வர்த்தமானியில் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ள அரசியல்யாப்பின் 20வது திருத்தத்தினை மேலோட்டமாக ஆராய்ந்த போது 19வது திருத்தத்தில் இருந்த 10 பேரைக் கொண்ட அரசியல்யாப்பு பேரவைக்கு பதிலாக பாராளுமன்ற பேரவை உள்ளடக்கப்பட்டுள்ளது.
19வது திருத்தத்தில் இருந்த அரசியல்யாப்புப் பேரவையில் பத்து அங்கத்தவர்கள் இருந்தபோதும் புதிய பாராளுமன்ற பேரவை ஐந்து அங்கத்தவர்களைக்கொண்டதாக மாத்திரமே இருக்கும்.
பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், சபாநாயகர், பிரதமரின் பிரதிநிதி மற்றும் எதிர்க்கட்சித்தலைவரின் பிரதிநிதி ஆகியோரே புதிய பாராளுமன்ற பேரவையின் ஐந்து அங்கத்தவர்களாக இருப்பர்.
அரசியல்யாப்பு பேரவையில் மூன்று சிவில் சமூக பிரதிநிதிகள் இடம்பெற்றிருந்தபோதும் பாராளுமன்ற பேரவையில் ஒருவர் கூட இடம்பெறவில்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
No comments:
Post a Comment