19வது திருத்தத்தில் அதிகபட்சமாக 30 கபினற் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மாத்திரமே இருக்க முடியும் என்ற சரத்து புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 20வது திருத்தத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதால் எத்தனை அமைச்சர்களையும் நியமிப்பதற்கு ஆட்சியிலிருப்பவர்களுக்கு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
ஜனாதிபதியாக இருப்பவர் எந்த அமைச்சையும் தன் வசம் கொண்டிருக்க முடியாது என்றிருந்த 19வதுதிருத்த சரத்தும் நீக்கப்பட்டு ஜனாதிபதி எத்தனை அமைச்சுக்களையும் நிறுவனங்களையும் தமக்கு கீழ் கொண்டிருக்கலாம் என்ற சரத்து 20வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
இதனைத்தவிர 20வது திருத்தத்திற்கமைய சுயாதீன குழுக்களின் அங்கத்தவர்கள் மற்றும் தலைவர்களை நேரடியாக நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளது. உத்தேச பாராளுமன்ற பேரவையானது அதன் அவதானிப்புக்களை மாத்திரமே அனுப்பிவைக்கமுடியும் .
சட்டமா அதிபர், கணக்காய்வாளர் நாயகம் போன்ற உயர் பதவிகளுக்கும் ஆட்களை நியமிப்பதற்கான அதிகாரமும் 20வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதிக்கு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment