சீனாவில் தென் சீனக் கடலில் தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக குற்றஞ்சாட்டி சீன மக்கள் குடியரசின் அரசுக்கு சொந்தமான சில நிறுவனங்கள் மற்றும் நிறைவேற்று அதிகாரிகள் மீது அண்மையில் அமெரிக்காவினால் அண்மையில் பல்வேறு கட்டுப்பாடுகள் . விதிக்கப்பட்டன.
இது தொடர்பாக நீண்ட விளக்கத்தை இலங்கையிலுள்ள அமெரிக்கத் தூதரகம் அறிக்கையூடாக வழங்கியுள்ளது.
அமெரிக்க தூதரக அறிக்கை பின்வருமாறு:-
தென் சீனக் கடலில் சர்ச்சைக்குரிய புறக்காவல் நிலைகளின் பாரியளவிலான நில நிரப்பல் செயற்பாடுகள், நிர்மாணம் அல்லது இராணுமயமாக்கல், அல்லது தென்கிழக்காசிய உரிமை கோரிக்கையாளர்கள் கடல் வளங்களை அணுகுவதை தடுத்து நிறுத்துவதற்கு அவர்களுக்கு எதிரான சீன மக்கள் குடியரசின் கட்டாயப்படுத்தல் பிரயோகம் ஆகிய இரண்டில் ஒன்றுக்கு பொறுப்பான அல்லது உடந்தையாக உள்ள சீன மக்கள் குடியரசு நபர்கள் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் ஓகஸ்ட் 26 ஆம் திகதி விசா கட்டுபாடுகளை விதித்தது.
இந்த நபர்கள் தற்போது அமெரிக்காவுக்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதுடன், அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களும் இந்த விசா கட்டுபாடுகளுக்கு உட்படுத்தப்படலாம். மேலும், சீன தொடர்பாடல்கள் நிர்மாண கம்பனியின் (China Communications Construction Company - CCCC) பல துணை நிறுவனங்கள் உட்பட சீன மக்கள் குடியரசின் அரசுக்கு சொந்தமான 24 நிறுவனங்களை உரிமம் இல்லாமல் ஏற்றுமதி நிர்வாகத்திற்கு உட்பட்ட எந்தவொரு பொருளையும் பெற தகுதியற்ற நிறுவனங்கள் படியலில் (Entity List) வர்த்தக திணைக்களம் இணைத்துள்ளது. இந்த தடைகளின் கீழ், அமெரிக்க உள்நாட்டு உற்பத்திகள் மேற்படி பட்டியலில் உள்ளடங்கியுள்ள நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதற்கு முன்னதாக ஏற்றுமதி நிர்வாக ஒழுங்குவிதிகளுக்கு (Export Administration Regulations) உட்பட்ட உரிமமொன்று அவற்றுக்கு தேவைப்படலாம்.
2013 ஆம் ஆண்டில் இருந்து, பிராந்தியத்தை ஸ்திரமின்மைக்கு உட்படுத்தியும் அயல் நாடுகளின் இறையாண்மை உரிமைகளை கால்கள் மிதித்தும் மற்றும் பெரும் சுற்றுசூழல் பேரழிவை ஏற்படுத்தியும் தென் சீனக் கடலில் 3,000 ஏக்கர்களுக்கும் அதிகமான பரப்பை அகழ்வதற்கும் சட்டவிரோதமாக நில நிரப்புதல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் சீன மக்கள் குடியரசு தமது அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை பயன்படுத்தியுள்ளது. சீன மக்கள் குடியரசின் தென் சீனக் கடல் புறக்காவல் நிலைகளின் அழிவை உண்டாக்கக்கூடிய அகழ்வு நடவடிக்கைகளுக்கு சீன தொடர்பாடல்கள் நிர்மாண கம்பனி தலைமை தாங்கியுள்ளதுடன், பெய்ஜிங்கினால் அதனது உலகளாவிய மண்டலமும் பாதையும் செயற்திட்ட (Belt and Road Initiative - BRI) மூலோபாயத்தில் பயன்படுத்தப்படும் முன்னணி ஒப்பந்த நிறுவனங்களில் ஒன்றாகவும் அது காணப்படுகிறது. சீன தொடர்பாடல்கள் நிர்மாண கம்பனியும் அதனது துணை நிறுவனங்களும் ஊழல், சூறையாடல் நிதியாக்கம், சுற்றுச்சூழல் அழிப்பு, மற்றும் ஏனைய முறைகேடுகளில் உலகம் முழுவதிலும் ஈடுபட்டுள்ளன.
இந்த தடைகள் சீன மக்கள் குடியரசின் நிறுவனங்களை இலக்குவைத்தே மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், சீன தொடர்பாடல்கள் நிர்மாண கம்பனியுடனும் அதனது துணை நிறுவனங்களுடனும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் போது ஆபத்துகளை முகாமை செய்துகொள்வதற்கு நாடுகளை அமெரிக்கா மேலும் ஊக்குவிக்கிறது. சீன தொடர்பாடல்கள் நிர்மாண கம்பனியானது சுற்றுச்சூழலுக்கு பாரிய சேதங்களை ஏற்படுத்தியுள்ளதுடன், உலகம் முழுவதிலும் தீங்கு விளைவிக்கும் செயல்களிலும் ஈடுபட்டுள்ளது. அத்துடன், இந்தோ-பசுபிக் பிராந்தியத்தில் ஸ்திரமற்ற நிலைமையையும் உருவாக்கியுள்ளது.
சீன தொடர்பாடல்கள் நிர்மாண கம்பனியின் துஷ்பிரயோகங்களில் இருந்து பாதுகாத்துக் கொள்ளவும் தத்தமது சொந்த இறையாண்மை மற்றும் நலன்களை பாதுகாத்துக் கொள்வதற்கும் அந்த நிறுவனத்துடனான கொடுக்கல் வாங்கல் விவகாரங்களை நாடுகள் கூர்ந்தாராயும் என்று அமெரிக்கா நம்புகிறது. -எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment