரி வளாகத்தில்எழாயிரத்திற்கு அதிகமான மோட்டார் சைக்கிள்களும் 14ஆயிரத்திற்கு மேற்பட்ட துவிச்சக்கர வண்டிகளும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று அண்மையில் செய்திவெளியிட்டிருந்தது .இவை தொடர்பில் அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது?

பதில்:யுத்த காலத்தின் போது மக்களால் புதுமத்தளான் பகுதியில் கைவிடப்பட்ட வாகனங்களை வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் பல மில்லியன் ருபாவை செலவிட்டு நாம் கிளிநொச்சிக்கு கொண்டுவந்தோம் ஊடகங்களில் குறிப்பிடுவது போன்று அங்கு ஆயிரக்கணக்கான மோட்டார் சைக்கிள்கள் காணப்படவில்லை மாறாக400 -600வரையான மோட்டார் சைக்கிள்கள் உள்ளன.


 இதனைத்தவிர 14ஆயிரம் துவிச்சக்கர வண்டிகளும். ட்ரக்கடர்கள் அடங்கலாக 30 கனரக வாகனங்களும் உள்ளன .இவற்றில் 20வீதமானவற்றை நாம் அடையாளங்கண்டுள்ளோம் அடையாளம் தொடர்பிலும் நாம் மிகக்கவனமாக இருக்கவேண்டும் அனுமதிப்பத்திரம் மற்றும ஆவணங்கள் இல்லாத நிலையில் அரசாங்கம் எதையும் எடுத்தஎடுப்பில் யாருக்கும் கொடுத்துவிடமுடியாது அரசாங்கத்தின் நடைமுறையின் கீழ் யார்யார் தமது ஆவணங்களை சமர்பிக்கின்றார்களோ அதனை திருப்பித்தரமுடியும். பொலிஸ் நிலையத்திலும் அரசாங்க அதிபர் அலுவலகத்திலும் பதிவுசெய்த பின்னர் இந்த வாகனங்கள் இவர்களுக்கு உரியது என உறுதிசெய்தால் அவர்களுக்குரியதனைத்தும் வழங்கப்படும். சைக்கிள்களை நாம் மக்களுக்கு வழங்க தொடங்கியுள்ளோம் நல்ல நிலையில் இருந்த சைக்கிள்க்ள அனைத்தும் ஏற்கனவே வழங்கப்பட்டுவிட்டன ஏற்கனவே 7000 அதிகமான துவிச்சக்கர வண்டிகளை நாம் விநியோகித்துள்ளோம் ஏனையவற்றை ஒரு நிறுவனமொன்று இலவசமாக திருத்தவுள்ளது அதற்கு பின்னர் நாம் இலவசமாக அந்த சைக்கிள்களை கிளிநொச்சி முல்லைத்தீவு மக்களுக்கு வழங்கவுள்ளோம் இதுதான் மாகாண மட்டத்தில் எமது திட்டமாகும்
  .

கேள்வி: யுத்தகாலத்தின் போது பலர் தமது ஆவணங்களை இழந்திருக்கும் சாத்தியம் உள்ளநிலையில் அத்தகைய மக்கள் எவ்வாறு தமது வாகனங்களை திருப்பிப்பெறமுடியும் ?

பதில்:அவர்களுக்கு வழிமுறையுள்ளது அவர்கள் பெறவேண்டுமானால் அவர்கள் கொழும்பிற்கு வரமுடியும் வந்து மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு சென்று அவர்களுடைய ஆவணங்களை இனங்காண முடியும் அவர்களிடம் நிச்சயமாக பிரதிகள் இருக்கும் என நினைக்கின்றேன் அவர்களது பெயர்கள் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் உள்ளதா என எப்போதுமே பார்வையிடமுடியும்.


அங்கு தமது கோப்பை(FILE) இனங்ண்டு அதில் பிரதிஎடுத்துக்கொண்டுவந்து அதனை கிளிநொச்சியிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கலாம் அது ஒரிஜினல் ஆவணமாக இருப்பதால் அதனை அரசாங்க அதிபரும் பொலிஸாரும் ஏற்றுக்கொள்வர்.


இதனைத்தவிர கிளிநொசசியில் வாகனங்கள் நிறுத்திவைக்கப்பட்டுள்ள  வளாகத்தில் அலுவலகம் ஏற்கனவே உள்ளது யாரேனும் தமது மோட்டார் சைக்கிள்களை அடையாளம் காணமுடிந்தால் அவர்கள் அந்த அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளுடன் கலந்தாராய முடியும் அங்கிருந்து ஆவணமொன்றை பெற்று கொழும்பிற்கு வரமுடியும் அவர்கள் தமது வாகனத்தை  பதிவுசெய்திருந்தால் அனுமதிப்பத்திரங்களுக்கு கொடுப்பனவுகளைச்செய்திருந்தால் நிச்சயமாக அந்த ஆவணம் கொழும்பில் இருக்கும் அவர்களிடம் அடையாள அட்டை அன்றேல் கடவுச்சீட்டு போன்ற ஆவணங்கள் இருக்கும் அதனை வைத்துக்கூட ஆவணங்களை பெற்றுக்கொள்ளமுடியும்


கேள்வி: யுத்தம் நிறைவடைந்து சுமார் ஒன்றரைவருடங்கள் கடந்துள்ள நிலையிலும் வெளிநாட்டு முதலீடுகள் எதிர்பார்த்தளவு வரவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புலம்பெயர்ந்த மக்களின் முதலீடுகள் போன்ற விடயங்களிலும் இதே நிலை காணப்படுகின்றதே நம்பிக்கைதரும் நடவடிக்கைகள் இதுவிடயத்தில் இடம்பெறுகின்றதா?

பதில் :வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப் பொறுத்தவரையில்   வடமாகாணத்தை தனியாக எடுத்து நோக்கவேண்டும் ஏனென்றால் யுத்தம் நிறைபெற்ற பின்னர் வந்த முதலாவது வருடகாலப்பகுதி முற்றுமுழுதாக மீளக்குடியமர்த்தல் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்டது அபிவிருத்தி துறையில் உட்கட்டமைப்பு அபிருத்தியுடன் நீர்ப்பான பகுதிக்கு முன்னுரிமையளிக்கப்பட்டது


இவ்வருடத்தில் மேலதீகமாக 80 ஆயிரம் ஏக்கர் விவசாயநிலத்தில் பயிர்ச்செய்கை பண்ணப்பட்டுள்ளது இவைதான் எமது தற்போதை முன்னுரிமைகளாகும் வெளிநாட்டு நேரடி முதலீடுகளைப்பொறுத்தவரையில் அவை உரிய காலத்தில் வடமாகாணத்திற்கு வந்துசேரும் நாம் தற்போது முழுமையான ஆய்வை மேற்கொண்டுவருகின்றோம் ஏற்கனவே முதலீட்டு வாய்ப்புக்களுக்காக ஐந்து மாவட்டங்களிலும் ஐந்து பிரதேசங்களை அடையாளங்கண்டுள்ளோம் .


கேள்வி: வடமாகாணத்தின் ஐந்து மாவட்டத்திலும் கைத்தொழில் வலயங்களை இனங்கண்டுள்ளதாக கூறினீர்கள். இதுபற்றி சற்றுவிரிவாக கூறுங்கள் ?

பதில்:மன்னார் தீவுக்கு அருகாமையில் கைத்தொழில் வலயமொன்று அமையவுள்ளது கடந்தகாலத்தில் கூட கைத்தொழில்கள் அந்த வலயத்தில் காணப்பட்டன .அந்த வலயம் 40 ஏக்கர்களைக் கொண்டது அதை நாம் ஏற்கனவே அடையாளங்கண்டுள்ளோம் .வவுனியாவிற்கு வடக்கே ஒமந்தைப் பிரதேதசத்தில் கைத்தொழில் துறை அபிவிருத்திக்காக நாம் 45 ஏக்கர் பிரதேசத்தை தெரிவுசெய்துள்ளோம் .அது தயாராகவுள்ளது கிளிநொச்சியைப் பொறுத்தவரையில் நாம் ஏற்கனவே 100 ஏக்கர் நிலப்பரப்பை கைத்தொழில் அபிவிருத்திக்காக தெரிவுசெய்துள்ளோம் .கிளிநொச்சி நகரில் இருந்து 3கிலோமீற்றர்கள் தூரத்தில் இது அமைந்துள்ளது. முல்லைத்தீவு பிரதேசத்திலும் கைத்தொழில் அபிவிருத்திக்காக நாம் நிலப்பரப்பை இனங்கண்டுள்ளோம் அது தர்மபுரம் பகுதிக்கு அண்மையாகவுள்ளது.


  யாழ்ப்பாணத்தில் அச்சுவேலி கைத்தொழில் வலயம் உள்ளது அங்கு சுமார் 25 கைத்தொழில் துறைகள் வரவுள்ளன. கைத்தொழில் வலயங்களாக இனங்காணப்பட்டுள்ள பிரதேசத்திற்கு தேவையான நீர்வசதி மின்சார வசதியெல்லாவற்றையும் நாம் வழங்குவோம்


இந்த கைத்தொழில் வலயங்களில் முதலிடுவதற்கு யாரேனும் ஆர்வமாக இருப்பின் அவர்கள் பணத்துடன் வருவார்களாக இருப்பின் பணத்தை செலவிட தயாராக இருப்பின் அவர்கள் வந்து எம்முடன் பேசவேண்டும் அப்போது அந்த கைத்தொழில் வலயங்களில் வாய்ப்புக்களை வழங்குவோம் ஆனால் அவர்கள் உண்மையாக வரவேண்டும் இதனைச் செய்வதன் மூலமாக மாகாணம் அபிவிருத்தியடைவதுடன் அதன் நன்மைகள் உள்ளுர் பொருளாதாரத்தை சென்றடையவேண்டும் என்பதை உறுதிப்படுத்தவேண்டும்.


கேள்வி: யாழ் மாவட்ட முன்னாள் படைத்தளபதி என்ற வகையில் யாழ்மாவட்டத்தின் தற்போதை பாதுகாப்பு நிலை தொடர்பில் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்: வடமாகாணத்தின் ஆளுநர் என்ற வகையில் பாதுகாப்பு அதிகாரிகள் தமது கடமையை மேற்கொள்ளும் பாங்கையிட்டு நாம் மிக்க மகிழ்ச்சியடைகின்றேன். அவர்கள் கிரமமான முறையில் அதனை முன்னெடுத்துவருகின்றனர்.பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பக்கத்தைமட்டுமன்றி மக்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிவருகின்றனர் .


வீடுகள் புனரமைப்பு பணி தற்காலிக குடியிருப்பு நிர்மாணப்பணி கடற்தொழில் படகு திருத்தியமைக்கும் பணி மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் பணிகளிலும் அதிகமான ஒத்துழைப்பை நல்கிவருகின்றனர். மக்களின் மகிழ்ச்சியான எதிர்காலத்திற்காக அவர்கள் வழங்கிவரும் ஒத்துழைப்பையிட்டு முன்னாள்இராணுவ அதிகாரி என்றவகையில் மிக்க மகிழ்சியடைகின்றேன்.

கேள்வி: யுத்தம் நிறைவுற்ற பின்னர் வடமாகாணத்தை நோக்கி செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருக்கின்றது ..இது எதைக்காண்பிக்கின்றது?

 பதில்: ஏ9 வீதி திறந்த காலப்பகுதியில் இருந்து இரண்டு மூன்று மில்லியனுக்கும் அதிகமான மக்கள் அங்கு சென்றிருப்பார்கள் என்பது எனக்கு நிச்சயமாகும் அதிகமான மக்கள் அங்கு செல்கின்றனர் குறிப்பாக வார இறுதிநாட்களில் 40ஆயிரத்திற்கு அதிகமானவர்கள் அங்கு காணப்படுகின்றனர் அவர்கள் நயினாதீவு நல்லூர்க்கோவில் கீரிமலை ஏனைய பகுதிகள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் யாழ் கோட்டை ஓல்ட்பார்க் அனைத்துபகுதிகளுக்கும் சென்று யாழ்மக்களுடன் கலந்து அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடுகின்றனர் .


அங்கு உன்னதமான நிலை காணப்படுகின்றது இந்த போக்கு தொடரவேண்டும் என நான் கருதுகின்றேன் வடக்கு தெற்கு மக்கள் ஒன்றுபடவேண்டும் அனைவரும் இணைந்து அபிவிருத்திக்காக உழைக்க தொடங்கவேண்டும் தற்போது உள்ளூர் சுற்றுலாத்துறை அபிவிருத்திகண்டுவருகின்றது ஏற்கனவே புலம்பெயர்ந்தமக்கள் வரத்தொடங்கியுள்ளனர் .கடந்த நல்லூர் திருவிழாவின் போது 75ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் உலகின் பல்வேறுபகுதிகளில் இருந்தும் வருகைதந்திருந்தனர் திருவிழாவின் இறுதிநாளில் நானும் அங்கிருந்து பெருந்திரளான மக்களின் பிரசன்னத்தை கண்ணுற்றேன் மக்கள் வரத்தொடங்கியுள்ளனர் சேர்ந்து செயற்படத்தொடங்கியுளளனர் திட்டங்களை இணைத்து செயற்படுத்திவருகின்றோம்

கேள்வி:அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட வடக்கின் வசந்தம் திட்டத்தின் தற்போதைய நிலை என்ன?

பதில் : வடக்கின் வசந்தம் நிகழ்ச்சித்திட்டமானது கடந்தவருடம் ஜுலை மாதத்தில் ஆரம்பமாகியிருந்தது இதுவரையில் ஒருவருடமும் இரண்டு மாதகாலமும் சென்றுள்ளநிலையில் பல்வேறு துறைகளிலும் நாம் பெருமளவிலான பணிகளை ஆற்றியுள்ளோம் குறிப்பாக மீள்குடியேற்றம்  உட்கட்டமைப்பு அபிருத்தி வாழ்வாதார நடவடிக்கைகள்  சுற்றுலா மற்றும் பொருளாதார துறைகளிலும் பல்வேறு பணிகளைச் செய்துமுடித்துள்ளோம் .இந்த ஒருவருட காலத்திற்குள்ளாக நாம் செய்துமுடித்துள்ளவை அளப்பரியதாகும் இது அரசாங்கத்தின் சிறப்பான திட்டமிடல் மற்றும் மக்கள் உட்பட அனைத்து தரப்பினரின் பங்களிப்பின் மூலமாகவே இது  சாத்தியமாகியுள்ளது



கேள்வி: வடமாகாண மக்கள் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பவர்கள் என்றவகையில் கல்வித்துறை தொடர்பில் எத்தகைய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளீர்கள் ?

பதில்:செட்டி குளத்தில் தற்போது சுமார் 25000 பேரே உள்ளனர் அதில் ஏழாயிரம் வரையிலான சிறுவர்கள் மாத்திரமே உள்ளனர்.சிறுவர்கள் திரும்பிச்சென்றுள்ள அனைத்துப்பகுதிகளிலும் நாம் பாடசாலைகளை ஆரம்பித்துள்ளோம் வடமாகாணம் முழுவதிலும் உள்ள 1110 பாடசாலைகளில் 79 பாடசாலைகளைத் தவிர ஏனைய பாடசாலைகள் அனைத்தும் இயங்குகின்றன இந்த 79 பாடசாலைகளும் மீள்குடியேற்றம் இன்னமும் இடம்பெறாத பகுதிகளிலேயே காணப்படுகின்றன .


சிறுவர்கள் தம்தம் பகுதிகளுக்கு திரும்பிச்செல்லும் போது தற்காலிக கல்வி நிலையங்களை இருவாரகாலத்தில் நிறுவி அவர்கள் தமது கல்வியை உடனடியாக தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கின்றோம் பாடாலைகள் சாதனங்கள் சீருடைகள் பாடப்புத்தங்கள் எல்லாம் வழங்கப்படுகின்றன ஆசிரியர்களைப் பொறுத்தவரையில் யுத்தகாலப்பகுதியில் வவுனியாவிற்கும் யாழ்ப்பாணத்திற்கும் சென்றவர்கள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு போன்றபகுதிகளுக்கு திரும்பிவரவேண்டியுள்ளது அவர்களுக்கு அரசாங்கம் இலவசபோக்குவரத்துச்சேவையை வழங்கியுள்ளது அவர்களது தங்குமிடவிடயத்தில் இன்னமும் பிரச்சனை உள்ளது விரைவில் அந்தப்பிரச்சனைக்கும் தீர்வுகாணவுள்ளோம் .


ஆகக்குறைந்தது விரைவாக அவர்களுக்கு தற்காலிக தங்குமிடவசதிகளையாவது ஏற்படுத்திக்கொடுக்க முனைகின்றோம் அனைத்துவிடயங்களும் நூற்றுக்கு நூறு வீதம் நேர்த்தியாக இருக்கின்றதென நாம் கூறவரவில்லை மாறாக சிறுவர்களுக்கும் அவர்களது கல்விச் செயற்பாடுகளுக்கும் 80வீதமான வசதிகள் கிடைப்பதை நாம் உறுதிப்படுத்தியுள்ளோம்




PAKISTAN NEW TEST CRICKET CAPTAIN MISBAH UL HAQ

பாகிஸ்தான் அணிக்கு மீண்டும் புதிய தலைவர் நியமனமும் 
        அவ்வணி எதிர்நோக்குகின்ற சிக்கல்களும்

பாகிஸ்தான் டெஸ்ற் கிரிக்கட் அணியின் புதிய தலைவராக மிஸ்பா உல் ஹக் நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்தவாரத்தில் வெளியான தகவலைப்பார்த்த போது மீண்டும் புதிய தலைவரா என்ற ஆதங்கமே ஏற்பட்டது

கடந்த சில ஆண்டுகாலப்பகுதியில் ஏன் கடந்த சில மாதங்களுக்குள்ளாக பாகிஸ்தான் கிரிக்கட் அணிக்கு எத்தனை பேர் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர் என்பதே வியப்பானது ஏன் இவ்வாறு அடிக்கடி புதியதலைவர்கள் நியமிக்கப்படுகின்றனர் என்பது அதனைவிடவும் வியப்பானது

2010ம் ஆண்டில் பாகிஸ்தான் டெஸ்ற் கிரிக்கட் அணிக்கு தலைவராக நியமிக்கப்பட்ட 4வது வீரர் மிஸ்பா உல் ஹக் என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது இதற்கு முன்பாக இவ்வாண்டில் மொஹம்மட் யூசுப் ஷஹீட் அப்ரிடி மற்றும் சல்மான் பட் ஆகியோர் தலைவர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.

சல்மான் பட் கிரிக்கட் சூதாட்ட சர்ச்சையில் சிக்கிக் கொண்டுள்ள நிலையிலேயே அடுத்த மாதம் தென் ஆபிரிக்க அணிக்காக அபுதாபியில் நடைபெறவுள்ள இரண்டு டெஸ்ற் போட்டிகள் கொண்ட தொடருக்கான பாகிஸ்தான் அணிக்கு சல்மான் பட் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் கிரிக்கட் அணி அந்நாட்டு அரசியலைப் போன்றே ஸ்திரமற்ற நிலையில் உள்ளதனையே அண்மைக்கால செயற்பாடுகள் காண்பித்துநிற்கின்றன.

அணியின் வீரர்களை எடுத்த கதியில் நீக்குவது பின்னர் சேர்த்துக்கொள்வது என நீண்டகால திட்டமிடலற்ற தீர்மானங்கள் பாகிஸ்தான் கிரிக்கட் அணியில் காணப்படுகின்றன .

இதன் காரணமாக பிறப்பிலேயே அதிக திறமை கொண்ட பல வீரர்களை அடுக்கடுக்காக சர்வதேச களத்திற்கு அனுப்பியும் ஒரு சிலரைத்தவிர பெரும்பாலானவர்களிடமிருந்து உச்சப்பயன்பாட்டை பெறமுடியாத துர்;ப்பாக்கி நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது.

18வது இளம் வீரர் மொஹம்மட் ஆமிரின் கிரிக்கட் வாழ்வு இதற்கு நல்ல உதாரணம் கடந்தாண்டு ஜுலை மாதம் டெஸ்ற் பிரவேசத்தை மேற்கொண்ட ஆமிர் இவ்வாண்டு ஒகஸ்ற் மாதத்துடன் தனது டெஸ்ற் வாழ்வை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

 தாம் விளையாடிய 14 டெஸ்ற் போட்டிகளிலேயே 51விக்கட்டுக்களை வீழ்த்தி அபாரத் திறமை வெளிப்படுத்திய ஆமிர்; கிரிக்கட் சூதாட்ட சர்ச்சையில் சிக்காமல் இருந்திருந்தால் நிச்சயமாக அவர் தான் இவ்வாண்டின் வளர்ந்துவரும் வீரருக்கான விருதை தட்டிச் சென்றிருப்பார் என்பது மறுக்க முடியாத உண்மையாகும் .ஏனெனில் இவ்வாண்டு அந்த விருதை வென்ற இங்கிலாந்து வீரர் ஸ்டீவன் பின் 32 விக்கட்டுக்களை மாத்திரமே வீழ்த்தியிருந்ததை சுட்டிக்காட்டத்தக்கது.

18வயதில் அதுவும் கிரிக்கட் அரங்கில் பிரவேசித்து ஒருவருடம் கூட பூர்த்தியாவதற்கு முன்னர் ஆமிரின் எதிர்காலம் கேள்விக்குறியாகி நிற்பதற்கு பாகிஸ்தான் கிரிக்கட் நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் என்ற கருத்துக்களை நஷார் ஹுஸைன் போன்ற கிரிக்கட் பிரபலங்கள் அண்மையில் தெரிவித்திருந்தனர்.

உரிய முறையில் திறமை காண்பித்தால் அணியில் நீண்டகாலம் விளையாடமுடியும் அதற்கு இன்னுமின்னும் உழைக்கவேண்டும் திறமைகளை வளர்த்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமெல்லாம் ஸ்திரமான அணியில் உள்ளவர்களுக்குதான் ஏற்படும் மாறாக அணியில் இருப்பதே நிச்சயமில்லை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் காரணங்கள் இன்றி நீக்கப்படலாம் என்ற நிலை காணப்பட்டால் உண்மையிலேயே நல்ல எண்ணங்கொண்ட வீரர்கள் கூட அவர்களது எதிர்;காலம் குறித்த நிச்சயமற்ற நிலைகாரணமாக கிரிக்கட் சூதாட்டம் போன்ற விரும்பத்தகாத செயற்பாடுகளை நோக்கி; இழுபட்டுச்செல்கின்ற நிலைமையே ஏற்படும் என்பதை இங்கே குறிப்பிட்டாகவேண்டும்

1990ஆம் ஆண்டிற்கு பின்னர் வந்த காலப்பகுதியில் அவுஸ்திரேலிய டெஸ்ற் கிரிக்கட் அணிக்கு அலன் போர்டர் மார்க் டெய்லர் ஸ்டீவ் வோ அடம் கில்கிறிஸ்ட் மற்றும் ரிக்கி பொன்டிங் ஆகிய ஐந்துபேர் மாத்திரமே தலைமை வகித்துள்ளனர். இது அந்த அணியின் ஸ்திர நிலைக்கு சான்றாக அமைந்ததுடன் இந்தக்காலப்பகுதியில் அவுஸ்திரேலிய அணி டெஸ்ற் கிரிக்கட் ஜாம்பவான்களாக விரல் விட்டு எண்ணக்கூடிய தொடர்களைத் தவிர ஏனையவற்றில் பெரு வெற்றிகளை ஈட்டியிருந்தது


மறுமுனையில் பாகிஸ்தான் அணி 1990ம் ஆண்டிற்கு பின்னர் வந்த காலப்பகுதியில் இம்ரான் கான் வஸீம் அக்ரம் வக்கார் யூனுஸ் சலீம் மலிக் ரமீஸ் ராஜா சயீட் அன்வர் ஆமீர் சொகைல் ரஸீட் லத்தீவ் மொயின் கான் இன்ஸமாம் உல் ஹக் மொஹமட் யூஸுவ் யூனிஸ்கான் ஷொகைப் மலிக் ஷாஹிட் அப்ரிடி சல்மான் பட் தற்போது மிஸ்பா உல் ஹக் என 16பேர் அணிக்கு தலைமை வகித்துள்ளனர் இந்தக்காலப்பகுதியில் பாகிஸ்தான் அணி பெற்ற டெஸ்ற் தொடர் வெற்றிகளை விரல் விட்டெண்ணிவிடலாம் தோல்விகளே அதிகமாக காணப்பட்டது


 அணியில் ஸ்திரமற்ற நிலைமை அவ்வணிவீரர்களை சூதாட்டம் உட்பட பல்வேறு சிக்கல்களில் தள்ளிவிட்டுள்ளதையே நிதர்சனம் உணர்த்திநிற்கின்றது


Wednesday, October 13, 2010

KUMAR SANGAKARA ON WORLD CUP

2011ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டியில் சிறப்பான சாதனைகளை நிகழ்த்தமுடியும்

-     இலங்கை அணித்தலைவர் குமார சங்ககார நம்பிக்கை





அடுத்தவருடம் இடம்பெறவுள்ள உலகக்கிண்ண போட்டிகளின் போது சிறப்பான சாதனைகளை நிகழ்த்த முடியும் என இலங்கை அணித்தலைவர் குமார் சங்ககார நம்பிக்கை தெரிவித்தார்

கடந்த சனிக்கிழமை கொழும்பில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கேசரி ஸ்போர்ட்ஸ் சார்பாக எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு கருத்துவெளியிட்டார்

உலகக்கிண்ண போட்டிகளுக்கான தயார்படுத்தல்கள் எவ்வாறு காணப்படுகின்றன என கேசரி ஸ்போர்ட்ஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சங்ககார

'நாம் மிகவும் நல்ல முறையில் தயாராகிவருகின்றோம் .இன்னமும் ஒருவாரகாலப்பகுதியில் அவுஸ்திரேலியாவிற்கு பயணமாகவுள்ளோம் அந்தவகையில்.சிறிய அடிகளை சரியாக எடுத்துவைப்பதன் மூலமாக பெரிதாக சாதிப்பதற்கு ஒரு வழிமுறையை பின்பற்றவேண்டியுள்ளது எமது அவதானம் அர்ப்பணிப்பு தக்கவைத்துக்கொண்டு பயிற்சிகளில் ஈடுபடுவதன் மூலமாக இம்முறை எம்மால் சிறப்பானசாதனையை நிகழ்த்தக்கூடுமாக இருக்கும் என நம்புகின்றேன் '

உலகக்கிண்ண போட்டிகளுக்கு முன்பாக தாயகத்திற்கு வெளியே இலங்கை அணி மேற்கொள்ளும் முக்கிய கிரிக்கட் சுற்றுப்பயணமாக அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் அமைந்துள்ளது இந்த சுற்றுப்பயணத்தின்போது மூன்று பயிற்சிப்போட்டிகள் அடங்கலாக ஒரு டுவன்டி டுவன்டி சர்வதேசப் போட்டியிலும் முன்று ஒருநாள் சர்வதேச போட்டிகளிலும் இலங்கை அணி விளையாடவுள்ளது

இந்த சுற்றுப்பயணத்தின் அட்டவணை பின்வருமாறு

                   பயிற்சி ஆட்டங்கள்

குயின்ஸ்லாந்து எதிர் இலங்கை (பிறிஸ்பேன்)- ஒக்டோபர் 22
நியுசவுத் வேல்ஸ் எதிர் இலங்கை (சிட்னி) – ஒக்டோபர் 24
நியுசவுத் வேல்ஸ் எதிர் இலங்கை (சிட்னி) –ஒக்டோபர் 26
         
சர்வதேச போட்டிகள்

டுவன்டி டுவன்டி சர்வதேச போட்டி
அவுஸ்திரேலியா எதிர் இலங்கை (பேர்த்)-ஒக்டோபர் 31

ஒருநாள் சர்வதேச போட்டிகள்

அவுஸ்திரேலியா எதிர் இலங்கை (மெல்பேர்ண்)-நவம்பர் 3
அவுஸ்திரேலியா எதிர் இலங்கை (சிட்னி) –நவம்பர் 5
அவுஸ்திரேலியா எதிர் இலங்கை ( பிறிஸ்பேன்)- நவம்பர் 7

இந்தப்போட்டிகள் அனைத்துமே பகலிரவுப்போட்டிகளாகவே நடைபெறவுள்ளன .

1996ம் ஆண்டு உலகக்கிண்ண போட்டிகளுக்கு முன்பாக அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முக்கோணத்தொடர் போட்டிகளில் சம்பியன் ஆகியமையே இலங்கை அணிக்கு உலகக்கிண்ண சம்பியன்களாவதற்கு மிகவும் அவசியமாக தேவைப்பட்ட உந்துசக்தியையும் நம்பிக்கையையும் கொடுத்ததாக இலங்கை அணிவீரர்கள் பலர் கூறியதை கடந்தகாலத்தில் கேள்விப்பட்டிருக்கின்றோம்
அந்தவகையில் இம்முறை அவுஸ்திரேலிய சுற்றுப்பயணம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது .இதில் சிறப்பாக ஆற்றல்களை வெளிப்படுத்துவது அணியின் நம்பிக்கைக்கு வலுச்சேர்க்கும் என குமார் சங்ககார தெரிவித்திருந்தார்

10வது ஒருநாள் சர்வதேச உலகக்கிண்ண போட்டிகள் அடுத்தாண்டு பெப்ரவரி 19ம்திகதி முதல் ஏப்ரல் இரண்டாம் திகதிவரை இந்தியா இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் கூட்டாக இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது 


GOLDEN BOY PRASHANTH SELLATHURAI

தங்கம் வென்ற தமிழன் பிரசாந்த் செல்வத்துரை   


அருண் ஆரோக்கியநாதர்



இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் அவுஸ்திரேலிய அணிக்காக சாதனை

தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்ற வசனத்தை ஒருமுறையேனும் கேட்காதவர்கள் குறைவாகத்தான் இருக்கமுடியும்
தமிழர்களின் தலைகளை நிறுத்தி பெருமை கொள்ளும் படியான சாதனைகளை விளையாட்டுலகில் நிலைநாட்டிய பல வீரர்கள் இருக்கின்றார்கள் வெறும் சாதனைகள் அல்ல உலக சாதனைகளை அவர்கள்படைத்திருக்கின்றனர்

கிரிக்கட்டில் நம்ம முத்தையா முரளிதரன் உலக சாதனைகள் பலவற்றை நிலைநாட்டிய நிலையில் செஸ் விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த கெரம் விளையாட்டில் மரிய இருதயம் ஆகியோர் உலக சம்பியன் பட்டங்களை வென்று எல்லையில்லா மகிழ்ச்சியையும் அளவற்ற பெருமையையும் சேர்த்திருக்கின்றனர்

விளையாட்டில் சாதிக்கும் தமிழர்கள் பட்டியலில் அண்மைக்காலமாக பலரது அவதானத்தையும் ஈர்த்திருப்பவர் அவுஸ்திரேலிய தேசிய ஜிம்னாஷ்டிக் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரசாந்த் செல்லத்துரை

டில்லியில் நடைபெற்ற 19வது பொதுநலவாய விளையாட்டுப்போட்டிகளின் போது அவுஸ்திரேலிய அணிக்காக இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுகொடுத்து பெருமை சேர்த்ததன் மூலமே அனைவரது கவனத்தையும் பிரசாந்த செல்லத்துரை ஈர்த்திருக்கின்றார்.

 டெல்லி கொமன்வெல்த் விளையாட்டு விழாவில்; இரு போட்டிப் பிரிவுகளில் கிட்டத்தட்ட 15,000 புள்ளிகள் வரை பெற்றள்ளார் செல்லத்துரை. ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் இந்த அளவுக்கு அதிக பட்ச புள்ளிகள் கிடைப்பது மிகவும் அரிதான விஷயம். அந்த அளவில் செல்லத்துரை ஒரு சாதனையே படைத்துள்ளார் என்றால் மிகையல்ல

கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஜிம்னாஷ்டிக் குழுப் போட்டியில் பிரசாந்த் செல்லத்துரை, ஜோசுவா ஜெபரிஸ், சாமுவேல் ஆப்போர்ட், லூக் விவடோவஸ்கி, தாமஸ் பிச்லர் ஆகியோர் அடங்கிய குழு தங்கம் வென்றது. ஜிம்னாஸ்டிக்ஸில் அவுஸ்திரேலியாவுக்குக் கிடைத்த முதல் கொமன்வெல்த் தங்கம் இதுவென்பது குறிப்பிடத்த்ககது

இதனைத்தவிர ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் மிகவும் சிரமமான போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் ''பொம்மல் ஹோர்ஸ்'' என்னும் பிரிவில் கலந்துகொண்ட பிரசாந்த், மிகவும் கூடுதலாக 15,500 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்று தனது தங்கப்பதக்க எண்ணிக்கையை 2ஆக உயர்த்திக்கொண்டார்.
.
1986 ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி அவுஸ்ரேலியாவில் பிறந்த பிரசாந்த் பிரசாந்த் தனது ஆற்றல்வெளிப்பாடுகளை முடித்தவுடனேயே அதனைப் பார்த்த அவரது பயிற்சியாளரான சியான் சொங் லியாங் மிகுந்த ஆரவாரத்துடன் அவரை கட்டித்தழுவிக் கொண்டார்.

குதிரை வீரன் என்று அவுஸ்திரேலிய வீரர்களால் செல்லமாக அழைக்கப்படும்  24வயதுடைய பிரசாந்த செல்லத்துரை அவுஸ்திரேலிய ஜிம்னாஸ்டிக் அணியிலுள்ள வீரர்களிலேயே குறைந்த உயரம் கொண்டவர் இவரது உயரம் 1.50 மீற்றர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது

ரேடியோ கிராபி மாணவரான பிரசாந்தின் பெற்றோர் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர்களாவர் 1983ம் ஆண்டில் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு புலம் பெயர்ந்து சென்றவர்கள் தற்போது சிட்னியில் வசித்துவருகின்றனர் .பிரசாந்திற்கு இரு இளைய சகோதரிகளும் உள்ளமை குறிபபிடத்தக்கது

கடந்த மெல்போர்ன் காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் செல்லத்துரை. இந்த முறை தங்கத்துடன் திரும்புவேன் என சபதமே போட்டிருந்தாராம். சொன்னபடி ஒரு தங்கப்பதக்கததையல்ல இரண்டு தங்கங்களை வென்றெடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்

அவுஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்தது செல்லத்துரைக்கு எளிதாக இருக்கவில்லையென தெரியவருகின்றது கடும் போராட்டங்கள், கடின பயிற்சி , கடுமையான முயற்சிக்குப் பின்புதான் அணியில் இடம் கிடைத்தததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன

சவால்களுக்கு மத்தியில் சாதிக்கும் தமிழர்கள் வரிசையில் இணைந்து கொண்டு பெருமைசேர்க்கும் பிரசாந்திற்கு கேசரி ஸ்போர்ட்ஸும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது 


Saturday, October 9, 2010

Sri Lanka brews world's largest cup of tea-A Unique Guinness World Record

உலகின் மிகப்பெரிய தேநீர் கோப்பைக்கான கின்னஸ் உலக சாதனை

One of the world's leading tea-producing nations, Sri Lanka, has just become the scene for a new world record - the largest cup of tea.
A giant red mug was filled with 1,000 gallons (4,546l) of water, 141lb (64kg) of tea, 1,929lb (875kg) of malted milk powder and 353lb (160kg) of sugar.
 previous record was 660 Gallon(3000 liters), set last year in Kansas city ,USA.
The tea was later driven around the Sri Lankan capital, Colombo, and handed out to locals in small plastic cups.
The tea came from Sri Lanka's famed estates, and was brewed for hours in 44-gallon (200l) urns in a way that is popular in South Asia - with sugar and malted milk powder.
The mixture was then slowly pumped into the mug - which had a capacity of about 32,000 normal cups - until it was full,
A representative from Guinness World Records certified the feat.




மாபெரும் தேநீர் கோப்பைக்கான புதிய கின்னஸ் உலக சாதனை இலங்கையில் நிலைநாட்டப்பட்டுள்ளது 


4000 லீற்றர்கள் ( 1000 கலன்கள்)தேநீர் தயாரித்ததன் மூலமே உலகத்திலேயே மாபெரும் தேனீர் கோப்பைக்கான சாதனை இலங்கைக்கு உரித்தாகியது 




2009 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் கன்ஸாஸ் நகரில் போர்ட் ஸ்கொட் சுகாதார நிலையத்தினால் தயாரிக்கப்பட்ட தேநீர்கோப்பையின் சாதனையே இதற்கு முன்னர் உலக சாதனையாக பதிவுசெய்யப்பட்டிருந்தது. அப்போது 3000லீற்றர்கள் (660 கலன்கள்)  தேநீரைத் தயாரித்து இந்த சாதனையைப் படைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது



இலங்கையின் மிகவும் பிரபலமிக்க மோல்ட் பானமாக திகழும் வீவா இதற்கான முயற்சியில் இறங்கி பெற்றி பெற்றுள்ளது. இந்த சாதனைக்கான கருத்திட்டத்தை ஜிஎஸ்கே நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஸ்ரீகாந்த செல்லத்துரை பிரதம நிறைவேற்று அதிகாரி சச்சி தோமஸ் ஆகியோர் வகுத்திருந்தனர் 


கின்னஸ் சாதனையின் போது வீவாவின் சிறப்புத் தூதரன இலங்கை கிரிக்கட் அணியின் தலைவர் குமார் சங்ககார, மற்றும் ஜனாதியதின் மகன் ஜோசித ராஜபக்ஷ ஆகியோர் உட்பட பலரும் கலந்துகொண்டார்.

இலண்டனில் இருந்து வருகைத்தந்தி கின்னஸ் பிரதிநிதியால் இந்த நிகழ்வு முழுமையாக கண்காணிக்கப்பட்டு சாதனை நிகழ்த்தப்பட்டமமைக்கான உறுதிபடுத்தல் சான்றிதல் வழங்கப்பட்டது.


Thursday, October 7, 2010

சமூக வலையமைப்பின் வியக்கவைக்கும் வியாபிப்பு






பேஸ்புக் என்பதை நாம் ஏதோ மூன்றாவது நபருக்குரிய விடயம் என அலட்சியம் செய்துவிட்டு இருந்துவிடமுடியாது. இது எமது உறவுகள் நண்பர்கள் அயலவர்கள் சம்பந்தப்பட்டதாக இருப்பதே இதற்கு முக்கியமானமான காரணமாகும் 


தற்போதைய நிலையில் உலகளவில் வயதுவித்தியாசமின்றி மிகவேகமாக வளர்ச்சிகண்டுவருகின்ற அன்றேல் பரவி வியாபித்துவருகின்ற வலையமைப்பு எதுவென்றால் அதற்கு பதில் 'Facebook' பேஸ்புக் என்பதாகத்;தான் இருக்க முடியும்
 .
2004ம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ம்திகதி ஆரம்பிக்கப்பட்ட சமூக வலையமைப்பான பேஸ்புக் இணையத்தளத்தில் இவ்வாண்டு ஜுலைமாதத்தில் 500மில்லியனுக்கு மேற்பட்ட அங்கத்தவர்கள் அன்றேல் பயனாளர்கள் உள்ளதான தகவல் ஆச்சரியமிக்கதாகவே அமைந்திருக்கும்
பேஸ்புக் இணையத்தளத்தில் முதல் 100மில்லியன் பாவனையாளர்கள் இணைந்துகொள்வதற்கு 1665நாட்கள் எடுத்தன .2008ம் ஆண்டு ஒகஸ்ற் 26ம்திகதியே 100மில்லியன் பாவனையாளர்கள் என்ற இலக்கு எட்டப்பட்டது

 அதற்குப்பின்னர் அசூர வேகத்தில் பேஸ்புக்கின் அங்கத்துவம் கூடிக்கொண்டு செல்கின்றதை நோக்கமுடியும் 100மில்லியனில் இருந்து 200மில்லியன் எண்ணிக்கையைத் தொடுவதற்கு 225நாட்களும் 300மில்லியனைத் தொடுவதற்கு 160நாட்களும் 400மில்லியன் எண்ணிக்கையை எட்டுவதற்கு 143நாட்களும் 400ல் இருந்து 500மில்லியனைத் தொடுவதற்கு 166நாட்களும் எடுத்துள்ளன.


தினமும் லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் புதிதாக பேஸ்புக் அங்கத்தவர்களாக இணைந்துகொண்டிருப்பதன் காரணமாக ஜுலை மாத பிற்பகுதியில் 500மில்லியன்களை எட்டிய பேஸ்புக் இணையத்தளத்தின் கடந்தவாரத்தில் அங்கத்தவர்கள் எண்ணிக்கை 520 மில்லியன்களாக அதிகரித்திருக்கின்றது
அமெரிக்கா கனடா மற்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளில் 40வீதத்திற்கு அதிகமானவர்கள் பேஸ்புக்கின் தீவிர அங்கத்தவர்களாக உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது

                                       உலகளவில் பேஸ்புக்கின் வளர்ச்சி 
                                          

பேஸ்புக் இணையத்தளத்தில் அங்கத்தவர்களாக இருப்பவர்களுக்கு சராசரியாக 130 இணைய நண்பர்கள் பேஸ்புக்கில் இருப்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது

உலக சனத்தொகையில் 14 பேரில் ஒருவர் தற்போது பேஸ்புக்கில் அங்கத்தவர்களாக உள்ளனர் என்ற செய்தி ஒருபக்கம் அதன் அசூர வளர்ச்சியைக் காண்பித்தாலும் மறுமுனையில் நமது சமூகத்தில் ஏற்பட்டுவருகின்ற சமூக கலாசார மாற்றத்தினையும் காண்பித்து நிற்கின்றதென்றே கூறவேண்டும்
 .
ஓய்வின்றி மக்கள் உழைத்துக்கொண்டிருக்கின்ற பரபரப்பான உலகத்தில் நண்பர்களின் பிறந்தநாள்களை நினைவில் வைத்திருப்பது ஒருநண்பரின் இணையத் தோட்டத்திற்குள் சென்று பூச்சியை விடுவது காய்கறிகளைப் பரிசளிப்பது என்பதையெல்லாம் பேஸ்புக் வந்ததன் பின்னரே சாத்தியமாகின.
பிறந்தநாள் திருமணங்கள் பட்டமளிப்பு விழாக்கள் பதவியுயர்வுகள் வருடாந்த நிறைவு தினக்கொண்டாட்டங்கள் போன்ற பல தனிப்பட்ட நிகழ்ச்சிகள் பற்றிய தகவல்கள் கூட சுடச்சுட பேஸ்புக் ஊடாக பரிமாறப்படுகின்றன தகவல்கள் மட்டுமன்றி புகைப்படங்களும் ஏன் பிடித்த பாடல்களும் கட்டுரைகளும் கூட பேஸ்புக்கில் பரிமாறப்படுகின்றன.

வீடுகள் அலுவலகங்கள் பொது இடங்கள் ஏன் கைத்தொலைபேசிகளை வைத்திருப்பவர்களில் கணிசமானவர்கள் தாம் செல்லுகின்ற இடங்களில் எல்லாம் பேஸ்புக் இணைய வலையமைப்பில் அதிகமதிகமாக நேரத்தை செலவிட்டு வருவதனை ஆய்வுகள் உறுதிசெய்கின்றன .

பேஸ்புக் இணையத்தளத்தில் அங்கத்தவர்களாக இருக்கின்றவர்கள் ஒவ்வொருமாதமும் அண்ணளவாக 700 பில்லியன் நிமிடங்களை செலவிடுவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன
.
ஓவ்வொரு மாதமும் பேஸ்புக் அங்கத்தவர்கள் 30பில்லியனுக்கு அதிகமான புகைப்படங்கள் செய்திக் கட்டுரைகள் இணையத்தளங்களுக்கான தொடர்புக் குறிகாட்டிகள் (web links)போன்றவற்றை பேஸ்புக் இணையத்தளத்தினூடாக பகிர்ந்துகொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகின்றது .
பேஸ்புக் என்பது ஒரு தனிநாடாக கருதப்படுமானால் அது சீனாவிற்கு இந்தியாவிற்கு அடுத்து அதிக சனத்தொகை கொண்டநாடாக இருக்கும்  அத்தோடு பேஸ்புக் 70 உத்தியோகபூர்வ மொழிகளில் உள்ளமையால் அதன் பல்கலாசாரத்தன்மையை எந்தவொருநாட்டாலும் இலகுவில் எட்டிவிடமுடியாது இது பேஸ்புக்கின் பாரிய பரிணாமவளர்ச்சிக்கு சான்றுபகர்வதாகவும் அமைந்திருந்தது

உலகில் இலங்கை உட்பட 212 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பேஸ்புக்கில் அங்கத்தவர்களாக உள்ளனர் .ஆகக்கூடுதலாக அங்கத்தவர்களைக் கொண்ட நாடாக பேஸ்புக் தலைமையகம் அமைந்துள்ள அமெரிக்கா திகழ்கின்றது அமெரிக்காவில் 133மில்லியன் பேர் பேஸ்புக் அங்கத்தவர்களாக திகழ்கின்றனர். 260 அங்கத்தவர்களுடன் ஆகக்குறைந்த அங்கத்தவர்களைக் கொண்ட நாடாக நாரு(Nauru) உள் 

Kjy; gj;J ehLfs;

mnkhpf;fh -   138.6 kpy;ypad;
gphpj;jhdpah-   27.2 kpy;ypad;
,e;NjhNdrpah- 26.8 kpy;ypad;  
JUf;fp-       22.6kpy;ypad;
Gpuhd;];-      18.8 kpy;ypad
fdlh        17 kpy;ypad;
;,j;jhyp-      16.5 kpy;ypad;
gpypigd;];    16.4kpy;ypad;  
nkf;]pNfh    15.1 kpy;ypad;
,e;jpah       13.6 kpy;ypad;




           ,yq;ifapy; Ng];Gf;fpd; jhf;fk; vg;gbAs;sJ?


674 480 அங்கத்தவர்களுடன் இலங்கை இந்த வரிசையில் 74வது இடத்திலுள்ளது


.இலங்கையின் மொத்த சனத்தொகையில் 3.14வீதமென்பதுடன் இணையவசதியுடையவர்களில் மூன்றிலொரு பங்கு(37.97%) என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது








                                       இலங்கையில் பேஸ்புக்கின் வளர்ச்சிவீதம் 




இலங்கையில் பேஸ்புக் அங்கத்தவர்களில் 435,040 பேர் ஆண்களாகவும் 228,740 பேர் பெண்களாகவும் உள்ளனர்









                     இலங்கையில் பேஸ்புக் பயன்படுத்துபவர்களின் வயதுவீதம் 
                                      

.
அறிமுகமான ஆரம்பத்தில் இளைஞர் யுவதிகள் மத்தியிலேயே பிரபலமாகியிருந்த பேஸ்புக் தற்போது சிறுவர்கள் முதற்கொண்டு பெரியவர்களையும் வேகமாக கவர்ந்து அதன் வலையமைப்பில் உள்வாங்கிவருகின்றது

காலை எழுந்தவுடன் பத்திரிகை படிப்படி அன்றேல் தேநீர் கோப்பி அருந்துவது போன்று தற்போது காலை எழுந்ததுமே பல்துலக்காமல் பேஸ்புக் பார்க்கும் பழக்கம் ஒருசாரரிடையே ஏற்பட்டுள்ளது காலையில் மாத்திரம் என்றால் பரவாயில்லை நாள் பொழுதிலும் ஏன் பின்னிரவுவேளையிலுமே பேஸ்புக்கில் தொங்கிக்கொண்டிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கின்றது

இலங்கையிலுள்ள பல அலுவலகங்களில் பணியாளர்கள் அதிகமதிகமான நேரத்தை பேஸ்புக்கில் செலவிடுவதனை அறியமுடிகின்றது காலையில் வேலைக்கு வந்தவுடனேயே இறைவனுக்கு வழிபாடுசெய்கின்றனரோ இல்லையோ பேஸ்புக் இணைப்பில் தம்மை ஈடுபடுத்திக்கொண்டே பணியை ஆரம்பிக்கின்றனர் பணியாளர்கள் அதிகமதிகமான நேரத்தை பேஸ்புக்கில் செலவிட்டு நேரடிவீணடிப்பு செய்வதால் சில நிறுவனங்களில் பேஸ்புக் பார்ப்பதையே தடைசெய்கின்ற நிலைமையும் நேரக்கட்டுப்பாடுகளை விதிக்கின்ற நிலைமையும் ஏற்பட்டுள்ளதை அறியமுடிகின்றது இதே நிலைதான் உலகின் ஏனைய பல இடங்களிலும் காணப்படுகின்றது


பேஸ்புக் ஏற்படுத்தியுள்ள சமூக மாற்றம்

புதிய எண்ணங்களின் படைப்புத் தலைமையகமாக உலகில் விளங்கிநிற்கின்ற ஹாவார்ட் பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட பேஸ்புக் ஆரம்பத்தில் ஹாவார்ட் பல்கலைக்கழகத்திற்குள் பரவி இன்றோ 500 மில்லியன் அங்கத்தவர்களைக் கொண்டு பாரிய விருட்சமாக மாறிநிற்பது மட்டுமன்றி கணனி மற்றும் இணைய உலக ஜாம்பவான்களான கூகுள் அப்பிள் யாகூ மற்றும் மைக்ரோசொப்ட் போன்ற நிறுவனங்களையும் இணையத்தை பாவனையாளர்களுக்கு நெருக்கமானதாக பயன்பாட்டிற்கு எளியதாக மாற்றுவதற்கு ஊந்துசக்தியாக விளங்கிநிற்கின்றது

பேஸ்புக் இணையத்தளத்தின் இணைஸ்தாபகரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மார்க் சூக்கர்பேர்கும் அவரது ஹாவர்ட் பல்கலைக்கழக முன்னாள் நண்பர்களும் தமது தூரதரிசனப்பார்வையுடனான கண்டுபிடிப்பின் மூலமாக தனித்தீவுகளாக தகவல்களை தமக்குள்ளேயே அடக்கி வாழ்ந்த மக்களின் எண்ணக்கருக்களில் பாரிய மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளதுடன் ; தமக்கிடையே அதிகமதிகமான தகவல்களை பகிர்ந்துகொள்வதற்கு வழிவகை செய்துள்ளனர்

பேஸ்புக்கை மையமாக் கொண்ட முதலாவது திரைப்படம் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி திரைக்கு வரவுள்ளது இந்த திரைப்படத்திற்கு 'Social Network' எனப் பெயரிடப்பட்டுள்ளது

பேஸ்புக் தற்போது மிகவும் தீவிரமாக கவனத்திற்குட்படுத்தப்படவேண்டிய தவிர்க்கப்படமுடியாத விடயம் என்றாகிவிட்டுள்ளது மக்கள் தமது எண்ணக்கருக்களை ஒருவர்மற்றவருடன் பகிர்ந்துகொள்கின்றபோதே சமூக விழுமியங்கள் வடிவம் பெறுகின்றன என்பதற்கமைவாகவே பேஸ்புக் தவிர்க்கப்படமுடியாத விடயமாகியுள்ளது.
 .
பேஸ்புக் என்ற கட்டாற்றுவெள்ளத்தில் அதனை விரும்பாதவர்களும் இழுத்துச்செல்லப்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டுள்ளது பேஸ்புக் ஏற்படுத்திவிட்டுள்ள கலாசார மாற்றம் என்பது நம்மால் அதனை புறக்கணித்துவிட்டு இருந்துவிடமுடியாது என்பதையே யதார்த்த நிலை உணர்த்திநிற்கின்றது

இதற்கு உதாரணமாக பேஸ்புக்கில் இணைய தனிப்பட்டரீதியில் ஒருவர் விரும்பாதவிடத்தும் தமது உறவினரின் புகைப்படத்தை பார்பதற்கோ அன்றேல் தமது நிறுவனத்தினை விளம்பர ஊக்குவிப்பிக்காகவோ இதில் இணைந்துகொள்ளும் தேவை ஏற்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டமுடியும்

பேஸ்புக்கை நாம் மூன்றாம் தரப்புவிடயம் என புறக்கணத்து இருந்துவிடமுடியாது என்பதற்கு அதன் சமூகத்தில் அது ஆழமாக ஊடுருவியிருப்பதும் மற்றுமொரு முக்கிய காரணமாகும் ..பெற்றோருக்கு தெரியாமலேயே அவர்கள் பிள்ளைகள் அதில் அங்கத்தவர்களாக இருக்கக்கூடும் அன்றேல் சகோதரர்கள் நண்பர்கள் மற்றும் அயலவர்கள் அதில் அங்கத்தவர்களாக இருக்கக்கூடும் .அந்த வகையில் இதனை அறிந்துவைத்திருப்பதால் அதனால் ஏற்படக்கூடிய பாதகமான தாக்கங்களைக் கட்டுப்படுத்தமுடியும்

' உங்கள் வாழ்க்கையிலுள்ள மக்களுடன் தொடர்பை ஏற்படுத்தவும் பகிர்ந்துகொள்ளவும் பேஸ்புக் துணைசெய்கின்றது ' என்பதே பேஸ்புக் இணையத்தளத்தின் விருதுவாக்காக உள்ளது ஒருகோணத்தில் பார்த்தால் இது மிகவும் உண்மை போன்றே தெரிகின்றது ஆனால் பேஸ்புக்கிலுள்ள புகைப்படங்கள் மற்றும் தகவல்களை எடுத்துக்கொண்டு அதனை தீய நோக்கங்களுக்காக பயன்படுத்தும் செய்திகளையும் நாம் அடிக்கடி கேள்விப்படுகின்றோம்
.
பேஸ்புக்கின் சார்பாக குரல் கொடுப்பவர்கள் அதிலே ஒருவரின் தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் விபரங்களின் இரகசியத்தன்மையை பேணிப்பாதுகாக்கின்ற வடிவமைப்புக்களைச் செய்யமுடியும் என தமது தரப்பு வாதத்தை முன்வைக்கலாம்.

இருந்தபோதிலும் பேஸ்புக்கினால் பல அபாயங்கள் உள்ளதாகவும் அதிலே முக்கியமான கவனிக்கப்படவேண்டடிய மறைவான ஐந்து அபாயங்களை இணைய நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்


                                                    அபாயங்கள்


எமது விபரங்கள் மூன்றாம் தரப்பினருடன் பகிர்ந்துகொள்ளப்படுகின்றன
பேஸ்புக் வடிவமைப்பாளர்கள் ஒவ்வொரு முறையும் தமது இணையத்தளத்தை மீள்வடிவமைப்பிற்குட்படுத்தும் போது இரகசியத்தன்மை கட்டமைப்புக்கள் (Privacy Settings ) பாதுகாப்புக்குறைவான நிலைக்கு தள்ளப்படுகின்றது
பேஸ்புக் விளம்பரங்கள் கணனி உரிமையாளர்களின் அனுமதியின்றியே கணனிகளின் மென்பொருள்களுக்கு சேதம் விளைவிக்கும் நாசகார மென்பொருட்களை (malware) தாங்கிவரக்கூடியவை
உங்களது உண்மையான நண்பர்கள் தெரியாமலேயே உங்களை மிகவும் இக்கட்டான நிலைக்கு கொண்டுசெல்கின்றனர்
வேண்டத்தகாதவர்கள் உண்மையான பெயர்களில் போலியான பேஸ்புக் பக்கங்களை உருவாக்குகின்றனர்
            
பேஸ்புக்கை மக்கள் தமது விருப்பு வெறுப்புக்களை வெளிப்படுத்துகின்ற நவீன ஊடகமாக பார்க்கப்படுகின்றது. குரலற்ற மக்களின் குரலாக பேஸ்புக்கை பயன்படுத்தப்படுவதை பல்வேறு செய்திகளின் போது நாம் அவதானிக்கின்றோம் . உதாரணமாக காஷ்மீர் பிரச்சனையில் பாதிக்கப்படுகின்ற மக்களின் தரப்பைச் சேர்ந்தவர்கள் பிரதான மற்றும் பாரம்பரியரிய ஊடகங்களால் மறைக்கப்படுகின்ற செய்திகளை பேஸ்புக் மூலமாக உலகிற்கு வெளிப்படுத்துகின்றனர்

மறுமுனையில் இந்திய அரசிற்கு சார்பானவர்கள் காஷ்மீர் பிரச்சனை பற்றிய தமது நிலைப்பாடுகளைத் தாங்கிய கருத்துக்களை வெளிப்படுத்துகின்றமை காணமுடியும்.

விரும்பத்தகாத தகவல்கள் பேஸ்புக் மூலமாக உலகிற்கு வெளிப்படுத்தப்படுவதன் காரணமாக அதற்குள் புலனாய்வு அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஊடுருவி தகவல்களை சேகரிப்பதான செய்திகளும் கடந்தநாட்களில் வெளியாகியிருந்தன


பேஸ்புக்கிற்கு எதிரான முறைப்பாடுகள்

தமது தனிப்பட்ட தகவல்களையும் புகைப்படங்களையும் அனுமதியின்றி பயன்படுத்துதல் திரிவுபடுத்துதல் தவறாக பிரசுரித்தல் ஆகியனவே பேஸ்புக்கிற்கு எதிரான உலகளாவிய முறைப்பாடுகளில் பொதுவானதாக காணப்படுகின்றது

இலங்கையில் கூட பேஸ்புக் குறித்து பல முறைப்பாடுகள் வெளியாகியிருப்பதை செய்திகளில் பார்த்திருக்கின்றோம்
பேஸ்புக் தொடர்பாக கிடைக்கும் முறைப்பாடுகளில் அனேகமானவை  நண்பர்களாக இருந்து பின்னர் கோபித்துக்கொண்டவர்கள் நண்பர்களாக இருந்த காலத்தில் பேஸ்புக்கில் இருந்தோ வேறு இணையத்தளங்களில் இருந்தோ தரையிறக்கம் செய்த புகைப்படங்களை திரிவுபடுத்தி ஆபாசமான முறையில் பேஸ்புக்கில் அன்றேல் வேறு இணையத்தளங்களில் பிரசுரித்துள்ளமை பற்றியதாகவே உள்ளதென இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பெண்கள் மற்றும் சிறுவர்கள் பிரிவின் பொறுப்பதிகாரி சி ஐ பாலச்சந்திர தெரிவித்தார் கருத்துவெளியிடுகையில் 'என இவ்வாறான ஆறு பேஸ்புக் அங்கத்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ' எனக் குறிப்பிட்டார்

இதனைத்தவிர போலிவிபரங்களைத் தெரிவித்து சிறுவயது பெண்களுடன் காதல்தொடர்புகளை ஏற்படுத்தி ஏமாற்றுகின்றமை போன்ற முறைப்பாடுகள் குறித்தும் கேள்விப்பட்டிருக்கின்றோம் .
.
கனடா நாட்டின் வன்கூவர் நகரில் ரவுடிக் கும்பலொன்று 16வயது இளம்பெண்ணொருவருக்கு போதையூட்டிய பின்னர் அவரை பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியதை கண்ணுற்றவர்கள் அதனைப் புகைப்படமெடுத்து பேஸ்புக்கில் போட்டு;ள்ளமை தொடர்பான செய்திகளை இருநாட்களுக்கு முன்பாக சர்வதேச ஊடகங்கள் பிரசுரித்திருந்தன

நம்மவரிடையிலும் தற்போது பேஸ்புக் பாவனை புற்றீசல் போன்று பெருகிக்கொண்டு செல்கின்றது பேஸ்புக் தரும் நன்மைகளை அனுபவிப்பவர்கள் அதனால் ஏற்படக்கூடிய பாதகங்களை அறிந்திருப்பதால் மேலும் பாதுகாப்பான முறையில் சாதங்களை அனுபவிக்கமுடியும்


 பேஸ்புக் வர்த்தகம்

பேஸ்புக் என்ன தான் சமூக வலையமைப்பாக இருப்பினும் அதுவும் லாபத்தைக்குறிக்கோளாக்கொண்ட வர்த்தக நிறுவனமே
பேஸ்புக்கின் பெறுமதி தற்போது 22முதல் 25பில்லியன் அமெரிக்க டொலர்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது

இதில் பேஸ்புக் பயன்படுத்துகின்ற ஒவ்வொருவரும் 50டொலர்கள் முதல் 500டொலர்கள் வரையில் மறைமுகமானவகையில் பேஸ்புக்கின் மொத்தபெறுமதியில் பங்களிப்புச்செய்கின்றனர் என்ற செய்தி பலருக்கு புதிதாக இருக்கலாம் .பேஸ்புக்கிலுள்ள 524மில்லியன் பயனாளர்களின் மிகப்பெரும் எண்ணிக்கையான தகவல்களே இதற்கு காரணமாகும் அதாவது பேஸ்புக் அதன் பயனாளர்கள் அன்றேல்அங்கத்தவர்களிடமிருந்து இருந்து திரட்டும் தகவல்களை விளம்பர நிறுவனங்கள் உட்பட பல நிறுவனங்களுக்கு விற்பனை செய்துவருமானமீட்டிவருகின்றது

எனவே அங்கத்தவர்களின் விபரங்கள் மூன்றாவது தரப்பினருக்கு செல்வதை தடுக்க முடியாததென்பது சுட்டிக்காட்டத்தக்கது


பேஸ்புக்கை பாதுகாப்பாக பயன்படுத்துவதற்கான சில ஆலோசனைகள்

1. எவரும் பார்க்கக்கூடாதென நீங்கள் எண்ணுகின்ற புகைப்படத்தை பேஸ்புக்கில் பதிவேற்றம் (upload) செய்யாதீர்கள் .
2. நிஜவாழ்வில் நண்பர்கள் வட்டாரத்தில் இல்லாதவர்களை பேஸ்புக்கில் நண்பர்களாக சேர்த்துக்கொள்ளாதீர்கள்
3. பேஸ்புக் இணையத்தளத்திலுள்ள பாதுகாப்பு கட்டமைப்பை (Privacy settings) பயன்படுத்தும் வகையில உங்களின் அறிவை வளர்த்துக்கொள்ளுங்கள் .நமது  Password ஐ மூன்றாம் தரப்பினரிடம் முடியுமானவரையில் வழங்கக்கூடாது
4. பெற்றோர்கள் இணையத்தளத்தில் தமது பிள்ளைகளின் நடவடிக்கை தொடர்பாக விழிப்புணர்வுடன் இருப்பதுடன் தமது பார்வைக்குப்படும் இடத்திலேயே இல்லங்களில் கணனிகளை வைத்திருக்கவேண்டும்
குறிப்பு இது ஏனைய சமூக இணையத்தளங்களுக்கும் பொருந்தும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது

பேஸ்புக் தவிர 100ற்கு மேற்பட்ட சமூக இணையத்தளங்கள் உள்ளன .பேஸ்புக்கிற்கு முன்னதாக ஆரம்பிக்கப்பட்ட Myspace இணையத்தளம் ஆரம்பத்தில் மிகவும் பிரபல்யமாக இருந்தது எனினும் 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இதனை பேஸ்புக் முறியடித்தது அதற்கு பின்னர் பேஸ்புக்கின் வளர்ச்சி அபரிமிதமானது .பேஸ்புக் அளவிற்கு இல்லாவிட்டாலும் Twitter Orkut Buzz Hi5 tagged ஆகியனவும் எம்மவர்களிடையே ஒரளவிற்கு அறியப்பட்ட சமூக இணையத்தளங்களாக உள்ளன

இறுதியாக ஒன்றைக் கூற வேண்டுமெனில் எமது வாழ்க்கைக்கு நாமே பொறுப்புக்கூறவேண்டியவர்கள் ஆகவே நாம் நம்மை எப்படி நிஜவாழ்விலும் இணையத்தளங்களிலும் வெளிப்படுத்துகின்றோமே அதுவே எமக்கு சாதகமான அன்றேல் பாதகமான விளைவுகளைக்கொண்டுவருகின்றது எனவே ஒழுக்க விழுமியங்களைப் பின்பற்றி சிந்தித்துச் செயற்படுவதன் மூலம் பாதக விளைவுகளை தவிர்த்துக்கொள்ளமுடியும் என்பதே எனது கருத்தாகும் .
  


http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27669


.