Tuesday, September 1, 2020

சிங்களத்தில் மாத்திரமே ஒப்பந்தம். பாலியல் தொல்லைகள் . வடமாகாணத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றும் பெண்களின் பரிதாபநிலை!




வடக்கு மாகாணத்திலுள்ள மக்களுக்கு ஆடைக்கைத்தொழில் கலாசாரம் என்பது புதிய விடயமாக இருக்கின்றநிலையில் அங்கு பணிபுரிகின்ற பெண்கள் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்துவருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

வடமாகாணத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்காக நிறுவனங்களுடன் செய்துகொள்ளும் ஒப்பந்தங்கள் முற்றுமுழுதாக சிங்கள மொழியிலேயே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆடைத்தொழிற்சாலைகளில் தாம் பணியாற்றும் பிரிவுகளில் பெண்கள் பாலியல்தொல்லைகளுக்கு முகங்கொடுத்துவருவதாக தொழிலாளர் உரிமைகள் மற்றும் நலன்களுக்காக செயற்படும் ஏசிய ஃபுளோர் வேஜ் அலையனஸ் அமைப்பின் இலங்கைக்கான வதிவிட ஒருகிணைப்பாளர் அபிராமி சிவலோகானந்தன் தெரிவித்தார்.





.இதேவேளை வெளிநாடுகளில் தொழில்புரிந்துவந்த இலங்கையர்களில் நூற்றுக்கு 90 வீதமானவர்கள் தமது தொழில்களை இழந்துவிட்ட நிலையில் இலங்கை பல்வேறு சவால்களை எதிர்நோக்கியிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

உரிய ஆவணங்கள் இன்றி வெளிநாடுகளில் தொழில்களை மேற்கொண்டுவந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தல் காரணமாக தொழிலிழப்பிற்கு முகங்கொடுத்துள்ளவர்களின் நிலை பரிதாபகரமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.



கொரோனாவால் நிர்க்கதிக்குள்ளாகியிருக்கும் தொழிலாளர்களின் நிலை குறித்த விபரங்களை முழுமையாக அறிவதற்கு இந்த நேர்காணலை முழுவதுமாக பாருங்கள்


No comments:

Post a Comment