Saturday, September 19, 2020

தமிழ் முற்போக்கு கூட்டணி எம்.பி.க்களை வளைத்துபிடித்து அரசாங்கம் இழுக்கப்பார்க்கிறதா ? மனோ பதில்

 


தற்போதைய அரசாங்கத்தில் பங்காளிகளாக இணைத்துக்கொள்ளும் வகையில் தமிழ் முற்போக்கு கூட்டணியைச் சேர்ந்த சில எம்.பி.க்களுடன் அரசாங்கத் தரப்பினர்  தனிப்பட்ட ரீதியில் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருவதாக கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவிக்கின்றார். 

ஆனாலும் தம்மோடு அவர்கள் இதுதொடர்பான பேச்சுவார்த்தைகளை நடத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 


20வது திருத்தம் உட்பட முக்கியமான பல விடயங்களை நிறைவேற்றிக்கொள்ள எதிர்பார்க்கும் அரசாங்கம் ,பாராளுமன்றத்தில் 150 ஆசனங்களை கொண்டிருப்பினும் நிச்சயமற்ற உணர்வைக் கொண்டிருப்பதன் காரணமாகவே இவ்வாறு ஏனைய கட்சிகளை உள்வாங்குவதற்கான பேச்சுக்களை நடத்திவருவதாக அவர் குறிப்பிட்டார்.




No comments:

Post a Comment