கொவிட்-19 னால் உயிரிழப்பவர்களை நல்லடக்கம் செய்வதற்கு இடமளிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ சற்று முன்னர் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார் .ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஊடகப்பேச்சாளருமான எஸ்.ம். மரிக்கார் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
நேற்றையதினம் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹண பண்டார, நீரின் மூலமாக கொரோனா வைரஸ் பரவுமா என்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுதர்சனி பெர்ணான்டோ புள்ளே இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்ணான்டோ புள்ளே நீரின் மூலம் கொரோனா பரவாது எனக்கூறியிருந்தார்.
அப்படியென்றால் உயிரிழந்தவர்களை நல்லடக்கம் செய்வதற்கு ( புதைப்பதற்கு ) அனுமதி வழங்கப்படுமா என பிரதமரைக் கேட்கின்றேன் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் வினவினார். இந்தக் கேள்வி தேவையற்றது என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேயவர்த்தன வேறு விடயத்தை நோக்கி சபையை வழிநடத்த முற்பட்டபோது குறுக்கிட்ட பிரதமர் நல்லடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவித்தார்.
No comments:
Post a Comment