Sunday, February 21, 2021

சாட்சிகளை பாதுகாக்க மனித உரிமை ஆணையாளர் நடவடிக்கை அவசியம்- வெளியானது புதிய தீர்மான Zero draft விபரம்

 


போர்க்காலத்தில் இழைக்கப்பட்டதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான சாட்சிகளை ஒருங்கிணைப்பதற்கும் பாதுகாப்பதற்கும்  மனித உரிமைப் பேரவையைக் கோருவதென்ற யோசனை ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தின் ஆரம்ப வரைவில் (Zero draft)சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது. 

எதிர்காலத்தில் இலங்கை விடயத்தில் தொடரப்படவுள்ள வழக்கு விசாரணைகளுக்கு தயார்ப்படுத்தும் வகையிலேயே இந்த நடவடிக்கைக்கு கோரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Zero draft என்பது கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்தின் உள்ளடக்கத்திற்கு அடிப்படையாக அமைகின்ற ஆவணமாகும்.இறுதித் தீர்மானம் எடுக்கப்படமுன்பாக இதில்  முதல் வரைபு இரண்டாம் வரைபு என பல மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது வழமை என ஐநாவைப் பற்றிய அறிவுள்ள ஆய்வாளர் ஒருவர் சுட்டிக்காட்டினார். 

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பான சாட்சிகளை ஒருங்கிணைக்கவும் பாதுகாத்துப் பேணவும் சிரியாவில் அமைக்கப்பட்டது போன்ற பக்கச்சார்பற்ற சுயாதீனமான சர்வதேசப் பொறிமுறையை  இலங்கையில் ஐநா மனித உரிமைகள் பேரவை அமைக்க வேண்டும் என  மனித உரிமை  அமைப்புக்கள் கோரியுள்ளன.

உள்நாட்டுப் பொறிமுறையினூடாக பொறுப்புக்கூறலை நிலைநாட்டுவதில் இலங்கையில் தொடர்ச்சியாக போதிய ஆர்வம் காணப்படவில்லை  என இந்த ஆரம்ப வரைபில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன் முன்னர் அமைக்கப்பட்ட ஆணைக்குழுக்கள் மனித உரிமை விடயத்தில் செயற்பட்டவிதம் தொடர்பாக ஆராய்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவால் அமைக்கப்பட்டுள்ள புதிய ஆணைக்குழு போதிய சுயாதீனத்தன்மையைக் கொண்டிருக்க வில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

  ஐநா மனித உரிமைகள் பேரவை சாட்சிகளைப் பாதுகாப்பதற்கான பொறிமுறையை ஏற்படுத்த வேண்டும் என ஆரம்ப தீர்மான வரைபில் தெரிவிக்கப்பட்டுள்ளமைக்கு  இலங்கை அரசாங்கம்,வலுவான எதிர்ப்பை பதிவுசெய்யும் என Daily FT பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.  அத்தோடு 13வது திருத்தம் தொடர்பாக குறிப்பிடப்பட்டுள்ளமையையும் நீக்க வேண்டும் என இலங்கை அரசாங்கம் கோரும் என அறியமுடிவதாகவும் அச்செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  . 

Daily FTயில் வெளியான செய்தி இதோ:

Zero draft of SL resolution calls for OHCHR to ‘consolidate and preserve’ war-time abuse evidence

  • Govt. will oppose call for OHCHR to preserve evidence, wants removal of 13A reference
  • Activists call early draft “weak” and disappointing
  • Draft likely to be revised significantly before vote in March

An early draft of the UN Human Rights Council resolution on Sri Lanka has called on the Office of the High Commissioner for Human Rights to preserve and analyse evidence on alleged war-time abuses in preparation for future trials.

A ‘zero draft’ of the UNHRC resolution on Sri Lanka, which is subject to revision, calls on High Commissioner Michelle Bachelet’s office to “consolidate, analyse and preserve” evidence.

The OHCHR evidence reservation mechanism is the most salient feature of the draft resolution in its current form, even as fears mount locally and internationally that evidence gathered in cases identified as ‘emblematic’ by the UN could be compromised or lost. 

Human rights organisations have called for a Syria-style International, Impartial and Independent Mechanism to be set up on Sri Lanka by the Human Rights Council to preserve and gather evidence on alleged war crimes and violations.

The draft resolution noted the persistent lack of accountability through domestic mechanisms and said the new Commission of Inquiry set up by President Gotabaya Rajapaksa to go into the findings of commissions previously set up to study human rights issues as lacking in independence.

Daily FT learns that the Government will object strongly to the OHCHR evidence preservation mechanism in the draft resolution. Sri Lanka is also objecting to the reference to the 13th Amendment in the UNHRC draft resolution currently in circulation, Daily FT learns.

Senior Government Ministers have called for the provincial council system set up by the 13th Amendment to be scrapped, a move likely to irk New Delhi.

The draft resolution calls on Bachelet’s office to provide a written report on Sri Lanka’s compliance with the resolution by March 2022, with a comprehensive report due in September 2022, when the resolution will come up for review.

Despite a damning report by High Commissioner Bachelet calling for decisive international action to prevent a human rights disaster in Sri Lanka, the current draft resolution falls far short of her recommendations, activists said. 

“The draft resolution is fundamentally weak and extremely disappointing,” Attorney-at-Law and former Senior Law Lecturer at the Jaffna University Dr. Kumaravadivel Guruparan told Tamil Guardian.

“The Core Group has not taken the recommendations of the High Commissioner seriously and has ignored calls from victims for decisive action,” he added.

This week, a group of 20 eminent persons, including former UN High Commissioners on Human Rights, experts and former heads of state, called for action from the UN Human Rights Council on Sri Lanka. “The international community failed Sri Lanka in 2009,” the open letter to the Council said. “We cannot fail again.”

No comments:

Post a Comment