தங்கம் வென்ற தமிழன் பிரசாந்த் செல்வத்துரை
அருண் ஆரோக்கியநாதர்
இலங்கையை பூர்வீகமாகக் கொண்டவர் அவுஸ்திரேலிய அணிக்காக சாதனை
தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா என்ற வசனத்தை ஒருமுறையேனும் கேட்காதவர்கள் குறைவாகத்தான் இருக்கமுடியும்
தமிழர்களின் தலைகளை நிறுத்தி பெருமை கொள்ளும் படியான சாதனைகளை விளையாட்டுலகில் நிலைநாட்டிய பல வீரர்கள் இருக்கின்றார்கள் வெறும் சாதனைகள் அல்ல உலக சாதனைகளை அவர்கள்படைத்திருக்கின்றனர்
கிரிக்கட்டில் நம்ம முத்தையா முரளிதரன் உலக சாதனைகள் பலவற்றை நிலைநாட்டிய நிலையில் செஸ் விளையாட்டில் விஸ்வநாதன் ஆனந்த கெரம் விளையாட்டில் மரிய இருதயம் ஆகியோர் உலக சம்பியன் பட்டங்களை வென்று எல்லையில்லா மகிழ்ச்சியையும் அளவற்ற பெருமையையும் சேர்த்திருக்கின்றனர்
விளையாட்டில் சாதிக்கும் தமிழர்கள் பட்டியலில் அண்மைக்காலமாக பலரது அவதானத்தையும் ஈர்த்திருப்பவர் அவுஸ்திரேலிய தேசிய ஜிம்னாஷ்டிக் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரசாந்த் செல்லத்துரை
டில்லியில் நடைபெற்ற 19வது பொதுநலவாய விளையாட்டுப்போட்டிகளின் போது அவுஸ்திரேலிய அணிக்காக இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றுகொடுத்து பெருமை சேர்த்ததன் மூலமே அனைவரது கவனத்தையும் பிரசாந்த செல்லத்துரை ஈர்த்திருக்கின்றார்.
டெல்லி கொமன்வெல்த் விளையாட்டு விழாவில்; இரு போட்டிப் பிரிவுகளில் கிட்டத்தட்ட 15,000 புள்ளிகள் வரை பெற்றள்ளார் செல்லத்துரை. ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளில் இந்த அளவுக்கு அதிக பட்ச புள்ளிகள் கிடைப்பது மிகவும் அரிதான விஷயம். அந்த அளவில் செல்லத்துரை ஒரு சாதனையே படைத்துள்ளார் என்றால் மிகையல்ல
கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த ஜிம்னாஷ்டிக் குழுப் போட்டியில் பிரசாந்த் செல்லத்துரை, ஜோசுவா ஜெபரிஸ், சாமுவேல் ஆப்போர்ட், லூக் விவடோவஸ்கி, தாமஸ் பிச்லர் ஆகியோர் அடங்கிய குழு தங்கம் வென்றது. ஜிம்னாஸ்டிக்ஸில் அவுஸ்திரேலியாவுக்குக் கிடைத்த முதல் கொமன்வெல்த் தங்கம் இதுவென்பது குறிப்பிடத்த்ககது
இதனைத்தவிர ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் மிகவும் சிரமமான போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் ''பொம்மல் ஹோர்ஸ்'' என்னும் பிரிவில் கலந்துகொண்ட பிரசாந்த், மிகவும் கூடுதலாக 15,500 புள்ளிகளைப் பெற்று தங்கப் பதக்கத்தை வென்று தனது தங்கப்பதக்க எண்ணிக்கையை 2ஆக உயர்த்திக்கொண்டார்.
.
1986 ஆம் ஆண்டு ஒக்டோபர் 01 ஆம் திகதி அவுஸ்ரேலியாவில் பிறந்த பிரசாந்த் பிரசாந்த் தனது ஆற்றல்வெளிப்பாடுகளை முடித்தவுடனேயே அதனைப் பார்த்த அவரது பயிற்சியாளரான சியான் சொங் லியாங் மிகுந்த ஆரவாரத்துடன் அவரை கட்டித்தழுவிக் கொண்டார்.
குதிரை வீரன் என்று அவுஸ்திரேலிய வீரர்களால் செல்லமாக அழைக்கப்படும் 24வயதுடைய பிரசாந்த செல்லத்துரை அவுஸ்திரேலிய ஜிம்னாஸ்டிக் அணியிலுள்ள வீரர்களிலேயே குறைந்த உயரம் கொண்டவர் இவரது உயரம் 1.50 மீற்றர் என்பது சுட்டிக்காட்டத்தக்கது
ரேடியோ கிராபி மாணவரான பிரசாந்தின் பெற்றோர் இலங்கையை பூர்வீகமாக கொண்ட தமிழர்களாவர் 1983ம் ஆண்டில் இலங்கையில் இருந்து அவுஸ்திரேலியாவிற்கு புலம் பெயர்ந்து சென்றவர்கள் தற்போது சிட்னியில் வசித்துவருகின்றனர் .பிரசாந்திற்கு இரு இளைய சகோதரிகளும் உள்ளமை குறிபபிடத்தக்கது
கடந்த மெல்போர்ன் காமன்வெல்த் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் செல்லத்துரை. இந்த முறை தங்கத்துடன் திரும்புவேன் என சபதமே போட்டிருந்தாராம். சொன்னபடி ஒரு தங்கப்பதக்கததையல்ல இரண்டு தங்கங்களை வென்றெடுத்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்
அவுஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்தது செல்லத்துரைக்கு எளிதாக இருக்கவில்லையென தெரியவருகின்றது கடும் போராட்டங்கள், கடின பயிற்சி , கடுமையான முயற்சிக்குப் பின்புதான் அணியில் இடம் கிடைத்தததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன
சவால்களுக்கு மத்தியில் சாதிக்கும் தமிழர்கள் வரிசையில் இணைந்து கொண்டு பெருமைசேர்க்கும் பிரசாந்திற்கு கேசரி ஸ்போர்ட்ஸும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கின்றது
No comments:
Post a Comment