கொரோனா வைரஸ் என பொதுவாக அறியப்படும் Covid-19 ஆனால் அதிகம் பரிச்சயமான வார்த்தைகளில் Zoomஉம் ஒன்றாகும்
நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவால் இல்லங்களில் இருந்தே பணியாற்றிய பணியாளர்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளவும், பணி தொடர்பான விவகாரங்களைப் பரிமாறிக் கொள்ளவும் சூம் தொழில்நுட்பம் பெரிதும் உதவியது.
வீட்டிலிருப்பவர்கள் நண்பவர்களுடன் பேசுகின்றவர்கள் அதிகமாக சூம் செயலின் இலவச சேவையையே பயன்படுத்தினர். ஆனால் நிறைய நிறுவனங்கள் சூம் சேவையைப் பெறுவதற்காக ஒப்பந்தம் செய்திருக்கின்றன. 2011ம்ஆண்டு அமெரிக்காவின் கலிபோர்னியாவைத் தலைமையகமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட சூம் நிறுவனம் 2020 ஜூலை 31 முடிந்த நிதியாண்டில் 185.7 மில்லியன் டொலரை நிகர இலாபமாகப் பதிவு செய்தது.
வருமானம் 663.5 மில்லியன் டொலராக அதிகரித்தது. இது 355 சதவீத உயர்வாகும்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து சூம் நிறுவனத்தின் பங்கு விலைகளும் கடந்த திங்கட்கிழமை (ஆகஸ்ட் 31) 28 சதவீதமாக உயர்ந்தன.
சூம் சேவைக்கு 100,000 டொலர்களுக்கும் அதிகமாகக் கட்டணம் செலுத்தும் நிறுவனங்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்து தற்போது 988 ஆக இருக்கிறது.
. சூம் (zoom) என்ற பெயர்கொண்ட இந்த செயலியின் பயன்பாடு Lockdown ஊடரங்கு காலத்தில் மிகப்பெரிய உச்சத்தை தொட்டுள்ளது. அப்படி இந்த செயலியின் என்னதான் இருக்கிறது ? பொதுவாக தற்போது உள்ள நிலமையில் வீடுகளில் இருந்து பணியாற்றுபவர்களுடன் சம்மந்தப்பட்ட நிறுவனங்கள் சமூக வலைதளங்கள் வாயிலாகவும் காணொலிக்காட்சி மூலமும் தொடர்பு கொண்டு வருகின்றனர். அதிலும் காணொலிக்காட்சி மூலம் தொடர்புகொள்ளும் போது தற்போது உள்ள செயலிகளின் மூலம் ஒரே நேரத்தில் குறைந்த நபர்களிடம் மட்டுமே பேச முடியும். இதனால் பெரிய அளவில் பணியாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்துவது சிரமமாக இருந்து வந்தது.
இந்நிலையில் தற்போது பிரபலம் ஆகிவரும் சூம் (zoom) செயலி மூலம் ஒரே நேரத்தில் நூறு பேருடன் இணைந்து ஆலோசனை நடத்த முடியும். மேலும் இதில் உள்ள தொழில் நுட்ப வசதிகளும் மற்ற Appகளை காட்டிலும் சற்று அட்வான்ஸாக இருப்பதால் உலகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் தற்போது இந்த செயலியை அதிக அளவில் பயன்படுத்த தொடங்கியுள்ளன. இதேபோல் வெளியூர்களில் தங்களது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பிரிந்துள்ளவர்களை ஒருங்கிணைக்கவும் , வகுப்புகள் , உடற்பயிற்சி உள்ளிட்ட பயிற்சி வகுப்புகளையும் நேரலையில் கற்றுக்கொள்ள இது எளிதாக இருப்பதால் இதன் நுகர்வு தற்போது பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது.
இந்த செயலியை கடந்த ஆண்டு உலகம் முழுவதும் ஒரு கோடி பேர் மட்டுமே பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது இதன் பயன்பாடு 20 கோடியாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் தனது சேவையை வாரிவழங்கினாலும் இதில் தனிநபர் விபரங்கள் பாதுகாப்பு குறித்து தொடர்ந்து வல்லுநர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஏனெனில் இந்த செயலியை பயன்படுத்தியவர்களின் தரவுகள் சீனாவுக்கு அனுப்பப்படுவதாகவும், மக்களின் வீடியோ அழைப்புகள் Onlineல் கசிந்து வருவதாகவும், மேக் மற்றும் விண்டோஸ் நிறுவனங்கள் தங்களது குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளன.
ஒரு நிறுவனம் தனது ஊழியர்களுடன், நிறுவன வளர்ச்சி தொடர்பான செயல்பாடுகள் மற்றும் முக்கிய முடிவுகள் குறித்தான விபரங்களை இது போன்ற செயலிகள் மூலம் விவாதிக்கும் போது எந்த அளவில் பாதுகாப்பானதாக இருக்கும் என்பதை கணிக்க முடியவில்லை எனவும் வல்லுநர்கள் கருதுகின்றனர். அப்படியென்றால் இந்த செயலியை பயன்படுத்தக்கூடாதா பயன்படுத்தினால் எனது தனிப்பட்ட விபரங்கள் பாதுக்காக்கப்படாதா என்ற கேள்வி நம்முள் எழவே செய்கின்றன. இந்த செயலி மட்டுமல்ல நாம் பெரும்பாலும் உபயோகிக்கும் அனைத்து செயலிகளிலுமே தனி விபரங்கள் பாதுகாக்கப்படுகிறதா என்ற கேள்விக்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை.
தற்போதுள்ள சூழலில் நீங்கள் இந்த Zoom செயலி மட்டுமல்ல எந்த செயலியை பதிவிறக்கம் செய்ய விரும்பினாலும் அந்த செயலியில் குறிப்பிட்டுள்ள தனிநபர் பாதுகாப்பு தொடர்பான நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளை நன்கு படிக்க வேண்டும், அந்த விபரங்கள் உங்களுக்கு திருப்தி அளிக்கும் பட்சத்தில் அதை பயன்படுத்தலாமே தவிர மற்றபடி அதை தவிப்பதே நல்லது.
No comments:
Post a Comment