Monday, February 8, 2021

ஆளுங் கூட்டணிக்குள் முரண்பாடுகளை வெளிக்காட்டுகின்றதா விமல்- பொதுஜன பெரமுன மோதல்?

 


பொதுஜன பெரமுண தலைமையிலான ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளிடையே அண்மைக்காலமாக முரண்பாடுகள் அதிகரித்துள்ளதாக தகவல்கள் வரும் ஆனால் அதனை உறுதிப்படுத்துவதில் காணப்படும் சிக்கல்கள் காரணமாக அந்தத்தகவல்களை வைத்து செய்தியாக்க முடிவதில்லை. 

ஆனால் தற்போது கூட்டணிக்குள் முக்கிய கட்சியான பொதுஜன பெரமுனவிற்கும் விமல் வீரவங்ஸ தலைமைதாங்கும் தேசிய சுதந்திர முன்னணிக்கும் இடையே காணப்படும் முரண்பாடு வெட்டவெளிச்சமாக அம்பலமாகியுள்ளது. 

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட வேண்டும் என விமல் வீரவங்சஇ பத்திரிகை ஒன்றுக்கு தெரிவித்தமை தொடர்பில் அவர் பொதுமக்களிடம் மன்னிப்பு கோர வேண்டுமென பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஸ நீக்கப்பட்டுஇ அந்த பதவிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை நியமிக்க வேண்டும் என நேற்றைய பத்திரிகை ஒன்றுக்கு விமல் வீரவங்ச கூறியுள்ளதாக சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்பில் எவ்விதமான தீர்மானங்களையும் மேற்கொள்வதற்கான உரிமை தனக்கு இல்லை என்பதை விமல் வீரவங்ச தெரிந்துகொள்ள வேண்டும் என சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் அவருடைய அறிவிப்பு குறித்து பொதுமக்களிடம் மன்னிப்பு கேட்பதுடன்இ அதனை உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் கூறியுள்ளார்.

எமது கூட்டமைப்பில் இணைந்துகொண்ட ஒருவர் மிக கீழ்த்தரமான அறிவிப்பொன்றை விடுத்துள்ளமை குறித்து கட்சி என்ற வகையில் கவலையடைவதாகவும் பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் சுட்டிக்காட்டியுள்ளார்.


ஆளுங்கூட்டணிக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகளை பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியும் பரிகாசம் செய்துள்ளது. 

"தொடர்ச்சியான உள் முரண்பாடுகள் காரணமாக இந்த அரசாங்கம் சிரிப்பிற்கிடமானதாக மாறிவிட்டுள்ளது . பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும் விமல் வீரவங்ஸவும் பகிரங்கமாகவே ஊடகவியலாளர் மாநாடுகளில் ஒருவரை ஒருவர் சாடியுள்ளனர். அதிகார மிக்க ஜனாதிபதி பதவி பாராளுமன்றத்தில் 2 3 பெரும்பான்மை இருந்தும் கூட இந்த நாட்டை நிர்வாகிப்பதில் அரசாங்கம் மோசமாக தோல்விகண்டுவருகின்றது" என ஐக்கிய மக்கள் சக்தியின் இளம் அங்கத்தவரும்  முன்னாள் சிரேஸ்ட ஊடகவியலாளருமான ரசிக ஜயகொடி தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார். 

ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் புறக்கணிக்கப்படுவதாக ஏற்கனவே பல தடவைகள் பொதுவெளியிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வந்துள்ளன. அண்மையில் கொழும்பு துறைமுக கிழக்கு முனைய விடயத்தில் ஆளும் கூட்டணியின் உதய கம்மன்பில வாசுதேவ நாணயக்கார தரப்பினரும் விமல் வீரவங்ஸவுடன் கைகோர்த்து கடுமையான இந்திய எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்ததுடன் ஒப்பந்தம் இரத்துச் செய்யப்படும் வரை தொழிற்சங்கங்களுக்கு ஆதரவாக பிரசாரங்களை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment