Tuesday, February 9, 2021

P2Pபேரணியை அடுத்து சமூக வலைத்தளங்களில் பேசப்படும் காணாமல்போன மகனைத் தேடும் தந்தையின் கதை

 




பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் எழுச்சிப் #P2P பேரணியின் போது  மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் பல புகைப்படங்களும் காட்சிகளும் பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் வெளியாகின. இதில் குறிப்பாக காணாமல் போன தனது மகனை கடந்த ஒரு தசாப்தகாலத்திற்கும் மேலாக தேடிக்கொண்டிருக்கும் தந்தையின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் உருக்கமான வாசகங்களுடன் பகிரப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. 




வன்னியிலுள்ள உதய நகர் பகுதியைச் சேர்ந்த எம். தேவேந்திரன் என்ற தந்தை 2008ம் ஆண்டு இறுதிப் போரின் போது இராணுவத்தாக்குதலில் காயமடைந்த தனது மகனை இராணுவத்தினர்  கொண்டு சென்றதை திடமாக நம்புவதாகவும் அதற்கு போதிய சாட்சிகள் இருப்பதாகவும் தொடர்ந்தும் இடைவிடாது தேடிக்கொண்டிருக்கின்றார். அவரது கதையை மாற்றுக்கொள்கைகளுக்கான ஆய்வுநிலையத்தின்  விகல்ப அமைப்பு காணொளி  தொகுப்பாக  தயாரித்திருந்தது.  






No comments:

Post a Comment