Thursday, September 3, 2020

நற்பெயருக்கு அவதூறு ஏற்படுத்த முனைந்ததாக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் ஐபிசிக்கு எதிராக கோரிக்கை கடிதம்



இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தமது சட்ட பிரதிநிதி சட்டத்தரணி லக்ஸிகா பக்மிவெவ ஊடாக லிபாரா மொபைல் இணை-ஸ்தாபகர் பாஸ்கரன் கந்தையாவுக்குச் சொந்தமான இலண்டனைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் தொலைகாட்சி வலையமைப்பான IBC தமிழுக்கு கோரிக்கைக் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 


தமது நற்பெயருக்கு தீங்கு, மற்றும் அவதூறு விளைவிக்கும் இழிவான முறையில் தாம் காட்சிப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டு, ஜுலை மாதம் ஒளிபரப்பான அரசியல் தொலைகாட்சி நிகழ்ச்சி சார்ந்து சற்குணநாதன் அவர்கள் இந்த கோரிக்கைக் கடிதத்தினை அனுப்பி வைத்துள்ளார். 

அரசியல் நையாண்டியில் ஈடுபடுவதற்கான உரிமையை ஏற்றுக்கொள்ளும் சற்குணநாதன், குறிப்பிட்ட காட்சிப்படுத்தல் ஆபாசமானதாகவும், பெண் வெறுப்பு சார்ந்ததாகவும், அதனால் தமது உரிமைகளை மீறுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

 IBC தமிழின் செயற்பாடுகள் ஊடக நெறிமுறைகளை அப்பட்டமாக மீறும் செயல் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 5,000,000 பிரித்தானிய ஸ்டேர்லிங் பவுன்ட்டுகளையும், மன்னிப்பினையும் சற்குணநாதன் அவர்கள் கோரியுள்ளார். '

No comments:

Post a Comment