Wednesday, February 17, 2021

சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பொருத்தமான நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் ஆலோசனை

 


சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை பொருத்தமான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, பொலிஸ் மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமை தொடர்பான சர்வதேச உடன்படிக்கை ஆகியவற்றின் கீழான குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சட்டமா அதிபர் அறிவித்துள்ளார்.

இந்த விடயத்தை சட்டமா அதிபரின் இணைப்பதிகாரிm அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன நியூஸ்ஃபெஸ்ட்டிற்கு உறுதிப்படுத்தியுள்ளார். 

சதித்திட்டம் தீட்டியமை மற்றும் இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தும் வகையிலான நடவடிக்கையில் ஈடுபட்டமை உள்ளிட்ட 05 குற்றச்சாட்டுகளின் கீழ் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவை சந்தேகநபராக பெயர் குறிப்பிட்டு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடுமாறும் சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment