ஜனநாயக செயற்பாடுகளின் வெற்றி என்பது இக்கொள்கைகளை எவ்வாறு அனைத்து குடிமக்களுக்காகவும் நிலைநிறுத்துகின்றோம் என்பதிலேயே தங்கியுள்ளது
இலங்கையின் 73வது சுதந்திர தினத்திற்கு அமெரிக்க மக்களின் சார்பில் புதிய வெளிவிவகார செயலாளர் அன்டனி பிளிங்கன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு அமெரிக்க இராஜாங்க செயலாளரின் செய்தியைத் தாங்கி அறிக்கையை அமெரிக்கத்தூதரகம் வெளியிட்டுள்ளது.அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ' "ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் சட்டத்தின் ஆட்சியையும் அனைவருக்குமான நீதிச் சமத்துவத்தையும் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான எமது பொதுக் கொள்கைகளை இலங்கை மற்றும் அமெரிக்க நாட்டு மக்களாகிய நாம் கொண்டாடுகின்றோம். ஜனநாயக செயற்பாடுகளின் வெற்றி என்பது இக்கொள்கைகளை எவ்வாறு அனைத்து குடிமக்களுக்காகவும் நிலைநிறுத்துகின்றோம் என்பதிலேயே தங்கியுள்ளது. பிராந்திய பாதுகாப்பை மேம்படுத்தவும் இந்து- பசுபிக் பிராந்தியத்தின் வளர்ச்சிக்காகவும் இலங்கையின் ஒரு பங்காளராக நண்பனாக செயற்பட நாம் எதிர்பார்க்கின்றோம். Covid-19 தொற்றுப் பரவலை இல்லாதொழிக்கவும் உலக பொருளாதார மீட்சிக்கு ஆதரவளிக்கவும் எதிர்கால சவால்களை ஒன்றாக எதிர்கொள்ளவும் எமது தொடர்ச்சியான ஒத்துழைப்புக்களை வழங்குவோம். இலங்கை மக்கள் அனைவருக்கும் இது பாதுகாப்பான மகிழ்ச்சி நிறைந்த சுதந்திர தின விழாவாகவும் நம்பிக்கைக்குரியதோர் ஆண்டாகவும் அமைய வாழ்த்துகின்றோம்' என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment