வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்களில் அடுத்துவரும் 30 நாட்களில் அதிரடியான பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. புதுடில்லி, வொஷிங்டன், சென்னை, டோக்கியோ, பெய்ஜிங் மற்றும் ஒட்டோவா உட்பட இலங்கைத்தூதரங்களுக்கான புதிய தூதுவர்கள் ஏற்கனவே தெரிவுசெய்யப்பட்டுள்ளதாக நம்பரகமான வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
இதேவேளை வெளிநாடுகளில் உள்ள இலங்கைத்தூதரங்களில் பணிபுரியும் 60வது வயதிற்கு மேற்பட்ட ஓய்வுபெற்ற இராஜதந்திரிகள் பலரும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒருமாத கால அவகாசத்தின் அடிப்படையில் ஒக்டோபர் 4ம் திகதியளவில் இலங்கைக்கு திரும்பிவரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
நியுயோர்க்கிலுள்ள ஐக்கியநாடுகள் சபையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாகவுள்ள ஷேனுகா செனவிரத்ன, ஒட்டாவிற்கான தூதுவராகவுள்ள அசோக கிரிகாகம சுவீடனின் ஸ்டோக்ஹோம் தூதுவராகவுள்ள சுதந்தக கனேகமாராச்சி, எகிக்தின் தூதுவராகவுள்ள தமயந்தி ராஜபக்ஸ, ஹவானா தூதுவராகவுள்ள ஏ.எல்.ரத்னபால மற்றும் ஹேய்கிற்கான தூதுவராகவுள்ள சுமித் நாகந்த ஆகியோரும் இதில் அடங்குவர். சுமித் நாகந்தவிற்கு அவர் 60 வயதை பூர்த்திசெய்யும் ஒக்டோபர் 22ம் திகதிவரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வெளிவிவகார செயலாளராக பதவிவகித்த ரவிநாத ஆரியசிங்க அமெரிக்காவின் வொஷிங்டனுக்கான புதிய தூதுவராக நியமிக்கப்படவுள்ளதுடன் புதுடில்லிக்கான தூதுவராக மிலிந்த மொரகொடவும் பெய்ஜிங்கிற்கான தூதுவராக கலாநிதி பாலித கோகணவும் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment