இறுதிப்போரில் இழைக்கப்பட்ட சர்வதேச குற்றங்களுக்கு நீதியை நிலைநாட்டும் எவ்வித நோக்கமும் இலங்கைக்கு இல்லை என தெளிவாகியுள்ளதாக சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் ஃபிஷர் சர்வதேச பொறுப்புக்கூறலே தற்போதைய தேவை என வலியுறுத்தியுள்ளார்
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 46வது கூட்டத்தொடரில் நேற்றையதினம் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்த்தன ஆற்றிய உரையைத் தொடர்ந்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஜெனிவாவிற்கான பணிப்பாளர் ஜோன் ஃபிஷர் தன து டுவிட்டரில், "இலங்கை வெளிவிவகார அமைச்சர் மனித உரிமை பேரவையின் 46வது கூட்டத்தொடரில் சர்வதேச குற்றங்களை மறுத்துள்ளார். அளிக்கப்பட்ட வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கியுள்ளார். மனித உரிமை ஆணையகத்தின் அறிக்கையையை ' பிரசார நடவடிக்கை' என நிராகரித்துள்ளார். இதனை செவிமடுத்த பின்னர் நீதியை நிலைநாட்டும் எந்தவித நோக்கமும் இலங்கைக்கு உள்ளதென்பதனை எவரும் நம்பமாட்டார்கள். சர்வதேச பொறுப்புக்கூறல் நடவடிக்கையே தற்போது தேவையானது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment