மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற கலவரம் சிறைச்சாலைகள் சீர்திருத்த நடவடிக்கைகளை விரைவாக முன்னெடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திநிற்பதாக முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவிக்கின்றார். மஹர கலவரத்தில் 11 கைதிகள் உயிரிழந்துள்ளதாகவும் நூற்றுக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் உத்தியோக பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது . இலங்கையின் சிறைச்சாலைகள் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் சுமார் இரண்டு வருடகாலமாக நடத்தப்பட்ட ஆய்விற்கு அம்பிகா சற்குணநாதனே தலைமை தாங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆய்விற்காக 200ற்கு மேற்பட்ட சிறைக்கைதிகள் மற்றும் 100ற்கும் அதிகமான சிறைச்சாலை உத்தியோகத்தர்களை அம்பிகா தலைமையிலான 33 பேர் கொண்ட குழுவினர் நேர்காணல் செய்திருந்ததுடன் வேறு பல ஆவணங்கள் சான்றுகளையும் ஆராய்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மஹர சிறைக்கலவரம் இடம்பெற்று ஒரு சில நாட்களின் பின்னர் பகிரங்கப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment