Wednesday, February 10, 2021

தமிழகத்தில் இன்னமும் 92,978 இலங்கை தமிழ் அகதிகள்

 


தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகள் எண்ணிக்கை என்ன என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.


'தமிழகத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகள் எண்ணிக்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு மக்களவையில் செவ்வாயன்று மத்திய உள்துறை அமைச்சகம் எழுதுப்பூர்வமாக பதில் அளித்துள்ளது.


அதன்படி தமிழகத்தில் உள்ள 108 முகாம்களில் 58,843 இலங்கை தமிழ் அகதிகள் தங்கியுள்ளனர் என்றும்இ அத்துடன் உள்ளூர் காவல்நிலையத்தில் பதிவு செய்து 34இ135 பேர் முகாமில் இல்லாத அகதிகளாகத் தங்கியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மொத்தமாக தமிழகத்தில் 92,978 இலங்கை தமிழ் அகதிகள் தங்கியுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment