Tuesday, February 2, 2021

வரலாற்றில் முன்னெப்போதுமில்லாத சரிவைக் கண்டது இலங்கை பங்குச் சந்தை

 


கொழும்பு பங்குச் சந்தையில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) ) இன்று (02) வரலாற்றில் ஒரே நாளிலான மிகப் பெரிய சரிவை பதிவு செய்தது.


அத்துடன் இன்றைய நாளின் கொடுக்கல் வாங்கலின் நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI)  ஆனது, 561.75 புள்ளிகள் சரிவடைந்து 8,005.32 எனும் நிலையை அடைந்ததாக, கொழும்பு பங்குச் சந்தை (CSE) தெரிவித்துள்ளது.


அதற்கமைய இன்றைய நாளின் பங்குப் பரிவர்த்தனை நிறைவில், பரிமாறப்பட்ட பங்குகளின் எண்ணிக்கை 232,825,323 ஆகவும் மொத்த புரள்வு மொத்த பரிவர்த்தனை ரூ. 6,931 மில்லியனாக (6,931,104,990.00)  ஆகவும் பதிவாகியிருந்தது.

இதற்கு முன்னதாக கடந்த 2020 ஒக்டோபர் 05ஆம் திகதி ASPI  ஆனது, 462.99 புள்ளிகளால் வீழ்ச்சியடைந்ததமையானதுஇ இதுவரை மிகப்பெரிய வீழ்ச்சியாக பதிவாகியிருந்தது.


அத்துடன், இன்று (02) S&P SL20 ஆனது, 251.77 புள்ளிகள் சரிந்து 3,187.38 புள்ளிகளாக பதிவானது.

பங்குச் சந்தை வரலாற்றில் கடந்த ஜனவரி 21ஆம் திகதிஇ அனைத்து பங்கு விலைச் சுட்டெண் ஆனது 8,000 இனை கடந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு பங்கு சந்தையின் வழமையான பங்கு பரிவர்த்தனை நடவடிக்கைகள் இன்று பிற்பகல் 30 நிமிடங்களுக்கு தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன.

கொழும்பு பங்குச் சந்தையின் S&P SL20  சுட்டியானது முந்தைய நாளுடன் ஒப்பிடுகையில் 5 வீதத்தால் வீழ்ச்சியடைந்தமையால்இ இவ்வாறு பங்கு சந்தையின் நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டன.

இன்று பி.ப. 1.00 முதல் பி.ப. 1.30 வரை இவ்வாறு பங்குச் சந்தை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முந்தைய நாளோடு ஒப்பிடும்போது குறித்த S&P SL20 சுட்டியானது குறைவடையும்போது இவ்வாறு பங்குப் பரிவர்த்தனைகள் இடைநிறுத்தப்படுவது வழக்கமாகும்.

No comments:

Post a Comment