Sunday, September 6, 2020

சீனாவிற்கான இலங்கைத்தூதுவராக கலாநிதி பாலித கோகண !

 


சீனாவிற்கான இலங்கைத் தூதுவராக கலாநிதி பாலித கோகண நியமிக்கப்படவுள்ளதாக நம்பகரமான வட்டாரங்களில் இருந்து அறிய முடிகின்றது.

 மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலகட்டத்தில் இலங்கையின் முன்னாள் வெளிவிவகார செயலாளராகவும் நியுயோர்க்கிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகத்தில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாகவும் கலாநிதி கொகண பதவிவகித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவால் உத்தியோகபூர்வமாக சீனாவிற்கான இலங்கைத் தூதுவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டபின்னர் அவரை உயர் பதவிகளுக்கான பாராளுமன்றக் குழு பொருத்தமானவர் என அங்கீகரிக்கவேணடும்.

ஆவணப்படம்


ஜனாதிபதி தற்போது மிகவும் பலம் பொருந்தியவராக திகழ்கின்ற நிலையில் பாராளுமன்றக்குழுவின் அங்கீகாரம் வெறுமனே சம்பிரதாயபூர்வமானதாக மாத்திரமே அமையும். 

தற்போது உருவாகிவரும் பிராந்திய மற்றும் பூகோள அரசியல் சூழ்நிலையில் சீனாவிற்கான இலங்கைத்தூதுவர் பதவி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

உயரிய கல்வித்தகைமை சர்வதேசச் சட்டப்புலமை மற்றும் யதார்த்த அரசியல் என பல்வேறு தளங்களிலும் சிறப்பான தகைமைகளை கொண்டிருக்கும் கலாநிதி கோகண ,மூன்று நாடுகளில் மேற்படிப்பு பட்டங்களை பெற்றுள்ளதுடன் அவுஸ்திரேலியா, இலங்கை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் சிவில் சேவகராகவும் இராஜதந்திரியாகவும் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டுள்ளார்..

இலங்கையின் மாத்தளையை பூர்வீகமாகக் கொண்ட கலாநிதி கோகண தனது பாடசாலைக்கல்வியை கல்கிசை செயின்ற் தோமஸ் கல்லூரியில் கற்றதுடன் இலங்கையில் சட்டத்துறையில் இளமானிப்பட்டத்தை பெற்று உயர் நீதிமன்ற சட்டத்தரணி அந்தஸ்தையும் பெற்றிருந்தார். அத்தோடு அவுஸ்திரேலியாவின் தேசிய பல்கலைக்கழகத்தில் சர்வதேச வர்த்தகச் சட்டத்தில் முதுமானிப்பட்டத்தைப் பெற்றதுடன் இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில்  சட்டத்தினூடாக சர்வதேச வர்த்தகத்தை ஒழுங்குபடுத்துதல் என்ற ஆய்வறிக்கையை சமர்பித்து கலாநிதி பட்டத்தையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment