Thursday, December 24, 2020

50 ஆண்டு கால மரண தண்டனை கைதியின் வழக்கு மீள்விசாரணை

 


உலகில் நீண்ட காலம் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கைதி என்று நம்பப்படும் 84 வயதான முதியவர் மீதான வழக்கை மீண்டும் விசாரிப்பதற்கு ஜப்பான் உயர் நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

தனது முதலாளி மற்றும் அவரது மனைவி, இரு பதின்ம வயது குழந்தைகளை கொலைசெய்தது மற்றும் கொள்ளையில் ஈடுபட்டதற்காக இவாவோ ஹகமாடாவுக்கு அரை நூற்றாண்டுக்கு முன் மரண தண்டனை விதிக்கப்பட்டு தொடர்ந்து சிறை அனுபவித்து வருகிறார்.

எனினும் பொலிஸாரின் கொடிய சித்திரவதைக்கு பின்னரே தம்மீது வாக்குமூலம் பெறப்பட்டதாக ஹகமாடா மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூறிவருகின்றனர். இந்த வழக்கிற்கான ஆதாரங்கள் சோடிக்கப்பட்டவை என்றும் குற்றம்சாட்டுகின்றனர்.

அவரது வாக்குமூலம் வழக்கு விசாரணையில் வாபஸ் பெறப்பட்டபோதும், 1968 ஆம் ஆண்டில் ஹகமாடாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பு 1980 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தாலும் உறுதி செய்யப்பட்டது.

அமெரிக்காவுக்கு அடுத்து மரண தண்டனை நிறைவேற்றும் உலகில் பிரதான தொழில்மயமாக்கப்பட்ட ஜனநாயக நாடாக ஜப்பான் உள்ளது.

No comments:

Post a Comment