இந்தியாவிற்கான புதியதூதுவராக மிலிந்த மொரகொட, சீனாவிற்கான புதிய தூதுவராக கலாநிதி பாலித கோகண உட்பட எட்டு புதிய தூதுவர்களின் நியமனங்களை உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக்குழு இன்றைய தினம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதன் படி பின்வரும் நியமனங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
1.சீ.ஏ. சந்திரப்பிரேம - ஜெனிவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபைக்கான நிரந்தர வதிவிடப்பிரதிநிதி
2. மிலிந்த மொரகொட- இந்தியாவிற்கான இலங்கைத் தூதுவர்
3.ரவிநாத ஆரிய சிங்க - அமெரிக்காவிற்கான இலங்கைத்தூதுவர்
4. எஸ்.அமரசேகர- தென் ஆபிரிக்காவிற்கான இலங்கைத்தூதுவர்
5. ரியல் அட்மிரல் - ஹரிஸ்சந்திர சில்வா- ஆப்கானிஸ்தானிற்கான இலங்கைத்தூதுவர்.
6. விஸ்ராமல் எஸ்.குணசேகர - ஜப்பானிற்கான இலங்கைத்தூதுவர்
7. பேராசிரியர் ஷனிகா ஹிரிபுரேகம- பிரான்ஸிற்கான இலங்கைத்தூதுவர்
8. கலாநிதி பாலித் கோகண- சீனாவிற்கான இலங்கைத்தூதுவர்
இவர்களது பெயர்கள் உயர்பதவிகளுக்கான பாராளுமன்ற குழுவின் அங்கீகாரத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டபின்னரே நியுயோர்க்கிலுள்ள ஐக்கியநாடுகள் தலைமையகத்திற்கான நிரந்திர வதிவிடப்பிரதிநிதியாக முன்னாள் பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸின் பெயர் முன்மொழியப்பட்டது. அந்தவகையில் இன்னமும் அவரது நியமனம் உறுதிப்படுத்தப்படவில்லை.
No comments:
Post a Comment