நல்லிணக்கம் இல்லாதவிடத்தில் தேசிய ஒற்று மையை ஊக்குவிக்கின்ற அரசின் முயற்சிகள் சீர் குலைந்து போகும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளமையை அனைத்து தரப்பினரும் மிக வும் கவனமாகக் கருத்தில் கொள்ளவேண்டியது அவசி யமாகும்.
கடந்த 9 ஆண்டுகளாக அரசியலில் இருந்து ஒதுங்கி யிருந்து விட்டு கடந்த ஜனாதிபதித் தேர்தலுடன் மீண்டும் பொது அரங்கிற்குத் திரும்பியிருந்த சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க ஆட்சியிலிருந்த ஜனாதிபதிகளில் இனப்பிரச் சினைக்குத் தீர்வு காண்பதற்கு ஓரளவேனும் அர்ப்பணிப்புடன் முயற்சியயடுத்த ஒரு தலைவராகப் பார்க்கப்படுபவர்.
கடந்த சில ஆண்டுகளில் முதற்றடவையாக சர்வதேச ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியாக சில தினங் களுக்கு முன்பாக இந்துப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே நல்லிணக்கமானது இலங்கையின் நலன்களுக்கு மிகவும் அத்தியாவசியமானது என்ற கருத்தை வலியுறுத்தியிருக்கின்றார்.
தனது காலத்திலே இலங்கையின் இனப்பிரச்சினை யைத் தீர்ப்பதற்கு முடியாமற்போனமை தொடர்பில் பலமுறை கவலைகளை வெளிப்படுத்தியிருந்த சந்திரிகா, சில ஆண்டுகளுக்கு முன்பாக இலங்கை மன்றக் கல்லுரியின் கேட்போர் கூடத்தில் நீதியரசர் பாலகிட்ணர் நினைவுப் பேருரையை ஆற்றியபோது சனல் 4 தொலைக் காட்சியில் ஒளிபரப்பப்பட்ட இறுதிப் போர் அவலங்களைப் பார்த்துவிட்டு தனது மகன் விமுக்தி இலங்கையர் என்று சொல்வதற்கு வேதனைப்படுவதாகக் கண்ணீர் மல்கக் கூறியிருந்தார்.
சிங்களத் தலைவர்களில் முக்கியமான ஒருவராகப் பார்க்கப்படுபவரான சந்திரிகாவின் வாயிலிருந்து இத்தகைய வார்த்தைகள் வெளிவந்தபோது அப்போது ஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக் அரசின் அடிவருடி களும் ஊடகங்களும் சந்திரிகாவை கடுமையாகச் சாடியிருந்தமை சுட்டிக்காட்டத் தக்கவை. நல்லிணக்கம் தொடர்பான ஜனாதிபதியின் விசேட செயலணிக் குழுவிற்குத் தலைமைதாங்குவதற்காக விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்றுச் செயற்படும் சந்திரிகா, இந்தத் தடவையேனும் உண்மையான நல்லிணக் கத்தைக் காண்பதை உறுதிசெய்வாரா என்பதற்குக் காலம்தான் பதில்சொல்ல வேண்டும்.முன்னைய மஹிந்த அரசின் காலத்தில் நல்லிணக் கம் என்பது ஏதோ ஒரு கண்ணாம்பூச்சி விளையாட் டுப்போன்றே கையாளப்பட்டது.
சர்வதேச மட்டத்தில் இலங்கை பற்றிப் பேசுகின்றபோதோ அன்றேல் சர்வ தேச பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகைதரும்போதோ மூலையில் கிடப்பில் போடப்பட்டிருந்த நல்லிணக்கத் தைத் தூசுதட்டி முன்னுரிமைப்படுத்திப் பேசுவதும் கவனம் திசைமாறியதாக உணரும்போது கிடப்பில் போடப்படுவதுமாகவே இருந்துவந்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஈட்டிய அசாத்திய போர் வெற்றி மஹிந்த அரசின் கண்களைக் குருடாக்கி யிருந்ததுடன் இந்த நாட்டில் பிரச்சினையயான்று உள்ளது, அதற்கு அரசியல் தீர்வுடன் கூடிய நல்லிணக் கமே அவசியம் என்ற உண்மையை மறைத்து அபி விருத்தியால் எல்லாப்பிரச்சினைக்கும் தீர்வுகண்டுவிடமுடி யும் என்ற மாயத்திரையை விரித்திருந்தது. ஆனால், இலங்கையில் தமிழ் பேசும் மக்கள் பொருளாதார நெருக்கடிகளைத் தாண்டி பல்வேறு அடக்குமுறைகளை எதிர்நோக்கியிருக்கின்றனர். இதற்குத் தீர்வுகாணப்படு வது நாட்டின் நலனுக்கு அவசியமானது என்பதை கடந்த தேர்தலில் வாக்குகள் மூலமாக தமிழ்பேசும் மக்கள் எடுத்துணர்த்தியிருந் தனர்.
இந்நிலையில், மஹிந்தவைத் தோற்கடித்து புதிய அரசை அமைப்பதில் முக்கிய பாத்திரங்களை வகித்த சந்திரிகா, ரணில், மைத்திரி ஆகியோர் இலங்கை முன்னோக்கிச் செல்வதற்கு அவசியமான தேசிய ஒற்றுமையைக் கட்டியயழுப்புவதற்கு நல்லிணக்கம் மிகவும் இன்றியமையாதது என்பதை உணர்ந்து கருத்துகளைவெளியிட்டு அதற்கமைவாக சில நடவடிக் கைகளையும் எடுத்துள்ளமை ஆரம்பகட்ட நம்பிக் கையை அளிப்பதாக அமைந்துள்ளபோதும் இன்னமும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டியது மிகவும் அவசியமாகும்.
ஒவ்வொரு அரசியல் தலை வர்களும் தேர்தல் வெற்றியை மாத்திரம் குறிவைத்து காய்நகர்த்துவார்களாக இருப்பின், ஒருசில நல் லெண்ண சமிக்ஞைகளுடன் நல்லிணக்கம் பற்றிய எதிர்பார்ப்பு மருகிவிடலாம். அரசியல்வாதிகள் என்ற நிலையில் இருந்து சிங்கப்பூரின் லீ குவான் யூ போன் றும் தென்னாபிரிக்காவின் நெல்சன் மண்டேலா போன் றும் தேசத் தலைவர்கள் என்று தம்மை உயர்த்திக் கொண்டு தூரதரிசனத்துடன் தீர்மானங்களை எடுக் கும்போதே உண்மையான நல்லிணக்கம் என்பது நடைமுறைச் சாத்தியமாகும்.

No comments:
Post a Comment