ஐலண்ட் பத்திரிகையின் மூத்த செய்தியாளர் ஸக்கி ஜப்பார் Zakki Jabbar கொழும்பின் புறநகர்ப்பகுதியான பெலவத்தையில் வசித்து வந்த இல்லத்தில் இறந்த நிலையில் சடலமாகக் இன்று புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஜப்பாரின் உறவினரொருவர் மூடப்பட்டிருந்த அவரது இல்லத்தை திறந்து பார்த்த போதே அவர் இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.
இல்லத்தில் தனித்து வாழ்ந்துவந்த 60 வயதுடைய ஜப்பார் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பணிக்கு சமூகமளித்திருக்கவில்லை என அவரோடு பணியாற்றும் ஊடகவியலாளர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்தமைக்கான உண்மையான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை தெரியாத போதும் அவர் இறந்து பல நாட்களாகியிருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது
இது தொடர்பான விசாரணைகளை பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்
No comments:
Post a Comment