இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் அதிகமாகவுள்ள பிரதேசங்களின் வரைபடத்தை சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு வெளியிட்டுள்ளது.
அதிகூடிய அபாயமுள்ள வலயங்கள் உள்ள பகுதியை அடையாளப்படுத்தும் சிவப்பு நிறம் இலங்கையின் பல பகுதிகளுக்கும் விஸ்தரிப்பதை படம் உணர்த்துகின்றது கடந்த நவம்பர் மாதப்படத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கையில் இலங்கையில் அபாய வலயங்களாக காணப்படும் பகுதிகளின் அளவு அதிகமாக உள்ளதை அவதானிக்க முடிகின்றது.
இதேவேளை இலங்கை கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 40 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
COVID-19 தொற்றுக்குள்ளான மேலும் 598 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில், 448 பேர் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் எனவும் 52 பேர் சிறைச்சாலை கொத்தணியிலிருந்து பதிவாகியுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 40, 380 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையயே இலங்கையில் கொவிட்-19 தொற்று தொடர்பான 187ஆவது மரணம் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன நேற்று அறிவித்திருந்தார்..
இலங்கையில் ஏற்கனவே 186 கொரோனா மரணங்கள் பதிவான நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள ஒரு மரணத்துடன் இலங்கையில் இதுவரை 187 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
187ஆவது மரணம்
கொழும்பு 15, மோதறையைச் சேர்ந்த 67 வயதான ஆண் ஒருவர், ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மரணமடைந்துள்ளார். அவரது மரணம்நேற்று (26) நிகழ்ந்துள்ளது. அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்-19 நியூமோனியா என அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment