கிரிக்கட்டின் பிதாமகர் என வர்ணிக்கப்படும் டொன் பிரட்மன் Don Bradman, தனது சிறுவயதில் கிரிக்கெட் விளையாடிய ஆடுகளம் அமைந்துள்ள மைதான நிலத்தில் வீடுகளை அமைப்பதற்கு வீடமைக்கும் நிறுவனங்கள் முயற்சிசெய்து வருவதால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அந்தப்பிரதேசத்தின் பெறுமதி தொலையப்போவதாக அப்பிரதேச சபை (கவுன்ஸில்) அச்சம் கவலை தெரிவித்துள்ளது.
சிட்னிக்கு தென்கிழக்காக 110 கிலோமீற்றர் தொலைவில் Wingecarribee Shire கவுன்ஸிலின் Bowral பகுதியிலுள்ள குறிப்பிட்ட மைதானம் 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அவுஸ்திரேலிய கிரிக்கட் வரலாற்றின் மாபெரும் ஆளுமை Don Bradman-இன் பள்ளிக்கால கிரிக்கெட் மைதானமாக பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த மைதானம்தான் டொன் பிரட்மனுக்கு கிரிக்கெட் மீதான பிரியத்தை ஏற்படுத்தியது என்று அவரோடு கிரிக்கெட் விளையாடிய சக வீரர்கள் தங்கள் அனுபவங்களை பதிவுசெய்திருக்கிறார்கள்.
2014 ஆம் ஆண்டு முதல் இந்த மைதானம் பொதுமக்கள் பாவனைக்கு தடைசெய்யப்பட்டு நாட்டின் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த நிலமாக பிரகடனப்படுத்துவதற்கான முயற்சிகளை Wingecaribee Shire ளூசைந கவுன்ஸில் முன்னெடுத்திருந்தது.
ஆனால் கவுன்ஸிலின் இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ள வீடமைக்கும் நிறுவனங்கள் அந்த நிலத்தில் 13 வீடுகளை அமைப்பதற்கு முயற்சித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனங்களின் முயற்சி வெற்றிபெற்றால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிலத்தின் பெறுமதி தொலைந்துபோகும் என்று அப்பிரதேச மக்கள் உட்பட கவுன்ஸில் தரப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment