கடும்போராட்டத்தின் பின்னர் New Diamond கப்பலில் அணைக்கப்பட்ட தீ அதிக உஷ்ணம் காரணமாக மீண்டும் இன்று மாலை பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மீளப்பற்றிய தீயை அணைக்கும் முயற்சியில் இந்திய மற்றும் இலங்கை கப்பல்கள் தொடர்ந்தும் ஈடுபட்டிருப்பதாக இந்திய கரையோர காவல்துறை அறிவித்துள்ளது.
மூன்றுநாட்கள் கடும் போராட்டத்தின் பின்னர் இந்தக்கப்பலில் ஏற்பட்ட தீ நேற்று மாலை அணைக்கப்பட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்திருந்த நிலையிலேயே இன்றைய தீ தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
New Diamond கப்பலில் தீ முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும் கப்பலில் இருந்து அதிக உஷ்னம் வௌியேறுவதால் இரசாயன பொருட்களையும் நீரையும் பயன்படுத்தி வெப்பத்தை தணிப்பதற்கான முயற்சிகள் தொடர்வதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கப்பலில் மீண்டும் அதிகளவில் தீ பரவாமல் இருப்பதை தவிர்ப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கடற்படை விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கப்பல் தற்போது காணப்படும் சங்கமன்கண்டியில் இருந்து 30 கடல்மைல் தொலைவில் வீசும் பலத்த காற்று காரணமாகவும் கப்பலின் உள்பகுதியில் காணப்படும் அதிக உஷ்னம் காரணமாகவும் மீண்டும் தீ பரவ ஆரம்பித்துள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
எனவே இலங்கை கடற்படை விமானப்படை மற்றும் இந்திய கடற்படை இந்திய கரையோர பாதுகாப்பு திணைக்களம் உள்ளிட்ட தரப்பினருக்கு சொந்தமான கப்பல்களும் விமானங்களையும் பயன்படுத்தி தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெற்று வருவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை மீட்கும் நடவடிக்கைக்காக சென்றுள்ள விசேட நிபுணர் குழு கப்பலை அண்மித்துள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கெப்டன் இந்திக்க த சில்வா தெரிவித்துள்ளார்.
கப்பலில் மீண்டும் தீ பரவ ஆரம்பித்துள்ளதால் நிலவும் அதிக உஷ்னம் காரணமாக அவர்களால் கப்பலுக்குள் பிரவேசிக்க முடியாதுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
New Diamond கப்பலை அண்மித்த பகுதியை குளிர்விப்பதற்கு பெல் 212 ரக விமானத்தின் மூலம் சுமார் 1,000 கிலோகிராம் இரசாயன பதார்த்தம் விசிறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment