Sunday, December 20, 2020

இலங்கையில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 176 ஆக அதிகரிப்பு தொற்றாளர் எண்ணிக்கை 37,000 தாண்டியது

 



இலங்கையில் ஐந்துபேர் கொரோனா தொற்றுநோய் காரணமாக இன்று மரணமடைந்துள்ளனர். இத்தோடு  உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 176 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 330 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் இன்று மட்டும் 592 பேருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 261ஆக அதிகரித்துள்ளது.


இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று 715 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 28 ஆயிரத்து267 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.


இன்னும் எட்டாயிரத்து 823 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.


இதேவேளை இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 176 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment