Tuesday, September 15, 2020

உத்தேச 20வது திருத்தம்: சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களிற்கான சாவுமணி!

 


உத்தேசிக்கப்பட்ட 20ஆவது திருத்தம் இலங்கையில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல்களிற்கான சாவுமணியாகும். அரசியல் தொடர்பாடல்கள் மற்றும் டிஜிட்டல் தேர்தல் பரப்புரைகள் பற்றி ஒரு தசாப்த வருடங்களுக்கும் மேலான  ஆய்வு, 20ஆவது திருத்தம், அதன் தற்போதைய வடிவில் நாடாளுமன்றத்தில், நிறைவேற்றப்பட்டால் (எப்போது?) எது எங்களைப் பின்தொடரும் என்பதில் சந்தேகம் எதற்கும் இடம் வைக்கவில்லை. இலங்கை, ஒரு புதிய கனவு அரசு நிலையை அடையும், புதிய அரசியலமைப்பில் எவை விரிவாக்கப்பட்டன மற்றும் ஸ்திப்படுத்தப்பட்டுள்ளன என்பதை  உத்தேசிக்கப்பட்ட திருத்தம் பறை சாற்றுமாயின், அது மோசமான நிலை. தேர்தல்கள் பௌதிகக் கேடுகள் அற்றவையாக, ஆனால் முற்றிலுமாக ஒரு பக்கம் சார்ந்ததாக, ஒரு கட்சி அரசாகஇ நாடு அமையும். இங்கு, கூடுதல் அச்சம் தருவது, மாற்றுவழிகளின் இல்லாமை அனைத்து அரசியல் செயற்பாட்டாளர்களையும் ஒரு புதிய டிஜிட்டல் பிரச்சார முறைகளின் பந்தயத்திற்கு உந்துவதாகும். அரசியல் கட்சிகள்  எதனை பற்றிப் பிடிப்பதற்கு மற்றும் தக்க வைப்பதற்கு நாடுகிறது என்பதை அறிவது எங்களது கவனத்திற்குரியதாக இருக்கையில், அவை கவனத்தைத் திசை திருப்புவதற்கு அதிகளவில் மிகவும் நவீன, நுட்ப வழிகளைப் பயன்படுத்தும். எங்களின் ஈடுபாடே எங்களது உரிமைகளை தெரியப்படுத்தும். இதனை நன்கு அறிந்தவர்கள் 20ஆவது திருத்தத்திற்கு பிந்தியவர்களாவர்.


உத்தேசிக்கப்பட்ட திருத்தத்தை கடுமையாக விமர்சிக்கும் ஒரு தொகைக் கட்டுரைகள்இ கூடுதல் ஜனாதிபதித்துவம் எனும் புதிய அத்தியாயத்தின் மோசமான பின்விளைவுகளைச் சுட்டிக்காட்டி கடந்த வாரம் வெளியாயின. நாட்டின் பிரச்சார வடிவமைப்பு வெளியில், தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்களை நீர்த்துப்போக வைக்கும் ஒரு தொகுதிப் பரிந்துரைகள் மீதான கவனமே திருத்தத்தில் இருந்தது. உத்தேசிக்கப்பட்டது அறிவார்ந்ததாகவோ அல்லது நடைமுறை சார்ந்தாகவோ இல்லை. அது 20ஆவது திருத்தத்தினால் அளிக்கப்பட்ட அதிகாரங்களை தற்போதைய ஜனாதிபதி அல்லாத ஒருவரோ அல்லது  அரசாங்கத்திலுள்ள பெரும்பான்மைக் கட்சியோ பெற்றுஇ உபயோகிப்பதாகக் கற்பனை செய்வதுடன் சம்பந்தப்படுகிறது. விரும்பப்படாத அல்லது அச்சப்படக்கூடிய அரசியல்வாதி ஒருவரால் முழு அதிகாரமும் அப்பியாசிக்கப்படுவதினால் ஒருவர் சௌகரியமற்றதாக உணர்ந்தால் மாத்திரம், அவ்வதிகாரம் இருப்பதற்கு அனுமதிக்கப்படல் கூடாது.


இவை எவ்வாறு மேற்கொள்ளப்படலாம் என்பது பற்றி அண்மைய அரசியல் வரலாற்றிலிருந்து பாடங்கள் உள்ளன. நவம்பர் 20, 2014 அன்று, அடுத்த வரும் வருடத்தின் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில், நிலைமைகள் மிகவும் சாத்தியமற்றதாக இருந்த போதிலும், ஒரு புதிய ஜனாதிபதியை நாடு கொண்டிருக்கும் என ஒருவரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஜனவரி 2015 இல், அவ்வாண்டில் இரண்டு தடவைகள் முற்றிலுமாக நிராகரிக்கப்பட்ட ஒரு கட்சிக்கு, பெப்ரவரி 2018 இல் மீண்டும் சாதகமான ஒரு நிலை திரும்புமென எவரும் அறிந்திருக்க மாட்டார்.  2009 மே இல், இராணுவத்தை வழிநடத்திய தளபதிஇ அடுத்த வருடம் பெப்ரவரியில், தான் தாக்கப்பட்டு கொழும்பின் மத்திய பகுதியிலிருந்து இராணுவ வீரர்களால் வெளியே இழுத்துச் செல்லப்படுவேன் என உணர்ந்திருக்கவில்லை. துரிதமாக மாறும் அரசியல் அதிர்ஷ்டங்களுக்கப்பால்இ இந்தத் திருத்தம் ஒரு அரசியல் மரபு வழியாக எதனை  ஊக்குவிக்கும் என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியமாக இருக்கையில்இ குறிப்பிடுவதற்கு இரண்டுமே நிலையற்றதாகவுள்ள, வயது மற்றும் ஆரோக்கியம் பற்றிய ஒரு கேள்வி அங்கெழுகிறது. ஜனாதிபதி மற்றும் பிரதமர்இ இருவருமே 70 வயதிற்கு மேற்பட்டவர்கள். ஒருவர் கடந்த வருடம் ஒரு பெரும் சத்திரசிகிச்சைக்காக சிங்கப்பூர் வைத்தியசாலையொன்றில் இருந்தார். மற்றயைவர், பகிரங்கமாகவும் மற்றும் தொகுக்கப்படாத காணொளிக் காட்சிகளில் படிகள் மற்றும் சமனற்ற நிலங்களில் ஏறுவதற்கு சிரமங்களை எதிர்கொண்டுள்ளார். திருத்தங்களை வரைந்தவர்கள் யார் பயனடைவர் என மனதில் கொண்டிருந்தார்களோ, அவர்களல்ல இத்திருத்தத்தினால் முழுமையான அதிகாரத்தை பெறுவது. எனவே, இங்கே நோக்கத்தில் ஒரு முரண்பாடான நிலை தோன்றுகிறது.


உத்தேசிக்கப்பட்ட 20ஆவது திருத்தம் தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரங்களை நீர்த்துப் போக வைக்கிறது. மேலும்இ ஜனாதிபதியால் ஆணைக்குழுக்களுக்கான நியமனங்கள் அந்நிறுவனங்களின் சுயாதீனத்தன்மை மீதான அனைத்து நம்பகத்தன்மைகளையும் தகர்க்கிறது. திருத்தம் எதிர்காலத்தில் ஒவ்வொரு தேர்தல் பரப்புரையிலும் ஓர் அளவிட முடியாத சாதகத் தன்மையை அரசாங்கத்திற்கு உத்தரவாதப்படுத்துகிறது. எந்தளவிற்கு என்பதை அறிந்துகொள்வதற்கு, ஒரு தசாப்தம் பின்னோக்கி நாங்கள் செல்லுதல் வேண்டும். 2010இ ஜனவரி 27ஆம் திகதியன்றான ஜனாதிபதித் தேர்தல், இலங்கையில் முதல் தடவையாக, இரண்டு முன்னணி வேட்பாளர்களும் இணையத் தளங்கள் மூலமாகவும், அவ்வாறே பேஸ்புக், பிளிக்கர் மற்றும் டுவிட்டர் கணக்குகள் மூலமாகவும் தேர்தல் பிரச்சாரங்களை ஆரம்பித்ததைக் கண்டது. ஜனாதிபதி வேட்பாளர் ஒருவரைக் குறிவைக்கும்  இணையத்தள மூலமான முதலாவது தாக்குதல் மற்றும் மதிப்பைக் குறைக்கும் நடவடிக்கையும் 2010 இல் ஆரம்பிக்கப்பட்டு, அது ஓர் உத்தியோகபூர்வமான ஒன்றாக நோக்கப்படுவதற்கும் வைத்தது. 2015 இல், நிலைமைகள் சிக்கலடைய ஆரம்பித்ததும்இ அவ்வருடத்தில் நடத்தப்பட்ட ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தல் ஆகிய இரண்டிலும் சமூக ஊடகப் பரப்புரைகள் முக்கியமானதாக அமைந்தது.


ஒரு புறத்தில் தேர்தல்களுடன் தொடர்புபட்ட பௌதிக ரீதியான விளைவுகள் குறைவடைய ஆரம்பித்தன. மறுபுறத்தில், டிஜிட்டல் பிரச்சாரத்தின் நவீனத்துவம், உருவாக்க வேகம், விநியோக அளவு மற்றும் ஈடுபாட்டளவு என்பன துரிதமாக அதிகரித்தன. 2019 ஜனாதிபதித் தேர்தலில், பிரச்சார நடவடிக்கைகள், ஊர்வலப் பேரணிகள் மற்றும் அச்சிடப்பட்ட தாள்கள் என்பவற்றிலிருந்து வெளி நகர்ந்தது. பரப்புரைப் பொருட்கள் யூடியூப், பேஸ்புக் பக்கங்கள் மற்றும் குழுக்கள், டுவிட்டர், லிங்ட்இன், வட்ஸ்அப், இன்ஸ்டகிராம், வைபர், பேஸ்புக் மெசஞ்சர், மின்னஞ்சல், குறுஞ்செய்திகள், ரோபோ அழைப்புகள், உத்தியோகபூர்வ இணையத்தளங்கள், பதிலி இணையத்தளங்கள்  (Proxy Websites) மற்றும் உள்ளடக்கங்களுடன் ஏற்புடையதாகக் காண்பிப்பதற்கு எதிர்தரப்புகளின் பெயர்களின் கீழ் மோசடியாகப் பதிவு செய்யாத இணையத்தளங்கள் என்பவை மூலமாக விநியோகிக்கப்பட்டன. முதல் தடவையாக கைத் தொலைபேசிச் செயலிகள் உத்தியோகபூர்வ பரப்புரைச் சாதனங்களின் ஒரு பகுதியாக வந்தது. இந்தச் செயலிகள், தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் தொலைபேசி இலக்கம் என்பவையுட்பட, தன்னிச்சையாக அளிக்கப்படும் வாக்காளர் தகவல்களை இலக்கு வைத்துச் செயற்பட்டன. மேலும் ஆபத்தான வகையில், இந்தச் செயலிகள் பயனர்களின் இடையீடு அல்லது ஒப்புதலின்றி வாரத்தின் 24 மணித்தியாலங்களிலும் பயனர் தொலைபேசி உபயோகித்த இடம், தொலைபேசியின் தகவல் சேமிப்பு மற்றும் சேமித்து வைத்த அனைத்து தொடர்பு விபரங்கள் என்பவற்றிற்கான அணுகுவழிகளை அடைந்தன. இத்தகவல்கள்இ தேர்தல் ஆணைக்குழுவினால் சட்டரீதியாக வைத்திருக்கும் எதனையும் விட மிகவும் விரிவான கட்சிசார் தரவுத்தளத்திற்கு பங்களித்தன. தங்களது தளங்களில் பிரச்சாரங்களை அர்த்தமுள்ள வகையில் கட்டுப்படுத்துவதற்கு சமூக ஊடக நிறுவனங்களின் இயலாமை மற்றும் விருப்பின்மையுடன் இணைந்ததாகஇ இந்தப் பொதுத் தேர்தல் வரைக்குமான நிலைமை மேலும் மோசமானதாக இருந்தது. ​முன்னணிக் கட்சிகளால் பரப்புரைகளின் போது மெல்வயார்களுடன் (Malware)கைபேசிச் செயலிகள் வெளியிடப்பட்டன. ஆயிரக்கணக்கானவர்கள் அதனை தங்கள் கைபேசிகளில் தரவிறக்கம் செய்து கொண்டனர். நாட்டில் அல்லது ஒரு சில மாதகால இடைவெளிகளில் முற்றிலும் புதிதாகத் தோன்றிய டிஜிட்டல் பிரச்சாரங்களில் ஒரு டசின் எண்ணிக்கையிலான கவலை அளிக்கும் புதிய போக்குகள், ஜனாதிபதித் தேர்தலில் முதலில் பரிசோதிக்கப்பட்டதிலிருந்து துரிதமான பரிணாமத்தைக் காண்பித்தன. இலங்கையில் கட்சிச் சார்பான தனியார் தொலைக் காட்சி நிலையங்கள்இ முதலில் ஒளிபரப்பிய பின்னர் அதன் உள்ளடக்கங்கள் பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் கூடுதலாக காணப்படுகின்றமைஇ சமூக ஊடகங்களில் கூடுதல் முக்கியமான பிரச்சினையாக இருந்தது.  குறைந்தபட்சம் ஒரு தொலைக்காட்சி நிலையம் அல்லது ஊடக உரிமையாளரின் பின்புலம் கொண்ட வேட்பாளர்கள் அவை இல்லாதவர்களை விட ஒரு தெளிவான அனுகூலத்தைக் கொண்டிருந்தனர்.


தெளிவாகக் கூறின், காலத்திற்கு முந்திய தேர்தல் சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுடன், ஊடகத்திற்கான ஒரு இடைவெளி இல்லாததைப் பிரதிபலித்துக் கொண்டுஇ இன்று இருக்குமாற் போல தேர்தல் ஆணைக்குழு அதன் எதிர்காலத் தேவைக்குப் பொருத்தமானதாக இல்லை. எழும் இந்தப் பிரச்சினையை வலுவாக்கி மற்றும் சவால்களை விரிவாக்கி, கவனத்தில் கொள்வதற்குத் தேவையான அவசர சீர்திருத்தத்திற்கு மிகவும் எதிரானதையே, உத்தேசிக்கப்பட்ட 20ஆவது திருத்தம் செய்கிறது.  திருத்தம், வேண்டுமென்றே அதிகாரத்தை மத்தி நோக்கியதாக மற்றும் அரசாங்கத்தின் கரங்களில் பிரச்சாரங்களைச் சுற்றி மிகவும் நச்சான, தீங்கான செயற்பாடுகளை பலப்படுத்தும் வேளையில், ஏதேனும் அர்த்தபூர்வ மேற்பார்வை மற்றும் ஒழுங்குபடுத்தலை முற்றாக அழிக்கின்றது. இதன் நிகர விளைவு, நாட்டின் ஊடக வெளியில் நிரந்தரமாக, ஒரு எதிர்தரப்பு இல்லாத ஆதிக்கத்தைஇ அரசாங்கம் அனுபவிக்கும், என்பதாகும்.


வார்த்தைகளை நாங்கள் விழுங்கி மறைக்க வேண்டியதில்லை. தற்போதைய வடிவில், 20ஆவது திருத்தம் ஜனநாயகப் பெறுபேறுளை நாசம் செய்வதற்கு நோக்கம் கொண்ட ஒரு தேர்தல் சதி நடவடிக்கையாகும். இதன் ஆபத்து, மிகையாக குறிப்பிடப்பட முடியாது. இதற்கு சாதக நோக்கு அல்லது​பெறுபேறு உள்ளது என மாற்றிப் பொருள் கொள்ளும் வகையில் வாசிப்பதற்கு முடியாது. திருத்தம் அனைத்து அரசியல் கட்சிகளையும் நேரடியாகவும் மற்றும் பதிலிகள் மூலமாகவும் சிறந்த பிரச்சார உருவாக்கத்திற்குப் பொருந்தும் வகையில் சமூக ஊடக ஆயதமேந்துதல் அல்லது கூர்தீட்டுதலில் முதலிடுவதற்கு நிர்ப்பந்திக்கிறது. பிரஜைகள், அவர்கள் யாருக்கு வாக்களித்தாலும் தோல்வியுறுவர்.


இது மிகைகூற்றல்ல. எனது கலாநிதி ஆய்வின் ஒரு பகுதியாக நான் கற்ற சமகால அரசியல் தொடர்பாடல்களின் சிக்கலான தன்மை இங்கு குறிப்பிட்டதை விட கூடுதல் கவலையளிப்பவையாகும். ஒருவர் ஓர் இணையத்தளத்திற்கு வெறுமனே நுழைவாராயின் அதன் மூலம் ஒருவர் அரசியல் விளம்பரங்களுக்காக விபரப்படுத்தப்படுகிறார் என கற்பனை செய்யுங்கள். நவீன வழிமுறைகள் மூலமாக ஒரு குறித்த முறையை அடிப்படையாகக் கொண்டு வாக்களிப்பதற்கு ஒருவர் விருப்பொன்றைக் கொண்டுள்ளார் என ஒருவர் இனங்காணப்படின், இதன் அடிப்படையில் அவரது நிலைப்பாட்டிற்கு எதிராக மாற்றுக் கண்ணோட்டங்களைக் காட்டி அச்சுறுத்தும் கட்டமைப்புகளால் அவர் பாரபட்சப்படுத்தப்படுதல் அல்லது இலக்கு வைக்கப்படுவதை கற்பனை செய்யுங்கள். மிகவும் ஆற்றல் கொண்ட அரசியல் பிரச்சாரகர்கள் அரசியல் கட்சிகளோ அல்லது அரசியல்வாதிகளோ அல்ல. ஆனால் தினமும் மில்லியன் கணக்கானவர்களை பொழுதுபோக வைக்கும் பிரபல்யமான பேஸ்புக் பக்கங்களே என்பதைக் கற்பனை செய்யுங்கள். மக்கள் கண்ணோட்டங்கள் அல்லது அபிலாசைகளை வடிவமைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதி, பிரதமர் அல்லது கட்சிக்குத் தெளிவாகத் தொடர்புபடுத்தப்படவில்லை. ஆனால்இ உண்மை மற்றும் நம்பகத்தன்மைக்காக தவறாகக் கொள்ளப்பட்ட ஒரு அபிமானத்திற்கே தொடர்புபட்டுள்ளது என்பதை கற்பனை செய்யுங்கள். கட்சிசார்பு கொண்டவர்களாக உணராத, எதிர்காலத்தில் தங்களது வாக்குரிமையை அப்பியாசிக்கவுள்ள பதின்ம வயதினர்களின் செல்வாக்கைப் பெறுவதற்கு அவர்கள் மத்தியில் கூருணர்வை விதைப்பதைக் கற்பனை செய்யுங்கள்.  இப்பொழுது, ஒவ்வொரு நாளும் இவை எல்லாம் ஏற்கனவே நிகழ்கின்ற ஒரு நாட்டைக் கற்பனை செய்யுங்கள். 20ஆவது திருத்தம், இவை அனைத்திற்கானதும் மற்றும் கூடுதலாகவானதுமான ஒரு விரைவு முடுக்கியே ஆகும்.


தேர்தல் நம்பகத்தன்மைச் சூழ்ந்த சவால்கள் இலங்கைக்கு தனித்துவமானவையல்ல. செய்தித் தலைப்புகளின் ஒரு துரித பார்வை, மேற்கிலுள்ள ஜனநாயக அமைப்புகள் மற்றும் செய்முறைகள் எந்தளவிற்கு உடைந்து வீழ்கின்றன என்பது வியப்பூட்டும் வகையில் எங்களுக்கு பரிச்சயமாக்குகின்றது. மிகவும் தாராளவாதமல்லாத பெறுபேறுகளைத் தவிர்ப்பதற்கு அர்த்தமுள்ள கொள்கைகளுக்குப் பதிலாக, இலங்கை பயமில்லாத சர்வாதிகார நகர்வுக்குள் உட்பட்ட ஒரு எச்சரிக்கையாக இப்போதுள்ளது.  எவ்வாறாயினும், பிரச்சாரங்களைக் கட்டமைத்த திறன் வாய்ந்த அதே பொறியியலாளர்களிடமிருந்து அவர்களது பாரிய வடிவமைப்பை சோதித்துக் கட்டுப்படுத்துவதற்கான அரசியலமைப்புத் திருத்தங்களை எதிர்பார்ப்பது அநேகம் அளவிற்கு மிஞ்சியதாகும். அரசியல்வாதிகளும் மற்றும் அரசியல் கட்சிகளும் எங்கே தவறின என்பதை பிரஜைகள் மேம்படுத்துதல் வேண்டும். 20ஆவது திருத்தத்தின் தவிர்க்க முடியாத பெறுபேறு, ஒரு தனி அரசியல், சமூக மற்றும் பொருளாதார கூற்றுகளின் முன் அனுமதிக்கப்பட்ட வேறுபடுதல்கள் மட்டுமே சகித்துக் கொள்ளப்படல் என்பதாகும். முழுமையான தகவல் ஆதிக்கம் என்பது சரியாக அதனையே அர்த்தப்படுத்துகிறது. இந்தத் திருத்தத்தின் கேடு, கடந்த காலத்தின் ஆதிக்கம், தணிக்கை மற்றும் எதிரணியினரை அடக்கும்முறை, என்பவற்றிலிருந்து பெரிதும் வேறுபட்டது. இதனால்இ உருவாகும் கேடு திட்டமிட்ட வகையிலானதென்பதால் இலகுவான கண்காணிப்பு அல்லது ஆய்வு என்பவற்றிலிருந்து மறைவானது – டிஜிட்ட வடிவிலானது இருந்தும் உண்மையான, உடனடியான மற்றும் நிலைத்திருக்கும் தேர்தல் மற்றும் அரசியல் தாக்கங்கள் உள்ளதினால் அது மிகவும் நாசகரமானது.


20ஆவது திருத்தத்தை எதிர்த்தல் கட்சிசார் விமர்சித்தலுக்கு அப்பாற் செல்கிறது. அது சிவில் கடமையின் ஒரு விடயமாகும். இப்போதே நாங்கள் அதனை மேற்கொள்ளுதல் வேண்டும் அல்லது இனி வரும் பல அரசாங்கங்கள் மற்றும் தலைமுறைகளுக்கு அது கட்டவிழ்த்து விடும் பயங்கரமான பின்விளைவுகளுக்கு நாங்கள் அனைவரும் துயருறுதல் வேண்டும்.

The End of Free and Fair Elections என்ற தலைப்பில் Groundviews தளத்தில் சஞ்சன ஹத்தொட்டுவவினால் எழுதப்பட்டு வெளிவந்த கட்டுரையின் தமிழாக்கம், மாற்றம் இணையத்தளத்தில் வெளியானதாகும் 


No comments:

Post a Comment