ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கை தொடர்பாக எந்தவிதமான பாதகமான யோசனைசென்றாலும் அவற்றை வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி சீனா நிராகரித்துவிடும் என சீனாவிற்கான இலங்கைத்தூதுவர் கலாநிதி பாலித கோகண திடமான நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் ஐந்து நாடுகளுக்கு வீட்டோ இரத்து அதிகாரம் காணப்படுகின்றது. அதாவது எடுக்கின்ற ஒரு தீர்மானத்தை முற்றுமுழுதாக நிராகரிக்கும் வகையில் வீட்டோ அதிகாரத்தை நாடுகள் பயன்படுத்த முடியும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச்சபையில் இலங்கை தொடர்பாக எந்தவிதமான பாதகமான யோசனை சென்றாலும் அவற்றை வீட்டோட அதிகாரத்தைப் பயன்படுத்தி சீனா நிராகரித்துவிடும். ரஷ்யாவும் இவ்வாறு இலங்கைக்கு உதவும் என சீனாவிற்கான இலங்கைத்தூதுவர் கலாநிதி பாலித கோகண தெரிவித்துள்ளார். வீரகேசரிப்பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ரொபர்ட் அன்டனிக்கு வழங்கியுள்ள பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
இலங்கை குறித்து இவ்வாறானதொரு ( பாரதூரமான) அறிக்கையை விடுப்பதற்கு மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பாச்லேட்டுக்கு எந்தவிதமான அதிகாரமும் கிடையாது. அவர் தனது ஆணைக்கு அப்பால் சென்றுள்ளார். நாடுகளுக்கு தண்டனை வழங்குவதற்காக மனித உரிமை பேரவை உருவாக்கப்படவில்லை . இலங்கை குறித்த வாக்கெடுப்பு ஜெனிவாவில் நடைபெற்றால் சீனா இலங்கையை முழுமையாக ஆதரிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். சீனாவின் பீஜிங்கில் இருந்தவாறு வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்தக்கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
இந்த நேர்காணலை முழுமையாக படிக்க ஞாயிறு வீரசேகரியை வாங்கிப் படியுங்கள்.
No comments:
Post a Comment