ஆக்கம்: அருண் ஆரோக்கியநாதர்
இலங்கையின் அரசியல் யாப்பில் செப்டம்பர் மாதத்தில் பெரும் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தற்போது கருத்துக்கள் வெளியாகிக்கொண்டிருக்கின்றன.
ஒருவர் இருதடவைகள் மாத்திரமே ஜனாதிபதியாக பதவி வகிக்க முடியும் என தற்போதுள்ள நிலையை மாற்றியமைத்தல் உத்தேச அரசியல்யாப்பு மாற்றத்தில் முக்கியத்துவம் பெறுமென நம்பப்படுகின்றது.
உத்தேச அரசியல்யாப்பு திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கத்தரப்பில் உள்ளவர் மத்தியிலே தெளிவற்ற நிலை காணப்படுவதை ஐக்கியதேசியக்கட்சியுடனான பேச்சுக்களின் போது காணமுடிந்ததாகவும் இதுதொடர்பில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக அரசாங்கத்திடமிருந்து எழுத்துமூலமான யோசனைகளை எதிர்பார்த்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கடந்த வாரம் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்திருந்தார்.
குடும்பத்தை மையப்படுத்திய அரசியல் யாப்பாக அன்றி மக்கள் மயப்படுத்தப்பட்ட மக்களுக்கு நன்மைதரக்கூடிய அரசியல் யாப்பை உறுதிப்படுத்தும் ஒரேநோக்குடனேயே அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைக்கு சென்றிருந்ததாகவும் வேறு எந்த நோக்கமும் தமக்கு இருக்க வில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்..
ஆனால் இந்த செய்தியாளர் மாநாடு இடம்பெற்று ஒருநாள் கடக்க முன்பாகவே அரசியல்யாப்பு திருத்தங்களுக்காக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்த தீர்மானம் காரணமாக அரசியல்யாப்பை திருத்தியமைப்பதற்கு தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தை அரசாங்கம் பெற்றிருந்தது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இடம்பெற்ற பாராளுமன்றத்தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 144 ஆசனங்களையும் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 81 ஆசனங்களையும் பெற்றிருந்தன. தேர்தலுக்கு முன்பாகவே அரசியல் யாப்பில் மாற்றங்களைக் கொண்டுவருவது தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டு வந்த ஆளுங்கட்சிக்கு தேர்தலில் மூன்றில் இரண்டு அறுதிப்பெரும்பான்மை கிட்டவில்லையாகினும் பிரபா கணேசன் திகாம்பரம் ஆகியோரதும் ஸ்ரீமுஸ்லிம் காங்கிரஸின் ஆதரவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றிருக்கின்றது
இந்த நிலையில் அரசியல்யாப்பில் மேற்கொள்ளவுள்ள உத்தேசத் திருத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் இனிமேலும் ஜக்கிய தேசியக்கட்சிக்கு எழுத்துமூலமாக யோசனைகளை வழங்கி அதன் ஆதரவைக் கோரும் என எதிர்பார்க்கமுடியாது
.
; அரசியல் யாப்பில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் தொடர்பில் பொதுமக்கள் அறிந்திருப்பது முக்கியமானது மக்கள் மத்தியில் இவ்விடயம் கலந்தாலோசிக்கப்படவேண்டும் ஏனெனில் இது அவர்களது எதிர்காலம் தொடர்பான விடயம் என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டிருந்தார் .
இதனைவிதமான கருத்தை கடந்த வாரம் கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக சாட்சியமளித்த இலங்கையின் சிரேஷ்ட இராஜதந்திரிகளில் ஒருவரான ஜயந்த தனபாலவும் சுட்டிக்காட்டியிருந்தார்
அரசியல்யாப்பில் மேற்கொள்ளவுடவுள்ள மாற்றங்கள் தொடர்பாக மக்கள் மத்தியில் கருத்தாடல்கள் இடம்பெறவேண்டும் இதற்கு ஆகக்குறைந்தபட்டம் சர்வகட்சி பிரதிநிதிகள் குழுவினரால் தயார் செய்யப்பட்ட யோசனைகளது அறிக்கைவெளியிடப்படவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
அரசியல்யாப்புத்திருத்தங்கள் பற்றி மக்கள் எந்தவகையிலும் அக்கறை காண்பிக்கவில்லை அவர்கள் அடிப்படைத்தேவைகளைப் பற்றியே கேட்கின்றனர் என ஆணைக்குழுவின் தலைவர் சித்தராஞ்சன் டி சில்வா குறிப்பிட்டார். கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழுவினர் அண்மையில் வவுனியாவிற்கு விஜயம் செய்திருந்தபோது அங்கு வந்திருந்த மக்களில் 99வீதமானவர்கள் தம்மை சமமானவர்களாக மதிக்கவேண்டும் சம உரிமைவேண்டும் என்றே வலியுறுத்தியதாக குறிப்பிட்ட ஆணைக்குழுத்தலைவர் அவர்களுக்கு அரசியல்யாப்பு திருத்தங்கள் தொடர்பிலோ அன்றேல் தம்பகுதியில் மேற்கொள்ளப்படும் பாரிய அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பிலோ எவ்வித அக்கறையும் கிடையாது எனத் தெரிவித்திருந்தார்
'அரசியல்யாப்பே எந்தவொரு நாட்டினதும் சட்டத்தின் அடிநாதம்'
இதற்கு பதிலளித்த ஜயந்த தனபால சமமாக கருதப்படவேண்டும் என்ற
ஆதங்கம் அரசியல்யாப்புடனேயே தொடர்புபட்டது ஏனென்றால் அரசியல்யாப்பே எந்தவொரு நாட்டினதும் சட்டத்தின் அடிநாதமாக காணப்படுகின்றது மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கிய அரசியல்யாப்பின் உருவாக்கமும் நடைமுறைப்படுத்தலுமே மக்களின் அடிப்படைத்தேவைகளைப் பூர்த்திசெய்யும் என வலியுறுத்தினார்.
இதன்போது குறுக்கிட்ட ஆணைக்குழுத்தலைவர் வவுனியாவில் மக்களைச் சந்தித்த போது அவர்கள் அரசியல் யாப்புதிருத்தங்கள் எவ்வித நாட்டமும் காட்டவில்லை அது அவர்களைப்பொறுத்தவரையில் முக்கியமில்லாததொன்றாகவே இருந்தது அவர்களுக்கு அதில் அக்கறை இல்லை மக்கள் வேண்டுவதெல்லாம் சமமான தொழில் வாய்ப்புக்கள் கல்வியில் சமவாய்ப்புக்கள் எனதெரிவித்ததுடன் நிலப்பிரச்சனை தொடர்பிலும் மக்கள் கூறியிருந்தனர் நிலப்பிணக்குகள் தமக்கு சுட்டிக்காட்டப்பட்ட் முக்கியமான விடயம் எனக்குறிப்பிட்டார்.
; அரசியல் யாப்புதிருத்தங்கள் தொடர்பில் மக்களுக்கு அக்கறையில்லை அவர்கள் சம உரிமையையே வேண்டிநிற்பதாக ஆணைக்குழுத்தலைவர் திரும்ப திரும்ப கூறியபோது ஜயந்த தனபால மீண்டுமாக தனது கருத்தை நியாயப்படுத்தினார் அரசியல் யாப்பு எந்தவொரு நாட்டினதும் சட்டத்தின் அடிநாதமாக திகழ்கின்றது மக்கள் தொடர்பில் அரசாங்கதிற்குள்ள உரிமைகளும் கடமைகளும் அரசியல்யாப்பின் மூலமாகவே உறுதிசெய்யப்படவேண்டும் .இந்த விடயங்கள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படாமையானது மக்களின் அபிலாஷைகளை காட்டிக்கொடுக்கின்ற விடயமாகவே அமையும் அந்த வகையில் எவ்வித தாமதமுமின்றி இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என குறிப்பிட்டார்.
தற்போது இலங்கைக்கு தேவையானது அரசியல்யாப்பு மாற்றமா அன்றேல் புத்தம் புதிய அரசியல் யாப்பா என்ற வாதப்பிரதிவாதங்கள் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது.தற்போது எவ்வாறான நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ளும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைத்தலைவரும் பிரபல அரசியல் ஆய்வாளருமான கலாநிதி கீத பொன்கலன் அவர்களை வினவியபோது
'மூன்றில் இரண்டு பெரும்பான்மை அரசாங்கத்திற்கு இருப்பதன் காரணமாக தாங்கள் விரும்பிய எதனையும் செய்யக் கூடிய இயலுமை அரசாங்கத்திற்கு காணப்படுகின்றது என்பது மறுக்கப்படுவதற்கில்லை வரலாற்றை எடுத்துப்பார்ப்போமாக இருந்தால் அரசாங்கத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் புதிய யாப்புக்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன 1972ம் மற்றும் 1978ம் ஆண்டுகளிலும் புதிய யாப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன ஏனெனில் அப்போதைய அரசாங்கங்களுக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலம் காணப்பட்டது .அதில் வரலாற்று ரீதியான என்கின்ற முக்கியத்துவம் காணப்படுகின்றது
ஏனெனில் புதிய யாப்பொன்று அறிமுகப்படுத்தப்படுகின்றபோது அந்த யாப்பு அந்த தனிமனிதனுடைய அல்லது அந்த அரசாங்கத்தினுடைய யாப்பாக பார்க்கப்படுவதற்கான ஒருசந்தர்ப்பம் இருக்கின்றது உதாரணமாக 1978ம் ஆண்டு யாப்பு ஐக்கிய தேசியக்கட்சியினுடைய யாப்பு இலங்கை யாப்பு என பார்க்கப்படுவதிலும் பார்க்க அதிகமாக ஜே ஆர் ஜெயவர்த்தனவின் யாப்பு என்று பார்க்கப்படுகின்றது .அந்தவகையில் அவருடைய புகழ் அவருடைய வரலாறு அவருடைய பங்களிப்பு என்று பார்க்கப்படுவதற்கான சந்தர்ப்பம் இருக்கின்றது. அதனடிப்படையில் நோக்குகின்றபோது மஹிந்த ராஜபக்ஸவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கின்றபோது புதிய யாப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான ஒரு ஆர்வம் ஒரு ஆசை இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கும் .ஏனெனில் அது மஹிந்த ராஜபக்ஸவின் பங்காக இந்தநாட்டிற்கு அவர் ஆற்றிய சேவையாக வரலாற்று ரீதியாக பார்க்கப்படுவதற்கான ஒரு சந்தர்ப்பம் இருக்கின்றது ஆனால் அதற்கிருக்கின்ற சிக்கல் என்னவெனில் புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதாக இருந்தால் இப்போதிருக்கின்ற முறைமையில் இருந்து முழுமையாக மாறிச்சென்று வேறொரு முறைமைக்கு செல்ல வேண்டும் .அவ்விதமில்லாமல் இப்போதிருக்கின்ற அதே பண்புகளை வைத்துக்கொண்டு புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்துகின்றோம் எனக்கூறுவது சற்று நகைச்சுவையான விடயமாகத்தான் இருக்கும். இப்போதிருக்கின்ற நிலையில் ஜனாதிபதி முறைமையை மாற்றிக்கொள்வதற்கான எந்தவிதமான ஆர்வமும் அரசாங்கத்திற்கு காணப்படவில்லை
ஆகவே புதிய யாப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதென்ற விருப்பத்தை செயற்படுத்துவதாக இருந்தால் ஜனாதிபதி முறைமையில் இருந்து பாராளுமன்ற முறைமைக்கு மாறிச்செல்வது என்றவிதமான மாற்றங்கள் உட்படுத்தப்படவேண்டும். அவ்விதமில்லாமல் புதிய யாப்பொன்றை நாம் அறிமுகப்படுத்தினோம் என்று கூறுவது சற்றுக்கடினமானதாகும் ஆகவே என்னுடைய எதிர்பார்ப்பின் படி தற்போதுள்ள யாப்பில் மேலும் சில திருத்தங்கள் செய்யப்படுவதற்கான சாத்தியம் இருக்கின்றதே ஒழிய புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியம் மிகவும் குறைவானதென்று நான் நினைக்கின்றேன்' என கலாநிதி கீத பொன்கலன் பதிலளித்தார்
1978ல் அறிமுகப்படுத்தப்பட்ட இலங்கையின் தற்போதைய அரசியல்யாப்பானது இறுக்கமானதொரு ஆவணமாக அடிப்படையில் தோன்றினாலும் 32வருடகாலப்பகுதிக்குள்ளாக ஏற்கனவே 17முறை திருத்தங்களுக்கு உட்பட்டுள்ளநிலையில் அது பலவீனமானதொரு அரசியல்யாப்பா என்ற கேள்விகளையும் சிலர் எழுப்பமுடியும்.
பலவீனமான அரசியல் யாப்பா அடிக்கடி திருத்தங்களுக்குள்ளாகும் என்ற கேள்விகளும் சிறந்த அரசியல்யாப்பு திருத்தங்களுக்குள்ளாவதில்லை என்ற கருத்துக்களும் அரசியல் யாப்பை பலவீனம் என்பதுடன்தொடர்புபடுத்திப்பார்க்க முடியுமா என்ற கேள்விகளும் எமது அரசியல்யாப்பை குறித்து பரந்துபட்டு சிந்திப்பவர்களின் மனதில் தோன்றக்கூடும்.
உலகிலுள்ள முன்னணி ; அன்றேல் நாம் அதிகமாக அறிந்த நாடுகள் சிலவற்றில் அரசியல்யாப்புக்கள் திருத்தங்களுக்குள்ளான தடவைகளையும் முறைமைகளையும் இங்கே ஆராய்ந்து பார்ப்பது இந்தக்கேள்விகளுக்கு ஏதோவகையில் விடைதருமா ?
பிரித்தானியாவின் அரசியல்யாப்பானது எழுதப்படாததொன்றாக இருக்கின்ற காரணத்தால் அதிலே மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை சரியாக பகுத்தறிவது கடினமானதென்ற வகையில் அதனை விட்டு விட்டு ஏனையவற்றில் கவனம் செலுத்தலாம்.
1787ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17ம்திகதி அறிமுகப்படுத்தப்பட்ட ஐக்கிய அமெரிக்காவின் அரசியல்யாப்பு இதுவரையில் 27தடவைகள் மாத்திரமே திருத்தங்களைக் கண்டிருக்கின்றது இதில் முதல் பத்துத்திருத்தங்களும் உரிமைபற்றிய சட்டங்கள் (Bill of Rights) என பொதுவாக அறியப்படுகின்ற இவை 1791ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தன.அமெரிக்க அரசியல் யாப்பிலுள்ள 27திருத்தங்களில் கடைசித்திருத்தமான 27வது திருத்தம் 1992ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டது .தென் ஆபிரிக்காவின் தற்போதைய அரசியல்யாப்பு 1996ம் ஆண்டு அறிமுகப்படு;த்தப்பட்டது இது ஏற்கனவே 16தடவைகள் திருத்தங்களைச் சந்தித்துள்ளது 2009ம் ஆண்டில் மாத்திரம் மூன்று திருத்தங்களைக் கண்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது .
தென் ஆபிரிக்காவில் தற்போதுள்ள அரசியல்யாப்பிற்கு முன்பாக 1909இ1961இ1983 மற்றும் 1993ம் ஆண்டுகளில் பல அரசியல்யாப்புக்கள் இருந்துள்ளன.இது இலங்கையைப் போன்ற கிட்டத்தட்ட பிரதிபலித்துநிற்கின்றது
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் அரசியல்யாப்பு 1950ம் ஆண்டில் நடைமுறைக்கு வந்தது இலங்;கையைப் போன்றே நெகழ்ச்சித்தன்மையற்ற அரசியல்யாப்பாக இது கருதப்பட்டபோதிலும் 60 ஆண்டு காலப்பகுதியில் 94 தடவைகள் அதில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.இறுதித்தடவையாக 2006ம் ஆண்டில் திருத்தம் கொண்டுவரப்பட்ட இந்திய அரசியல்யாப்பானது இறைமையுள்ள சுதந்திர நாடுகளில் எழுத்தில் எழுதப்பட்ட உலகின் நீண்ட அரசியல்யாப்பாக கருதப்படுகின்றது இந்திய அரசியல்யாப்பில் 395 அத்தியாயங்கள் (Articles) உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.
உலகின் மிக அதிக மக்கள் தொகைகொண்ட நாடான சீனாவின் அரசியல்யாப்பு ஏனைய முன்னணிநாடுகளின் அரசியல்யாப்புக்களிலும் குறைந்த கவனத்தையே பெற்றிருக்கின்றது சீனாவின் தற்போதைய அரசியல்யாப்பு 1982ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதுடன் அதில் 4திருத்தங்கள் இதுவரையில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
.
அவுஸ்திரேலியாவின் தற்போதைய அரசியல் யாப்பு 1900ம் ஆண்டில் ஐக்கிய இராஜ்ஜியத்தால் உருவாக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட்டது அவுஸ்திரேலியாவின் அரசியல்யாப்பை திருத்துவதற்கான யோசனைகள் 44தடவைகள் முன்வைக்கப்பட்டபோதிலும் 8தடவைகள் மாத்திரமே வெற்றியளித்துள்ளன.
உலகின் இரண்டாவது பெரிய நாடான கனடாவின் அரசியல்யாப்பு 1982ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது .பத்துதடவைகள் அதில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன கடைசியாக செய்யப்பட்ட மாற்றம் 2001ம் ஆண்டில் இடம்பெற்றது.
சோவியற் ஒன்றியத்தின் சிதைவின் பின்னரும் உலகில் பரப்பளவில் மிகப்பெரிய நாடாக திகழும் ரஷ்யாவின் தற்போதை அரசியல்யாப்பு 1993ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதுவரையில் ஒருதடவை மாத்திரமே 2008ம் ஆண்டில் அது திருத்தத்திற்குள்ளாகியுள்ளமை இணையத்தளத்தேடல்களின் மூலம் அறியமுடிகின்றது
அரசியல் யாப்பில் செய்யப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் அது நல்லதா கெட்டதா அன்றேல் வலுவானதா பலவீனமானதா என்பதைத் தீர்மானிக்க முடியாது என்பது தெளிவாகின்றது
1978ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் ஏழாம் திகதி இலங்கையின் தற்போதைய அரசியல்யாப்பு அறிமுகப்படுத்தப்பட்டது இதில் 16திருத்தங்கள் ஐக்கியதேசியக்கட்சியின் ஆட்சிக்காலத்திலும் 17வது திருத்தம் சந்திரிக்காவின் தலைமையிலான பொதுஜன ஐக்கிய முன்னணியின் காலத்திலும் மேற்கொள்ளப்பட்டது
தற்போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு அரசாங்கத்தினால் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள உத்தேச மாற்றங்கள் தமிழ் பேசும் சிறுபான்மை மக்களுக்கு ஏதேனும் நன்மைகளைக் கொண்டுவருமா என கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைத்தலைவர் கலாநிதி கீத பொன்கலனிடம் வினவியபோது
'தற்போது முன்னெடுக்கப்படுகின்ற மாற்றங்களில் இனப்பிரச்சனைக்கான தீர்வு விடயத்தில் பாரதூரமான புதிய விடயங்கள் எதுவும் சேர்த்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கவில்லை உதாரணமாக அதிகாரத்தை பரவலாக்குவதற்கான நியாயமான ஒரு உள்ளடக்கம் இம்முறை மாற்றங்களில் சேர்து;துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கவில்லை ஏனெனில் தற்போதுள்ள அரசியல் சூழ்நிலை அதற்கு சாதகமானதாக இல்லை குறிப்பாக தமிழ்தரப்பில் இருந்து வரக்கூடிய அழுத்தங்கள் முழுமையாக இல்லாமல் போயிருக்கின்றது என நான் நினைக்கின்றேன் ஆயுதப் போராட்டம் இருக்கும் வரையில் ஒருவிதமான அழுத்தம் காணப்பட்டது ஆயுதப் போராட்டம் இல்லாமல் போனதன் பின்னர் அரசியல் அழுத்தம் இருந்திருக்க வேண்டும் ஆனால் தற்போதைய நிலையில் பார்க்கின்றபோது தமிழ்த்தரப்பில் இருந்து எந்தவிதமான அழுத்தங்களும் செயல்பாடுகளும் காணப்படவில்லை என்பதன் காரணமாக அரசாங்கத்தின் மீது எந்தவிதமான அழுத்தமும் இருக்கவில்லை அதன் காரணமாகவும் இந்த விருப்பத்தின் பற்றாக்குறை காரணமாகவும் அவ்விதமான ஒரு ஏற்பாடு சிறுபான்மையினருக்கு அல்லது அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்;த்துக்கொள்ளக்கூடிய ஏற்பாடு சேர்த்துக்கொள்ளப்படும் என்று நான் நினைக்கவில்லை இம்முறை அரசியலமைப்பு மாற்றம் அறிமுகப்படுத்தப்படுகின்றபோது இதுதொடர்பாக பாரிய முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதனையும் நான் எதிர்பார்க்கவில்லை' எனச் சுட்டிக்காட்டினார்.
யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் புதிய மாற்றங்கள் தொடர்பாக எதிர்பார்ப்புக்களைக் கொண்டிருந்தாலும் கடந்தகாலத்தில் அரசியல்யாப்பில் உள்ளடக்கப்பட்ட விடயங்களே இன்னமும் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாத நிலையில் புதிதாக ஏதும் நடக்கும் என எதிர்பார்ப்பது யாதார்த்தததை உணர்ந்துகொள்ளாமையாகவே பார்க்கப்படலாம்
அரசியல் யாப்பு என்ற பெயரில் உன்னதமான ஆவணமொன்று இருந்தாலும் அதில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படாவிடின் அதனால் என்ன பயனேற்பட முடியும் என அரசியல்கட்சிகளின் பிரமுகர்களும் ஆய்வாளர்களும் கடந்த காலங்களில் பல்வேறு மேடைகளில் சுட்டிக்காட்டிய கூற்றையே உங்கள் சிந்தனைகளுக்கு இவ்வேளையில் முன்வைக்க விரும்புகின்றேன் .
Tuesday, August 31, 2010
Sunday, August 29, 2010
அமெரிக்க பகிரங்க போட்டிகளில் வெற்றிபெறப்போவது யார்?
அருண் ஆரோக்கியநாதர்
ஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டிகளான அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகள் (US OPEN) இன்று திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளன .
கடந்த சில வருடங்கள் போன்று ஒரு வீரரோ வீராங்கனையோ தொடர்ச்சியாக ஆதிக்கம் செலுத்துகின்ற நிலையை இவ்வருடத்தில் காணமுடியவில்லை என்பதால் ஓகஸ்ற் 30 முதல் செப்டம்பர் 12ம்திகதிவரை நடைபெறும் அமெரிக்க பகிரங்க போட்டிகளில் யார் யார் சம்பியன் பட்டத்தை வெல்வர் என்பதை அனுமானிப்பது கடினமானதாக இருக்கின்றது
இருப்பினும் இவ்வருடத்தில் நடைபெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகள் பிரஞ்சு டென்னிஸ் போட்டிகள் விம்பிள்டன் போட்டிகளின் பெறுபேறுகளைப் பார்க்கின்ற போது ஆடவர் பிரிவில் ரவாயேல் நடாலுக்கு வாய்ப்புக்கள் பிரகாசமாகவுள்ளதாக தோன்றுகின்றது
பிரஞ்சு மற்றும் விம்பிள்டன் பட்டங்களை அடுத்தடுத்து வென்றெடுத்துள்ள ஸ்பெயின் வீரர் ரவாயேல் நடால் இவ்வாண்டு கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சிறப்பாக பிரகாசித்துள்ளதால் அமெரிக்க பகிரங்க போட்டிகளில் சாதிப்பதற்கு வாய்ப்புள்ளது
தரவரிசையில் முதலிடத்திலுள்ள நடால் பிரஞ்சு பட்டத்தை 5தடவைகளும் விம்பிள்டன் பட்டத்தை 2தடவைகளும் அவுஸ்திரேலிய பட்டத்தை ஒருதடவையும் வென்றுள்ள நிலையில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் இன்னும் சம்பியன் பட்டம் வெல்லாத ஒரே போட்டிகளாக அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகள் அமைந்துள்ளதாலும் இம்முறை அதனை வென்றெடுப்பதற்கு கடும் பிரயத்தனத்தை மேற்கொள்வார் என எதிர்பார்க்கலாம்
.
கடந்தாண்டு இறுதிப்போட்டியில் ஆர்ஜன்டின வீரர் ஜுவான் மார்டின் டெல் போர்டோவிடம் அதிர்ச்சிகரமான தோல்வியைத்தழுவியிருந்த சுவிற்சர்லாந்து வீரர் ரொஜர் பெடரர் அண்மைக்காலமாக கிராண்ட்ஸ்லாம் பெரும்போட்டிகளில் கணிக்கப்படவதைப்போன்று அமெரிக்க போட்டிகளிலும் வெற்றிபெறக்கூடிய வீரர்கள் வரிசையில் நடாலுக்கு அடுத்த நிலையில் உள்ளார்
இதுவரை ஆடவர் தரப்பில் 16 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற வீரராக வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ள ரொஜர் பெடரர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக காண்பித்த தொடர்ச்சியான அதி உன்னத ஆற்றல் வெளிப்பாடுகளை கடந்த சிலமாதங்களாக காண்பிக்கவில்லை என்பதே பெரும்பாலான டென்னிஸ் ரசிகர்களது குறையாக இருக்கின்றது
.
அமெரிக்க வீரர் பீற் சாம்பிரஸ் (14தடவைகள் ) வசமிருந்த அதிக கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டங்களை வென்றெடுத்தமைக்கான சாதனையை முறியடித்தமை காரணமாக ஏற்பட்ட போதும் போதும் என்ற உணர்வோ திருப்திநிலையோ பெடரர் வசமிருந்த வெற்றி பெறவேண்டும் என்ற பேரவாவை அன்றேல் இறுதிவரை போராடும் குணத்தை மங்கச்செய்துவிட்டதென குறைப்படுபவர்களும் இருக்கவே செய்கின்றனர்
இவ்வாண்டு ஆரம்பத்தில் இடம்பெற்ற அவுஸ்திரேலிய பகிரங்க போட்டிகளில் பெடரர் சம்பியன் பட்டம் வென்றபோதிலும் ஏனைய கிராண்ட்ஸ்லாம்களில் பெரிதாக சோபிக்க வில்லை என்பதுடன் நடப்பாண்டில் பங்கேற்றுள்ள 9 சம்பியன்ஷீப் போட்டிகளில் இம்மாத சின்சினாட்டியில் நடைபெற்ற போட்டிகளில் மாத்திரமே சம்பியன் பட்டம் வென்றிருந்தார்
எது எப்படி இருந்தாலும் டென்னிஸ் வரலாற்றில் தோன்றிய மிகச்சிறந்த வீரராக தற்போதே அழைக்கப்படுகின்ற ரொஜர் பெடரர் ஏற்கனவே 5தடவைகள் சம்பியன் பட்டம் சூடிய அமெரிக்க பகிரங்க போட்டிகளில் 6வது தடவையும் சம்பியனானலும் ஆச்சரியப்படுவதற்கில்லை
அமெரிக்க பகிரங்க போட்டிகளுக்கு தயார் செய்யும் காலப்பகுதியில் சிறப்பாக ஆற்றல்களை வெளிப்படுத்திய வீரர்களில் பிரித்தானிய வீரர் அன்டி மரே சேர்பிய வீரர் நொவாக் டொச்கோவிக் ஆர்ஜன்டின வீரர் டேவிட் நல்பாண்டியன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்
கனடாவின் மொன்றியல் நகரில் இடம்பெற்ற ரொஜர்ஸ் கிண்ண போட்டியில் நடால் பெடரர் ஆகியோரை வீழ்த்தி சம்பியன் பட்டம் வென்ற பிரித்தானிய வீரர் அன்டி மரே என்றுமில்லாத வகையில் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளின் ஆரம்பத்திற்கு முன்பாக அதிகபட்ட தயார்நிலையில் ஆற்றல்களின் உச்சத்தில் உள்ளதாக அறிவித்துள்ளார்.
இதுவரை கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றிராத அன்டி மரேக்கு இம்முறை அதிக வாய்ப்பு உள்ளதனையே அவரது அண்மைக்கால ஆற்றல் வெளிப்பாடுகள் பறைசாற்றிநிற்கின்றன
டேவிட் நல்பாண்டியன் காயம் காரணமாக இவ்வாண்டில் அனேகமான போட்டிகளில் பங்கேற்கவில்லை
.இருந்தபோதிலும் வொஷிங்டன் நகரில் இம்மாத முற்பகுதியில் இடம்பெற்ற லெக் மெஸான் கிளஷிக் போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்றதன் மூலம் தனது வெற்றிகரமான மீள்வருகையை உறுதிசெய்தார் .
இந்த வகையில் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் வெற்றிபெறக்கூடிய வீரர்கள் வரிசை அவரையும் விட்டுப்பார்க்க முடியாது
உலகளவில் தரப்படுத்தலில் மூன்றாமிடத்திலுள்ள சேர்பிய வீரர் டொச்கோவிக் 2008ம் ஆண்டில் அவுஸ்திரேலிய பகிரங்க சம்பியன் பட்டம் வென்றபின்னர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அரையிறுதிக்கட்டத்தை தாண்டியிராத போதிலும் கவனிக்கப்படவேண்டிய வீரர்களிலொருவர் என்பதில் ஐயமில்லை
ரவாயேல் நடால் இரொஜர் பெடரர் இஅன்டி மரேஇ டேவிட் நல்பாண்டியன் இ நொவாக் டொச்கோவிக் ஆகியோர் ஆடவர் தரப்பில் சம்பியன் பட்டம் வெல்ல அதிக வாய்ப்பைக் கொண்டிருந்தபோதிலும் கடந்தாண்டு சம்பியன் பட்டம் வென்ற வீரரை எளிதில் மறந்துவிடமுடியாது
யாருமே எதிர்பார்க்காதநிலையில் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளில் கடந்தாண்டு சம்பியன் பட்டம் வென்றெடுத்திருந்த ஆர்ஜன்டின வீரர் ஜுவான் மார்டின் டெல் போர்டோ காயம் காரணமாக நடப்பாண்டில் அனேக போட்டிகளில் விளையாடாத காரணத்தால் அவருடைய வாய்ப்புக்கள் தொடர்பாக அதிகமாக டென்னிஸ் விற்பன்னர்கள் எதிர்வுகூறவில்லை .
என்னைப்பொறுத்தவரையில் கிராண்ட்ஸ்லாம் போன்ற பெரும் போட்டிகளில் ஏற்கனவே வெற்றிபெற்ற அனுபவம் அதில் சாதிப்பதற்கு பெரும் சாதகமான விடயமாக இருப்பதால் கடந்தாண்டு வென்றவரை நாம் இலகுவில் தட்டிக்கழித்துவிடவோ மறந்துவிடவோ முடியாது
கடந்த முப்பதாண்டு காலப்பகுதியில் முதன் முறையாக முதற்பத்து வீரர்கள் தரவரிசையில் அமெரிக்க வீரர்கள் இல்லாது போனாலும் அன்டி ரொடிக் தனது நாளில் அபாயகரமான வீரராக கருதப்படுபவர் ஏற்கனவே சம்பயின் பட்டம் வென்ற அனுபவமும் அவருக்கு அணிசேர்ப்பதால் மீண்டும் தன்னை நிருபித்துக்காட்ட முயற்சிக்கக்கூடும்
இதனைத்தவிர சுவீடன் வீரர் ரொபின் சொடர்லிங் ரஸ்ய வீரர் நிக்கலோய் டெவிடென்கோ செக்குடியரசு வீரர் தோமஸ் பேடிச் ஸ்பெயின் வீரர் பெர்னாண்டோ வெர்டாஸ்ஸோ பிரான்ஸ் வீரர் ஜோ வில்விரட் ஸொன்கா ஆகியோரும் தூரத்து வெற்றிவாய்ப்புக் கொண்டவர்களாக உள்ளனர் .
செரீனாவின் விலகலால் சோபையிழந்துள்ள மகளிர் பிரிவு
மகளிர் பிரிவில் முதலிடம் வகிப்பவரான செர்Pனா வில்லியம்ஸ் பாதத்தில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளிலிருந்து விலகிக்கொண்டுள்ளமை மகளிர் பிரிவின் நட்சத்திர அந்தஸ்தில் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டிருக்கின்றது
மகளிர் தரப்படுத்தல் முறைமை ஆரம்பித்து 35வருடகாலமாகிவிட்ட நிலையில் முதலிடத்தில் உள்ள வீராங்கனையொருவர் அமெரிக்க போட்டிகளில் பங்கேற்கத்தவறுவது இதுவே முதன்முறையென்பதும் சுட்டிக்காட்டத்தக்கது
தற்போது டென்னிஸ் விளையாடிவரும் வீராங்கனைகளில் 13கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா வில்லியம்ஸ் அதிக கிராண்ட்ஸ்லாம்களை வென்றவீராங்கனையாக திகழ்கின்ற நிலையில் அவரது இழப்பை ரசிகர்களால் எளிதில் ஜீரணிக்க முடியாது என்பது நிச்சயமாகும். 2003 மற்றும் 2007ல் சம்பியன்பட்டம் வென்ற பெல்ஜிய வீராங்கனை ஜுஸ்தின் ஹெனினும் காயம் காரணமாக விலகிக்கொண்டுள்ளமை மேலும் பின்னடைவை ஏற்படுத்திவிட்டுள்ளது
இவ்வாண்டில் நடைபெற்றுள்ள மூன்று கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் போட்டிகளிலும் விம்பிள்டன் போட்டிகளிலும் சம்பியன் பட்டம் வென்றெடுத்திருந்த செரீனா வில்லியம்ஸ் மற்றும் ஜுஸ்தின் ஹெனின் ஆகியோர் பங்கேற்கமாட்டார்கள் என்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் இம்முறை அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டியில் மகளிர் பிரிவில் சம்பியன் பட்டம் வெல்வதற்கு அதிக வாய்ப்புள்ளவர்களாக எந்த வீராங்கனையையும் குறிப்பிட்டுக்கூற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது
இம்முறை பிரஞ்சு பகிரங்க சம்பியன் பட்டம் வென்றெடுத்திருந்த இத்தாலிய வீராங்கனை பிரான்செஸ்கா ஷியாவோன் ஏனைய போட்டிகளில் அதேவிதமான ஆற்றல்வெளிப்பாடுகளைக் காண்பித்திருக்கவில்லை என்பதால் அவரது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக தென்படவில்லை
கடந்தாண்டு யாருமே எதிர்பாராதவகையில் சம்பியன் பட்டத்தை வென்றெடுத்து ஆச்சரியத்தை ஏற்படுத்திய பெல்ஜிய வீராங்கனை கிம் கிளைஸ்டர்ஸ் வெற்றிவாய்ப்புக்கள் தொடர்பாக உயர்வான நம்பிக்கைகள் காணப்பட்டன .
ஆனாலும் கடந்தவாரம் கனடாவில் இடம்பெற்ற ரொஜர்ஸ் கிண்ண போட்டிகளில் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம்காரணமாக உபாதைக்குள்ளாகி தோல்வியைத்தழுவியமை தற்போது அவரது வெற்றிவாய்ப்புக்கள் தொடர்பில் மட்டுமன்றி பங்கேற்பிலுமே பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது
மகளிர் தரப்படுத்தலில் இரண்டாம் இடத்தை வகிக்கும் வீனஸ் வில்லியம்ஸ் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் போட்டிகளுக்கு தயார்படுத்தலாக நடக்கும் போட்டிகளில் இடது கணுக்காலில் ஏற்பட்ட உபாதை காரணமாக பங்கெடுக்காத போதிலும் அமெரிக்க பகிரங்க போட்டிகளில் பங்கேற்பதை உறுதிசெய்துள்ளார் ஆனால் அவர் பூரண உடற்திடநிலையுடன் பங்கேற்பது குறித்த கேள்விகள் காணப்படுகின்றன
வீனஸ் வில்லியஸ் காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்த நிலையில் விளையாடுவாரேயானால் அவரது வெற்றிவாய்ப்புக்கள் உயர்வாகவே அமையும் என்பதற்கு அவரது கடந்த கால பெறுபேறுகள் சான்றுபகர்கின்றன
இரு தடவை அமெரிக்க பகிரங்க சம்பியன் பட்டங்களை வென்றெடுத்தமை உட்பட வீனஸ் இதுவரை 12 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றெடுத்த அனுபவமும் அவருக்கு பெரும் போட்டிகளில் கைகொடுக்கும் என எதிர்பார்க்கலாம்
இவர்களைத்தவிர ரஷ்ய வீராங்கனைகளான எலேனா டிமென்ரீயேவா இ ஸ்வெட்லானா குஷ்னெற்சோவா இடினாரா ஸபீனா ஆகியோரும் சம்பியன் பட்டத்தை வெல்லக்கூடியவர்களாக கருதப்படுகின்றனர்
தரப்படுத்தலில் மூன்றாது இடத்திலுள்ள டென்மார்க் வீராங்கனை கரலின் வொஸ்னியாஸ்கியும் ஏழாவது இடத்திலுள்ள அவுஸ்திரேலிய வீராங்கனை ஸாம் ஸ்டோஸரும் அண்மைக்காலமாக குறிப்பிடத்தக்க வகையில் திறமைகளை வெளிப்படுத்திவருவதால் அவர்கள் மீதும் ஒரு கண்வைத்திருக்க வேண்டும்
சேர்பிய வீராங்கனைகளான ஜெலினா ஜனுகோவிச் மற்றும் அனா இவானோவிச் ஆகியோர் சில ஆண்டுகளுக்கு முன்னர் காண்பித்த சம்பியன் பட்டம் வெல்லும் ஆற்றலை அண்மைக்காலமாக இழந்துவருவதை அவர்களது பெறுபேறுகள் காண்பித்துநிற்கின்றன
உலகளவில் அதிகம் அறியப்பட்ட ரஷ்ய வீராங்கனையும் அழகுப்பதுமையுமான மரியா ஷரபோவா மூன்று முறை கிராண்ட்ஸ்லாம் சம்பியன் பட்டம் வென்றவர் என்பதை மறந்து விட்டதுபோன்றே தற்போது அவரது பெறுபேறுகள் உணர்த்துகின்றன . டென்னிஸ் ஆற்றல் வெளிப்பாடுகளிலும் விளம்பர மொடலிங் துறையிலேயே அவர் அதிக நாட்டம் காட்டுகின்றாரோ என எண்ணத்தோன்றுகின்றது
முன்னணி வீராங்கனைகளுக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் மற்றும் தொடர்ச்சியாக மகளிர் தரப்பில் ஆற்றல்வெளிப்பாடுகள் நடப்பாண்டில் காண்பிக்கப்படாமையை பார்க்கும் போது இவ்வாண்டில் அதிகமாக அறியப்படாத ஒரு வீராங்கனை சம்பியன் பட்டம் வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தோன்றுகின்றது

KESARI SPORTS/ 25 AUG 10
Wednesday, August 25, 2010
நல்லிணக்கமும் இலங்கையின் எதிர்காலமும்
2009ம் ஆண்டின் முதல் அரையாண்டுப் பகுதியுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டின் முதல் அரையாண்டுப்பகுதியில் இலங்கைக்கு கிடைத்துள்ள வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 16.8வீதத்தால் குறைவடைந்திருக்கின்ற விடயம் பல்வேறு கேள்விகளுக்கு வழிகோலக்கூடும்
2009ம் ஆண்டின் முதல் அரையாண்டுப்பகுதியில் இலங்கைக்கு கிடைத்துள்ள வெளிநாட்டு நேரடி முதலீடுகளின் பெறுமதி 250மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் இவ்வாண்டில் இதே காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 208மில்லியன் அமெரிக்க டொலர்களாக வீழ்ச்சி கண்டுள்ளது .
இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற கடந்தாண்டை விடவும் இவ்வாண்டில் வெளிநாட்டு முதலீடுகள் அதிகரிக்கும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக இருந்திருக்கும் ஆனாலும் கூட ஏன் அவ்வாறு அதிகரிக்க வில்லை என்பது கேள்விக்குரியதாகவே இருக்கின்றது
இது தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பொருளாதார விரிவுரையாளரான சிறிமால் அபேரத்ன கூறுகையில் ' யுத்தம் இந்ப்பிரச்சனையின் ஒரு பகுதி மாத்திரமே நிச்சயமற்ற நிலைமைகள் இன்னமும் காணப்படுகின்றன பொருளாதார கொள்கைகளும் வெளிநாட்டு முதலீடுகளுக்கு சாதகமானதாக காணப்படவில்லை' எனக் குறிப்பிட்டார்
இலங்கையில் மூன்று தசாப்த கால யுத்தம் நிறைவுபெற்ற நிலையில் 2010ம் ஆண்டில் இலங்கை ஒரு பில்லியன் டொலர்களை வெளிநாட்டு நேரடி முதலீடுகளை சாத்தியமான இலக்கென்ற எதிர்பார்ப்பை வெளியிட்டிருந்தது .ஆனபோதிலும் கடந்தாண்டிற்கு ஏறத்தாழ சமானமானதாக 600மில்லியன் அமெரிக்க டொலர்களே இவ்வருடம் கிடைக்ககூடும் என இலங்கை முதலீட்டுச் சபை அதிகாரியொருவர் கருத்துவெளியிட்டிருக்கின்றார்
இவ்வருடத்தின் ஜனவரி முதல் ஜுன் மாதம் வரையிலான காலப்பகுதியில் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையிலான வெளிநாட்டு நேரடி முதலீட்டு திட்டங்களுக்கு அனுமதிவழங்கப்பட்டிருந்தபோதும் 208மில்லியன் அமெரிக்க டொலர்கள் மாத்திரமே இலங்கைக்குள் வந்திருப்பதாக இலங்கை முதலீட்டுச் சபையின் பிரதிப்பணிப்பாளர் நாயகம் ஏ எம் சி குலசேகர சுட்டிக்காட்டுகின்றார் .
உலகப்பொருளாதார நெருக்கடி இன்னமும் நிறைவிற்கு வராமையும் இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என அவர் குறிப்பிடுகின்றபோதும் அதற்கு மேலான ஒருவிடயத்தையும் நாம் நோக்கியே ஆகவேண்டும் . இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் 2008ம் ஆண்டில் இலங்கைக்கு கிடைத்த வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 889மில்லியன் அமெரிக்க டொலர்களாகயும் கடந்தாண்டில் 602மில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் இருந்தது .யுத்தம் நிறைவடைந்த போதும் உண்மையான நல்லிணக்கம் இன்னமும் ஏற்படாமை அதனால் நிலவுகின்ற நிச்சயமற்ற தன்மை என்பனவும் இந்த வீழ்ச்சிக்கு காரணமாக இருக்கலாம் என ஐயப்பாடுகளை வெளிப்படுத்துகின்றவர்களும் இருக்கவே செய்கின்றனர்
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான காத்திரமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என சர்வதேச சமூகத்தை சேர்ந்தவர்களடங்கலாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டிய நிலையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக தாம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கையாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நியமனத்தை இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது
இந்த நல்லிணக்க ஆணைக்குழு வெற்றிகரமானதாக அமைவது சமாதானம் பொருளாதார அபிவிருத்தி உட்பட இலங்கையின் எதிர்காலத்திற்கு இன்றியமையாதது என்பதையே மேற்குறிப்பிட்ட புள்ளிவிபரங்கள் உணர்த்திநிற்கின்றன.
நல்லிணக்கம் என்பது அனைத்துதரப்பினருக்கும் நம்பிக்கைகரமானதாக அமைந்திடவேண்டும்
நல்லிணக்கம் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன என்று இணையத்தளத்தில் தேடிப்பார்த்த போது அதற்கு ஏராளமான அர்த்தங்கள் இருந்தன அவற்றை பொதுப்படுத்தி பார்த்த போது நல்லிணக்கம் என்பதற்கு 'ஏற்கனவே மோதலில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினருக்கிடையில் சமாதானமான அன்றேல் இணக்கப்பாடான உறவுகளை மீள ஸ்தாபித்தல்' என அர்த்தம் வழங்கப்படுகின்றது .
இந்த நல்லிணக்க ஆணைக்குழுவின் அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னரே இதன் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு தரப்பினராலும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டன
இலங்கையில் இதற்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் அவற்றின் நடவடிக்கைகள் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட விதம் தொடர்பில் இருந்த அனுபவங்கள் மற்றும் கசப்புணர்வுகள் காரணமாகவே இவ்வாறான சந்தேகங்கள் வெளியிடப்பட்டன.
நல்லிணக்கம் என்பது ஒரு நீண்ட பயணம் அது ஏதேனும் ஒரிடத்தில் ஆரம்பித்தாகவேண்டும் என்பதற்கமைவாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நியமனத்தை அனேகரைப்போன்று முன்கூட்டியே கொள்கை அளவில் எதிர்க்காமல் சந்தேகிக்காமல் இதிலாவது நன்மை நடக்காதா என எதிர்பார்த்திருப்பர்கள் பலருள்ளனர்
நல்லிணக்கம் சாத்தியமாவதற்கு அதனை அடைவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு போதிய நம்பிக்கை இருக்க வேண்டும் அன்றேல் அந்த நம்பிக்கையை கட்டி எழுப்புவதற்கான முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் .
ஏனென்றால் உண்மையான நல்லிணக்கம் இலங்கையின் எதிர்காலத்திற்கு இன்றியமையாத தொன்றாக இருக்கின்றது

மக்களை மையமாகக் கொண்ட நல்லிணக்கமே இறுதியில் நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரும்
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27229
சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபையின் கொழும்பு பணிமனை வளாகத்தில் கடந்தவெள்ளிக்கிழமை ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த வைபவத்தில் போடப்பட்ட பாதாகையிலும் வழங்கப்பட்ட குறிப்புக்களிலும் 'சமாதானம் = எதிர்காலம்' என்ற சமன்பாட்டை பார்த்தும் இலங்கையின் எதிர்காலமானது சமாதானத்திலேயே தங்கியிருக்கின்றதென்பதை உணர்வுள்ளவர்கள் விளங்கிக்கொண்டிருப்பர்.
இதனை வலியுறுத்துவதாக அதே தினத்தில் கரடியனாறில் இடம்பெற்ற பேரனர்த்தம் அமைந்திருந்தது. யுத்தம் நிறைவடைந்து விட்டதாக பிரகடனப்படுத்தப்பட்டு சுமார் ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் நிகழ்ந்த இவ்வனர்த்தமானது மீண்டுமாக யுத்தத்தின் கோரவடுக்களை மனக்கண் முன்;நிறுத்துவதாக அமைந்திருந்தது.
கரடியனாறு அனர்த்தம் குறித்து கிழக்குமாகாண சபை உறுப்பினரொருவர் விடுத்த அறிக்கையொன்றில் இச்சம்பவம் இக்கிராமத்தையும் பிரதேசத்தையும் ஏன் முழுநாட்டையுமே விழிப்புடன் திரும்பிப்பார்க்க வைத்துள்ளது.புலம்பெயர்ந்தவர்களையும் கூட ஒரு கணம் திகைப்படைய வைத்துள்ளது. கரடியனாறில் இடம்பெற்ற சம்பவம் போன்ற மேலும் ஒரு சம்பவம் மீண்டும் இடம்பெறாமல் தடுப்போம்' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த அறிக்கையின் சாராம்சம் மக்கள் மத்தியிலே இந்த அனர்த்தம் ஏற்படுத்திவிட்டுள்ள அதிர்ச்சியலைகளைப் பிரதிபலிப்பதாகவே அமைந்திருக்கின்றது
கரடியனாறு சம்பவம் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை பார்த்தபோது மூன்றுதசாப்த காலப் போரையடு;த்து பொருளாதார அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு பயணிக்கின்ற இலங்கையின் மீட்சி கண்டுவருகின்ற சுற்றுலாத்துறை அடங்கலான ஏனைய துறைகளில் பதாகமான தாக்கங்களை ஏற்படுத்திவிடுமோ என்ற ஐயப்பாடுகள் தோன்றின.
இலங்கைக்கான வெளிநாட்டு முதலீடுகள் எதிர்பார்த்த அளவிற்கு வந்து சேரவில்லை என ஏற்கனவே கரிசனைகள் வெளியிடப்பட்டுள்ளன.கடந்த வருடத்தை விடவும் இவ்வருடத்தின் முதல் அரையாண்டு காலப்பகுதியில் குறைவான முதலீடுகளே கிடைக்கப்பெற்றுள்ளதாக இலங்கை முதலீட்டுச் சபை சுட்டிக்காட்டியுள்ளது.
யுத்தம் நிறைவு பெற்றுவிட்டபோதும் ஏன் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது என வினவப்பட்டபோது ஒரு நாட்டைப்பற்றி முதலீட்டாளர்கள் கொண்டுள்ள நல்லெண்ண உணர்வே அவர்களை முதலீடுசெய்ய தூண்டுகின்றது படிப்படியாகத்தான் அந்த உணர்வு கட்டியெழுப்பப்படுகின்றது அதற்கான சூழ்நிலை ஏற்படுத்தப்படவேண்டும் ஆனால் அந்த சூழ்நிலை இதுவரையில் இலங்கையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவில்லை என சமீபத்தில் எமக்களித்த நேர்காணலில் பொருளாதார அறிஞர் கலாநிதி முத்துக்கிருஷ்ணா சர்வானந்தன் குறிப்பிட்டிருந்தார்.
இலங்கை மக்களின் நிம்மதியான வாழ்வு நாட்டின் பொருளாதார அபிவிருத்தி உட்பட வளமான எதிர்காலம் நின்று நிலைக்கக்கூடிய நிரந்தர சமாதானத்திலேயே தங்கியிருக்கின்றது.
நிரந்தரமான சமாதானத்தை நாட்டில் உருவாக்கவேண்டுமானால் உண்மையான நல்லிணக்கம் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது
அதில் முக்கிய படியாக அன்றேல் அதற்கு முதல் அடியாக யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரும் தத்தம் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும். இடம்பெயர்ந்த மக்களில் இன்னமும் 25000 பேர்வரையில் எஞ்சியிருப்பதாக அரசாங்கம் கூறுகின்றது இறுதிக்கட்ட யுத்தத்தில் இடம்பெயர்ந்த இவர்கள் துரிதமாக மீளக்குடியமர்த்த்தப்படவேண்டியது அவசியமாகும்
இவர்களைத்தவிர உயர்பாதுகாப்பு வலயம் காரணமாக வெளியேற்றப்பட்ட மக்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள் தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற மக்கள் வடக்கு கிழக்கை வாழ்விடமாக கொண்டிருந்த சிங்கள மக்கள் என அனைவரும் கட்டம் கட்டமாக மீளக்குடியமர்த்தப்படவேண்டும்
முகாம் வாழ்க்கையில் மக்கள் நீடிப்பது நல்லதல்ல குறிப்பாக சிறுவர்களைப் பொறுத்தவரையில் இது அறவே நல்லதல்ல என அண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் விசேடபிரதிநிதி ராதிகா குமாரசுவாமி மனித உரிமைகள் பேரவைக்காக தயாரித்திருந்த அறிக்கையிலும் சுட்டிக்காட்டியிருந்தார் 'யுத்தத்தில் இருந்து தப்பித்து கொள்வதற்காகவே இவ்வாறு மக்கள் இடம்பெயர்ந்த முகாம்களுக்குச் செல்கின்றனர் தமக்கு பாதுகாப்பு கிடைக்கும் என நம்புகின்றனர் ஆனால் சிறுவர்களைப் பொறுத்தவரையில் இந்த முகாம்கள் பெரும்பாலும் எந்தவிதமான பாதுகாப்புமற்றவையாகவே காணப்படுகின்றன' என சுட்டிக்காட்டியிருந்தார் .
இவ்வாறு அபாயங்களும் அச்சங்களும் அசௌரியங்களும் நிறைந்த முகாம் வாழ்விற்கு இயன்றவரை விரைவாக முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்பதற்கு மாற்றுக்கருத்துக்கள் இருக்கும் என நினைக்கவில்லை .
மக்கள் தத்தம் பகுதிகளில் மீளக்குடியமர்த்தப்படுவதுடன் நிற்காமல் அவர்களது வாழ்வாதாரத்தை மீள நிலைநிறுத்தி இயல்புவாழ்க்கையை உறுதிசெய்கின்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதே அனைவரதும் அபிலாஷையாகவுள்ளது
மீளக்குடியமர்த்தப்பட்டுள்ள இடம்பெயர் மக்களின் வாழ்க்கையையும் முன்னாள் மோதல் பிரதேசத்தில் வாழ்கின்ற அனைத்துமக்களின் வாழ்க்கையையும் எளிதாக முன்னெடுக்ககூடிய வகையில் உடனடியான நிர்வாக மாற்றங்களைக் கொண்டுவரவேண்டும் என கடந்தவாரத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினர் அலரிமாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்தபோது யோசனை சமர்பித்திருந்தனர் .
இதில் பொலிஸில் தம் சொந்த மொழியில் ஒருவர் தம் முறைப்பாடுகளை பதிவுசெய்வது உட்பட பொதுமக்கள் அரச திணைக்களங்களில் தமது சொந்த மொழியிலேயே கருமங்களை ஆற்றுவதற்கு வழிவகைகளைச் செய்தல் போன்ற பரிந்துரைகளை ஆணைக்குழுவினர் வழங்கியிருந்தனர்
இவையாவும் நிர்வாக நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்படவேண்டிய மாற்றங்கள் பற்றியதாகவே அமைந்திருந்தன
இவையெல்லாம் இடைக்கால நடவடிக்கைகளாக கருதப்படினும் முழுமையான நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு அடிப்படையில் எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதை காந்தி நிலையத்தினர் கடந்த வாரம் நல்லிணக்க ஆணைக்குழு முன்பாக தெளிவுபடுத்தியிருந்தனர்
'நல்லிணக்கமானது கட்டங்கட்டமான செயற்பாடாக அமையவேண்டும். நடைமுறைச்சாத்தியமாக எண்ணப்படுகின்ற முன்னேற்றச்செயற்பாடாக இருக்கவேண்டும் .(நல்லிணக்கம் ) சில தலைவர்களிடையே ஏற்படுத்திக்கொள்ளப்படுகின்ற இணக்கப்பாடு காரணமாகவோ அன்றேல் ஒரு ஆவணத்தில் வைக்கப்பட்ட சில கையொப்பங்கள் காரணமாகவே ஏற்படுத்திக்கொள்ளப்பட்டதாக அமைந்துவிடக்கூடாது யாரேனும் அது தொடர்பில் தீவிர கரிசனையுடையவர்களாக இருப்பின் அது தூர நோக்குடையதாக அமைவதுடன் இந்த நடவடிக்கைளில் நடுநாயகமாக ஒருநாட்டின் குடிமக்கள் இருந்தாகவேண்டும் ' என காந்தி நிலையம் வலியுறுத்தியிருந்தது
மக்களை மையமாகக் கொண்ட நல்லிணக்கமே இறுதியில் நிரந்தர சமாதானத்தைக் கொண்டுவரும் என்பது இதிலிருந்து தெளிவாகின்றது
கரடினாறு சம்பவம் தற்செயலாக இடம்பெற்ற ஒரு நிகழ்வுமாத்திரமே என எடுத்துக்கொண்டால் கடந்த ஆண்டு மே மாதத்தின் பின்னர் இலங்கையில் பெரிதாக எந்தவொரு நாசகார நிகழ்வுகளும் இடம்பெறவில்லை அமைதியாகத்தானே உள்ளது. மக்கள் வந்துபோகின்றனர் வர்த்தக நடவடிக்கைளும் இடம்பெறுகின்றன. இது தானே சமாதானம் என ஒருசாரார்; எண்ணக்கூடும்.
ஆனால் சமாதானம் என்பது இதுவல்ல என்பதற்கு சில சான்றோர்கள் கூறிய கூற்றுக்களை இங்கே உங்கள் சிந்தனைக்கு முன்வைக்கின்றேன்
'சமாதானமென்பது வெறுமனே யுத்தமில்லாத நிலைமையல்ல'-இந்திய முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு
'சுதந்திரத்தில் இருந்து உங்களால் சமாதானத்தை பிரிக்க முடியாது ஏனென்றால் சுதந்திரம் இல்லாத வரையில் எவருமே சமாதானமாக இருக்க முடியாது'அமெரிக்க முஸ்லிம் மதபோதகரும் மனித உரிமை ஆர்வலருமான மல்கம் எக்ஸ் (எல் ஹாஜி மலிக் எல் ஷபாஷ் எனவும் இவர் அறியப்பட்டிருந்தார்)
'நீதியில்லாத சமாதானம் சர்வாதிகார அடக்குமுறையாகும்' புகழ்பெற்ற அமெரிக்க முன்னாள் பத்திரிகையாசிரியர் வில்லியம் அலன் வைட்
'நீதிகிடைத்துவிட்டதென்பதைக் காண்பிப்பதற்காக சமாதானம் ஏற்படுத்தப்படக்கூடாது மாறாக சமாதானத்தை உருவாக்குவதற்காக நீதியை நிலைநாட்டவேண்டும்' இறையியலாளர் கிறிஸ்தவ மத போதகர் மார்டீன் லூதர்
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=27229
This Article was published on Virakesari Daily -21/09/2010
விடியலைத் தேடி வெளிநாடு செல்லும் வீட்டுப்பணிப்பெண்களின் வாழ்க்கை இன்னும் இருளில் ......
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=26533
உடலில் 23 ஆணிகளுடன் சவுதியிலிருந்து நாடுதிரும்பிய பணிப்பெண் தொடர்பாக விசாரணை நடத்தப்படவுள்ளது என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் கிங்ஸ்லி ரணவக்கவை மேற்கோள் காட்டி ஆங்கில இணையத்தளமொன்றில் நேற்று முன்தினம் வெளியாகியிருந்த செய்தி பலருக்கு பேரதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் .
ஆனால் கடந்த வாரம் கொழும்பு நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் பங்கெடுத்த செய்தியாளர்களுக்கு அதைவிடவும் அதிர்ச்சியான செய்தியை கேட்கக்கூடியதாக இருந்தது .
இலங்கை போன்ற ஆசியநாடுகளிலே கலாசாரத்தை பேணிப்பாதுகாக்கின்ற பெண்கள் எல்லாவற்றிலும் மேலானதாக தமது மானத்;தை போற்றுகின்ற நிலையில் அந்த செய்தியாளர் மாநாட்டில் பேசிய நிலந்தி என்ற பெண்ணோ 'கெட்டுப்போன பொருட்களைக் குறித்து யாருமே அலட்டிக் கொள்வதில்லை சொர்க்புரிக்கு போவதாக தான் ஆசைகாட்டி அனுப்புகிறாங்க ஆனால் அங்கு போனதும் தான் அது நரகம் என்று தெரியுது ' என்று ஊடகவியலாளர்கள் முன்பாக வெளிப்படையாக பேசியபோது அங்கிருந்தவர்கள் ஒருகணம் அதிர்ந்துபோயினர் .
சவுதி அரேபியாவில் சொல்லோணா இன்னல்களை அனுபவித்து அண்மையில் நாடுதிரும்பியிருந்த பணிப்பெண்ணான இவர் தனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட கொடுமைகளை மானம் காக்க வேண்டும் என தனக்குள்ளே மறைத்துக்கொள்ளாமல் தன்னைப்போல் வேதனைகளுக்கும் கொடுமைகளுக்கும் முகங்கொடுத்துள்ள ஏனைய பெண்கள் காப்பாற்றப்படவேண்டும் என்ற பிறர்நல சிந்தையுடன் துணிகரமாக பேசியதை பாராட்டியே ஆகவேண்டும்
தமது குடும்பங்களை பொருளாதார ரீதியில் முன்னேற்ற வேண்டும் சீதனம் தேடவேண்டும் கல்விக்கு உதவவேண்டும் வறுமை நிலையைப் போக்க வேண்டும் போன்ற பல்வேறு காரணங்களுக்காக புதிதாக திருமணமான பெண்கள் பிள்ளைகளுள்ள தாய்மார்கள் திருமணமாகாத பெண்கள் திருமணமாகி கணவர்மாரை இழந்தவர்கள் கணவர்களால் கைவிடப்பட்டவர்கள் என வருடாந்தம் ஒரு லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இலங்கையில் இருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்ணாக செல்கின்றனர் .
மத்திய வங்கியின் 2009ம் ஆண்டு .அறிக்கையின் பிரகாரம் 18லட்சம் இலங்கையர்கள் தொழிலின் நிமித்தமாக வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளனர் 2009ல் இவர்களால் 3330 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அந்நியச்செலாவணி கிடைத்துள்ளது. குறித்த ஆண்டில் 247இ 119பேர் தொழிலுக்காக வெளிநாடுகள் சென்றிருந்தனர் இதில் 90வீதமானவர்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்றிருந்தனர் ; இதில் பெரும்பான்மையானவர்கள் பணிப்பெண்கள் என சுட்டிக்காட்டப்படுகின்றது கடந்த வருடத்தில் மாத்திரம் இலங்கையில் இருந்த சென்ற பணிப்பெண்களின் எண்ணிக்கை 113இ777 என்பதுடன் இதில் சவுதி அரேபியாவிற்கு சென்றவர்களின் எண்ணிக்கை 77இ827 ஆகும்
சுமார் நான்கரை லட்சம் இலங்கைப் பணிப்பெண்களுள்ள சவுதி அரேபியாவில் உள்ள அனைத்துப்பணிப்பெண்களின் நிலையும் கவலைக் கிடமாக உள்ளதான தோற்றப்பாடே கடந்த வாரம் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துவெளியிட்ட பெண்களின் கண்ணீர் கதைகள் உணர்த்தி நின்றன
ஓலய்யா முகாம் உண்மையென்ன ???
பணிப்பெண்களாக செல்லுகின்ற இல்லங்களில் பாலியல்ரீதியான துன்புறுத்தல் உடல்ரீதியான சித்திரவதைகள் உறுதியளிக்கப்பட்ட சம்பளம் வழங்காமல் ஏமாற்றுதல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக அந்த இல்லங்களில் இருந்து உரிமையாளர்களுக்கு தெரியாமல் வெளியேறி சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்திலுள்ள இலங்கை தூதுவராலயத்தில் அடைக்கலம் புகுகின்றவர்கள் அங்கிருந்து 'ஒலய்யா' முகாமிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர் இந்த ஒலய்யா முகாம் பற்றி அங்கிருந்து திரும்பிய பஸீனா என்பவர் கூறுகையில்
'அந்த ஓலேய்யா முகாம் முன்னர் ஆடைத்தொழிற்சாலையாக இருந்ததாம் அங்கு வேலைசெய்தவர்கள் சம்பள உயர்வுகோரி ஆர்ப்பாட்டம் செய்ததற்காக உரிமையாளர் அவர்களை படுகொலை செய்து அங்கேயே புதைத்து விட்டதாக கூறுகின்றனர் வெட்டிப்போடுறது பேய்பிடித்து ஆடுறது எல்லாம் இருக்கு பிணப்பெட்டி எல்லாம் அங்கதான் இருக்கு அதனாலதான் அதிகமானவர்கள் நோயில் விழுகின்றாங்க அங்க பனடோலுக்கு கூட வழியில்ல யாரும் பனடோல் ஒன்றுகூட தரமாட்டாங்க மருந்து கொடுக்க வருவாங்க அவங்க கொடுக்கிற மருந்திற்கு சிலருக்கு மூளையெல்லாம் ஒருமாதிரியாகும் அப்படியொரு மருந்து கொடுப்பாங்க நோயென்றா நம்பமாட்டாங்க ஒலேய்யா முகாமிற்கு கிழமைக்கு ஒருநாள் நேரத்திற்கு வருவாங்க அந்த மருந்து எடுக்கின்றதற்கு மிகவும் கஸ்டப்படவேண்டும் அந்த மருந்த எடுத்தா அவங்க முன்னுக்கே குடிக்கவேண்டும் சிலவங்களுக்கு சாப்பாடில்லாம குடிக்க முடியாது கத்துவாங்க கஸ்டத்திலதான் அங்கு வாழ்ந்தனான் நீங்க போய்பார்த்த தான் நாங்க சொல்கின்றத நீங்க நம்புவீங்க .சாப்பாடு பச்சைக் கோழி இரத்தம் சொட்டச்சொட்ட இருக்கும் அதை பொரித்து தருவாங்க மீன் பச்சையா இருக்கும் பட்டினி இருந்து சாகிறதைவிட அதை வீசாம தின்பாங்க. இலங்கையைச் சேர்ந்தவர்கள் 350பேர் ஒருபக்கம் இருக்கின்றனர் மொத்தமாக பார்க்க போனால் இந்தோனேசியா பிலிப்பைன்ஸ் இந்தியா மொத்தமா 5000 கூட அங்க இருக்கும் அவ்வளவு பெரிய முகாம் .மலசல கூடம் அப்படியே நிறைந்திருக்கும் வரிசையில் நின்று தான் குளிக்க வேண்டும் .நாங்கள் இருக்கும் மாடியில்; தண்ணீரை நிப்பாட்டிட்டாங்க கீழ இருந்து நாங்க இருக்கிற இரண்டாம் மாடிக்கு தண்ணீரைக் கொண்டு போக வேண்டும். யாரும் கீழ இறங்க மாட்டாங்க தனியப் போனால் விடிய எழும்பமாட்டாங்க அவங்க பேய்பிடித்து அந்த இடத்திலேயே விழுந்திடுவார்கள்; அங்க சவுதி ஆட்கள் தான் இருக்கின்றனர் இலங்கையை சேர்ந்த யாரும் இல்ல யாரும் வரமாட்டாங்க' திடீரென புயல் அடித்து ஓய்ந்தமாதிரி அந்தப்பெண்மணி தனது ஆதங்கங்களை கொட்டித்தீர்த்துவிட்டார் .
இந்த ஓலய்யா முகாமிற்கு அனுப்பாமல் சவுதி இல்லங்களிலிருந்து தப்பியோடி வருகின்ற பணிப்பெண்களை ரியாத்திலுள்ள இலங்கைத் தூதுவராலயத்திற்கு சொந்தமான பாதுகாப்பு இல்லத்திலேயே வைத்துப் பராமரிப்பதற்கு ஏன் முடியாது என மத்திய கிழக்கில் துன்பங்களுக்குள்ளாகும் வீட்டுப்பணிப்பெண்கள் சார்பாக குரல் கொடுக்கும் நடிகரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சன் ராமநாயக்க கேள்வியெழுப்புகின்றார். வீட்டு உரிமையாளராலும் அவரது நண்பர்களாலும் உடல்ரீதியான மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் வீட்டுப்பணிப்பெண்கள் ஒலய்யா முகாமிற்கு அனுப்பிவைக்கப்படுகின்ற போது வீட்டு உரிமையாளர் கோருகின்ற பட்சத்தில் மீண்டும் அவருடனேயே பாதிக்கப்பட்ட பணிப்பெண் செல்லவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகின்றது இதனால் மீண்டும் மீண்டும் அவர்கள் துன்புறத்தல்களுக்கு உள்ளாக நேரிடுகின்றது என ரஞ்சன் ராமநாயக்க சுட்டிக்காட்டுகின்றார் . (இவர் தான் நிப்போன் ஹோட்டலில் இடம்பெற்றிருந்த ஊடகவியலாளர் மாநாட்டை ஏற்பாடுசெய்திருந்தவர் )
இதுதொடர்பாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின்; பணிப்பாளர் நாயகம் கிங்ஸ்லி ரணவக்கவிடம் தொடர்பு கொண்டு கேட்ட போது ' இவர்கள் கூறுவதெல்லாம் முற்றுமுழுதாக பொய்யான விடயங்கள் .சவுதியிலுள்ள இல்லங்களில் இருந்து பணிப்பெண்கள் தப்பியோடி அங்குள்ள இலங்கைத்தூதுவரலாயத்தை வந்தடையும் போது நாம் அங்குள்ள பாதுகாப்பு இல்லத்தில் வைத்து சில வாரகாலங்கள் பராமரிக்கின்றோம் அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குகின்றோம் .ஆனபோதிலும் பணிப்பெண்கள் தப்பி வரும் போது அவர்கள் தம்வசமுள்ள கடவுச்சீட்டை விட்டுவரவேண்டியுள்ளது இதன்காரணமாக அவர்கள் நாடுதிரும்புவதற்கு தேவையான தற்காலிமாக வெளிச்செல்வதற்கான அனுமதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்வதற்காகவே ஒலய்யா முகாமிற்கு அனுப்பிவைக்கப்படுகின்றனர் ஒலய்யா என்பது சித்திரவதை முகாமல்ல மாறாக அது தற்காலிய வெளிச்செல்லும் அனுமதிப்பத்திரத்தை பெறும் வரையில் தங்கியிருப்பதற்கான இடைத்தங்கல் நிலையமே' எனத் தெரிவித்தார்
ஓலய்யா முகாமில் தற்போது 350 இலங்கைப்பணிப்பெண்கள் உரிய வசதிகளின்றியும் மீண்டும் துன்புறுத்தலுக்கு உட்படலாம் என்ற அச்சத்துடனும் உள்ளனர் இவர்களை துரிதமாக மீண்டும் இலங்கைக்கு கொண்டுவருவதற்கான முயற்சிகளில் உரிய தரப்பினர் போதிய அக்கறை காண்பிக்கவில்லை என அண்மையில் நாடுதிரும்பிய வீட்டுப்பணிப்பெண்கள் சுமத்ததும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக கருத்துவெளியிட்ட இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் கிங்ஸ்லி ரணவக்க 'தற்போது சவுதி அரேபியாவில் நோன்புக்காலமென்பதால் விமான டிக்கற்றுக்களை பெற்றுக்கொள்வது கஷ்டமாக உள்ளது ஆனால் கடந்த இரண்டு மாத காலப்பகுதியில் நாம் 386 பணிப்பெண்களை மீளழைத்துவந்துள்ளோம்.வழமையாக அங்கிருந்து வருகின்ற விமானங்களில் ஆசனங்கள் இல்லாத காரணத்தால் மிஹின் லங்காவிற்கு சொந்தமான இரண்டு விமானங்களை விசேடமாக அனுப்பி அவர்களை அழைத்துவந்தோம் இதற்காக எமது பணியகம் 8.37மில்லியன் ருபாவை செலவிட்டுள்ளது' எனச் சுட்டிக்காட்டினார்
வருடாந்தம் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வீட்டுப்பணிப்பெண்களாக செல்கின்றவர்களில் 15 தொடக்கம் 20வீதமானவர்கள் துன்புறுத்தல்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாதல் சம்பளம் வழங்கப்படாமை இன்னமும பல காரணங்களின் நிமித்தமாக தமது ஒப்பந்தகாலம் நிறைவடையும் முன்பாகவே நாடுதிரும்பம் நிலை ஏற்படுகின்றது
2003ம் ஆண்டில் கொழும்பு பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்டிருந்த ஆய்வொன்றில் வீட்டுப்பணிப்பெண்களாக செல்கின்றவர்களில் நான்கில் ஒருவர் துஷ்பிரயோகம் அன்றேல் சம்பளம் வழங்கப்படாமை போன்ற காரணங்களால் பிரச்சனைகளுக்கு உள்ளாக நேரிடுகின்றது எனத்தெரிவிக்கப்படுகின்றது
எனினும் இந்த நிலையில் தொழிலாளர்களது உரிமைகளைக் குறித்தோ அவர்கள் எதிர்கொள்கின்ற துன்பங்கள் குறித்தோ மத்திய கிழக்கு நாடுகளிடம் கடுந்தொனியில் கூறமுடியாத நிலைமை காணப்படுகின்றது
பாரிய வேலையில்லா பிரச்சனை நிலவுகின்ற இலங்கை போன்ற வளர்முக நாடுகளிலுள்ள அரசாங்கங்களுக்கு வெளிநாடுகளில் தொழில்புரிகின்றவர்களே அதிக சதவீதமான வெளிநாட்டுச் செலாவணியை சம்பாதித்துக்கொடுக்கின்றனர். வீட்டுப்பணிப்பெண்களின் உரிமைகளை உரியவகையில் உறுதிசெய்யாவிட்டால் நாங்கள் எமது நாட்டிலிருந்து வீட்டுப்பணிப்பெண்களை அனுப்பமாட்டோம் என அழுத்திக்கூறுகின்ற நிலைமை யாதார்த்த ரீதியில் காணப்படவில்லை என்பதே உண்மையானது
பிலின்பைன்ஸ் இந்தோனோசியா பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து வருடந்தோறும் ஆயிரக்கணக்கானவர்கள் மிகவும் குறைந்த ஊதியத்துடனே மத்திய கிழக்கிற்கு படையெடுக்கின்றநிலையில் உரிமைகள் குறித்து உரக்கப் பேசினால் இலங்கையருக்கு கிடைக்கும் தொழில் வாய்ப்புகள் இல்லாமல் போய்விடலாம் என் அச்சமும் இதற்கு காரணமாக இருக்கின்றது
புஷ்பா பஸீனா போன்று தமக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து பகிரங்கமாக குரல்;கொடுப்பது இலங்கையைப் போன்ற நாடுகளில் மிகவும் அரிதானவிடயம் இப்படியாக துஷ்பிரயோகத்திற்கு உள்ளானதாக குறிப்பிட்டால் ஏனையோரை விடவும் தமது குடும்பத்திலுள்ளவர்களிடமிருந்தும் சமூகத்தில் இருந்தும் ஓரங்கட்டப்படலாம் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகலாம் என்ற நியாயமான அச்சமும் இதற்கு காரணமாகும்.
இதன்காரணமாகவே இவர்களில் பெரும்பாலானவர்கள் தமக்கு நேர்ந்த இன்னல்களை வேதனைகளை வெளியில் சொல்லாமல் எல்லாவற்றையும் பொறுத்துக்கொள்ளவேண்டும் சகித்து வாழவேண்டும் என்ற கீழைத்தேய சிந்தனையின் பிரகாரம் தமது குடும்பத்தவர்களின் மானம் மரியாதை எதிர்காலத்தை கருத்திற்கொண்டு அமைதியாகவே இருந்துவிடகின்றனர்
வீட்டுப்பணிப்பெண்களை மத்திய கிழக்கிலுள்ளவர்கள் மனிதர்களாகவே மதிப்பதில்லை மிருகங்கள் போன்றே நடத்துகின்றனர் அவர்களுக்கு மனித கௌரவம் என்பது அங்கு கிடையாது என செய்தியாளர் மாநாட்டை ஏற்பாடுசெய்திருந்த பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க கூறியது ஒரு வேளை உண்மை நிலையைக்கு மாறானதாக இருந்தாலும் சவுதியரேபியாவில் இருந்து இன்னல்களை அனுபவித்து திரும்பிய பஷீனா கூறிய விடயம் யதார்த்தமானதாக காணப்பட்டது
'இந்த மாதிரி ஊர்களுக்கு யாரையும் அனுப்பாதிங்க எல்லா அராபியும் கெட்டவங்க என்று சொல்லவில்லை அவர்களில் நல்லவங்களும் இருக்கின்றாங்க கெட்டவங்களும் இருக்கின்றாங்க ஆனாலும்அந்தமாதிரி ஊர்களுக்கு போகாமா இங்கயே ஏதாவது வேலை செய்துகொண்டிருக்கின்றதென்றா மிகவும் நல்லது'

Thursday, August 19, 2010
நாட்டில் சட்டத்தின் ஆட்சி கிடையாது
சரத் பொன்சேகா
நாட்டில் சட்டத்தின் ஆட்சி கிடையாது சட்டத்தினைப்பாதுகாக்க வேண்டியவர்கள் மீது நம்பிக்கை கிடையாது என ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார்
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று பிற்பகல் நடத்திய செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத்தெரிவித்தார்
இந்த செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர குமார திசாநாயக்க சுனில் ஹந்துனெத்தி டிரான் அலஸ் மற்றும் விஜித ஹேரத் ஆகியோரும் பங்கேற்றனர்
இராணுவ நீதிமன்றத்தால் சரத் பொன்சேகாவிற்கு வழங்கபபட்டுள்ள ஜெனரல் பதவியையும் பதக்கங்களையும் பறிப்பதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாகவும் அதனைத்தொடர்ந்து மேற்கொள்ள எண்ணியுள்ள நடவடிக்கை தொடர்பாகவும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துவெளியிடப்பட்டது
இங்கு சரத் பொன்சேகா கருத்துவெளியிடுகையில்
(எனக்கு இன்று ஏற்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலைமை எனக்கு மட்டும் பிரத்தியேகமான விடயமல்ல இலங்கையில் உள்ள நிலைமைக்கு அமைய சட்டத்தின் ஆட்சி இல்லாத தன்மையும் சட்டத்தின் பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையும் சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களால் அதனை பாதுகாக்க முடியாத நிலைமையும் சட்டத்திற்கு சுதந்திரமான தன்மை இல்லாமையும் நாட்டிலுள்ள பிரச்சனையாகும் இந்த நிலைமைக்கு நாட்டின் அரச தலைவரும் அரசாங்கமுமே பொறுப்பேற்க வேண்டும் அவர்கள் தான் இந்த நிலைமையை ஏற்படுத்திவிட்டுள்ளனர் நாட்டில் சட்டம் கிடையாது சட்டத்தின் மீது நம்பிக்கையும் கிடையாது சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் மீது நம்பிக்கை கிடையாது
அண்மையில் எமது கட்சியைச் சேர்ந்த இருபாராளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு செய்ய பொலிஸிற்கு சென்றபோது காலி பொலிஸார் அவர்களை சிறையில் அடைத்தனர் இது நாட்டில் சட்டம் இல்லை என்பதற்கு நல்ல உதாரணமாகும் சட்டத்தினை உறுதிப்படுத்த வேண்டிய உச்சநீதிமன்றம் உட்பட உயரிய இடங்களிலும் ஜனாதிபதி தலையீடு செய்கின்றார் என்ற விடயம் நாட்டு மக்களுக்கும் நன்கு தெரிந்தவொன்றாகும் ஆட்சியின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் சட்டத்தின் மீது தலையிடுகின்றனர் என்ற விடயம் பொதுமக்கள் மத்தியில் பதிந்திருக்குமானால் சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கை அவர்களுக்கு இல்லாமல் போகும் அதுதான் இந்த நாட்டிலுள்ள முக்கியமான பிரச்சனையாகும் சட்டத்தின் பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியாததொருவனாக நான் தற்போதிருக்கின்றேன் )
ஆளும் தரப்பினர் தம்மை சிறையில் அடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார்
இதுவரை தமக்கு நிகழ்ந்தவற்றை சரியாகவே அனுமானித்திருந்ததாக குறிப்பிடும் அவர் அடுத்த கட்டமாக தம்மை அவர்கள் சிறையில் அடைக்க முனைப்புக்காண்பித்து வருவதாக குறிப்பிட்டார்.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று பிற்பகல் நடத்திய செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத்தெரிவித்தார்
ஜனாதிபதித்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து போட்டியிட்ட காரணத்திற்காகவே தாம் பழிவாங்கப்படுவதாக குறிப்பிட்ட அவர் தமது பதவி பறிக்கப்பட்டமை தொடர்பாகவோ பதக்கங்களை இல்லாமல் செய்ய இராணுவநீதிமன்றம் தீர்ப்பளித்தது தொடர்பாகவோ கவலைப்படவில்லை எனத்தெரிவித்தார்
தாய்நாட்டிற்கு சேவைசெய்ய வேண்டும் என்பதே தனது எண்ணமாக இருந்ததாக குறிப்பிட்ட அவர் அதற்காக பிரதிபலனை எதிர்பார்க்கவில்லை எனக் குறிப்பிட்டார்
ஜெனரல் பதவியைப்பறிப்பதற்கும் பதக்கங்களை திரும்பப்பெறுவதற்கும் முதலாவது இராணுவ நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக என்ன நடைபெறும் என எதிர்பார்க்கின்றீர்கள் என வினவியதற்கு பதிலளித்த சரத் பொன்சேகா அடுத்த கட்டமாக தன்னை சிறையில் அடைக்க முற்படுவார்கள் எனக்குறிப்பிட்டார்
தாம் பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் கடந்த நான்கு வருடங்களாக இணைந்துசெயற்பட்டவர் என்றவகையில் அவர்களது மனோநிலையை அறிந்துவைத்துள்ளதாக தெரிவித்த சரத் பொன்சேகா அவர்கள் எங்கனம் ஒருவிடயம தொடர்பில் நடந்துகொள்வார்கள் என்பதை அறிந்தவன் என்ற வகையிலேயே தம்மை சிறையில் அடைக்க முனைவார்கள் எனக்குறிப்பிடுவதாக தெரிவித்தார் தாம் சீருடையை கழற்றிய பின்னர் அவர்கள் தமக்கு என்ன செய்வார்கள் என்பதை தாம் அனுமானித்திருந்ததாக சுட்டிக்காட்டினார் .பொன்சேகாவிற்கு அடுத்து என்ன செய்யலாம் அவரை எத்தனை ஆண்டுகள் சிறையில் தள்ளலாம் என்ற விடயங்களை அமைச்சரவையில் பகிரங்கமாகவே அவர்கள் கலந்துரையாடிவருவதாக தெரிவித்த பொன்சேகா அவர்களது திட்டங்கள் பற்றியெல்லாம் தமக்கு தகவல் கிடைத்துவருவதாக குறிப்பிட்டார்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை சாட்சியமளித்த பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு பெருமளவில் அப்படியே இருப்பதன் காரணமாக வடபகுதியில் இராணுவ பிரசன்னத்தை தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார் இது தொடர்பாக உங்கள் அபிப்பிராயம் என்ன என்று; ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு பதிலளித்த பொன்சேகா இங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்
உண்மையில் விடுதலைப்புலிகளது சர்வதேச வலையமைப்பு அப்படியே இருப்பதற்கு காரணம் அந்த வலையமைப்பின் தலைவரான கேபி கோட்டாபய ராஜபக்ஸவின் கைப்பைக்குள் இருப்பதலாகும் அந்தவகையில் வலையமைப்பு உள்ளதா இல்லையா என்பதை ஏனையவர்களைப்பார்க்க அவர் நன்கு அறிந்துள்ளார் என புன்முறுவலுடன் பதிலளித்தார்
ஒரு பெரும் யுத்தம் நிறைவடைந்தவுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் அதற்கு இராணுவத்தின் பிரசன்னம் அவசியமானது என பொன்சேகா குறிப்பிட்டார் யுத்தம் நிறைவுபெற்றதும ஆலோசனைகள் மற்றும் நல்லிணக்க நடவடிககைகளை முன்னெடுக்க வேண்டுமாதலால் இராணுவத்தை உடனடியாக திருப்பியனுப்பிவிடமுடியாது அந்தவகையில் இராணுவ பிரசன்னம் ஓரளவு கணிசமான காலப்பகுதிக்கு அவசியமாகும் அத்தோடு அது இலங்கையின் ஒருபகுதியல்லவா எனச்சுட்டிக்காட்டிய பொன்சேகா இலங்கையில் இராணுவத்தை நிறுத்த முடியாவிட்டால் இந்தியாவில் சென்றா நிறுத்த முடியும் என புன்முறுவலுடன் பதிலளித்தார்.
Tuesday, August 17, 2010
கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு :ஓர் பார்வை
நல்லிணக்கம் என்பது யுத்தம் முடிவிற்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட பின்னர் இலங்கையிலே அடிக்கடி உச்சரிக்கப்படுகின்ற வார்த்தையாக இருக்கின்றது .
நல்லிணக்கம் என்பதன் உண்மையான அர்த்தம் என்ன என்று இணையத்தளத்தில் தேடிப்பார்த்த போது அதற்கு ஏராளமான அர்த்தங்கள் இருந்தன.
அவற்றை பொதுப்படுத்தி பார்த்த போது நல்லிணக்கம் என்பதற்கு 'ஏற்கனவே மோதலில் ஈடுபட்டிருந்த இரு தரப்பினருக்கிடையில் சமாதானமான அன்றேல் இணக்கப்பாடான உறவுகளை மீள ஸ்தாபித்தல்' என அர்த்தம் வழங்கப்படுகின்றது
நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான காத்திரமான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என சர்வதேச சமூகத்தை சேர்ந்தவர்களடங்கலாக பல்வேறு தரப்பினரும் சுட்டிக்காட்டிய நிலையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக தாம் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கையாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நியமனத்தை இலங்கை அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது
இந்த ஆணைக்குழுவின் அமர்வுகள் ஆரம்பமாவதற்கு முன்னரே இதன் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு தரப்பினராலும் சந்தேகங்கள் வெளியிடப்பட்டன
இலங்கையில் இதற்கு முன்பாக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் செயற்பாடுகள் அவற்றின் நடவடிக்கைகள் முடிவிற்கு கொண்டுவரப்பட்ட விதம் தொடர்பில் இருந்த அனுபவங்கள் மற்றும் கசப்புணர்வுகள் காரணமாகவே இவ்வாறான சந்தேகங்கள் வெளியிடப்பட்டன.
நல்லிணக்கம் என்பது ஒரு நீண்ட பயணம் அது ஏதேனும் ஒரிடத்தில் ஆரம்பித்தாகவேண்டும் என்பதற்கமைவாக கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நியமனத்தை அனேகரைப்போன்று முன்கூட்டியே கொள்கை அளவில் எதிர்க்காமல் சந்தேகிக்காமல் இதிலாவது நன்மை நடக்காதா என எதிர்பார்த்திருப்பர்கள் பலருள்ளனர் .
இந்த ஆணைக்குழு கடந்த 11ம்திகதி அதன் அமர்வுகளை ஆரம்பித்திருந்த போதிலும்
இன்று
அன்றையதினம் பிற்பகல் இடம்பெற்ற அமர்வில் கலந்துகொள்வதற்கு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ வருகைதந்திருந்தமை காரணமாகும்.
பாதுகாப்பு செயலாளர் முதலில் வந்தமர்ந்த பின்னர் ஆணைக்குழுவின் தலைவர் முன்னாள் சட்டமா அதிபர் சித்திராஞ்சன் டி சில்வா உள்ளிட்ட ஆணைக்குழு அங்கத்தவர்கள் அமர்வு நடைபெற்ற மண்டபத்திற்குள் நுழைந்தபோது பாதுகாப்பு செயலாளர் எழுந்து அவர்களுக்கு மரியாதை செலுத்தினார் .
பாதுகாப்பு செயலாளர் வழங்கிய அந்த மரியாதையைத் தவிர ஆணைக்குழுவில் அங்கம் வகிப்பவர்களது செயற்பாடுகளில் பெரும்பாலானவை நகைக்கும்படியாகவே இருந்தன
பெருந்தொகையான ஆவணக்கோவைகளுடன் வந்திருந்த பாதுகாப்புச்செயலாளர் தனது மிகக் கொடூரமான பயங்கரவாத இயக்கத்தையே அரசாங்கம் தோற்கடித்தது என்பதை பலரும் மறந்து போயுள்ளனர் .அதுதான் வரலாறாகும் என்று கூறி தனது இரண்டரை மணிநேர சாட்சியத்தை தொடங்கினார் .
மிகப்பலம் பொருந்திய இராணுவபலத்தைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளையே தோற்கடித்ததாக தெரிவித்த பாதுகாப்புச்செயலாளர் ஒருகட்டத்தில் விடுதலைப்புலிகளிடம் 30 ஆயிரம் நிரந்த போராளிகள் இருந்தமை உள்ளிட்ட விபரங்களை விபரித்தார் .
விடுதலைப்புலிகள் மோசமான அட்டூழியங்களை இழைத்தாக குறிப்பிட்ட பாதுகாப்புச்செயலாளர் அதுதொடர்பான ஆவணக்கோப்புக்களை ஒவ்வொன்றாக எடுத்துவைத்தபோது அதிலுள்ள விடயங்கள் இதுவரை வெளிவராத புதிய அம்சங்களை உள்ளடக்கிவை என்ற பாங்கில் ஆணைக்குழுவின் தலைவர் அந்த ஆவணக்கோப்புக்களைத் தரமுடியுமா என பாதுகாப்புச்செயலாளரிடம் கேட்க அவரும் ஒவ்வொரு ஆவணக்கோப்புக்களாக கையளித்தார்.
விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தத்தை தொடங்கியபோது எவ்வாறு தம்மிடம் தெளிவான இராணுவத்திட்டம் இருந்ததோ அவ்வாறே பொதுமக்களைப் பாதுகாப்பதற்கான திட்டமும் இருந்ததென அவர் குறிப்பிட்டிருந்தார். இதன் காரணமாகவே கடந்த காலங்களைப் போன்று இராணுவ நடவடிக்கைகளுக்கு தனியான பெயர்களை இடாமல் இது மக்களை விடுவிக்கும் நடவடிக்;கையாதலால் இதனை மனிதநேய நடவடிக்கை என்றே அழைக்க வேண்டும் என ஜனாதிபதி பணித்ததாக கூறிப்பிட்டார்.
இது பார்ப்பதற்கு சிறு விடயமாக இருக்கும் போதும் முக்கியமான ஒன்றாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.
படையினர் துப்பாக்கிகளை ஒருகையிலும் மனித உரிமைகள் சாசனத்தையும் மறுகையிலும் ஏந்திக்கொண்டே தமது பணியை முன்னெடுத்தாக குறிப்பிட்ட பாதுகாப்பு செயலாளர் மனித உரிமைகள் பற்றி இராணுவத்தினருக்கான பயிற்சிகள் 2003ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் இதற்காக பிரத்தியேகமான இராணுவ பணியகம் ஸ்தாபிக்கப்பட்டிருந்ததாக கூறினார் .
தமக்கு முன்பாக இருப்பவர் அதிகாரம் மிக்கவர் பெருமதிப்பிற்குரியவர் என்பதை ஆமோதிக்கும் பாங்கிலேயே ஆரம்பமுதலாக ஆணைக்குழுவின் அங்கத்தவர்கள் நடந்துகொண்டனர் . மனித உரிமைகள் விடயத்தில் இராணுவத்தினருக்கு பயிற்சி அளிக்கப்பட்டமை தொடர்பாக பாதுகாப்புச் செயலாளர் கூறும் போது ஆணைக்குழுவின் தலைவரோ ' இது உலகத்திற்கே முன்மாதிரியானதொன்று என ஐசிஆர்சி தெரிவித்திருந்ததென தனது தரப்பில் எடுத்துக்கொடுத்தார் . அப்போது பாதுகாப்புச் செயலாளர் ஆம் என்று கூறியதுடன் ஐசிஆர்சி உதவியதாக குறிப்பிட்டு மற்றுமொரு ஆவணக்கோப்பை சமர்பித்தார் .அதில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இராணுவத்தில் நடத்தப்பட்ட உள்ளக விசாரணைகள் தொடர்பான சான்றுகள் என உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
இராணுவரீதியாக நோக்கும் போது பயங்கரவாதத்தை தோற்கடித்த விடயத்தில் இலங்கை பின்பற்றிய அணுகுமுறைகளை முன்மாதிரியாக கொள்ளவேண்டும் என மக்கள் பேசுகின்றனர் ஆனாலும் மனித நேய உதவிகளை வழங்குவதற்காகவும் பொதுமக்கள் இழப்புக்களை குறைப்பதற்காகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் திட்டங்கள் என்பனவற்றில் இலங்கையின் முன்மாதிரியை எடுத்துப் பயன்படுத்துவது முக்கியமானதென பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ தெரிவித்தார் .
பாதுகாப்புச் செயலாளர் தனது சாட்சியத்தில் பொதுமக்களின் இழப்பைத்தவிர்ப்பதற்காக யுத்த சூனியப்பிரதேத்தை பிரகடனப்படுத்தியமை அதனை மக்கள் நலனுக்காக நகர்த்தியமை ஆகாயத்தில் இருந்து துண்டுப்பிரசுரங்களை வீசியமை கனரக ஆயுதங்கள் பாவிப்பதை தவிர்த்தமை மக்களை மீட்டு பாதுகாப்பான வழியமைத்துக்கொண்டுவந்தமை பற்றியெல்லாம் குறிப்பிட்டார்.
பாதுகாப்பு செயலாளர் தனது சாட்சியத்தை தொடங்கிய ஆரம்பத்தில் இராணுவ நடவடிக்கை தொடர்பான வீடியோ காட்சிகள் இருக்குமா என அவரிடம் முதலாவது கேள்வியை ஆணைக்குழுவின் தலைவர் தொடுத்திருந்தாலும் பாதுகாப்பு செயலாளர் தனது சாட்சியத்தை முடித்துக்கொண்டபின்னர் ஆணைக்குழுவின் தலைவரான சி ஆர் டி சில்வா தொடுத்த கேள்வி அந்த மண்டபத்தில் இருந்தவர்களை ஒருவர் மற்றவரை பார்த்து சிரித்துக்கொள்ளும் வகையில் இருந்தது
முன்னாள் சட்டமா அதிபராக இருந்தவரது கேள்வி இவ்வாறு அமைந்தது ' கடந்த வாரம் எமக்கு முன்பாக சாட்சியமளித்த விடுதலைப்புலிகளின் முன்னாள் போராளிகள் சிலர் மிதிவெடிகளை தவிர்க்கும் வகையில் இராணுவத்தினர் தமக்கு வழிகாட்டிக்கொண்டுவந்ததாக கூறினர்.
அவ்வாறு மக்களை வழிநடத்திக்கொண்டுவருவதற்கு நீங்கள் ஏதேனும் விசேட உத்தரவுகளை வழங்கியிருந்தீர்களா ? என வினவினார். இந்தக் கேள்வி பதிலுக்கு வழிசமைக்கின்ற கேள்வி என்பதை சராசரி அறிவுள்ளவர்கள் கூட விளங்கியிருப்பர்
இந்தக்கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புச்செயலாளர் ' ஆம் நாங்கள் பாதுகாப்பான பயணத்திற்கு வழிவிடுமாறு உத்தரவு வழங்கியிருந்தோம் இதன் காரணமாக நாம் இழப்புக்களையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது' எனக் குறிப்பிட்டார் .
இதன்போது கடைசி யுத்தத்தில் ஏற்பட்ட பாரிய இழப்புக்கள் தொடர்பான ஓர் உள் உணர்வை பெற்றுக்கொள்ளமுடிந்தது
பாதுகாப்பு செயலாளர் தனது பதிலின் போது 'இராணுவத்தரப்பில் மனிதநேய யுத்தகாலத்தில் ஏறத்தாழ 6000 பேர் கொல்லப்பட்டதுடன் 30 000 வரையில் காயமுற்றிருந்தனர்.படையினர் தரப்பில் இழப்புக்களின் எண்ணிக்கை இவ்வளவாக இருக்கின்றவிடத்தில் நடைபெற்ற மோதல்களின் உக்கிரத்தன்மையை உங்களால் கற்பனைசெய்துகொள்ள முடியும் .ஏனென்றால் அவர்கள் பயன்படுத்திய ஆயுதங்கள் சாதனங்களே இதற்கு காரணமாகும். இது சிலரால் மறக்கப்பட்டுள்ள மற்றுமொரு விடயம் என்றவகையிலேயே இந்த உண்மையை நான் முன்வைக்கின்றேன்.
சிலர் பொதுமக்களுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்பாக பேசுகின்றனர் .பொதுமக்களின் இழப்பை அடையாளம் காண்பது கடினமான விடயமாகும் ஆனால் படையினர் தரப்பிலேயே இழப்புக்களின் எண்ணிக்கை இவ்வளவாக இருக்கும் என்றால் விடுதலைப்புலிகள் தரப்பில் ஏற்பட்ட இழப்புக்களை நீங்கள் கற்பனை செய்து பார்க்க முடியும் எவரும் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்ட இழப்புக்கள் தொடர்பாக பேசுவதில்லை .இவையனைத்தையும் பொதுமக்களின் இழப்புக்களுடனேயே சேர்த்துப்பார்க்கின்றனர் .இராணுவமே அந்தளவு இழப்பை எதிர்கொண்டதென்றால் ஆகக் குறைந்தபட்சம் அதே அளவான இழப்புக்களை விடுதலைப்புலிகள் சந்தித்திருப்பர் .ஆனால் அது (விடுதலைப்புலிகளின் இழப்புக்கள்) அதிகமானதாகவே இருக்கும் என்பது எனக்கு நிச்சயம் ஏனென்றால் அரச படையினரின் சூட்டுப்பலம் அதிகமாக இருந்தமையே இதற்கு காரணமாகும்.இது எவ்வளவென்பது யாருக்கும் தெரியவும் மாட்டாது யாரும் இதைப்பற்றி பேசுவதுமில்லை' எனத் தெரிவித்தார்.
பொதுமக்களின் உயிரிழப்புக்கள் ஏற்படவில்லை என்ற விடயத்தினை ஆரம்பமுதலே ஒரேதொனியில் பாதுகாப்புச் செயலாளர் வலியுறுத்தியிருந்தபோதும் விடுதலைப்புலிகள் இயக்க உறுப்பினர்கள் பொதுமக்களின் உடையில் இருந்ததாக அவர் குறிப்பிட்ட விடயங்களைப் பார்க்கையில் பெரும் ஆளிழப்பு ஏற்பட்டுள்ளமை துலாம்பரமாகின்றது
நல்லிணக்க ஆணைக்குழுவின் அங்கத்தவர்களில் ஒருவரான இலங்கையின் சிரேஷ்ட இராஜதந்திரி எச் எம் ஜி எஸ் பலிக்கார பாதுகாப்பு செயலாளரைப்பார்த்து ' நீங்கள் மனித நேய செயற்பாடுகள் குறித்து சிறப்பான விபரிப்பை வழங்கியுள்ளீர்கள் .நாங்கள் ஓமந்தையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள வர்களை சென்று சந்தித்தோம் அவர்கள உண்மையில் விடுதலைப்புலிகளின் கடும் போக்கு உறுப்பினர்கள் அவர்கள் விசாரணைக்கு முகங்கொடுத்தும் சிலர் புனர்வாழ்வளிக்கப்பட்டும் வருகின்றனர் .அபாயங்களையும் மிதிவெடிகளையும் தவிர்த்து தாம் சரணடைவதற்கான வழிமுறையில் பாதுகாப்பு படையினர் எங்கனம் உதவினர் என அவர்கள் குறிப்பிட்டனர். இந்த விடயத்தில் நிறைய ஊகங்கள் இருக்கின்ற காரணத்தால் அந்த சரணடையும் படிமுறை குறித்து எமக்கு விபரிக்க முடியுமா ? இவ்விடயத்தில் ஏற்கனவே தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விலாவாரியாக தகவல் வழங்கியுள்ளதுடன் தாம் முன்சென்ற கிரமமான படிமுறை குறித்து அவர்களே விபரித்துள்ளதால் இது விடயத்தில் நீங்களும் உங்களது களநிலை தளபதிகளும் ஏதேனும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க நேரிட்டதா ? எனக் கேள்வி எழுப்பினார்
இந்தக் கேள்வியும் பதிலுக்கு வழிசமைக்கும் கேள்வியாகவே அமைந்திருந்தது ஆணைக்குழு உறுப்பினர்கள் சாட்சியை குறுக்கு விசாரணைக்கு உட்படுத்தும் வகையிலான கேள்விகளைக் கேட்பதை விடுத்து சாட்சிகள் கூறுவதை ஆமோதிக்கும் பாணியிலேயே கேள்விகளை வடிவமைக்கின்றமை தெளிவாக தெரிந்தது.
இந்த கற்றுக்கொண்ட பாடங்கள் நல்லிணக்க ஆணைக்குழு நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்துகின்ற பணியைச் செய்யாமல் நடைபெற்ற சம்பவங்கள் தொடர்பான விபரிப்புக்களை பதிவுசெய்கின்ற ஒன்றாக அமைந்துவிடுமோ என்ற ஐயப்பாடுகள் அங்கு வந்திருந்தோரிடையே எழுந்தன .
இந்த ஆணைக்குழு அதன் விசாரணைகளை நிறைவுசெய்வதற்கு முன்னதாகவே முடிவுகளை தீர்மானித்து விட்டதாகவே எண்ணத்தோன்றுகின்றது யுத்த நிறுத்த ஒப்பந்தம் விடுதலைப்புலிகள இயக்கம் ஐக்கிய தேசியக்கட்சி நோர்வே அனுசரணை யாவுமே தவறுகளாக அறிவிக்கப்படப்போகின்றன என்பதற்கான தெளிவான அடையாளங்கள் தென்படுகின்றன.
ஒரு தரப்பு சரியென்றும் மற்றத்தரப்பு தவறென்றும் முன்கூட்டியே நிலையெடுத்துக்கொண்டு நல்லிணக்கத்தை நோக்கிய பாதையில் பயணித்துவிடமுடியாது அப்படிப்பயணிப்பின் அது உண்மையான நல்லிணக்கத்திற்கு வழிவிடாது என்பதை வரலாறுகள் உணர்த்திநிற்கின்றன
நல்லிணக்கம் சாத்தியமாவதற்கு அதனை அடைவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு போதிய நம்பிக்கை இருக்க வேண்டும் அன்றேல் அந்த நம்பிக்கையை கட்டி எழுப்புவதற்கான முயற்சிகள் எடுக்கப்படவேண்டும் .
ஆனாலும் இலங்கையில் அவ்வாறான மற்றுமொரு சந்தர்ப்பமும் கைநழுவிச் சென்று விடுமோ என்ற சந்தேகத்தை வலுப்படுத்துவதாக தற்போது இடம்பெறும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் ஆரம்பகட்ட அமர்வுகள் கோடிட்டுக்காட்டுகின்றன .
இறுதியாக இந்த கட்டுரையை முடிக்கு முன்னர் நல்லிணக்கம் தொடர்பாக பிலிப்பைன்ஸ் நாட்டின் முன்னாள் ஜனாதிபதி கொரஸோன் அக்கியுனோ கூறிய கூற்றை மீட்டிப்பார்க்கின்றேன் .
'நல்லிணக்கமானது நீதியுடன் கூடிவருவதாக இருக்கவேண்டும் .அப்படியில்லாவிட்டால் அது நின்று நிலைக்க மாட்டாது நாம் அனைவரும் சமாதானத்திற்காக நம்பிக்கை வைக்கின்றோம் .ஆனால் அந்த சமாதானம் என்னவிலைகொடுத்தும் பெறப்பட்ட சமாதானமாக இருந்துவிடமுடியாது அந்த சமாதானம் கொள்கையின் அடிப்படையில் நீதியின் அடிப்படையிலானதாக அமைந்திடவேண்டும்'
-------------------------------------------------------------------------------------------------------------
வடக்கில் கணிசமான இராணுவப்பிரசன்னம் இருக்க வேண்டும்
பாதுகாப்பு செயலாளர்
விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் மீள ஒருங்கிணையும் சாத்தியக்கூறுகளை தடுத்துநிறுத்துவதற்காக வடக்கில் கணிசமான இராணுவப்பிரசன்னம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத்தாம் கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ தெரிவித்தார்
விடுதலைப்புலிகளது சர்வதேச வலையமைப்பானது இன்னமும் கணிசமான அளவிற்கு அப்படியே இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய்வதற்கான ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று கருத்துவெளியிடும் போதே அவர் இந்த விபரங்களைத்தெரிவித்தார்
கொழும்பிலுள்ள சர்வதேச கற்கைகளுக்கான லக்ஸ்மன் கதிர்காமர் நிலையத்தில் இன்று நடைபெற்ற இன்றைய அமர்வில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ பங்கேற்பதனை அறிந்து பெருமளவான உள்நாட்டு வெளிநாட்டு செய்தியாளர்கள் அங்கு கூடியிருந்தனர்
சுமார் இரண்டரை மணிநேரங்கள் கருத்துக்களை தெரிவித்ததுடன் கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார்
இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் இரண்டு மணிக்கு இந்த அமர்வு ஆரம்பமாகியது இதன் போது கருத்துவெளியிட்ட பாதுகாப்புச்செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ
பாரிய இராணுவ பலத்தைக் கொண்டிருந்த விடுதலைப்புலிகளை அமைப்பையே இலங்கை படையினர் தோற்கடித்தனர் என்பதை பலரும் இன்று மறந்துபோயுள்ளனர் எனக்குறிப்பிட்டதுன் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக தாம்; 2005ம் ஆண்டில் பதவியேற்றபோது வன்னியின் பெரும்பகுதியும்; கிழக்குமாகாணத்தின் பலபகுதிகளும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலேயே இருந்ததாக குறிப்பிட்டார் சிறுவர் போராளிகள் அடங்கலாக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 30000 நிரந்தர போராளிகள் இருந்ததாக பாதுகாப்பு செயலாளர் சுட்டிக்காட்டினார்
விடுதலைப்புலிகளிடம் இராணுவப்பிரிவு கடற்படை விமானப்படை என அனைத்து பிரிவுகளும் இருந்தன அவர்களிடம் தற்கொலைப்படை இருந்தது உலகில் எந்தவொரு அமைப்பிலும் பார்க்க அதிகளவான தற்கொலைக்குண்டுத்தாக்குதல்களை அவர்கள் நடத்தியிருந்தனர் அவர்களிடம் பயங்கர ஆயுதங்கள் இருந்தன ஆட்டிலறிகள் ஏவுகணைகள் யாவும் இருந்தன மக்கள் படையென்ற பெயரில் பொதுமக்களுக்கும் அவர்கள் ஆயுதப்பயிற்சிகளை வழங்கியிருந்தனர் இப்படியாக பாரிய இரர்ணுவப்பலத்தைக்கொண்டிருந்த விடுதலைப்புலிகள் இயக்கத்தையே இலங்கைப்படையினர் தோற்கடித்திருந்தனர் அவர்கள் சிறுகுழுவிற்கு எதிராக போரிடவில்லை விடுதலைப்புலிகளின் இராணுவ பலத்தின் பாரிய தன்மையை விளங்கிக்கொள்ளாதவர்களாக ஏதோ சிறுகுழுவிற்கு எதிராகவே யுத்தம் செய்தது போன்று பலர் கருத்துக்களை வெளியிடுகின்றனர் விடுதலைப்புலிகளைத்தோற்கடிப்பதற்கு இலங்கை அரசாங்கத்திடம் தெளிவான திட்டம் இருந்ததைப்போன்றே மக்களைப்பாதுகாப்பதற்கும் ஆரம்பமுதலே தெளிவான திட்டம் இருந்தது விடுதபை;புலிகள் மிகக்கொடுரமான பயங்கரவாத அமைப்பாக இருந்ததாக குறிப்பிட்ட அவர் விடுதலைப்புலிகள் இழைத்ததாக கூறப்படும் அட்டுழியங்கள் தொடர்பான ஆவணங்களை ஆணைக்குழுவின் முன்பாக கையளித்தார் விடுதலைப்புலிகளுடனான இறுதியுத்தத்தின் போது முப்படையினரையும் சேர்ந்த 6000பேர் கொல்லப்பட்டிருந்ததுடன் 30 ஆயிரம் பேர் வரை காயமடைந்திருந்தனர் பாதுகாப்பு படையினருக்கும் இத்தகைய அளவில் இழப்புக்கள் ஏற்பட்டிருப்பின் நடைபெற்ற மோதல்களின் உக்கிரத்தன்மையை உணர்ந்துகொள்ளமுடியும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ குறிப்பிட்டார் பொதுமக்களையும் விடுதலைப்புலிகளையும் இனங்காண்பது மிகவும் கடினமானதாக இருந்தது அரச படையினரின் தரப்பில் 6000 பேர் உயிரிழந்தும் 30000 பேர் காயமுற்றுமிருந்தால் விடுதலைப்புலிகளின் தரப்பில் எந்தளவிற்கு இழப்புகள் ஏற்பட்டிருக்க வேண்டும் என அவர் கேள்வி எழுப்பினார் இராணுவத்தினரின் பலம் அதிகமாக இருந்தமைகாரணமாக விடுதலைப்புலிகள் தரப்பில் இழப்புக்கள் அதிகமாகவே ஏற்பட்டிருக்கும் எனக்குறிப்பிட்ட பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்; விடுதலைப்புலிகளது இழப்புக்கள் தொடர்பாக எவருமே கதைப்பதில்லை எனக்குறிப்பிட்ட அவர் பொதுமக்களின் இழப்புக்கள் தொடர்பாக மாத்திரமே பேசுவதாக கூறினார் இது அபாயகரமானவிடயம் எனச் சுட்டிக்காட்டினார்
வடக்கில் சிவில் நிருவாகத்தை படிப்படியாக பொலிஸாரிடம் வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றது. ஆனால் வடக்கிலிருந்து இராணுவ முகாம்களை முழுமையாக அகற்ற முடியாது என பாதுகாப்புச்செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்
விடுதலைப்புலிகள் போன்ற அமைப்புக்கள் மீண்டும் எழாதவாறு தடுப்பதற்காக வன்னிப்பகுதிக்காடுகளை இராணுவ ஆதிக்கத்திற்குள் வைத்திருக்க வேண்டிய தேவை உள்ளது அதேபோன்று ஆயுதங்கள் கொண்டுவரப்படாமல் தடுப்பதற்கு கடல்பகுதியை ஆதிக்கத்திற்குள் வைத்திருப்பது அவசியம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்
விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் மீள ஒருங்கிணையும் சாத்தியக்கூறுகளை தடுத்துநிறுத்துவதற்காக வடக்கில் கணிசமான இராணுவப்பிரசன்னம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைத்தாம் கொண்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஸ தெரிவித்தார்
;
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்திற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாக ஆராய்வதற்கான ஆணைக்குழுவின் முன்னிலையில் இன்று எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இந்த விபரங்களைத்தெரிவித்தார்
வடக்கில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகின்றதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பாதுகாப்புச்செயலாளர்
வன்னியில் தற்போது சிவில் நிர்வாகம் இடம்பெற்று வருகின்றது. அண்மையில் அமைச்சரவை கூட்டமும் அங்கு நடைபெற்றது. நிர்வாக செயற்பாடுகளை படிப்படியாக பொலிஸாரிடம் கையளிக்க எதிர்பார்க்கின்றோம். எனினும் இராணுவத்தினரை அங்கிருந்து முழுமையாக வெளியேற்ற முடியாது. இராணுவ முகாம்கள் என்பது அம்பாந்தோட்டையிலும் மாத்தறையிலும் உள்ளன. நாட்டின் எப்பகுதியிலும் இராணுவ முகாம்கள் இருக்கும் வன்னியின் கடற்பகுதி மற்றும் காட்டுப்பகுதிகளில் அதிகளவில் பாதுகாப்பு வழங்கவேண்டியுள்ளது. மீண்டும் ஒருமுறை பயங்கரவாத அமைப்பு ஒன்று உருவாவதற்கு இடமளிக்க முடியாது. காரணம் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னும் செயற்படுகின்றது. எனவே நாங்கள் கவனமாக இருக்கவேண்டும் என கோட்டபாய குறிப்பிட்டார்.
தனியாருக்கு சொந்தமான காணிகள் இராணுவ முகாம்கள் அமைப்பதற்காக எடுக்கப்படுகின்றதா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கோட்டபாய ராஜபக்ஸ
வன்னியில் மக்களினதோ தனியாரினதோ காணிகளில் எக்காரணம் கொண்டும் இராணுவ முகாம்களையும் இராணுவ நிலையங்களையும் அமைக்கும் எண்ணம் அரசாங்கத்துக்கு இல்லை ட அரசாங்க காணிகளிலேயே இராணுவ முகாம்களை மீளமைத்துவருகின்றோம் அரசாங்கத்திற்கு சொந்தமான பாடசாலை கோவில்கள் போன்ற கட்டிடங்களையும் பொதுமக்கள் பாவனைக்காக இராணுவத்தினர் மீளக்கையளித்து வருகின்றனர்இது இன்னமும் முழுமை பெறவில்லை இருந்தபோதும் துரிதமாக அந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றது எனினும் யாழ்ப்பாணத்தில் ஒரு விடயம் காணப்படுகின்றது. அதாவது பலாலியிலும் காங்கேசன்துறையிலும் சில இடங்களில் அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் உள்ளன. அது தொடர்பில் தற்போது ஆராய்ந்துவருகின்றோம். அதாவது இராணுவத்துக்கு எந்தளவு காணிகள் தேவை என்பது தொடர்பில் ஆய்வு ஒன்றை நடத்தி வருகின்றோம். அதன்படி தேவையற்ற காணிகள் வழங்கப்படலாம். பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு நட்டஈடு வழங்கப்படும் என்பதுடன் மாற்றுக்காணிகளும் வழங்கப்படும் எனக் சுட்டிக்காட்டினார்
இராணுவத்தினருக்காக நிரந்தர வீடுகள் அமைத்துக்கொடுக்க நடவடிக்கை ஏதும் வன்னியில் மேற்கொள்ளப்படுகின்றனவா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்
. இராணுவத்தினருக்கு நிரந்தர வீடுகள் அமைத்துக்கொடுக்கப்படவில்லை. அங்கு பணிபுரியும் இராணுவத்தினர் தங்குவதற்கே இருப்பிடங்கள் அமைக்கப்படுகின்றன. இதனை புரிந்துகொள்ளவேண்டும். இராணுவத்தினரை அங்கு குடியேற்றும் எண்ணம் கிடையாது எனக்குறிப்பிட்டார்
Thursday, August 12, 2010
சோகத்தில் இத்தாலி கோபத்தில் பிரான்ஸ்
எது நடக்கக்கூடாதென்று நினைத்தோமோ அதுவே நடந்துவிட்டதென்று சில நேரங்களில் சிலர் கூறக்கேட்டிருக்கின்றோம் தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் உலகக்கிண்ண போட்டிகளின் முதற்சுற்றுடனேயே இத்தாலி பிரான்ஸ் அணிகள் வெளியேற்றப்பட்டதையடுத்து அந்நாட்டு இரசிகர்கள் மட்டுன்றி விளையாட்டுலகுமே இப்படித்தான் கருத்துக்களை கொட்டித்தீர்த்துக்கொண்டிருக்கின்றது
குழு 'ர்' ல் நடைபெற்ற முதற்சுற்றுப்போட்டியொன்றில் நடப்பு ஐரோப்பியக்கிண்ண சம்பியன்களான ஸ்பெயின் அணி சுவிஸ்சர்லாந்து அணியிடம் அடைந்த தோல்வியே தென் ஆபிரிக்க உலகக்கிண்ண போட்டிகளில் இதுவரை நிகழ்ந்த பெரும் அதிர்ச்சியென ஊடகங்கள் ஆரம்பத்தில் கூறிவந்தன.
ஆனால் என்னைப்பொறுத்தவரையில் கடந்த 2006 உலகக்கிண்ணப்போட்டிகளில் சம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணியும் இறுதிப்போட்டி வரை முன்னேறிய பிரான்ஸ் அணியும் முதற்சுற்றுடன் வெளியேற்றப்பட்டமையே இம்முறை நிகழ்ந்த பெரும் அதிர்ச்சி எனக்குறிப்பிடுவேன்
வளையாட்டு என்றுவந்து விட்டால் தோல்விகள் அதில் ஒருபாகம் தான் ஆனாலும் தமது பூரண ஆற்றல்களை காண்பித்து விளையாடித்தோற்றால் அதனை ரசிகர்களும் தாங்கிக்கொள்வர். ஆனபோதிலும் இத்தாலி மற்றும் பிரான்ஸ் அணிகள் வெளியேற்றப்பட்ட விதத்தை ரசிகர்களால் தாங்கிக்கொள்ளமுடியவில்லை
மாபெரும் கால்பந்தாட்டப்பாரம்பரியத்தை கொண்டதும் சிறப்பான கால்பந்து விளையாட்டு திறன்களுக்கு உரித்துடையதுமான தம் நாடுகளது அணிகளா இவ்வாறு விளையாடின என நம்பமுடியாமல் ரசிகர்கள் மாத்திரமன்றி கால்பந்தாட்ட விற்பன்னர்களு;ம் திணறிநிற்கின்றனர்
இத்தாலி நாட்டில் கால்பந்தாட்டம் என்பது வெறுமனே விளையாட்டு மாத்திரமல்ல அது அங்கே ஒரு வாழ்க்கை முறை என்றே சொல்லும் அளவிற்கு வெகுவாக பிரபலமானது சாதாரணமாகவே அனைத்து இத்தாலியர்களும் கால்பந்து விளையாட்டைப்பற்றிய பூரண அறிவைக்கொண்டுள்ளனர் என சொல்லப்படும் நிலையில் தமது அணி முதற்சுற்றோடு வெளியேற்றப்பட்டமையை அவர்கள் தமக்கு தனிப்பட்ட முறையில் நிகழ்ந்த சோகமாகவே அமைந்துவிட்டுள்ளது
தென் ஆபிரிக்காவில் தமது அணிக்கேற்பட்ட நிலைக்கு முற்றாக பொறுப்பேற்ற இத்தாலி பயிற்றுவிப்பாளர் மார்சலோ லிப்பி தாம் தனது அணியை உரிய வகையில் பயிற்சியளிக்கவில்லை எனக் காரணம் கூறியுள்ளார் இருந்தபோதிலும் இத்தாலி வரலாற்றில் அவர் பெயர் என்றும் நினைவிருக்கும் என்பதையும் உணர்ந்தவராகவே அவர் கருத்துக்களை வெளியிட்டுள்ளார் நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் ஜேர்மனியில் இத்தாலிய அணி நான்காவது முறையாக உலகக்கிண்ணத்தை வென்றெடுத்தபோதும் மார்சலோ லிப்பியே பயிற்றுவிப்பாளராக இருந்துள்ளார் என்பது இங்கே சுட்டிக்காட்டத்தக்கது
மறுபக்கத்தில் பிரான்ஸ் பயிற்றுவிப்பாளர் ரேய்மண்ட் டொமினிக் நிலைமையே மிகவும் துர்ப்பாக்கியமானது பிரான்ஸ் அணி இம்முறை உலகக்கிண்ணத்தில் அடைந்ததோல்விகளுக்கு மேலாக கால்பந்தாட்ட ஜாம்பவான்களில் ஒன்று என்ற ஸ்தானத்தில் இருந்து அவ்வணியின் ஒற்றுமை ஒழுக்கம் எல்லாம் ஒன்றாக பெரும் வீழ்ச்சிப்பாதையில் செல்வதை ஆணித்தரமாக எடுத்தியம்பிய காலப்பகுதியிலே பிரான்ஸ் அணிக்கு பயிற்றுவிப்பாளராக திகழ்ந்தவரென்ற அவப்பெயரையே டொமினிக் பெற்றுள்ளார்
12ஆண்டுகளுக்கு முன்னர் தாயக மண்ணில் உலகச்சம்பியனாகிய பிரான்ஸ் அணி 2000ம் ஆண்டில் ஐரோப்பிய கிண்ணத்தையும் வென்று கால்பந்தாட்ட உலகின் ஆதக்கசக்திகளில் ஒன்று என்பதை நிருபித்தது தொடர்ந்து கடந்த உலகக்கிண்ணத்தில் இறுதிப்போட்டி வரைவந்து தமது முன்னைய சாதனைகள் ஒருநாள் கூத்துக்களல்ல அவை தம்முள் புரையோடிக்கிடக்கும் உண்மையான ஆற்றல்களின் வெளிப்பாடு என மீண்டும் நிலைநிறுத்தியது
இம்முறை முதற்சுற்றுபோட்டிகளில் பிரான்ஸ் அணி வெளியேற்றப்பட்ட விதத்திலும் அந்த அணியின் வீரர்கள் நடந்துகொண்ட விதம் ரசிகர்களை மிகவும் காயப்படுத்தியது கோபத்தில் ஆழ்;த்தியது எனக்கூறினால் மிகையல்ல
அணியை விடவும் தனிப்பட்ட வீரர்கள் எந்தளவிற்கு ஆதிக்கம் செலுத்துகின்றனர் என்பதும் இதன்மூலம் புலப்பட்டது
பயிற்சியாளருடன் வாக்குவாதப்பட்டமைக்காக நிக்கலஸ் அனல்கா என்ற வீரர் அணியிலிருந்து திருப்பியனுப்பட்ட நிலையில் ஒட்டுமொத்த அணியே பயிற்சிகளில் ஈடுபடமறுத்தமை இதனை தெளிவாக உணர்த்திநிற்கின்றது;
கறுப்பின வீரர்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் பிரான்ஸ் அணி அதன் வெள்ளையின முகாமைத்துவத்திற்கோ வெள்ளையர்களது ஆதிக்கம்நிறைந்த ஊடகங்களையோ மதித்துநடப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க தென்ஆபிரிக்காவில் போட்டிகளின் பின்னர் வெள்ளையினப் பெரும்பான்மை கொண்ட பிரான்ஸ் ரசிகர்களை வாழ்த்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன
98ம் ஆண்டு உலகக்கிண்ணத்தை வென்றபோது பல்லினவீரர்கள் நிறைந்த அணிபெற்ற வெற்றியானது பிரான்ஸ் சமூக ஒற்றுமையின் அடையாளமாக புகழ்ந்து பேசப்பட்டநிலையில் இம்முறை தோல்விகளையடுத்து கறுப்பின வீரர்கள் ஆதிக்கம் தொடர்பான இனவாதபேச்சுக்கள் வெளிவரத்தொடங்கிவிட்டன
எது எப்படியானாலும் ஒரு தசாப்தத்திற்கு முன்னர் கால்பந்தாட்ட ஆற்றலின் உச்சத்தை தொட்ட பிரான்ஸ் அணி தற்போது வீழ்ச்சிப்பாதையின் கீழ்மட்டத்தை தொட்டுநிற்பதையே இம்முறை தென்ஆபிரிக்காவில் நடைபெற்ற நிகழ்வுகள் கோடிட்டுக்காட்டுகின்றன
--ஆரோ அருண்
Kesari Sports-23/06/2010

வெற்றியைக் கொண்டுவருமா மெஸிடோனா கூட்டணி?
தென் ஆபிரிக்காவில் உலகக்கிண்ண கால்பந்தாட்டப்போட்டிகள் ஆரம்பமாகவதற்கு இன்னமும் ஒருவார காலத்திற்கு அதிகமான காலப்பகுதி உள்ள போதிலும் போட்டிகள் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் கடந்த பலமாதங்களாகவே வலுக்கத் தொடங்கிவிட்டன
ரசிகர்களது எதிர்பார்ப்புகளுக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் கால்பந்தாட்ட உலகம் கண்ட மிகச்சிறந்த வீரர்கள் இருவர் ஓரணியில் இணைந்திருப்பது பிரதானமானதாக அமைந்துள்ளது
ஆர்ஜன்டின அணி இறுதியாக 1986ல் உலகக்கிண்ணத்தை வென்ற போது அவ்வணிக்கு தலைமைதாங்கி முக்கிய பாத்திரத்தை வகித்திருந்த வீரரும் அதற்கடுத்த ஆண்டில் பிறந்து கால்பந்தாட்ட உலகையே தன்காலடியில் கட்டிப்போட்டுள்ள வீரரும் ஆர்ஜன்டின அணியில் இணைந்திருப்பதே இதற்கு காரணமாகும்.
முன்னதாக குறிப்பிட்ட வீரர் பற்றிய அறிமுகத்திற்கு அவசியமில்லை அவர்தான் டியாகோ மரடோனா தற்போது ஆர்ஜன்டின கால்ப்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக திகழ்பவர் மற்றையவர் லயனல் மெஸி
லயனல் மெஸியின் திறமைகள் ஸ்பெயின் நாட்டின் கழக மட்டப்போட்டிகளிலும் ஐரோப்பிய கழகங்களுக்கிடையிலான சம்பியன்ஸ் லீக் போட்டிகளிலுமே அதிகமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது
உலகக்கிண்ண அரங்கில் மெஸியின் திறமைகள் இன்னமும் நிருபிக்கப்படவில்லை இருந்தபோதிலும் கடந்த சில வருடங்களாக ஸ்பெயின் பார்சிலோனா கழகத்திற்காக மெஸி விளையாடியுள்ள போட்டிகளையும் அவர் அடித்துள்ள அட்டகாசமான கோல்களையும் பார்த்தவர்கள் இந்த 22வயதுப் பயல் சாதாரண வீரன் கிடையாது விண்ணில் இருந்து குதித்திட்ட அசாதாரண வீரன் அபரீத ஆற்றல் படைத்தவன் கால்பந்தாட்ட உலகம் இதுபோன்ற வீரனை இதற்கு முன் கண்டதில்லை என்றெல்லாம் புகழாரங்களைச் சூடியிருப்பதிலிருந்து ரசிகர்களின் கவனமெல்லாம் மெஸியின் மீது குவிந்திருக்கின்றது
தற்போது ஆர்ஜன்டின அணியின் பயிற்சியாளராக விளங்கும் டியாகோ மரடோனா கடந்த நூற்றாண்டின் சிறந்த கால்பந்தாட்ட வீரர் யார் என சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் ரசிகர்கள் மத்தியில் நடத்திய இணையத்தளமூலமான வாக்கெடுப்பில் முதலிடத்தைப்பெற்றவர்
.இதுதொடர்பில் சர்ச்சைகளும் எழுந்தன.ஆர்ஜன்டின ரசிகர்கள் இணைய ஆக்கிரமிப்புச் செய்து அதிகளவான வாக்குகளை அளித்தமையாலேயே மரடோனா இணையத்தளவாக்கெடுப்பில் முதலிடம் பெற்றார் என பிரேஸில் ரசிகர்கள் முறையிடவே பின்னர் சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் முன்னாள் வீரர்கள் நடுவர்கள் விற்பன்னர்கள் மத்தியில் கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த வீரர் யார் என்ற மற்றுமொரு வாக்கெடுப்பை நடத்தியிருந்தது
அதிலே பிரேசில் வீரர் பீலே முதலிடத்திற்கு தெரிவாகியிருந்தார்
இவ்வாறு இணையத்தளம் மூலமாக ரசிகர்களிடையே நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் முதலிடம் பெற்ற ஆர்ஜன்டின வீரர் டியாகோ மரடோனாவையும் முன்னாள் வீரர்கள் நடுவர்கள் மத்தியில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் முதலிடம் பெற்ற பிரேசிலிய வீரர் பீலேயையும் கடந்த நூற்றாண்டின் மிகச்சிறந்த கால்பந்தாட்டவீரர்களாக அறிவித்து சர்வதேச கால்பந்தாட்ட சம்மேளனம் இந்த சர்ச்சைக்கு முடிவுகண்டது .
எது எப்படியிருந்தாலும் டியாகோ மரடோனாவின் ஆட்டத்தை பார்த்தவர்கள் அவர் தனித்துவ திறமைகொண்ட அசாதாரண வீரர் என்பதை சந்தேகத்திற்கிடமில்லாது ஒப்புக்கொண்டிருந்தனர் இதற்கு அவர் கழகமட்டப்போட்டிகளில் மட்டுமன்றி உலக அரங்கில் தனது தாயக அணியான ஆர்ஜன்டினாவிற்காக காண்பித்த ஆற்றல் வெளிப்பாடுகளே முக்கிய காரணமாக விளங்கியது
1986ம் ஆண்டில் மெக்ஸிகோவில் இடம்பெற்ற உலகக்கிண்ணப் போட்டியில் மரடோனாவின் ஆற்றல் வெளிப்பாடுகள் ரசிகர்களால் மறக்க முடியாதவை அணிக்கு தலைவராக விளங்கிய மரடோனா தாமே முன்னுதாரணமாக விளையாடி மைதானத்தில் அபரிமிதமான ஆற்றல் வெளிப்பாடுகளைக் காண்பித்து ஆர்ஜன்டின அணிக்கு இரண்டாவது உலகக்கிண்ணத்தை பெற்றுக்கொடுத்திருந்தார்
அதற்குப் பின்னர் மரடோனா உலகெங்கிலும் புகழ்பெற்றதுடன் கால்பந்தாட்ட வரலாற்றின் பிரிக்கப்படமுடியாத அங்கமானார் கால்பந்தாட்டத்தின் மீது அதீத மோகம் கொண்ட ஆர்ஜன்டின நாட்டவர்களோ மரடோனாவை தம்நாட்டின் யுகபுருஷராக ஜாம்பவானாக இதயசிம்மாசனத்தில் ஏற்றிவைத்தனர்
தடைசெய்த ஊக்கமருந்தைப் பாவித்து விளையாடியமை பல குற்றச்சாட்டுக்கள் மரடோனா மீது சுமத்தப்பட்டும் அவற்றில் சில உண்மையென்று நிருபிக்கப்பட்டபோதிலும் மரடோனாவின் மகத்துவம் ஒருதுளியும் குறைந்துவிடவில்லை
தம் தாய்நாட்டிற்காக உலக அரங்கில் அற்புதமான ஆற்றலைவெளிப்படுத்தி உலகக்கிண்ணத்தை பெற்றுக்கொடுத்த ஒரே காரணத்திற்காக எத்தனை தவறுகள் செய்தாலும் அதனை மறந்துவிட ஆர்ஜன்டினா தயங்கியதில்லை
குறையாத மக்கள் செல்வாக்கு மரடோனாவிற்கு ஆஜன்டின அணியின் பயிற்றுவிப்பாளர் பதவியையும் தேடிந்தந்தது
ஆனால் களத்தில் வீரராக இருந்தபோது காண்பித்த ஆற்றல் வெளிப்பாடுகளை மரடோனா பயிற்றுவிப்பாளர் பதவியேற்று இருவருடங்கள் கழிந்துள்ள நிலையிலும் காண்பிக்கவில்லை என்பதே கால்பந்தாட்ட விமர்சகர்களதுறு கணிப்பாகவுள்ளது
2010ம் ஆண்டு உலகக்கிண்ண தகுதிகாண் போட்டிகளில் ஆர்ஜன்டின அணியின் பெறுபேறுகள் பெரிதாக பாராட்டும் படியாக அமைந்திருக்கவில்லை என்பதை கால்பந்தாட்ட ரசிகர்களும் ஆமோதிப்பர்
பலம்குறைந்த அணியாக கருதப்பட்ட பொலிவிய அணிக்கெதிரான போட்டியில் ஆறுக்கு ஒன்று என்ற கோல்கள் வித்தியாசத்தில் தழுவிய தோல்வியுட்பட தகுதிகாண் போட்டிகளில் தட்டுத்தடு மாறி மொத்தமாக விளையாடிய 18 போட்டிகளில் 8ல் மாத்திரமே வெற்றிபெற்று 28புள்ளிகளுடன் தென் அமெரிக்க பிராந்தியத்தில் இருந்து இறுதியாகவே உலகக்கிண்ணபோட்டிகளில் விளையாடுவதற்கான தகைமையை ஈட்டிக்கொண்டது .
தகுதிகாண் போட்டிகளது பெறுபேறுகளின் படி பார்த்தால் வேறுநாடுகள் என்றால் தமது பயிற்றுவிப்பாளரை அவர்கள் நீக்கியிருப்பார்;கள் ஆனால் ஆர்ஜன்டின நாட்டில் மரடோனா கொண்டுள்ள ஸ்தானமே அவரது பதவியைக் காத்துக்கொண்டதாக கூறுபவர்களும் இருக்கவே செய்கின்றனர்
ஒருவழியாக உலகக்கிண்ண போட்டிகளுக்கு ஆர்ஜன்டின அணி தகுதிபெற்றுவிட்டாலும் அவ்வணியில் லயனல் மெஸி உட்பட சிறந்த வீரர்கள் பலர் இருந்தாலும் அணியென்றவகையில் அனைவரும் இணைந்து எதிர்பார்க்கப்படும் ஆற்றலை இதுவரையில் வெளிப்படுத்தவில்லை என்ற குறைபாடு இருக்கவே செய்கின்றது
தகுதிகாண் போட்டிகளின் போது ஆர்ஜன்டின அணியில் மொத்தமாக 80வீரர்களை பயன்படுத்தி வியுகங்களை அமைந்துவிளையாடிய போதிலும் இறுதிவரையில் ஒருநிலையான அணியை அமைக்க முடியவில்லை என்ற குறைபாடும் இருக்கின்றது
அதுமட்டுமன்றி ஸ்பெயினில் இடம்பெறும் (டுய டபைய) கழக மட்டப்போட்டிகளில் வெளிப்படுத்தியுள்ள அபரிமிதமான ஆற்றல் வெளிப்பாடுகளுக்கு இணையான ஆற்றல்வெளிப்பாடுகளை சர்வதேச அரங்கில் லயனல் மெஸி இன்னமும் வெளிப்படுத்தவில்லை என்ற குறையும் ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது
தகுதிகாண் போட்டிகளில் பெரிதாக திறமைகளை வெளிப்படுத்த தவறியபோதிலும் தென் ஆபிரிக்காவில் நடைபெறும் உலகக்கிண்ண இறுதிப்போட்டிகளில் தாம் ஆற்றலை வெளிப்படுத்துவோம் என்பதை ஆர்ஜன்டின வீரர்கள் நம்பிக்கையோடு கூறியிருக்கின்றனர்
தகுதிகாண் போட்டிகள் உட்பட ஆரம்பத்திலேயே ஆற்றலின் உச்சத்தில் வெற்றிகளைக் குவிக்கும் அணிகளைவிடவும் படிப்படியாக ஆற்றலை மேம்படுத்தி போட்டிகள் வலுவடையும்போது ஆற்றலில் உச்சத்தினை வெளிப்படுத்தும் அணிகளே உலகக் கிண்ணம் போன்ற பெரும் சுற்றுப்போட்டிகளை வென்றதாக வரலாறு குறிப்பிடுவதாக ஆர்ஜன்டின அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான மஸ்கரனோ தெரிவித்திருக்கின்றார்
உலகக்கிண்ண போட்டிகள் என்று வந்துவிட்டால் உண்மையான அனுபவமும் ஆற்றலும் எந்தத்தடைகளையும் தாண்டிப்பிரகாசிக்கும் என்பதை வரலாறு எடுத்துணர்துகின்றது இந்தநிலையில் ஏற்கனவே
உலகக்கிண்ணப்போட்டிகளில் பிரகாசித்து வரலாறு படைத்த டியாகோ மரடோனாவையும் கால்பந்தாட்ட ரசிகர்களால் வியந்து போற்றப்படும் ஆற்றல்களுக்கு சொந்தக்காரரான லயனல் மெஸியையும் கொண்டுள்ள ஆர்ஜன்டின அணி இம்முறை உலகக்கிண்ணப்போட்டிகளில் முத்திரை பதிக்க வேண்டும் என்பதே ரசிகர்களதும் விருப்பென்றால் மிகையல்லவே
Kesari Sports-02/06/2010
Subscribe to:
Posts (Atom)