Thursday, December 24, 2020

உருமாறிய கொரோனா அச்சத்தால் உலகெங்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்திற்கு கடும் கட்டுப்பாடுகள்

 



உருமாறிய கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக உலகெங்கும் கிறிஸ்மஸ் கொண்டாட்டத்துக்கு பல்வேறு நாடுகளின் அரசுகள் கடும் கட்டுப்பாடுகள் விதித்துள்ளன

உலகெங்கும் கொண்டாடப்படும் பண்டிகைகளில் முக்கியமானது கிறிஸ்மஸ். இந்த பண்டிகையை உற்சாகமாக கொண்டாடுவதற்காக பலர் சில மாதங்களுக்கு முன்பாகவே தயாராவார்கள். பணி மற்றும் படிப்பு நிமித்தம் காரணமாக எந்த நாட்டில் இருந்தாலும் சொந்த ஊர் திரும்ப மக்கள் விரும்புவர். ஆனால் இந்தாண்டு கொரோனா பலரின் கொண்டாட்டங்களுக்கு தடை போட்டுள்ளது.

பண்டிகைக் காலத்தில் ஏற்படும் கூட்ட நெரிசலால் தொற்று பரவுவதை தடுக்க பல்வேறு நாடுகளின் அரசுகள் வழக்கமான போக்குவரத்து கட்டுப்பாடுகள் தவிர விதவிதமான பிற கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளன. தென்னாப்ரிக்கா உள்ளிட்ட பெரும்பாலான நாடுகள் கடற்கரை பகுதி கொண்டாட்டங்களுக்கு தடை விதித்துள்ளன.

பிரிட்டனில் அதிகபட்சம் 3 குடும்பத்தினர் மட்டுமே ஒன்றாக கூடி கிறிஸ்துமஸ் கொண்டாட அனுமதிக்கப்பட்டுள்ளது. பெரு நாட்டில் கார்களை ஓட்டிச் செல்ல அனுமதிக்கப்படவில்லை. லெபனான் நாட்டில் இரவு விடுதிகளுக்கு செல்லலாம் என்றும் ஆனால் நடனமாட அனுமதியில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

பிரான்சில் 6 பேருக்கு மேல் ஒன்றாக கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிடக் கூடாது என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. சிலி நாடு 15 பேர் வரை மட்டுமே ஒன்றாக சேர்ந்து கிறிஸ்துமஸ் விருந்து சாப்பிடலாம் என கூறியுள்ளது. அர்ஜென்டினா நாட்டில் சில மாகாணங்கள் வாணவேடிக்கைககள் நிகழ்த்த தடை விதித்துள்ளன

No comments:

Post a Comment