Thursday, August 19, 2010
நாட்டில் சட்டத்தின் ஆட்சி கிடையாது
சரத் பொன்சேகா
நாட்டில் சட்டத்தின் ஆட்சி கிடையாது சட்டத்தினைப்பாதுகாக்க வேண்டியவர்கள் மீது நம்பிக்கை கிடையாது என ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார்
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று பிற்பகல் நடத்திய செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத்தெரிவித்தார்
இந்த செய்தியாளர் மாநாட்டில் பாராளுமன்ற உறுப்பினர்களான அநுர குமார திசாநாயக்க சுனில் ஹந்துனெத்தி டிரான் அலஸ் மற்றும் விஜித ஹேரத் ஆகியோரும் பங்கேற்றனர்
இராணுவ நீதிமன்றத்தால் சரத் பொன்சேகாவிற்கு வழங்கபபட்டுள்ள ஜெனரல் பதவியையும் பதக்கங்களையும் பறிப்பதற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு தொடர்பாகவும் அதனைத்தொடர்ந்து மேற்கொள்ள எண்ணியுள்ள நடவடிக்கை தொடர்பாகவும் இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கருத்துவெளியிடப்பட்டது
இங்கு சரத் பொன்சேகா கருத்துவெளியிடுகையில்
(எனக்கு இன்று ஏற்பட்டுள்ள துர்ப்பாக்கிய நிலைமை எனக்கு மட்டும் பிரத்தியேகமான விடயமல்ல இலங்கையில் உள்ள நிலைமைக்கு அமைய சட்டத்தின் ஆட்சி இல்லாத தன்மையும் சட்டத்தின் பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமையும் சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்களால் அதனை பாதுகாக்க முடியாத நிலைமையும் சட்டத்திற்கு சுதந்திரமான தன்மை இல்லாமையும் நாட்டிலுள்ள பிரச்சனையாகும் இந்த நிலைமைக்கு நாட்டின் அரச தலைவரும் அரசாங்கமுமே பொறுப்பேற்க வேண்டும் அவர்கள் தான் இந்த நிலைமையை ஏற்படுத்திவிட்டுள்ளனர் நாட்டில் சட்டம் கிடையாது சட்டத்தின் மீது நம்பிக்கையும் கிடையாது சட்டத்தை பாதுகாக்க வேண்டியவர்கள் மீது நம்பிக்கை கிடையாது
அண்மையில் எமது கட்சியைச் சேர்ந்த இருபாராளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு செய்ய பொலிஸிற்கு சென்றபோது காலி பொலிஸார் அவர்களை சிறையில் அடைத்தனர் இது நாட்டில் சட்டம் இல்லை என்பதற்கு நல்ல உதாரணமாகும் சட்டத்தினை உறுதிப்படுத்த வேண்டிய உச்சநீதிமன்றம் உட்பட உயரிய இடங்களிலும் ஜனாதிபதி தலையீடு செய்கின்றார் என்ற விடயம் நாட்டு மக்களுக்கும் நன்கு தெரிந்தவொன்றாகும் ஆட்சியின் உயர் மட்டத்தில் உள்ளவர்கள் சட்டத்தின் மீது தலையிடுகின்றனர் என்ற விடயம் பொதுமக்கள் மத்தியில் பதிந்திருக்குமானால் சட்டத்தின் மீதுள்ள நம்பிக்கை அவர்களுக்கு இல்லாமல் போகும் அதுதான் இந்த நாட்டிலுள்ள முக்கியமான பிரச்சனையாகும் சட்டத்தின் பாதுகாப்பை பெற்றுக்கொள்ள முடியாததொருவனாக நான் தற்போதிருக்கின்றேன் )
ஆளும் தரப்பினர் தம்மை சிறையில் அடைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டுவருவதாக ஜனநாயக தேசிய முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவிக்கின்றார்
இதுவரை தமக்கு நிகழ்ந்தவற்றை சரியாகவே அனுமானித்திருந்ததாக குறிப்பிடும் அவர் அடுத்த கட்டமாக தம்மை அவர்கள் சிறையில் அடைக்க முனைப்புக்காண்பித்து வருவதாக குறிப்பிட்டார்.
பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் இன்று பிற்பகல் நடத்திய செய்தியாளர் மாநாட்டின்போதே அவர் இதனைத்தெரிவித்தார்
ஜனாதிபதித்தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவை எதிர்த்து போட்டியிட்ட காரணத்திற்காகவே தாம் பழிவாங்கப்படுவதாக குறிப்பிட்ட அவர் தமது பதவி பறிக்கப்பட்டமை தொடர்பாகவோ பதக்கங்களை இல்லாமல் செய்ய இராணுவநீதிமன்றம் தீர்ப்பளித்தது தொடர்பாகவோ கவலைப்படவில்லை எனத்தெரிவித்தார்
தாய்நாட்டிற்கு சேவைசெய்ய வேண்டும் என்பதே தனது எண்ணமாக இருந்ததாக குறிப்பிட்ட அவர் அதற்காக பிரதிபலனை எதிர்பார்க்கவில்லை எனக் குறிப்பிட்டார்
ஜெனரல் பதவியைப்பறிப்பதற்கும் பதக்கங்களை திரும்பப்பெறுவதற்கும் முதலாவது இராணுவ நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த கட்டமாக என்ன நடைபெறும் என எதிர்பார்க்கின்றீர்கள் என வினவியதற்கு பதிலளித்த சரத் பொன்சேகா அடுத்த கட்டமாக தன்னை சிறையில் அடைக்க முற்படுவார்கள் எனக்குறிப்பிட்டார்
தாம் பாதுகாப்பு அமைச்சர் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருடன் கடந்த நான்கு வருடங்களாக இணைந்துசெயற்பட்டவர் என்றவகையில் அவர்களது மனோநிலையை அறிந்துவைத்துள்ளதாக தெரிவித்த சரத் பொன்சேகா அவர்கள் எங்கனம் ஒருவிடயம தொடர்பில் நடந்துகொள்வார்கள் என்பதை அறிந்தவன் என்ற வகையிலேயே தம்மை சிறையில் அடைக்க முனைவார்கள் எனக்குறிப்பிடுவதாக தெரிவித்தார் தாம் சீருடையை கழற்றிய பின்னர் அவர்கள் தமக்கு என்ன செய்வார்கள் என்பதை தாம் அனுமானித்திருந்ததாக சுட்டிக்காட்டினார் .பொன்சேகாவிற்கு அடுத்து என்ன செய்யலாம் அவரை எத்தனை ஆண்டுகள் சிறையில் தள்ளலாம் என்ற விடயங்களை அமைச்சரவையில் பகிரங்கமாகவே அவர்கள் கலந்துரையாடிவருவதாக தெரிவித்த பொன்சேகா அவர்களது திட்டங்கள் பற்றியெல்லாம் தமக்கு தகவல் கிடைத்துவருவதாக குறிப்பிட்டார்
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் முன்பாக கடந்த செவ்வாய்க்கிழமை சாட்சியமளித்த பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ விடுதலைப்புலிகளின் சர்வதேச வலையமைப்பு பெருமளவில் அப்படியே இருப்பதன் காரணமாக வடபகுதியில் இராணுவ பிரசன்னத்தை தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டியுள்ளதாக குறிப்பிட்டார் இது தொடர்பாக உங்கள் அபிப்பிராயம் என்ன என்று; ஊடகவியலாளர் ஒருவர் வினவியதற்கு பதிலளித்த பொன்சேகா இங்கு அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்
உண்மையில் விடுதலைப்புலிகளது சர்வதேச வலையமைப்பு அப்படியே இருப்பதற்கு காரணம் அந்த வலையமைப்பின் தலைவரான கேபி கோட்டாபய ராஜபக்ஸவின் கைப்பைக்குள் இருப்பதலாகும் அந்தவகையில் வலையமைப்பு உள்ளதா இல்லையா என்பதை ஏனையவர்களைப்பார்க்க அவர் நன்கு அறிந்துள்ளார் என புன்முறுவலுடன் பதிலளித்தார்
ஒரு பெரும் யுத்தம் நிறைவடைந்தவுடன் ஆலோசனைகளை மேற்கொண்டு நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டியுள்ளதால் அதற்கு இராணுவத்தின் பிரசன்னம் அவசியமானது என பொன்சேகா குறிப்பிட்டார் யுத்தம் நிறைவுபெற்றதும ஆலோசனைகள் மற்றும் நல்லிணக்க நடவடிககைகளை முன்னெடுக்க வேண்டுமாதலால் இராணுவத்தை உடனடியாக திருப்பியனுப்பிவிடமுடியாது அந்தவகையில் இராணுவ பிரசன்னம் ஓரளவு கணிசமான காலப்பகுதிக்கு அவசியமாகும் அத்தோடு அது இலங்கையின் ஒருபகுதியல்லவா எனச்சுட்டிக்காட்டிய பொன்சேகா இலங்கையில் இராணுவத்தை நிறுத்த முடியாவிட்டால் இந்தியாவில் சென்றா நிறுத்த முடியும் என புன்முறுவலுடன் பதிலளித்தார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment